இலட்டூர் ரத்தினம் சங்கர்.... புகைப்படக் காதலன். கல்பாக்கம் அருகில் உள்ள இலட்டூரைச் சேர்ந்த இவர்,

கடந்த 18 வருடங்களாக பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். கள்ளச்சாராய ஒழிப்பு, மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பது, வறுமை ஒழிப்பு, சுற்று சூழலுக்கு ஆதரவு, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு என்று சமூகத்தின் கூக்குரலாகவும் ஒலிக்கின்றன... இவரது புகைப்படங்கள்.

முதன்முதலாக தினமலர் நாளிதழில் போட்டோகிராபராக பணியில் இணைந்து அங்கே, தலைமை புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய கே.விஸ்வநாதனிடம் முறையே புகைப்பட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நன்றி மறவாமல் பகிர்ந்துகொள்கிறார். இப்போது, 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழில் தலைமைப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டுக்கான, 'மீடியா ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’வால் ஒருங்கிணைக்கப்படும் தேசிய அளவிலான நியூஸ் போட்டோஃகிராபி விருதுக்கு, இவர் எடுத்த புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறகு முளைத்த பறவைகள்!

14,000 ஹெக்டேர் சதுப்பு நிலமாக விரிந்திருந்த சென்னை பள்ளிக்கரணை பகுதி இப்போது, சென்னை மாநகராட்சி யின் குப்பை கொட்டும் பிரதான இடமாக உருமாறி வெறும் 400 ஏக்கர் மட்டுமே எஞ்சியுள்ளது. ஆண்டுதோறும் இங்கே லட்சக் கணக்கான வெளிநாட்டுப்பறவைகள் குவிந்த வண்ணம் உள்ளன. இருக்கிற சதுப்பு நிலத்தையாவது அசுத்தம் சூழ்ந்து விடாமல் இருக்க அரசுதான் வழி செய்ய வேண்டும்!

கலைநயம்!

இது, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை..... ஓவியக்கல்லூரியின் எதிர்புறம் உள்ள மதில் சுவரை ஒட்டினாற்போல ஆலமரம் ஒன்று தழைத்து நிற்கிறது. அதற்கேற்றாற்போல, மாநகராட்சி 'முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி!’யின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கதைக்கள காட்சியை ஓவியமாக வரைந்திருப்பது சாலப் பொருத்தம்.

டிஸ்டர்ப் பண்ணிடாதீங்க!

சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கின் உட்புறமுள்ள ஏ.டி.எம். சென்டர். அங்கே பணிபுரியும் பணியாளர்கள், வேலையின் களைப்பில் உறங்கிக் கொண்டிருக்க... பணம் எடுக்க வந்தவர் அவர்களை எழுப்பி விடாமல், சிரமப்பட்டு பணம் எடுக்கிறார்.

சூரிய கிரகணம்!

2009-ம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணம் இது. ''சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்!'' என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்தச் சூரிய கிரகணத்தை இப்படி கண்ணுக்குக் குளிர்ச்சியாக காட்டும் ஆர்வத்தில் அடித்த 'க்ளிக்’. இடம்: சென்னை - சென்ட்ரல் செல்லும் வழியில் ஏசு கிறிஸ்து சிலையைச் சேர்த்த பதிவு!

ரா.... ரா... ராமேஸ்வரம்!

ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி என்ற இடத்தில் வசிக்கும் மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதற்கு சுமார் 15 கி.மீட்டர் நடக்க வேண்டியுள்ளது. மீனவப் பெண்கள் மீனை சந்தைக்குக் கொண்டு செல்லும் காட்சி.

எஸ்கேப்....!

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இது, கடந்த 2007-ம் ஆண்டு பாலமேட்டில் நடந்தது. அந்த ஜல்லிக்கட்டு நடந்த போது பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, ஓடிவந்த காளையைக் கண்டு காவல் துறையினர் பயந்து தடுப்புக் கட்டை மீது ஏறிநிற்கும் காட்சி!

கிரகணம் - 2008

மாலை வேளையில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை மெரினா கடற்கரை காந்தி சிலையில் இருந்து செய்யப்பட்ட பதிவு.

பசுமை புரட்சியின் தந்தைகள்!

ஒரு நெல்லை நூறு நெல்லாக்கி தேசத்தில் உள்ள உயிரினங்களின் பசியைப்போக்கும் இந்திய விவசாயிகளின் நிறம் என்னவென்று தெரியவில்லை. உழைப்பின் உன்னதத்தை சுமந்து செல்கிற நடை.

தப்புல்ல...!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் பள்ளிக் குழந்தைகளின் ஆபத்தான பயணம். இந்தப்படத்தை, பத்திரிகையில் பதிவு செய்த பிறகு, சென்னை காவல் துறையினர் சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்தனர்.

புலிகாட்... பெலிகான்!

பழவேற்காடு அருகில் உள்ள 'புலிகாட்’ பறவைகள் சரணாலயம். வெளிநாட்டிலிருந்து வந்த பெலிகான் பறவைகள்!