இந்தக் காட்சிகள் அனைத்தையும் க்ளிக்கியவர்... வி.எஸ்.ஆர்.மூர்த்தி. இவர் இந்திய கடலோர காவல்

படையில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (அந்தமான் பிரிவு) எனும் உயர்பதவியில் இருக்கிறார். துப்பாக்கி சுடும் இவருடைய கைகள்... மனதையும் கண்களையும் கொள்ளை கொள்ளும் படங்களையும் சுட்டுத்தள்ளத் தவறுவதில்லை. புகைப்படக் கலை மீது அதீத ஆர்வம் கொண்ட இவரிடம் பேச்சுக்கொடுத்தால்... அந்தக் கலையின் அடி முதல் நுனி வரை அலசி ஆராய்ந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.

'இந்திய அரசின் உயர் விருந்தினர்' என்கிற வகையில் இவர் பலநாடுகளுக்கும் மேற்கொண்ட பயணங்கள் மற்றும் உள்நாட்டுப் பயணங்களின்போது பல ஆயிரம் படங்களை எடுத்துக் குவித்திருக்கிறார். அவற்றிலிருந்து சில படங்கள் இங்கே உங்களுக்காக...

இந்தியாவிலிருக்கும் ஒரேயொரு எரிமலை. அந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள பாரன் தீவில் இருக்கும் இந்த எரிமலை 2010-ம் ஆண்டின் செம்படம்பர் மாதத்தில் கடைசியாக குழம்பை கக்கியது. சுமார் நான்கு சதுர மைல் பரப்பளவுள்ள இத்தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை சிற்சில மிருகங்கள் மட்டும் உண்டு.

பார்த்ததுமே... 'ஹை' என்று கைகளில் அள்ளத் தோன்றுகிறதோ... தெற்கு அந்தமான் பகுதியிலிருக்கும் 'நார்த் பிரதர்' எனும் இந்தத் தீவு, சுமார் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இதை உயிரியல் பூங்காவாக பராமரிக்கின்றனர்.

லூவர் மியூஸியம்... உலகின் மிகப்பெரிய மியூஸியங்களில் ஒன்றான இது, ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் இருக்கிறது. 12-ம் நூற்றாண்டில் இரண்டாம் பிலிப் மன்னனின் அரண்மனையாக கட்டப்பட்ட இது, 1793-ல் மியூஸியமாக மாற்றப்பட்டுவிட்டது. புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தின் ஒரிஜினல் இங்குதான் இருக்கிறது.

இலங்கையின் அழகான கடற்கரைகளில் ஒன்று கலே. இங்கே காசு கொடுத்தால், கடலுக்குள் குதித்துக் காட்டுவதையே சில சிறுவர்கள் தொழிலாக வைத்திருக்கிறார்கள். இந்தச் சிறுவன் குதிப்பது சுமார் 15 மீட்டர் உயரத்திலிருந்து...

இவர்கள் இப்படி வரிசையாக அமர்ந்துகொண்டு தேங்காயிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? உண்மை அதுதான். நிகோபர் பழங்குடிகளான இவர்களின் எண்ணெய் எடுக்கும் டெக்னிக் இதுதான். அந்த மரத்தின் ஓரத்திலிருக்கும் பாத்திரத்தில் எண்ணெய் வடிவதைப் பாருங்கள்...

மாலத்தீவுகள் நாட்டின் ஹுல்ஹுலே தீவிலிருக்கும் ஹோட்டலிலிருந்து ஒரு காட்சி. தனியாருக்குச் சொந்தமான இந்தக் கடற்கரையில் பல வண்ணங்களில் தோன்றும் தண்ணீர்... கண்களை கட்டாயம் கொள்ளையடிக்கும்.

ஈஃபிள் டவரிலிருந்து பாரீஸ் நகரத்தை பார்க்கிறீர்கள். ஆம், இது அந்த டவரின் மீதிருந்து எடுக்கப்பட்ட அற்புதக் காட்சி!

உலகின் மிகஉயரமான இடத்திலிருக்கும் குறிப்பிடத்தக்க விமான தளங்களில் நம்முடைய காஷ்மீர் மாநிலத்திலிருக்கும் இந்த லே விமான தளமும் ஒன்று. இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான இது, 10,682 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

நெதர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் 85 சதவிகிதம் பேரிடம் சைக்கிள் இருக்கிறது. ஆண்டுக்கு 13 லட்சம் சைக்கிள்கள் இங்கே விற்பனை ஆகின்றன. ஆம்... இங்கே சைக்கிளில் பயணிப்பதை அரசாங்கமே ஊக்குவிக்கிறது... சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் நோக்கத்தில்.

பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்... இரவில் ஒளிர்கிறது!