நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ வீடு வாங்குபவர்களும் கட்டுபவர்களும், வாஸ்து நன்றாக அமைய வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அது என்ன வாஸ்து?

தேவதச்சனான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டு, ரிஷி களாலும் பண்டிதர்களாலும் தொகுத்து அளிக்கப்பட்ட பொக் கிஷத்தையே வாஸ்து என்கிறார்கள். 'வாஸ்து’ என்றால் பொருட்கள்; அதாவது, 'வஸ்து’ என்ற பதமே வாஸ்து என்று திரிபு பெற்றதாகச் சொல்வர். ஞான நூல்களோ வாஸ்து நாயகனை திருமாலின் அம்சமாகப் போற்றுகின்றன. இந்தப் பூவுலகம் அவரது உடல். இங்கே உருவாக்கப்படும் அனைத்து கட்டடங்களும் அவரின் அருளோடும் அனுமதியோடும்தான் உருவாக வேண்டும் என்கிறார்கள்.

வாஸ்து பகவான் பற்றி பல்வேறு கதைகள் உண்டு.

மிகவும் பலம் வாய்ந்த ஓர் அசுரனை தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி தோற்கடித்தனர். தோற்றுப்போய் கீழே விழுந்தவன், மீண்டும் எழுந்து விடக் கூடாது என்பதற்காக தேவர்கள் அந்த அசுரனின் அவயவங்களின் மீது ஆங்காங்கே அமர்ந்து கொண்டனர். தாங்கள் அமர்ந்த இடத்தை அப்படியே நிரந்தரமாக ஆக்கிரமித்தும் கொண்டனர். தேவர்களின் ஸ்பரிசத்தால் அவனது அசுர குணங்கள் அகன்று தேவஅம்சம் கிடைத்தது. அதனாலேயே மானிடர்களால் பூஜிக்கத் தகுந்தவன் ஆனான். அந்த அசுரன்தான் வாஸ்து பகவான் என்பார்கள்!

இன்னொரு கதையும் இருக்கிறது...

அகில உலகத்தையும், அனைத்து உயிரினங்களையும் படைத்த பிரம்மதேவன் புதுவிதமான வேறொரு உயிரைப் படைக்க சித்தம் கொண்டார். அதன்படி, பூவுலகில் மிகப்பெரிதாக அந்த உயிரினத்தைப் படைத்தார். இன்னும் இன்னும் அது வளர்ந்தது.

ஒரு கட்டத்தில் சூரியக் கிரணங்கள் பூமியில் விழாத அளவுக்கு மாபெரும் உருவாக வளர்ந்து நின்றது. அந்த அசுர உயிரினத்துக்கு கண்ணில் பட்ட உயிரினங்கள் எல்லாம் ஆகாரம் ஆயின. இப்படியே விட்டால் உலக உயிர்கள் ஒட்டுமொத்தமாய் அழிந்துவிடும் எனக் கருதினர் பரமேஸ்வரனும் மகாவிஷ்ணுவும். பிரம்மனை அழைத்து, அந்த உயிரினத்தை அடக்கும்படி பணித்தனர். பிரம்மதேவனும் அஷ்டதிக் பாலர்களிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார்.

எதிர்க்க வந்த அஷ்டதிக் பாலகர்களைக் கண்டதும், அந்த ஜந்து தன்னை ஓர் அரக்கன் உருவத்துக்கு மாற்றிக்கொண்டு போரிட்டது. ஒரு கட்டத்தில் அரக்கன் உருவில் இருந்த உயிரினம் தடுமாறி தலைகுப்புற விழுந்ததும், அவனது உடலின் மையப்பகுதியில் பிரம்மதேவன் அமர்ந்துகொண்டார்.

அரக்கனோ, ''படைத்த நீங்களே என்னை அழிக்க முற்படலாமா... எனக்கு வாழ்வு கொடுங்கள்'' என்று கதறினான். அதனால் மனம் இரங்கிய நான்முகன், ''நீ இறவாத தன்மை அடையவேண்டுமெனில், இந்தப் பூமியை எப்போதும் ஆக்கிரமித்துப் படுத்திரு. இங்கு கட்டுமானப் பணி செய்ய முனையும் எவரும் உனக்கு உரிய பூஜைகள் செய்து பலி கொடுப்பார்கள். அதைச் சாப்பிட்டு உயிர் வாழ்!'' என்று அருள் புரிந்தாராம். அந்த

அரக்கனே வாஸ்து பகவான் ஆனார் என்றும் சொல்கிறார்கள்!

வாஸ்து பகவானின் உடலில் ஐம்பத்து மூன்று தேவர்கள் குடியிருப்பதாக ஐதீகம். வாஸ்து பகவானுக்குக் கிழக்கில் - சர்வஸ்கந்தன், மேற்கில் - ஜ்ரும்பகன், வடக்கில் -

பிலபிஞ்சகன், தெற்கில்-அர்யமா, வடகிழக்கில் - ஷரகி, தென்கிழக்கில் - விதார்யன், வடமேற்கில் - பாபராட்சசி, தென்மேற்கில் - பூதநீகன் போன்ற எட்டு தேவர்கள் இருக்கிறார்கள். தவிர, வாஸ்துவைச் சுற்றி 32 தேவர்களும், வாஸ்து பகவானின் மேனியை ஒட்டியவண்ணம் 12 தேவர்களும், நடுவில் ஒரு தேவரும் வீற்றிருக்கின்றனர். ஆக மொத்தம் 53 தேவர்கள். இனி, வாஸ்து குறித்த சில நியதிகளை அறிந்து கொள்வோம். ஒரு பாடல், அவர் எழுந்துகொள்ளும் காலம் குறித்து விவரிக்கிறது.

சித்திரை வைகாசியாடி சிறந்தவாவணியினோடு

வைத்தவைப்பசியுமிக்க மன்னு கார்த்திகையுந்தானு

மற்றதை மாதத்தோடு மாசிதானெட்டுமாகும்

புத்த யான்மனைகள் போலப் புகழுடன் நன்மையாமே!

சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி இவ்வெட்டு மாதமும் வாஸ்து எழுந்திருக்கும் காலம். இந்த மாதங்களில் மனை கோலினால் அதாவது வீடு கட்டினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும், சகல சம்பத்தும் உண்டாகும் என்பார்கள்.

இன்னும் துல்லியமாகச் சொல்வதானால்...

- வாஸ்து பகவான் விழித்திருக்கும் இந்த மாதங்களில், தேதிகளில் எந்த திசையிலும் மனைகள் (வீடுகள்) கட்டலாம். குறிப்பாக... வாஸ்து புருஷன் தூக்கத்திலிருந்து எழும் காலத்தில், அதிலும் 5-வது ஜாமம்- தாம்பூலம் தரிக்கும் நேரத்தில், முகூர்த்தம் அமைப்பது உத்தமம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்!

மேலே குறிப்பிட்ட எட்டு தமிழ் மாதங்களைத் தவிர ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் வாஸ்து பகவான் தூங்கிக் கொண்டு இருப்பார். அவரை நாம் தொந்தரவு செய்யக் கூடாது. இந்த மாதங்களைக் கோண மாதங்கள் என்பார்கள். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நான்கு மாதங்களில் கட்டுமானப் பணியைத் தொடங்கக் கூடாது... அவ்வளவுதான். இடம் வாங்குவது போன்றவற்றில் தாராளமாக ஈடுபடலாம்.

வாழும் இடத்தை ஒரு கோயில் போன்று பூஜிக்க வேண்டும் என்பதே வாஸ்து பகவான் சொல்லித்தரும் வாழ்க்கைத் தத்துவம்!