18-ம் நூற்றாண்டு வரையிலும் இந்தியா ஏராளமான பண்பாட்டுப் படை எடுப்புகளைச் சந்தித்தது. நாடெங்கும் இந்து ஆலயங்கள் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டன. கோயில் இடிபாடுகளின் மீது, அங்கு இடிக்கப் பட்ட தூண்கள், சுவர்கள், கற்கள் ஆகியவற்றைக் கொண்டே புதிய வழி பாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன. அந்த வரலாற்றைச் சொல்வதுதான், சித்தபூரின் ருத்ர மஹாலயம்.

கடந்த ஜுலை மாதம், சித்தபூரைக் காணச் சென்றேன். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சுமார் 110 கி.மீட்டர் தூரத்தில் மஹேசாணா மாவட்டத்தில் சரஸ்வதி நதியின் இடது கரையில் அமைந்துள்ளது சித்தபூர். இந்தநகரின் வரலாற்றுப் பெயர் ஸ்ரீஸ்தலம். ஸ்காந்த புராணத்தில் பிரபாஸ காண்டத்தில் ஸ்ரீஸ்தலத்தின் மகிமை கூறப் பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவதத்தில் கபில முனிவர் இங்கேதான் பிறந்து, சாங்கிய தரிசனத்தை உலகுக்குத் தந்தார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

தந்தை வழிவந்த பித்ருக்களுக்கு கயாவில் சிராத்தம் செய்வதுபோல, தாய் வழிப் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்யும் புண்ணிய தீர்த்தம் சித்தபூர். இங்குள்ள சரஸ்வதி ஆற்றில் நீராடி, பிறகு பிந்து சரோவரிலும் மானஸரோவரிவிலும் மாத்ரு சிராத்தம் செய்ய வேண்டும். தன் தந்தையின் ஆணையை மேற்கொண்டு தாய் ரேணுகாதேவியைக் கொன்ற பரசுராமரும் இங்கு மாத்ரு சிராத்தம் செய்தாராம். விருந்திராசுரனைக் கொல் வதற்காக வஜ்ராயுதம் செய்யத் தன் உடல் எலும்புகளையே கொடுத்து உதவிய ததீசி மகரிஷியும் இங்கே பிறந்தவர்தான். அதனால்தான் சித்தபூர், மாத்ரு கயா என்றும் பக்தியுடன் அழைக்கப்படுகிறது.

இத்தகைய புண்ணிய பூமியில் சோளங்கி மன்னன் மூலராஜா கி.பி. 944-ல் ருத்ர காலயம் என்ற சிவாலயத்தைக் கட்டத் தொடங்கினான். சிறந்த சிவபக்தனான மூலராஜா, கீழ்தேசத்தில் இருந்து வேத விற்பன்னர்கள் ஆயிரம் பேரை அழைத்து வந்து 700 கிராமங்களை அவர்களுக்கு அளித்தான். அவன் 996-ல் இறந்தபோது கோயில் முற்றுப் பெறவில்லை. பின்னர் வந்த ஜயசிம்மன் (1094-1143) ஆட்சியில்தான் ருத்ர மஹாலயம் கட்டி முடிக்கப்பட்டது.

ருத்ர மஹாலயம், குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்ட ஆலயங்களில் மிகப் பெரியது. மிகச்சிறந்ததும்கூட. பிரசித்தி பெற்ற சோமநாத் ஆலயத்தைவிடப் பெரியது. இந்தக்கோயில் 100 மீட்டர் நீள மும் 66 மீட்டர் அகலமும் கொண்டது. அதன்நடுவில் 50 மீட்டர் நீளமும் 33 மீட்டர் அகலமும் கொண்ட பிரதான ஆலயமும் கருவறையும் இருந்தன. அதைச் சுற்றிலும் ஏகாதச ருத்ரர்களுக்காக 11 கோயில்கள். ருத்ர மஹாலயத்தில் மூன்று மாடிகள், 1,600 தூண்கள், 18,000 சிலைகள் அமைக்கப்பட்டன. அனைத்தும் பொன், வெள்ளி, நவமணிகளால் இழைக்கப்பட்டவை. மூலராஜாவால் தொடங்கப்பட்டு, சித்தராஜா ஜயசிம்மனால் கட்டி முடிக்கப் பட்ட இந்தக் கோயிலுக்கு பதினாலு கோடி மோகராக்கள் (அக்கால நாணயம்) செல விடப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. கி.பி. 1299-ல் நடந்த படையெடுப்பில் உலுக்கான் என்பவரால் பாதி சிதைக்கப்பட்டது. எஞ்சியதில் பெரும் பகுதியை குஜராத்தின் சுல்தான் முதலாம் அகமது ஷா (கி.பி.1411-43) தகர்த்து, ஜாமி மசூதியைக் கட்டினார் என்று திமிரிசி என்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர் எழுதி இருக்கிறார்.

இஸ்லாமியர்கள் ஆட்சி முடிந்ததும், சில காலம் பரோடா சமஸ்தானத்தில் இருந்து, சுதந்திரம் பெற்றதும் குஜராத் மாநில அரசின் ஆளுகைக்கு மாறியது சித்தபூர் ருத்ர மஹாலயம். அதன்பின்னர், இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் வந்தது. அதன் ஒரு பகுதியில் இருந்த ஜாமி மசூதியும் தொல்லியல் துறையின் பராமரிப்பில் வந்தது.

தொல்லியல் துறையின் பராமரிப்பு சரியாக இல்லையென்று ஜாமி மசூதி நிர்வாகிகள் குஜராத் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். பல சமரசங்களுக்குப் பிறகு, தொல்லியல் துறை, மசூதியில் தேவையான பணிகளையும் முடித்து, மசூதி நிர்வாகம் கேட்டுக் கொண்டபடி மசூதியைச் சுற்றி பூங்கா அமைக்கவும் இசைந்தது. பூங்காவுக்காக மசூதியின் இருபக்கங்களிலும் 1987-ம் ஆண்டு நிலத்தைத் தோண்டத் தொடங்கியபோது ருத்ர மஹாலயத்தின் பல இடிபாடுகளும், உடைந்த சுவர்களும், சிலைகளும், சில முழுக் கருவறைகளும், நந்தியும், சிவலிங்கங்களும் காணப்பட்டன. மசூதியின் வெளிச்சுவரை உடைத்தபோது, ஒன்றுக்குள்ஒன்றாக இரு மதில் சுவர்கள் இருந்ததும் தெரிந்தது. இரண்டு சுவர்களுக்கும் நடுவில் ஒரு மீட்டர் இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியில் உடைக்கப்பட்ட கோயில் சிலைகள், சிற்பங்கள், பிற சின்னங்கள் காணப்பட்டன.

இங்கே, சதுர்புஜ இந்திராணி கோயில், சதுர்புஜ குபேரன் சிலை, சுரங்கப்பாதை, சதுர்புஜ வருணன், சதுர் புஜ வாயு, அஷ்டபுஜ சாமுண்டி, சதுர் புஜ நிர்ரிதி (வேதக் கடவுள்), சதுர் புஜ யமன், நடன மாதர் சிலைகள், அப்சரஸ்கள், ஒரு பிறைக்கோயிலில் 16 கைகளை உடைய சிவன் போன்ற சிலைகள் கண்டெடுக் கப்பட்டன.

இவ்வளவு வரலாற்றுச் சிறப்புடைய சித்தபூர் கோயிலில் இப்போது நமது பார்வைக்கு எஞ்சியுள்ளது வடக்குப் பகுதியில் நான்கு தூண்கள், கிழக்குப் பகுதியில் ஐந்து தூண்கள், மூன்றடுக்கு மண்டபத்தின் முன்வாயில், அதன் பின்னால் நான்கு தூண்கள், ஒரு அழகிய தோரண வாயில், ஏகாதச ருத்ரர் கோயிலின் ஒரு பகுதி ஆகியவைதான்.

மத்திய கால இந்து கட்டடக் கலை யின் தலைசிறந்த விமர்சகர் டாக்டர் எஸ்.கே.சரஸ்வதி, ''சோளங்கி வம்ச வரலாற்றின்படி 12-ம் நூற்றாண்டில் கட் டடக் கலைப்படைப்புகள் மிகுதியா கவும் சிறப்பாகவும் விளங்கின. அதன் முக்கிய போஷகர்கள் சித்தராஜ ஜய சிம்மனும், குமாரபாலனும். சித்தராஜா ருத்ர மஹாலயத்தைக் கட்டினான். அதன் அமைப்பின் வடிவமும் திறமும் நேர்த்தியும் எஞ்சியுள்ள இடிபாட்டுத் துண்டுகளிலிருந்து வெளிப்படையாகத் தெரிகின்றன'' என்கிறார்.

இப்போது, கோயில் வளாகத்தில் பார்வையாளருக்கு அனுமதி இல்லை. பராமரிப்புப் பணியும் நடக்கவில்லை. பாரதத்தின் கலை வரலாற்றில் சிறந்த இந்தக் கோயிலுக்குச் சரியான பாது காப்பும் இல்லை. ருத்ர மஹாலய மகாதேவன்தான் எஞ்சியவற்றைக் காக்க வேண்டும்.