Published:Updated:

தூரிகைப் பயணம்...

 தூரிகைப் பயணம்...
பிரீமியம் ஸ்டோரி
தூரிகைப் பயணம்...

கலை /மானா.பாஸ்கரன், படம்/சு.குமரேசன்

தூரிகைப் பயணம்...

கலை /மானா.பாஸ்கரன், படம்/சு.குமரேசன்

Published:Updated:
 தூரிகைப் பயணம்...
பிரீமியம் ஸ்டோரி
தூரிகைப் பயணம்...

ந்த வீட்டின் பெயரே... 'ஓவியம்!’ உள்ளே நுழைந்தால் - பல வாழ்வு அனுபவங்களைக் கடந்த ஓர் ஓவியக் கலைஞர் புன்னகை வெளிச்சம் மிளிர வரவேற்கிறார். அவர் - தூரிகைத் தோழர் அய்க்கன். இளநீர் இனிப்பாய் பேசுகிறார்.

 தூரிகைப் பயணம்...

''எனக்கு சொந்த ஊர் திருமலைராயன்​பட்டினம். பள்ளி நாட்கள்ல களிமண்ணுல நிறைய பொம்மைகள் செய்து பார்ப்பேன். பொம்மை செய்யுறதும் ஓவியமும் என்னை அதிகமா கவர்ந்தது. ஆனா, நான் யார்கிட்டேயும் ஓவியம் கத்துக்கலை. 1949-ல் சென்னை லிங்கி செட்டித் தெருவுல ஓர் அலுவலகம் திறந்து... ஓவியம் சார்ந்த தொழிலான விளம்பர டிஸைனைக் கையில் எடுத்துக்​கிட்டேன். அப்போ ஃபேமஸா இருந்த ரெமி பவுடர், சௌந்திரபாண்டியன் ஸ்டோர்ஸ், லேபர் சோடா, சங்கு மார்க் லுங்கி, நிஜாம் பாக்கு, முயல் சோப், கே.ஆர்.​ஷண்முகம் பட்டணம் பொடினு நிறைய கம்பெனிகளுக்கு விளம்பர டிஸைன்ஸ் வரைஞ்சு கொடுத்தேன். நல்ல வருமானம். நாம கத்துக்கிட்ட கலை​யை இன்னும் நிறையப் பேருக்குக் கத்துக்​கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்போ உருவானதுதான் 'அய்க்கண் ஆர்ட் ஸ்கூல்’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளம்பரம்தான் வியாபாரத்தின் ஜீவநாடி. அந்த விளம்பரங்களை உருவாக்குபவன் கமர்ஷியல் ஆர்ட்டிஸ்ட். இதற்கு தனியே விதிமுறைகள் இருக்கு. அதன்படி வரைஞ்சாதான் கவர்ச்சிகர​மாகவும் ஜனரஞ்சகமாகவும் இருக்கும்.

எந்த ஓர் ஓவியனுக்கும் புகைப்படக் கலையின் மீதும் தீராதக் காதல் இருக்கும். கமர்ஷியல் ஆர்ட்டுடன் நான் பிளாக் மேக்கிங்கும் செய்ததால் நிறைய புகைப்படங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் என்னிடம் குவிந்தன. விகடன் பொக்கிஷம் பகுதியில் அவை அவ்வப்போது இடம் பெறுவதில் தனி சந்தோஷம்.

இளம் வயதில் திராவிட இயக்க ஈடுபாடு உள்ளவர்களைச் சுற்றியே வளர்ந்தேன். என் பள்ளிப் பருவம் முடிந்த நிலையில் என்னை ஈரோட்டுக்கு தந்தைப் பெரியாரின் பயிற்சிப் பட்டறைக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போதே மேடைகளில் பேசுவேன். கி.வீரமணியும் நானும் ஒரே மேடையில் சிறு வயதில் பேசியது பசுமையாக நினைவு இருக்கிறது. எங்க வீட்டுக்கு தந்தைப் பெரியார் நிறையத் தடவை வந்திருக்கார். நான் சென்னை வந்த பிறகு அண்ணா, கலைஞர், ஆசைத்தம்பி இப்படி பலரோட நூல்களுக்கு அட்டைப்பட ஓவியங்கள் வரைந்தேன். அண்ணா என்னைத் தேடி வந்து, தன்னோட புத்தகப் பணிகளுக்கு என்னைப் பயன்படுத்திக்குவார். அவருடைய 'திராவிட நாடு’ வார இதழுக்கு நான் நிறைய ஓவியங்கள், எழுத்துகள் வரைஞ்சு கொடுத்திருக்கேன். கே.ஏ.மதியழகன், ஈ.வி.கே.சம்பத், க.ராஜாராம், என்.வி.நடராசன், எல்லாரும் என்னோட ஓவியக் கூடத்துக்கு அடிக்கடி வருவாங்க. பல தி.மு.க. மாநாடு​களுக்கு போஸ்டர் டிஸைன் செஞ்சு தந்திருக்கேன். புகைப்படங்கள், ஓவியங்​கள் என்று வாழ்க்கை கலையோடு இணைந்தே நகர்கிறது'' என்று பெருமைப் புன்னகை பூத்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism