இயற்கை எல்லாவற்றையும், ஒரு புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போலவே படைத் துள்ளது. கடந்த நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த ஃபெபோனாகி என்ற அறிவியலாளர் சில பூக்களின் இதழ்கள், அடிப்படை எண்கள் வரிசையில் படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆதாரபூர்வமாகச் சொன்னார். அதைத்தான் ஃபெபோனிக் எண்கள் என்பர். இயற்கையிடம் எந்த மூடுமந்திரமும் கிடையாது. ஆனால், அதைக்கண்டு அறியத்தான் மனிதனால் அத்தனை எளிதில் முடிவதில்லை.

ஒரு விந்தும் கரு முட்டையும் சேர்ந்து கரு தோன்றி பிறந்து, வளர்ந்து வாழ்வது வரை எல்லாம் சரிதான். ஆனால், அந்த உயிரின் மரணம்? அதை இதுவரை யாராலும் கணிக்க முடியவில்லை; அறிவியல் உலகமும் பதிலளிக்க முடியவில்லை.

நாம் அறியாத பல விவரங்கள் மாயை யாகவே இருக்கின்றன. மரம், செடி தொடங்கி விலங்குகள், பறவைகள், மனி தர்கள் வரையிலும் ஏன் நாம் வாழும் பூமியின் நிலப்பரப்பையும் சரியான அளவீட்டிலேயே படைத்துள்ளது இயற் கை. இதைத்தான் 'தங்கஅளவீடு’ என்று அறிவியல் கூறுகிறது.

இயற்கையின் மீது நமது கற்பனை வளத்தை செலுத்தித்தான், புவியி யலுக்கான வரைபடங்களும் கோடுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அட்சரேகை, தீர்க்கரேகை எல்லாமே கற்பனையே. அந்தக் கற்பனைக் கோட்டில்தான் உலகமே இன்று இயங்குகிறது. அந்தக் கோடு இல்லையென்றால் விஞ்ஞானக் கணக்குகள் ஸ்தம்பித்து விடும்.

நம் உடல் உறுப்புகள் உட்பட, இந்த உலகில் இருக்கும் அத்தனை பொருட் களும் ஒன்றோடு ஒன்று ஒப்பிடத் தக்க வகையில் இருப்பதும் மாயா உலகின் அற்புதம்தான். மனித மூளையைப் போலவே அக்ரூட் கொட்டை, கருவிழிகள் போல திராட்சை, மூக்கைப் போல மிளகாய், பற்களின் வரிசை போல மாதுளை விதைகள், நுரையீரல் போல சுரைக்காய், சிறுநீரகங்கள் போல அவரை விதை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

சில நட்சத்திரங்களைக் கற்பனைக் கோடுகளால் இணைக்கும்போது சில உருவங்கள் தென்பட்டன. அவை சில விலங்குகளின் உருவத்தைக் காட்டு பவையாக இருந்தன. அதைத்தான் ராசிகளாக உருவகப்படுத்தினர். ஒரு யுகத்தில் பூமியில் அரசாட்சி புரிந்த டை னோசர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாறைகளாக உலாவின. அதற்கு ஏற்ப மரங்களும் பிரமாண்டமாக வளர்ந்திருந்தன (இரண்டின் ஒப்புகை படங்களைப் பார்க்க). அந்த மிகப் பெரிய உருவத்துக்கு ஏற்ப பசுமையும் பெருகிக்கிடந்தது. அங்கு பரவிப் பெருகி வளர்ந்திருந்த தாவரங்களை அப்பெரிய விலங்குகள் ஏக்கர் கணக்கில் தினமும் தின்று தீர்த்தாலும், குறையாத அளவில் மீண்டும் மீண்டும் செழிப்பாக வளர்ந்து கிடந்தன.

இயற்கை சீற்றங்களால் நிலத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. நிலஅளவு குறைந்து நீரின் அளவு பெருகியபோது பசுமை குறைந்தது. பெரிய வனங்கள், மரங்கள் அழிய, பெரிய விலங்கினமான டைனோசர்களை இனி வைத்திருந்தால் கட்டுப்படியாகாது என்று இயற்கையே தனது தந்திரத்தால் அதை 'மாய’மாக்கி விட்டது. உயிர்கள், பூமியில் தோன்றிய காலத்தை அறிவியலாளர்கள் மூன்று யுகங்களாகப் பிரித்துள்ளனர்.

1. பாலியோஸைக் யுகம் - மீன்களின் ஆட்சி

2. மீஸோஸாயிக் யுகம் - டைனோ சர்களின் ஆட்சி

3. சினோஸாயிக் யுகம் - பாலூட்டிகளின் ஆட்சி

இந்த வரிசையில் பாலூட்டிகளின் வரிசையில் தோன்றிய மனிதனின் ஆட்சி பூமியில் இப்போது நடக்கிறது. மீன்களின் ஆட்சியில் அப்போது பிர மாண்டமாக வாழ்ந்த திமிங்கலங்கள் இன்றும் வாழ்கின்றன. இதற்குக் கார ணம் நிலத்தை விடவும் மிகப்பெரிய அளவிலுள்ள கடல்தான். அதன் எல்லை அதிகரித்து வருகிறதே தவிர குறையவே இல்லை. பூமியின் பரப்பு குறைந்த காரணத்தால்தான், டைனோசர் அழிந்து போனது. நிலப்பரப்பின் வடிவமைப்பு இந்தியாவை எப்படி அடையாளப்படுத்துகிறது என்பதை படத்தில் பாருங்கள். சிவனின் வாகனமான காளையின் ஆவேசமான தோற்றத்தில் அமைந்துள்ளது. இதுபோன்ற ஒற்றுமை உள்ள மாதிரிகள் (Resemblance) பூமியின் மொத்த நிலப்பரப்பிலும் அடை யாளப்படுத்துவதைக் காணலாம். இது கற்பனையாக இருந்தாலும் பல ஆண்டு அனுபவத்தால் அந்த உருவத்தின் உண் மையானத் தொடர்பை மனிதமனம் முடிச்சுப் போடுகிறது.

காளை, தன் தலையை மேற்குத் திசையில் குனிந்த வண்ணம் நிற்கிறது. அதன் உயர்ந்த திமில் வடக்குத் திசையில் உயர்ந்து நிற்கிறது. முதுகுப்பகுதி சற்று சரிந்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காளையின் வால் பகுதி தெற்கு நோக்கி தொக்கி நிற்கிறது. அது, அந்தமான் பகுதியை அடையாளப்படுத்துகிறது. துள்ளலும் அமைதியும் ஒருங்கே அமைந்த நாடு இது. உழைக்கத் தயங்காத நாடு என்று இதற்குப் பொருள்.

ஐரோப்பாவின் வரைபடம், ஒரு நாகரிகப் பெண்மணி, இரு கைகளை யும் வீசி துள்ளலாக நடன வடிவில் நிற்பதாகவும் அவள் முன்னே ஒரு கணவான் மண்டியிட்டு அமர்ந்து மரியாதை செலுத்துவது போன்றும் தோற்றமளிக்கிறது. இந்த அடை யாளத்தின் பிரதிபலிப்பாக இரு உண் மையைக் காணலாம்.

இன்றும் ஐரோப்பியர் தாங்கள் மதிக்கும் பெண்டிரை மண்டியிட்டே மரியாதை செலுத்துகின்றனர். அர சியாக கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் மகளிர் ஆதிக்கம் தொடர்கிறது.

ஆப்பிரிக்காவின் அடையாளமாக விளங்குவது அந்தக் கண்டத்தின் சிறப்பம்சமான ஆப்பிரிக்க யானையின் காது. அந்த மக்களின் குணமும் அப்படியே இருப்பதை அறியலாம். இன்றும் ஆப்பிரிக்க மக்கள் அவர்களது திறமையையும் பலத்தையும் அறியா மல்தான் இருக்கின்றனர். அனைத்து நாடுகளும் அந்த நாட்டை அடக்கி ஆள்கின்றன. வடஅமெரிக்காவைப் பாருங்கள். அச்சுஅசலாக பறக்கும் ஒரு கழுகைப் பார்க்கலாம். இது, மொட்டைக் கழுகு என்ற இனத்தைச் சேர்ந்தது. இந்தக் கழுகு தனது உணவுக்காக எந்த ஒரு உயிரினத்தையும் கொன்று தின்னக்கூடியது. இந்தக் குணம் அமெரிக்காவுக்கும் உள்ளது. இந்தக் கழுகைப் போலவே, சத்தமே இல்லாமல் 'பறக்கும்’ ஹைபர் சானிக் விமானங்களை அமெரிக்கா மட்டுமே தயாரித்துள்ளது.

தென்அமெரிக்காவின் அடையாள மாக, ஓர் ஆண் சிங்கம் கம்பீரமாக பிட றியை சிலுப்பிக் கொண்டு நிற்பதைச் சொல்லலாம்.ஆஸ்திரேலியா, நூறு விழுக்காடு கங்காருவின் முகம் அடையாளமாக அமைந்து உள்ளது. அதன் விரைத்த காதுகள் அப்படியே பொருந்தியுள்ளது. சீனாவின் வரைபட அடையாளமாக காணப்படுவது பன்றி. வெள்ளைப் பன்றி சீனாவின் பொரு ளாதார செல்வாக்கைக் காட்டுகிறது. ஆனாலும் மற்ற நாடுகளிடம் பெரிய மரியாதை இருக்காது.

ரஷ்யா, பாயும் அழகான வெள்ளைக் குதிரையை அடையாளப்படுத்துகிறது. பனி பொழியும் அந்த நாடு விடாப் பிடியாகப் போட்டி போடக்கூடிய தன்மை கொண்டது. ஜப்பான் - ஒரு சுறுசுறுப்பான கடல் குதிரையை ஒத்த அடையாளமாகக் கொண்டுள்ளது! கடல் குதிரையின் சிறப்பு - தனது வாரிசை சுமப்பது ஆண்கடல் குதிரையாகும். குழந்தை வளர்ப்பில் ஜப்பானியர்கள் காட்டும் அக்கறை அதீதமானது. கிட்டத்தட்ட கடல் குதி ரையின் வடிவத்தில்தான் டிராகனும் அமைந்துள்ளது.இதெல்லாம், மனித மனதின் கற்பனை உருவகமா... அல்லது அந்த நாடுகளின் விதிப்படி விரிந்த எல் லையா என்று ஆராய்ந்தால்... அதில் எங்கோ ஓர் உண்மையும் இருக்கலாம்... இல்லாமலும் போகலாம்.

இயற்கை படைத்த இந்த உலகில், மனிதன் போடும் மாயக்கோடுகள் எல்லாமே அப்படித்தான்!