ஆப்பிரிக்க கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான காம்பியா (ஜாம்பியா இல்லீங்கய்யா) சுற்றுலா பிரியர்களின் சொர்க்கம். கொஞ்சும் இயற்கை, மண் மணம் மாறாத மக்கள், இதமான சீதோஷ்ணம், இடைஞ்சல் ஏதும் வராதபடி பாதுகாப்பு போன்றவைதான் உலகம் எங்குமிருந்து சுற்றுலா பயணிகளை இங்கே இழுத்து வருகின்றன.

காம்பியா என்ற நதி பாயும் தேசம் என்பதால், இந்த நாட்டுக்கு அந்தப் பெயர் வந்திருக்கிறது. மேற்கே அட்லாண்டிக் சமுத்திரமும் மற்ற திசைகளில் செனகல் (senegal) நாடும் அமைந்துள்ளது. மக்களின் புராதன கலாசாரம், சிரித்த முகம், எளிமையான வாழ்க்கை முறை எல்லாமே இந்தியத் தன்மைக்கு நெருக்கமானவை.

இந்தியாவிலிருந்து விமானம் மூலமாக லண்டன், ஜெர்மனியில் உள்ள புருசெல்ஸ் (brussels) வழியாக காம்பியாவின் தலைநகரான பாஞ்சூல் நகரத்தை (banjul) அடையலாம். இங்கே செல்வதற்கு முன்னதாகவே விசா பெற வேண்டியது அவசியம். தல்லாசி (dallasi) என்பது காம்பியாவின் பணம். 31 தல்லாசி ஏறக்குறைய ஓர் அமெரிக்க டாலருக்குச் சமம்.

சுமார் 18 லட்சம் மக்கள் கொண்ட இந்த நாட்டில் 99 சதவிகிதம் ஆப்பிரிக்கர்கள்தான். பெரும்பாலான மக்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். காம்பியாவில் சுமார் 100-க்கும் அதிகமான இந்தியக் குடும் பங்கள் இருந்தாலும், அனைவரும் பல தலைமுறைகளுக்கு முன்னரே அங்கு குடியேறியவர்கள்தான். லெபனான், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் பெரும்பாலும் வியா பாரம் செய்து வருகின்றனர்.

பாஞ்சூல், ஸெரகுண்டா, பிரிகாமா போன்ற நகரங்களில் நல்ல ஹோட் டல்கள் உள்ளன. மிகக்குறைந்த வாட கையில் அறைகள் கிடைக்கின்றன. காம்பியா மக்கள் பெரும்பாலும் அசைவப் பிரியர்கள். ஹோட்டல்களில் அரிதாகவே சைவ உணவைப் பார்க்க முடிகிறது. இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவு வகைகளை வலைவீசித் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

இங்கிலாந்து நாட்டின் கீழ் அடிமையாக இருந்த காம்பியா, 1965-ல் விடுதலை அடைந்தது. அதன்பிறகு, குடியரசு நாடாக 1994 வரை இருந்தது. பின்னர், ஒரு கலகம் ஏற்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை இழந்தார். அந்தப் போராட்டத்தில் ராணுவத் தலைவர் ஒருவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இந்தக் கலகத்தில் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சண்டை, வன்முறை, ரத்த இழப்பு எதுவுமே ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ரீதியான ஆட்சி மாற் றமாகவே நடந்தது.

காம்பியா நதியானது, நாட்டின் மையத்தில் பாம்பு மாதிரி வளைந்து வளைந்து சென்று அந்த நாட்டுக்குப் பொலிவான வடிவத்தையும் அழகையும் கொடுக்கிறது. மக்களின் அன்றாட வாழ்வில் பலமுறை நதியையோ அல்லது அதன் கிளை நதிகளையோ கடக்க வேண்டியிருக்கிறது. நதியைத் தாண்ட வேண்டிய முக்கியமான இடங்களில் பிரமாண்டமான படகுகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் படகில் ஆட்கள் மட்டுமின்றி அவர்களுடைய உடைமைகளும், கார், மோட்டார் சைக்கிள், கால்நடைகள், கோழி, வாத்து போன்றவைகளும் சகஜமாக ஏற்றப்படுவதைப் பார்ப்பதே புதிய அனுபவமாக இருக்கும்.

காம்பியாவில் பாஞ்சூல், பக்காவ், ஸெரகுண்டா, ஃபஜாரா, கோட்டு போன்ற இடங்கள், பார்த்து ரசிக்க வேண்டியவை. இந்த இடங்களில் கடற்கரை, வனப் பூங்கா, படகுப் பயணம் போன்றவை படு சுவாரஸ்யம்.

கோட்டுவில் உள்ள கடற்கரை பளபளவென மின்னுகிறது. ஆம், இங்கே இருக்கும் மணல் தங்க நிறத்தில் தகதகக்கிறது. அதனால், வெயில் நேரத்தில் தங்கத்தைக் கொட்டியது போன்று மின்னுகிறது. ஆர்ப்பாட்டமில்லாத அழகிய கடல் என் பதால் பல்வேறு நாட்டுப் பயணிகளும் இந்தக் கடற்கரை ஹோட்டல்களில் தங்கி பல நாட்களைக் கழிக்கிறார்கள். ஒருநாள் பயணம் என்று யாருமே வருவதில்லை. செலவு குறைவு, தொந்தரவு குறைவு, நிறைந்த சந்தோஷம் என்பதால் வெளிநாட்டுப் பயணிகள் நிரம்பி வழிகிறார்கள். ஆனால், மண்ணின் மைந்தர்கள் பரிதாபமாக சின்னச்சின்ன சங்கு, மணி, பாசி போன்றவற்றை விற்று வயிற்றைக் கழுவுகிறார்கள். சில உள்ளூர் மக்கள் வெளிநாட்டவரிடம் வேலை செய்கிறார்கள். காரோட்டிகளாகவும், சமையல் வேலை, வீட்டு வேலை செய்கிறார்கள். மிக ஏழ்மையான நாடு என்பதால் அவர்களுக்கான சம்பளம் மிகமிகக் குறைவு. அந்த சம்பளத்துக்காகவே உயிரைக் கொடுத்து உழைக் கிறார்கள்.

காம்பியாவின் குடும்ப முறை இன்னமும் ஆண்மயமாகவே இருக்கிறது. ஆண்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், அதற்கான பண வசதியும், மனைவிகளைக் காப்பாற்ற மற்ற வசதிகளும் இருக்க வேண்டும். அதாவது, பணம் நிறைய இருந்தால் நிறையப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம். அதனால், 80 வயது ஆண் கூட 15 வயதுப் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். 10 மனைவிகள் என்பது கூட சர்வசாதாரணம். இங்கே, பெண்களுக்கு இருக்கும் உருப்படியான ஒரு உரிமை வேலைக்குச் செல்வதுதான். மனைவிகள் வேலைக்குச் சென்று சம் பாதிக்கும் பணத்தைக் கணவனிடம் தர வேண்டியது இல்லை என்பதும் ஆறுதல். அவர்கள் விருப்பப்படி செலவு செய்யலாம். மணம் செய்து கொண்டதும் மனைவிக்கு ஒரு வீடு கொடுக்கப்படுகிறது. நிறைய மனைவிகள் என்றால் ஆளுக்கொரு வீடு கொடுக்கவேண்டும். அந்த ஆண் முறை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் வரிசைப்படி சென்று வருவார். இவர்களுக்கு வீடுகள் தனித்தனியே இருந்தாலும் உணவு ஒரே இடத்தில்தான். அனைத்து மனைவிகளும் எல்லா குழந்தைகளும் ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் உணவு சாப்பிடுகிறார்கள்.

ஆண்களுக்கு சுன்னத் கல்யாணம் செய்வது போன்று பெரும்பாலான பெண்களுக்கும் உறுப்புத் தையல்

(female genital mutilation) செய்கிறார்கள். வயதுக்கு வந்தவுடன் அல்லது வரும் வயதில் பெண் உறுப்பை சிதைக்கும் இந்தக் கொடூரத்தை ஒரு மதச்சடங்காக இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்கள் இவர்கள்!

பாட்டும் நடனமும் காம்பியா மக்களின் மூச்சு என்றே சொல்லலாம். ஒவ்வொரு மொழிப்பிரிவினரும் தனித் தனி விதத்தில் நடனம் ஆடுகிறார்கள். நாங்கள் சென்றபோது சுமார் பத்து இளம்பெண்கள் நடுத்தர வயது மாது வை நடுவில் நிறுத்தி நம்ம ஊர் கும்மி போன்று வேகமாக நடனம் ஆடி னார்கள். அதற்குப் பாட்டு, பக்கவாத்தியம் என்று எல்லாமே நொடியில் ரெடி செய்து அசத்தி விட்டனர்.

சிறிய நாடாக இருந்தாலும் கால்பந்து ஆட்டத்துக்கு உலக அளவில் சிறந்த வீரர்களை காம்பியா நாடு அளித்திருக்கிறது. குத்துச் சண்டையும் தேசிய விளையாட்டில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.

காம்பியாவுக்கு ஆப்பிரிக்காவின் புன்னகை பூத்த கடற்கரை என்ற ஒரு பெயரும் உண்டு. அந்த நாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் முகத்திலும் அதற்கு உத்தரவாதம் உண்டு