இந்தியாவில் பல ஆறுகள் ஓடினாலும், படகுப் பயணங்கள் அரிதாகத் தான் நடக்கிறது. ஆனால், 'தண்ணீர் தேசம்’ என்ற வார்த்தைக்கு உருவம் தருகிறது கேரளம். மாநிலத்தின் குறுக்கும் நெடுக்குமாக பார்க்கும் இடத்தில் எல்லாம் ஓடுகிறது தண்ணீர். கேரளத்தின் முக்கியப் பகுதிகள் எல்லாமே நீரால்தான் இணைக்கப்பட்டுள்ளன. இருப்புப் பாதைகளில் பயணிப்பதைவிட மகிழ்ச்சி அளிப்பவை கேரள நீர்வழிப் பயணங்கள்.

ஆலப்புழா, கோட்டயம், கொல்லம், காசர்கோடு, எர்ணாகுளம், கண்ணூர் மாவட்டங்கள் நீரால் சூழப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் பேக்வாட்டர் என்றும் மலையாளத்தில் காயல் என்றும் அழைக்கப்படும் கழிமுகப் பகுதிகளோடு ஆறுகள், கால்வாய்கள், உப்பங்கழிகள், நீரோடைகள் நிரம்பி வழிகின்றன. அதனால் 1,000 கிலோ மீட்டரையும் தாண்டி நீர்வழிப் பாதைகள் நீண்டிருக்கின்றன. பெரிய கப்பல்கள் முதல் சிறிய படகுகள் வரை அதில் பயணிக்கின்றன. நீரால் சூழ்ந்துள்ள கிராமங்கள் மட்டுமே ஆயிரக் கணக்கில் உள்ளன. இங்கே வசிக்கும் மக்களுக்குக் கிட்டத்தட்ட தீவு வாழ்க்கைதான். எங்கு திரும்பினாலும் தண்ணீர். அதனால் நம் வீட்டுக்கு வீடு, டூ வீலர் இருப்பது போல... ஒவ்வொரு வீட்டு வாசலிலும் படகுகள் நிற்கின்றன.

இந்த நீர் மாவட்டங்களில் அழகைக் கொட்டி வைத்திருக்கிறது ஆலப்புழா! காரணம் மற்ற மாவட்டங்களைவிட இங்கே நீர்ப் பரப்பு அதிகம். புகழ்பெற்ற வேம்பநாடு ஏரியும் நீர்வழிப் பாதைகளோடு இணைக்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு. வேம்பநாடு ஏரியைச் சுற்றிலும் கிளைகளாகப் பரவிக் கிடக்கின்றன நீர்வழிப் பாதைகள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் நான்கு பக்கமும் கடலைப் போல தண்ணீர்தான் தேங்கிக் கிடக்கின்றன. ஆங்காங்கே ஆகாயத் தாமரைகள் பூத்திருக்கின்றன. மரங்களில் இருந்து விழும் செடிகளும் கொடிகளும் முறிந்த கிளைகளும் தண்ணீரில் மிதக்கின்றன. இந்தத் தண்ணீரின் விளிம்பை ஒட்டி கான்கிரீட் தடுப்புகளும் இயற்கையாக அமைந்த மேடுகளும் தண்ணீருக்கு எல்லைகளாக அமைந்திருக்கின்றன. கரையோரங்களில் பெரும்பாலும் தென்னை மரங்கள்... வயல்கள்.

நீரின் ஓரத்தில் இருக்கும் கான்கிரீட் தடுப்புகளை ஒட்டியே இருக்கிற வீடுகளின் வாசலுக்கும் தண்ணீருக்கும் இடைப்பட்ட வெளி மூன்று அடிக்கும் குறைவுதான். கான்கிரீட் தடுப்பை ஒட்டியே ஒருவர் இறங்கி செல்லும் அளவுக்கு படித்துறைகள் வீட்டுக்கு வீடு இருக்கின்றன. இரண்டு மூன்று படிக்கட்டுகளைக்கொண்ட இந்தப் படித்துறையை ஒட்டி தண்ணீருக்குள் நடப்பட்டிருக்கிறது பெரிய கம்பம். அந்தக் கம்பத்தில்தான் இரண்டு மூன்று பேர் பயணம் செய்யும் சிறிய துடுப்புப் படகுகள் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. படித்துறைகளில்தான் மக்கள் துணிகளை துவைக்கிறார்கள்... குளிக்கிறார்கள். நீரின் கரைகளில் எந்த இடத்திலும் பெரிய தடுப்புச் சுவர்கள் எழுப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம். இன்னும் நான்கு அடி நகர்ந்தாலே தண்ணீருக்குள் விழுந்துவிடும் அபாயம் என்றாலும் பழக்கப்பட்ட குழந்தைகள் சர்வசாதாரணமாக ஓடியாடுகின்றன.

வீட்டுக்கு வீடு தூண்டில் போட்டு மீனைப் பிடிக்கிறார்கள். தூண்டிலில் சிக்கும் மீன்களை அங்கேயே ஆய்ந்து வீட்டுக்குக்கொண்டு செல்கிறார்கள். பெரிய பெரிய இறால்கள், நண்டுகள் எல்லாம்கூட இங்கே கிடைக்கின்றன. காலையில், மாலையில் என்ற கணக்கு வழக்கு இல்லாமல் எந்த நேரமும் யாராவது குளித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

தண்ணீரைச் சுற்றியே லட்சக்கணக்கில் மக்கள் வாழ்ந்தாலும் தண்ணீர் 'கூவம்’ ஆகாமல் சலசலக்கிறது. வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர், ஏரிக்குள்ளோ, காயல்களிலோ போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள். வீட்டின் அருகிலேயே பூமிக்குள் குழாய்களை இறக்கி கழிவு நீரை அகற்றுகிறார்கள். இந்த மக்களின் தொழில் விவசாயமும் மீன் பிடித்தலும். 'பேக் வாட்டர்’ பரவசத்தைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கொஞ்சம் வருவாய் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணி கள் காயல் ஓரங்களில் உள்ள கிராம மக்கள் நடத்தும் ஹோட்டல்களில்தான் சாப்பிடுகிறார்கள். நிலத்தில் வாழ்வதற்கும் நீரைச் சுற்றிய பகுதிகளில் வாழ்வதற்கும் வாழ்வாதாரங்களில் வித்தியாசங்கள் உண்டு.

இந்தத் தண்ணீர் தேசத்துக்குள் வாழும் மக்களுக்கு வேண்டிய அடிப்படை விஷயங்களை, ஆட்சியாளர்கள் செய்து கொடுத்திருக்கிறார்கள். அஞ்சலகம், டெலிபோன் அலுவலகம், மின்வாரியம், பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிக் கூடங்கள் என்று முக்கிய அலுவலகங்கள் மட்டுமின்றி கள்ளுக்கடைகளும் இருக்கின்றன. எது இருந்தாலும் 'படகுகள்’ இல்லை என்றால் இங்கே எதுவுமே பயன் இல்லை. டவுனுக்குச் செல்வதாக இருந்தாலும் முக்கிய ஊர்களுக்குப் போவததாக இருந்தாலும் எதிரே இருக்கும் வீட்டுக்குப் போவதற்குக் கூட படகுகள் வழியாகத்தான் பயணிக்கிறார்கள். சிமென்ட், சைக்கிள்கள், ஆடு-மாடுகள், ஆடம்பர பொருட்கள் என எல்லாமே படகில்தான் பயணிக்கின்றன. வீடுகளை காலி செய்துவிட்டு இன்னொரு வீட்டுக்கு குடிபுகும் போதும் பொருட்கள் எல்லாம் படகில்தான் இடமாற்றம் செய்யப்படுகின்றன. பெரும்பாலான வீடுகளில் துடுப்புப் படகுகள் உள்ளன. கொஞ்சம் வசதி படைத் தவர்களின் வீடுகளில் மோட்டார் படகுகள், பெரிய படகுகள் நிற்கின்றன. நகரங்களில் ஸ்கூல் பஸ் இருப்பது போல, இந்தப் பள்ளிகளுக்கு 'ஸ்கூல் படகுகள்’ இருக்கின்றன. இந்தப் படகுகள் படகுத் துறைக்கு வந்து மாணவர்களை அழைத்துச் செல்கின்றன. இது தவிர சில மாணவர்கள் தங்கள் சொந்தப் படகுகளில் போய் படிக்கிறார்கள். பள்ளியின் கரையிலேயே படகை நிறுத்தி கயிற்றைக் கட்டிவிட்டு ஸ்கூலுக்குப் போகிறார்கள்.

வீட்டுக்கு வீடு இருக்கும் மிகச் சிறிய படகுகள் அவசரத் தேவைகளுக்கும் குறுகிய கால்வாய் பாதைகளில் பயணிப்பதற்கும் மட்டுமே பயன்படுகின்றன. மக்கள் போக்குவரத்துக்குப் பெரிதும் நம்பி இருப்பது 'கேரள மாநில நீர்வழிப் போக்குவரத்து துறை’ நடத்தும் அரசு படகுகளைத்தான். இரண்டு பக்கமும் சாலைகள். நடுவே கோடு கிழித்தது போல பெரிய கால்வாய். அந்தக் கால்வாயை ஒட்டி அமைந்திருக்கிறது ஆலப்புழா படகுத் துறை. படகுத் துறையின் உள்ளே சின்னச் சின்ன பெட்டிக் கடைகள். டைம் கீப்பர் அலுவலகம், பயணிகள் நிழற்கூடை, இருக்கைகள் என பக்கா பஸ் ஸ்டாண்டை ஞாபகப்படுத்துகின்றன. இதனை மலையாளிகள் 'போர்ட் ஜெட்டி’ என்றே அழைக்கிறார்கள். தேக்கடியில் நடந்த சுற்றுலா படகு விபத்துக்குப் பிறகு அநேகமாக எல்லா படகுகளின் கூரைகளின் மேலும் லைப் ஜாக்கெட்டுகளை முன் னெச்சரிக்கையாக வைத்திருக்கி றார்கள். படகிலேயே கண்டெக்டர் இருப்பார்.

ஆலப்புழாவில் இருந்து கோட்டை யத்துக்கு பஸ்சில் போனால் ஒன்றரை மணி நேரம் ஆகும். அதற்குக் கட்ட ணம் 30 ரூபாய். இதுவே படகில் பயணித்தால் 10 ரூபாய்தான். பயண நேரம் மூன்று மணி நேரம். நேரமா முக்கியம்... கேரள அழகை ரசித்தபடியே, ஆறஅமர தண்ணீரில் பயணிக்கும் சுகத்துக்கு எவ்வளவு நேரத்தையும் செலவழிக்கலாமே!

கலக்குறாங்கப்பா...

ஆறுகள், குறுக்கு கால்வாய்கள், பேக் வாட்டர் என கேரளாவின் நீர்வழிப் பாதைகள் 1,895 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பரந்து விரிந்திருக்கிறது. திருவாங்கூர், கொச்சி ஏரியாவில்தான் அதிகமான நீர்வழிப் பாதைகள் அமைந்திருக்கின்றன. கேரளாவில் பாயும் நதிகளில் மேற்கு நோக்கி பாயும் 41 நதிகளைக் கொண்டு கால்வாய், காயல்கள் போன்றவை உருவானதோடு... உருவாக்கவும் பட்டன. போக்குவரத்துத் துறை ஒன்று இருந்தாலும் நீர்வழிப் போக்குவரத்துக்காக தனியாக ஒரு துறையை 1968-ல் தொடங்கியது கேரள அரசு. மரம், ஸ்டீல் மற்றும் ஃபைபர் பயணிகள் படகுகளை இயக்கி வரும், 'கேரள மாநில நீர்வழிப் போக்குவரத்துத் துறை’ தினமும் 14 படகுத் துறைகளில் இருந்து சுமார் 90 படகுகளில் 80 ஆயிரம் மக்களை ஏற்றிச் செல்கிறது.