வெளியே செல்லும் நேரங்களில் மட்டும்தான் அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். தங்களை அழகு படுத்திக்கொள்ள நேரம், காலம் எதுவுமே பார்க்கத் தேவையில்லை. பியூட்டி பார்லருக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்ற அவசியமும் இல்லை. நம் கைக்கு அருகே இருக்கும் ஒவ்வொரு பொருளுமே அழகு தருவதுதான். வீட்டில் இருந்தபடியே எப்படி அழகாக ஜொலிக்கலாம் என்பதைச் சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் உஷா.

மினுமினுப்பு தரும் பழங்கள்

சருமத்தில் ஏற்படும் சுருக்கம், வெடிப்பு, கடினத்தன்மை, கருப்படைதல் போன்ற அத்தனை பிரச்னைகளையும் தீர்க்கும் அதிசயசக்தி ஆப்பிளுக்கு உண்டு. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவதுடன், வாரம் ஒரு முறை ஆப்பிளை நன்றாக அரைத்து முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் தேய்த்து, ஒருமணி நேரம் கழித்துக் குளித்தால் பளிச்சென்ற பலன் தெரியும்.

அதேபோல, பேரீச்சம்பழத்தை கொட்டை இல்லாமல் வென்னீர் ஊற்றி அரைக்க வேண்டும். அத்துடன் பப்பாளிப் பழத்தைச் சேர்த்து உடல் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் உற்சாகமான மாற்றத்தை உணர்வீர்கள். வாழைப்பழத்தை தேனில் ஊற வைத்து, முகத்தில் 10 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு கழுவினால், சருமம் மிருதுவாகும். பப்பாளிப் பழத்துக்கு சருமத்தை இளமையாகவும் சிவப்பாகவும் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு. எனவே, தினமும் ஒரு கீற்றாவது பப் பாளிப் பழம் சாப்பிடுவது நல்லது. வாரம் ஒருமுறையாவது பப்பாளிக் கூழை முகத்தில் தடவி, காயவிட்டுப் பிறகு கழுவினால் பளபளப்பு நிச்சயம்.

பாலும் தேனும் போதுமே

உடலில் அழுக்கை நீக்கும் சக்தி பாலுக்கு உண்டு. அதனால் கருமை, பரு, கரும்புள்ளி, வெடிப்பு என்று எந்தப் பிரச்னையாக இருந்தாலும், காய்ச்சிய பாலை எடுத்து குளிர வைத்து, அதில் எலு மிச்சம்பழச் சாற்றைப் பிழிந்து தினமும் மூன்றுவேளை முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து இதை ஒரு வாரத்துக்குச் செய்துவந்தாலே முகம் இயற்கையான நிறத்துக்கு வந்துவிடும். பால் போலவே தயிரும் பலன் தரக்கூடியது. அதனால் தயிருடன் கோதுமை மாவைச் சேர்த்து முகத்தில் ஊற வைத்து, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம்.

தேன் தேய்த்தால் தலை முடி நரைத்து விடும் என்ற தவறான நம்பிக்கை இன்னமும் பலருக்கு இருக்கிறது. அதனால், தேனை உள்ளுக்கு எடுத்துக்கொள்கிறார்களே தவிர, முகத்துக்குப் பயன்படுத்த யோசிக் கிறார்கள். தேன் என்பது சித்தர்கள் அடையாளம் காட்டிய சிறப்பான மருந்து என்றே சொல்லலாம். அதனால் தேனுடன் பால் அல்லது தயிர் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் பளபளக்கும் முகத்தைப் பெறலாம்.

தேனுடன் பார்லியும், முட்டையின் வெள்ளைக் கருவும் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்து முகத்தில் தடவி சில மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழு வினால், முகம் ஃபேஷியல் செய்தது போல பளிச்சென்று மாறும்.

தலைமுடி ரகசியம்!

ஆரோக்கியமான தலைமுடியே ஒரு பெண்ணுக்கு அற்புதமான அழகைக் கொடுக்கும். நீளமான முடி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, குட்டையாக இருந்தாலும் பளபளவென மின்னும்படி, கைகளில் தொட்டால் 'சில்க்'காக வழுக்கும்படி இருக்க வேண் டும்.

இதற்கு, வாரம் இரண்டு முறையாவது தலைக்குக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை குளிப்பது அழுக்கை சேர்த்துவிடும். குளிக்கும் முன், நல் லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம பங்காக எடுத்துக்கொண்டு தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும். பத்து நிமிடங்களாவது தலையை மசாஜ் செய்துவிட வேண்டும். எண்ணெய் நன்றாக ஊறியபிறகுதான் குளிக்க வேண்டும். கைகளுக்குக் கிடைக்கும் ஷாம்பூக்களை எல்லாம் உபயோகிக்கக் கூடாது. ஏதாவது ஒரே பிரான்ட் வாங்கி தொடர்து பயன்படுத்த வேண்டும். தலையில் பொடுகு அல்லது இளநரை இருப்பவர்கள் மருதாணியை அரைத்துத் தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.

கை கொடுக்கும் காய், கனிகள்

வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால் கறுப்பு மறைந்து விடும். வெள்ளரியை அரைத்து கை, கால்களில் தடவிய பிறகு குளித்தால் பளீச் மாற்றம் கிடைக்கும். வெள்ளரியைப் போன்றே முள்ளங்கியையும் பயன்படுத் தலாம். காரட் ஜூஸ், வெள்ளரி ஜூஸ், முள்ளங்கி ஜூஸ் என தினம் ஒன்றைக் குடித்து வந்தால் முகத்தில் பொலிவு கிடைக்கும். ஜூஸ் பிழிந்து சாப்பிட விரும்பாதவர்கள், தினமும் பச் சையாகவே சாப்பிடலாம்.

பாதாம் மற்றும் பிஸ்தாவில் தலா இரண்டு பருப்புகளை முதல்நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் அதைத் தோலுரித்து அரைத்து முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் சருமத்தைப் பளபளப்பாக்கலாம்.

இன்னும், வீடுகளில் இருக்கும் ஜாதிக் காய், கடுக்காய், வெந்தயம், எலுமிச்சம் பழம், கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், சந்தனம், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் சரியான முறையில் பயன்படுத்தினால் அழகும் பொலிவும் பெறலாம்.

தண்ணீருக்கு மிஞ்சி எதுவும் இல்லை!

அழகு எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்குத் தண்ணீரை விட பயன்தருவது வேறு எதுவும் இல்லை. காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். எந்த ஒரு வேலை செய்துமுடித்த பிறகும், வெளியே போய்வந்த பிறகும் மறக்கா மல் தண்ணீரால் முகத்தைக் கழுவ வேண்டும். போதுமான அளவுக்குத் தண்ணீர் குடித்தால்தான் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். உடல் சூடு அடைந்து பரு, மரு போன்றவை ஏற்படுவதையும் தண்ணீர் தடுக்கக் கூடியது. உடலில் நச்சுக் கழிவுகளை நீக்கும் சக்தி தண்ணீருக்கு உண்டு என்பதால் உடல் ஆரோக்கியம் பெறும். அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தோல் பளபளப்பாக தண் ணீர்தான் அருமருந்து.

தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். டி.வி. பார்க்கும் நேரத்தில் அல்லது சமையல் செய்யும் போது என கொஞ்சம் இதற்கும் நேரம் ஒதுக்குங்கள். ஆரோக்கியமான உடல் இல்லாவிட்டால்... எத்தனை தான் அழகுப் பொருட்களை பயன் படுத்தினாலும் உங்கள் முக அழகு - முழு அழகு ஆகாது.