அந்தக் காலத்தில் தீபாவளி என் றால் புது உடை, பட்டாசுக்கு அடுத்ததாக நினைவுக்கு வருவது ஆனந்த விகடன் தீபாவளி மலர்தான். பலரது வீடுகளில், ஆனந்த விகடன் தீபாவளி மலரை வாங்க வில்லையென்றால் அந்த ஆண்டு பண்டிகை சோபிக்காது. ஏதோ குறையாகவே இருக்கும். அதனாலேயே கடைகளில் முன்கூட்டிப் பதிவு செய்து விகடன் தீபாவளி மலரை வாங்கி விடுவார்கள்.

1937-ம் ஆண்டு நான் கும்பகோணம் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் சேர்ந்தேன். அப் போது, விகடன் தீபாவளி மலர் வாங்கி ஆர்வத்தோடு பார்ப்பேன். அந்தக் காலத்து விலைவாசியில் விகடன் தீபாவளி மலர் விலை இரண்டு ரூபாய்தான். பிறகு, ஐந்து ரூபாய் ஆனது. சின்ன வயதில் இருந்தே, ஓவியங்கள் என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். விகடன் தீபாவளி மலர்களில் வெளியாகியிருக்கும் ஓவியர் மாலியின் படங்களை வைத்த கண் வாங்காமல் பார்ப்பேன். அதைப்போலவே வரைய முயற்சி செய்வேன். அப்போதே, அவரை என் மானசீக குருவாக வரித்துக்கொண்டு விட்டேன்.

1941-ல் வேலை தேடி சென்னை வந் தேன். அப்போது, ஓவியர் மாலியின் தொடர்பு கிடைத்தது. விகடன் தீபாவளி மலருக்குச் சில ஓவியங்கள் வரைந்து கொடுத்தேன். ஆனால், விகடனுடனான அந்தத்தொடர்பு அப்போது நீடிக்க வில்லை. காரணம், 1942-ல் போர் தொடங்கியது. அநேகமாக எல்லாருமே சென்னையைக் காலி செய்துவிட்டு வெளியேறிக்கொண்டு இருந்தனர். ஆனந்த விகடன் அலுவலகத்தாரும் மெஷினரிகளை எடுத்துக்கொண்டு வெளியேறும் உத்தேசத்தில் இருந்தனர். நானும் மீண்டும் கும்பகோணத்துக்கே போய்விட்டேன்.

1942-ன் பிற்பகுதியில் போர் அபாயம் குறைந்தது. ஆனால், கடுமையான மழை, வெள்ளம். சென்னையே

தண்ணீரில் மூழ்கியது. அந்த நிலையிலும் ஆனந்த விகடன் வாரம் தவறாமல் வெளியாகிக் கொண்டிருந்தது அதிபர் எஸ்.எஸ்.வாசனின் நிர்வாகத் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. அந்த நேரத்தில் தியாகப்பிரும்மம், மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் என தஞ்சாவூர் பக்கத்துப் பெரியோர்கள் பற்றியும், ஆலயங்கள் பற்றியும் கட்டுரைகளும் படங்களும் 1942 தீபாவளி மலரில் வெளியிடத் திட்டமிட்டு, அதன்பொருட்டு திருவிசநல்லூர் அருகில் உள்ள வேப்பத்தூரில் வந்து தங்கியிருந்தார் மாலி.

அவருடன் ஓவியர் சில்பியும் வந்திருந் தார். உடனே, தன்னை வந்து பார்க்கும்படி மாலியிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆலயங்கள், விக்கிரகங்கள், திருவையாற்றில் உள்ள தியாகப்பிரும் மத்தின் சமாதி போன்றவற்றை சில்பி வரைய வேண்டும் என்றும், மற்ற வண்ணப் படங்களை நான் வரையவேண்டும் என்றும் மாலி விரும்பினார்.

உடனே, நாங்கள் மூவரும் கிளம்பி திருவையாறு போனோம். அங்கே தியாகப்பிரும்மத்தின் வீட்டிலேயே தங் கினோம். தியாகப்பிரும்மம் வழிபட்ட ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் படம் அங்கே இருந்தது. அதைப்பார்த்து, அப்படியே என்னை வரையச் சொன்னார் மாலி. வரைந்தேன். அந்தப் படத்தை வரைந்து முடிக்க எனக்கு மூன்று நாள் ஆனது. அந்த மூன்று நாட்களும் நான், மாலி, சில்பி மூவருக்கும் தியாகப்பிரும்மத்தின் வீட்டு வாசல் திண்ணையில்தான் வாசம். அப்போது, தியாகப்பிரும்மத்தின் வீட் டில் அவரது அண்ணா பிள்ளைதான் குடியிருந்தார்.

தியாகப்பிரும்மத்தின் மகள் தஞ்சாவூரில் இருந்தார். அவரிடம் ராம பஞ்சாயதனம் விக்கிரகம் இருந்தது. 'கேட்டை’ என்ற ஓவியரை விட்டு அதை வண்ணப்படமாக எழுதச் சொன்னார் மாலி. 'கேட்டை’ யின் நிஜப்பெயர் சுவாமிநாதன். இவர், அப்போது 'ஜெமினி’யில் பேனர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தார்.

அதன்பிறகு, மருதாநல்லூர் போனோம். அங்கே சத்குரு ஸ்வாமிகளின் மடத்தில் அவரது பெரிய படம் ஒன்று இருந்தது. அதைப்பார்த்து அப்படியே நான் வரைந்தேன். அப்புறம், திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீதர ஐயாவாள் மடத்துக்குப் போனோம். அங்கேயும் ஐயாவாள் படத்தைப் பார்த்து நான் வரைந்தேன். சத்குரு ஸ்வாமிகளின் மடம், ஸ்ரீதர ஐயாவாள் மடம், அந்த ஏரியா எல்லாவற்றையும் ஓவியர் சில்பி கோட்டுச்சித்திரமாக வரைந்தார். அதையடுத்து, கோவிந்தபுரத்துக்குப் போய் போதேந்திர ஸ்வாமிகள் படத்தை நான் வண்ணப்படமாக வரைய, அந்த மடத்தையும், அது இருந்த தெரு, ஏரியா எல்லாவற்றையும் ஓவியர் சில்பி கோட்டுச் சித்திரங்களாக வரைந்தார்.

இவையெல்லாம், 1942-ம் வருட ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியாகி, எனக்குப் புத்தகம் கும்பகோணம் முகவரிக்குத் தபாலில் வந்தது. அப்போது, அதன் விலை ஐந்து ரூபாய். அதைக் கையில் வாங்கியதும் எனக்குத் த்ரில்லான த்ரில்.

மற்றபடி, 1943-ம் ஆண்டில் கும்பகோணத்தில் க.நா.சு., கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ரா.கி.ரங்கராஜன் போன்ற இலக்கிய கர்த்தாக்களுடன் அரட்டை அடிப்பதில் என் பொழுது கழிந்தது. எல்லோரும் தொண்டரடிப்பொடி கடையில் ஒன்றாகக்கூடி இலக்கியம், நாட்டு நடப்புகள் பற்றியெல்லாம் பேசுவோம்.

அதன்பின், 1944-ல் பம்பாயில் விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்து அங்கே போய்த் தங்கி விட்டேன். ஒரு வருடம் ஓடியிருக்கும்... ஓவியர் மாலியிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. என்னை உடனே சென்னை வரும்படியும், ஆனந்த விகடனில் வேலைக்குச் சேரும்படியும் எழுதியிருந்தார் மாலி. எனக்குத் தலைகால் புரியாத சந்தோஷம். உடனே கிளம்பி வந்தேன்.

விகடனில் அப்போதுதான் முதன்முறையாக ஆர்ட் டிபார்ட்மென்ட்டை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார் மாலி. 1945-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று நான், சில்பி, சித்ரலேகா, சிம்ஹா ஆகிய நால்வரும் முழுநேர ஓவியர்களாக வேலைக்குச் சேர்ந்தோம். என் சம்பளம் அந்தக் காலத்திலேயே 110 ரூபாய்.

ஆழ்வார்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 'ஆனந்த விகடன் ஆர்ட்டிஸ்ட் இலாகா’ என்று போர்டு போட்டு, நாங்கள் விகடன் தீபாவளி மலர் தயார் செய்வோம். அந்த வீட்டு மாடியில்தான் ஜெமினி படங்களின் நடனக் காட்சிகளுக்கான் ரிகர்சல்கள் நடக்கும். அப்போது, நடனக்கலைஞர் உதயசங்கரை வைத்து 'கல்பனா’ என்றொரு படத்தை எடுத்தது ஜெமினி நிறுவனம். லலிதா, பத்மினி, ராகினி போன்றோரெல்லாம் சைக்கிளில் வந்து இறங்கி, மாடிக்குச் சென்று ரிகர்சல் செய்வார்கள். மாடியில் நடனம் அமர்க்களப்படும்.

'கல்பனா’ பட வேலைகள் முடிந்த பின்னர், அதே மாடியில் கார்ட்டூனிஸ்ட் தாணுவை வைத்து ஒரு கார்ட்டூன் படத்தைத் தயாரித்தது ஜெமினி நிறுவனம். பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன் கூட சில காலம் அங்கே வந்து, கார்ட்டூன் பட வேலைகளில் பங்கு கொண்டிருக்கிறார். அந்தப் பட வேலைகளும் முடிந்தன.

தான் மட்டும் ஓவியம் வரைந்து பேரும் புகழும் பெறவேண்டும் என்று எண்ண மாட்டார் மாலி; எங்களின் திறமைகளையும் வெளிக்கொண்டு வந்து, எங்களை மேலே கைதூக்கிவிடவேண்டும் என்கிற பெரியமனது கொண்டிருந்தார் அவர். கோபாலன் என்ற என்னை 'கோபுலு’வாக்கியதும், ஸ்ரீநிவாசன் என்கிற ஓவியரை 'சில்பி’ ஆக்கியதும், இருவரின் தனித்திறமைகளையும் அடையாளம் கண்டு அதற்கேற்ப ஓவியப் பணிகளைப் பிரித்துக் கொடுத்து எங்களை வழிநடத்தி ஓவிய உலகில் எங்களுக்கென ஓர் இடத்தைப் பெற்றுத் தந்ததும் மாலிதான்.

1946-ம் ஆண்டு, டயாபடீஸ் முற்றிப்போனதன் காரணமாக, படுத்த படுக்கையாகி, அமரராகிவிட்டார் மாலி. அதன்பின், எங்களை வழிநடத்தியவர் எழுத்தாளர் தேவன். சில்பியின் தெய்வீக ஓவியங்களுக்கு அவர் பரமரசிகர். தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் இருக்கும் விக்கிரகங்களின் நேர்த்தியை, சிற்பங்களின் அழகை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, 1948-ல் ஆனந்த விகடனில் 'தென்னாட்டுச் செல்வங்கள்’ என்னும் தலைப்பில் ஒரு தொடரைத் தொடங்கத் திட்டமிட்டார் தேவன். தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து, பிரபல கோயில்களில் உள்ள சிற்பங்களை வரைவதற்கு சில்பியைத் தயார்படுத்தினார். சில்பியும் மிகஆர்வத்தோடு அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார். உடனே காஞ்சிபுரம் சென்று, காஞ்சிப் பெரியவரிடம் ஆசி பெற்றுக்கொண்டார்.

இந்தத் தொடருக்கான பிள்ளையார் சுழியை, பிரசித்தி பெற்ற ஒரு பிள்ளையார் விக்கிரகத்திலிருந்தே தொடங்குவது என்று முடிவானது. அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 'ஊர்த்வ கணபதி’ சிலையைத்தான் முதன்முதலாக வரைந்தார் சில்பி.

படம் வரைய இண்டியன் இங்க்தான் பயன்படுத்துவார். அவர் ஓவியம் வரைவதற்குத் தேவையான மைக்கூடு, பேப்பர், பேனா, பென்சில், பிரஷ் என எல்லாமே அலுவலகத்தில் கொடுப்பார்கள். அவரது பயணத்துக்குத் தேவையான செலவையும் விகடன் அலுவலகமே ஏற்றுக்கொள்ளும்.

1963-ல் ஒரு ஊழியனாக விகடனில் என் பணி நிறைவுற்றது. வருஷங்கள் ஏராளமாக ஓடிப் போய்விட்டா லும், விகடனுடன் என் அன்பும் தொடர்பும் அப்படியே நீடிக்கிறது. அச்சுவடிவில் மட்டுமின்றி... இன்றைக்கு இன்டர்நெட், செல்போன் என எல்லாவற்றிலும் வாசகர் கள் படிக்க முடிகிற அளவுக்கு விகடன் விஸ்வரூபம் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது பிரமிப்பும் தனி சந்தோஷமும் எழுகிறது.

இன்றைய ஓவியர்கள் வேகமாகவும் வரைகிறார்கள்; அழகாகவும் வரைகிறார்கள். சமீபகால விகடன்களில் சில ஓவியங்கள் தத்ரூபமாக இருப்பதைப் பார்த்து ரசிக்கிறேன். அச்சுவடிவமும் மிக நேர்த்தியாக இருக்கிறது. இந்த நவீன யுக விகடனிலும் என் ஓவியங்கள் வெளியாகியுள்ளது என்பதில் மகிழ்ச்சி. தவிர, அந்தக்காலத்தில் ஆனந்த விகடன் அட்டையில் நான் வரைந்த நகைச்சுவை அட்டைப் படங்கள் 'பொக்கிஷம்’ என்னும் தலைப்பில் வெளியாவது ஓர் ஓவியனாக எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது.

எல்லா வாசகர்களையும் போலவே.... ஆனந்தவிகடன் தீபாவளி மலரைக் கையில் வாங்கியதும் இன்றைக்கும் கிடைக்கும் பரவசத்துக்கு ஈடே கிடையாது.