பொருள் திருடு போனால் உடனே காவல் நிலையத்துக்குப் போவோம். ஆனால், திருவனந்தபுரம் மக்கள் கோயிலுக்குச் செல்கிறார்கள். ஆம், காணாமல் போன பொருளைக் கண்டுபிடித்துத் தரும் நீதியரசியாக விளங்குகிறாள் ஸ்ரீசாமுண்டி தேவி. கேரளமாநிலம், திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி ஆலயத்தில் இருந்து வட மேற்கில், ஏழு கி.மீ. தொலைவில் பார்வதி புத்தனாற்றின் கரையில்தான் இருக்கிறது, கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி திருக்கோயில்.

'சந்தேகப்படும் நபரை ஸ்ரீ சாமுண்டி கோயிலுக்கு அழைத்துச் சென்று தேவியின் முன் சத்தியம் செய்யச் சொல்லவேண்டும். தவறு செய்தவர் என்றால் கண்டிப்பாக ஒப்புக்கொள்வார். ஒப்புக்கொள்ளாமல் தேவியின் முன் பொய் சொன்னால், அவருடைய உடலில் நோய் உண்டாகி, தாங்கமுடியாத வேதனைக்கு ஆளாவார். தவறு செய்யாதவர்கள் மட்டுமே தேவியிடம் இருந்து தப்பிக்க முடியும்’ என்பது கேரள மக்களின் உறுதியான நம்பிக்கை.

பொருளைத் தொலைப்பது மட்டுமல்ல... மோசடிப் பேர் வழிகளால் ஏமாற்றப்பட்டவர்கள், காவல் நிலையங்களிலும் நீதி மன்றங்களிலும் நியாயமான தீர்ப்பு கிடைக்காதவர்களுக்கும் இந்தக் கோயிலில் நியாயமான தீர்ப்பு கிடைப்பதாகச் சொல்லிச் சிலிர்க்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் ஸ்ரீசாமுண்டி தேவி, மூன்று ரூபங்களில் தனித்தனி சன்னிதிகளில் கோயில் கொண்டிருப்பது தனிச்சிறப்பு. ஆலயத்தின் ஸ்ரீகோயில் எனப்படும் கருவறையில் தேவி அமர்ந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கிறாள். தேவிக்கு வலதுபுறம் இரண்டு தனிச்சன்னிதிகள்... ஒன்றில் உக்கிர சொரூபிணியாக ஸ்ரீரத்தசாமுண்டி... இன்னொன்றில் சாந்தமும் சகல லட்சணங்களும் கொண்ட குழந்தைத் திருமுகத்தோடு ஸ்ரீபால சாமுண்டி.

கருவறைத் தேவியை, ஆலயத்தில் நுழைந்ததும் தரிசித்து விடலாம். ஏனைய இருதேவிகளையும் தரிசிக்க கட்டணம் நிர்ணயித்து இருக்கின்றனர். பணம் செலுத்தினால்தான் தேவியைத் தரிசிக்க முடியும்.

பண்டைய காலத்தில் அரண்மனையில் களவாடப்பட்ட விலையுயர்ந்த பொக் கிஷங்கள் ஸ்ரீரத்த சாமுண்டி நடையைத் திறந்து பிரார்த்தனை செய்ததால் திரும்பக் கிடைத்ததாகவும், அதன் நிமித்தம் ஓர் ஆண்டு முழுவதும் ஆலயத்தின் திருவிழாச் செலவுகளை மன்னன் ஏற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக நடத்தினான் என்பதும் வரலாறு. ஸ்ரீபால சாமுண்டி நடையைத் திறந்து பிரார்த்தனை செய்தால், நினைத்த காரியம் கைகூடும் என்றும், நினைத்தது எல்லாம் ஈடேறும் என்றும் நம்புகிறார்கள். முன்னொரு காலத்தில் காடு, மலை, தேசங்கள் எனப் பல இடங்களில் தேவியானவள் சஞ்சரித்து லோகபரிபாலனம் செய்தாள். வேத சாஸ்திர ஞானியாகிய ஓர் ஆச்சார்யரின் வழிபடு தெய்வமாக விளங்கினாள் ஸ்ரீசாமுண்டி தேவி. மந்திர தந்திரங்களை நன்கு கற்று அருள்பெற்றிருந்த யோகீஸ்வரன் ஒருவரைத் தம் சீடராக ஆச்சார்யா நியமித்திருந்தார். இருவரும் தேவியை மனமுருக பல்லாண்டு காலம் வழிபாட்டனர். அவர்களின் பக்தியை மெச்சி, சிறுமி வடிவில் அவர்களுக்குக் காட்சியளித்தவள், அதன்பிறகு அம்பிகையாகவே அருள் பாலித்தாள். அவள் அருள் புரிந்த கரிக்ககம் என்னும் இடத்தில், பச்சைப் பந்தல் அமைத்து ஸ்ரீசாமுண்டியைக் குடியமர்த்தினர். அம் பிகையை பிரதிஷ்டை செய்து, சிறிதாக ஒரு கோயில் எழுப்பி வணங்கினர். அவள்தான் இன்று சாமுண்டியாக, பக்தர் களுக்கு அருள் சுரக்கும் 'கரிக்ககத்து அம்மா’வாக விளங்குகிறாள்.

ஸ்ரீசாமுண்டி கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளாகக் கட்டப்பட்டுள்ளது. சிற்பக்கலை நூலில் ’ஸ்ரீவிசாலம்’ என்று இது குறிப்பிடப்படுகிறது. கோபுரத்தின் மேற்பகுதியில் துர்கா தேவியின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவபுராணமும், அவதாரக் காட்சிகளும் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன. தாரகன் என்ற அசுரனை அழிக்க சிவபெருமான் பத்ரகாளியை அவதரிக்கச் செய்ததும், பத்ரகாளி, அசுரனை அழிப்பதுமான சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன.

ஆலய மண்டபத்தின் தென்பக்கம் ஸ்ரீகணபதி, வடக்குத் திசையில் ஸ்ரீசாமுண்டி, உட்புறம் ஸ்ரீபத்ரகாளி, ஸ்ரீவீரபத்ரன், ராஜ வாசலின் மேல்பக்கம் ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீரத்த சாமுண்டியின் உக்கிர சொரூபக் காட்சி என சிற்ப அழகுகள், பக்தர்களைப் பரவசத்தில் மூழ்கடிக்கச் செய்கின்றன.

கோயிலுக்கு வெளிப்புறம் குளமும் அதற்குச் சற்றுத்தள்ளி நாகர் வனமும் உள்ளன. பல்வேறு மருத்துவக் குணமுள்ள செடிகள், ஓங்கி வளர்ந்த பெரிய மரங்கள், நாகர் சிலை கொண்ட சன்னிதி ஆகியவை நாகர் வனத்தில் காட்சி அளிக்கின்றன.

இந்தக் கோயிலில் கொண்டாடப்படும் 'தாலப்பொலி’ குறித்து விளக்குகிறார் சிவ குமார்.

''ஸ்ரீசாமுண்டி, ஆதியில் இங்கு சிறுமி வடிவில் காட்சி அளித்ததை நினை வூட்டும் வகையில் 'தாலப்பொலி’ என்ற திருவிழா நடத்தப்படுகிறது. தாலப்பொலி என்பது, சிறுவர்கள் பட்டாடை உடுத்தி, பல்வேறு கடவுள் திருவுருவம் புனைந்து ஊர்வலமாகச் சென்று ஆலயத்தை அடைந்து பூஜைகள் செய்கிறார்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் நல்வாழ்வுக்கும்தான் இந்த தாலப்பொலி வழிபாடு நடத்தப் படுகிறது. அசுர வதம் முடிந்து, கோபம் தணிந்து சாந்த நிலையில் ஐஸ்வர்ய ரூபிணியாக தேவி ஸ்ரீபால சாமுண்டி, இங்கு காட்சி தருகிறாள். இந்தச் சன்னிதியில் குழந்தைகளுக்கான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கடும் பாயஸம், பட்டுஉடை, முல்லைப்பூ, பிச்சிப்பூ ஆகியவைகளைப் படைக் கிறார்கள். குழந்தைகள், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் தேக ஆரோக்கியம் சிறக்கவும் பூஜைகள் செய்யப்படுகின்றன' என்றார்.

ஸ்ரீரத்த சாமுண்டி மகிமையைச் சொல்கிறார், இந்த ஆலயத்தின் நிர்வாக அலுவலர் ரவீந்திரன் நாயர். இவர் ராணுவத்தில் கேப்டனாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

''ஸ்ரீரத்த சாமுண்டி உக்கிர வடிவம் கொண்டவள். பண்டைய மன்னர் காலத்தில் நீதியை நிலைநாட்ட இந்தச் சன்னிதானத்துக்கு வந்து சத்தியம் செய்வது ஓர் சடங்காக இருந்தது. இப் போது பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை, சொத்துத் தகராறு, நம்பிக்கை மோசடி செய்தல், வழிப்பறி, களவு, வேலை சம்பந்தமான தடைகள் ஆகிய பிரச்னைகள் இருப்பவர்கள் இந்தத் தேவி நடையைத் திறக்கச் செய்து வழிபட்டால் நல்ல தீர்ப்பும் மன நிம்மதியும் நிச்சயம் கிடைக்கும்'' என்றார்.

இந்த ஆலய மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) பிரசாத்பட்ட திரிபாடு, ''முந்தைய காலங்களில் காலரா, வைசூரி போன்ற கொடிய நோய்கள் மக்களைத் தாக்கும்போது 'திக்குபலி’ என்ற சடங்கு செய்யப்பட்டு ஸ்ரீசாமுண்டி தேவி எட்டுத் திசைகளிலும் நகர்வலம் எழுந் தருள்வாள். பாரம்பரிய வாத்திய முழக்கம், ஆசார அனுஷ்டானத்துடன் பூஜைகள் ஆங்காங்கு நடைபெறும். சாமுண்டியின் உலாவுக்குப் பிறகு, ஊருக்குள் நோய்கள் தாமாகவே குறைந்து போகும். இந்தச் சடங்கு இப்போது திருவிழாக்களாக மாறிவிட்டன.

பங்குனி மாதத்தில், மகம் நட்சத்திரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் தேவிக்குப் பொங்கல் படைத்து வழிபடும் 'பொங்கலா திருவிழா’ விமரிசையாக நடத்தப்படுகிறது. இங்கு, கடும் பாயஸம் என்பதுதான் தேவிக்கு விருப்பமான நைவேத்தியம். அர்ச்சனை, பால்பாயஸம், பஞ்சாமிர்த அபிஷேகம், புடவை சார்த்தல் ஆகிய வற்றாலும் வழிபாடு செய்யலாம். காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்த உடனே, தேவிக்குப் பஞ்சாமிர்த அபிஷேகம் நடக்கிறது. நினைத்த காரியம் தடையின்றி நடக்கவும் சகல தோஷங்கள் அகலவும், தொடர்ந்து தேவிக்கு 13 வெள்ளிக்கிழமை புஷ் பார்ச்சனை செய்து வழிபடுவது நல்லது. இங்கு, ஸ்ரீமகா கணபதி சன்னிதியில் எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது. பக்தர்கள் புதிதாக வீடு கட்டும் வேலை தொடங்கும்போதும், வர்த்தகத்தில் புதிய முயற்சிகளின்போதும் இங்கு கணபதி ஹோமம் செய்தால் எல்லாம் சிறப்பாக நடந்தேறும். கணபதி தவிர, சாஸ்தா, யக்ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, அன்ன பூர்ணேஸ்வரியும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

இந்த ஸ்ரீசாமுண்டி ஆலயத்தின் சார்பாக 'ஸ்ரீசாமுண்டி வித்யா பீடம்’ என்று ஒரு பள்ளிக் கூடமும், நாட்டியம், சங்கீதம், இசை முழக்கும் வாத்தியங்கள், ஓவியம், சிற்பம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்க 'ஸ்ரீசாமுண்டி கலா பீடம்’ என்ற கலைப் பயிற்சிப் பள்ளியும் நடத்தப்படுகின்றன.

தெய்வம் நின்று மட்டுமல்ல, இன்றேயும் கொல்லும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவள்தான் ஸ்ரீ சாமுண்டி!