நண்பர்களுடன் சேராதீர்கள்’ என்று மனைவி சொல்வது சரிதான், ஆனால், கடைப்பிடிக்கத்தான் முடிவதில்லை. வீட்டுக்குத் தெரியாமல் ஜாலியாக நண்பர்களுடன் ஜல்லியடித்துக் கொண்டிருந்த நேரத்தில், 'மதுரையில் இருந்து ஏர் ஏஷியா விமானத்தில் ஆஃபர்ல தாய்லாந்து போய் வர 7,700 ரூபாய்தான்’ என்று கிளப்பி விட்டார் ஒருவர். 'அதெல்லாம் கப்ஸா...’ என்று ஒருவர் மல்லுக்கட்ட... எங்கெங்கோ விவாதம் உருண்டு போய், இதுதான் டிக்கெட் ரேட் என்றால் எல்லோரும் சேர்ந்து தாய்லாந்து போவதாக முடிவானது. தான் சொன்னது உண்மை என்று பணம் கட்டி நிரூபித்து விட்டார் நண்பர்.

கடைசி வாரம் வரை வீட்டில் சொல்லவே இல்லை. 'அதெப்படி எங்களை விட்டுட்டு நீங்க மட்டும்?’ என்று மனைவியும், பிள்ளைகளும் உச்சந்தலையைப் பிடித்து உலுக்கப்போவது ஒருபுறம் என்றாலும், தாய்லாந்து பற்றிய பலான இமேஜ்தான் தயங்கியதற்கு முக்கியக் காரணம்.

ஒரு நல்ல நேரம்... உற்றார் உறவினர்கள் (அவங்க வீட்டு ஆளுங்க என்பதை சொல்லவும் வேண்டுமா?) வந்து மொக்கிக்கொண்டிருந்த நேரம் தாய்லாந்து டூர் பற்றி எடுத்து விட்டேன். நல்லவேளையாக வீட்டில் பூகம்பம் வெடிக்கவில்லை. தாய்லாந்து என்பதையும் சகஜமாக எடுத்துக் கொண்டார்கள்.

நண்பர்கள் ஜொள்ளிக்கொண்டுதான் தாய்லாந்தில் போய்க் குதித்தோம். அதற்குப் பிறகுதான் தெரிந்தது, தாய்லாந்து அந்த மாதிரி நாடு அல்ல என்பது. நம் தமிழ் சினிமாக்களில். தினமும் ஐம்பது கொலையும், அறுபது கொள்ளையும் நடப்பது போல் மதுரையைக் காட்டுவார்கள். ஆளாளுக்கு அரிவாளுடன் திரிவதாக இமேஜ் இருக்கும். ஆனால், நிஜத்தில் நாங்கள் அப்பாவிகள். இட்லிக்கு சர்க்கரையைத் தொட்டு சாப்பிடுவோம். அப்படித்தான் தாய்லாந்துக்கும் அநியாயத்துக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

தாய்லாந்தில் செக்ஸ் கிடைக்கத்தான் செய்கிறது, ஆனால் எல்லா இடங்களிலும் அல்ல. நாம் தேடிப்போய்தான் அடைய வேண்டும். பட்டாயா போன்ற பகுதிகளில் கொஞ்சம் வெளிப்படையாகவே நடக் கிறது. சிங்கப்பூரிலும் கூட கேலாங் பகுதியில் இதே போலத்தான் நடக்கிறது என்றாலும் அந்த நாட்டுக்கு பலான இமேஜ் இல்லை. காரணம், சிங்கப்பூரில் அந்த விஷயம் காஸ்ட்லி. தாய்லாந்தில் சல்லிசாகக் கிடைக்கிறது. அடுத்த கார ணம் தாய்லாந்தின் பாரம்பரிய மசாஜ். இதில் தப்பான காரியம் ஏகத்துக்கும் நடப்பதால் தாய்லாந்துக்கு பலான இமேஜ் கிடைத்து விட்டது.

ஏர்போர்ட்டில் இறங்கி தாய்லாந்து மக்களைப் பார்த்த கணத்திலேயே எங்களுக்கு ஞானம் பிறந்து விட்டது. இங்கேயும் மக்கள் மும்முரமாக விவசாயம் செய்கிறார்கள். மீன் பிடிக்கிறார்கள். காடுகளில் வேலை செய்கிறார்கள். பெட்டிக்கடை நடத்து கிறார்கள். அரசாங்க உத்தியோகம் பார்க்கிறார்கள். கூலிக்காக நாயாய் உழைக்கிறார்கள். உழைப்பு... உழைப்பு என்று அலைபவர்களைப் பார்த்ததுமே, நல்ல பிள்ளைகளாக ஊர்சுற்றிப் பார்ப்பது என்று முடிவு செய்தோம்.

வழிகாட்டி விக்டர், முதல்நாள் எங்களை பாங்காக் ஃப்ளோட்டிங் மார்க்கெட்டுக்கு அழைத்துச்சென்றார். பரபரவென வியாபாரம் இல்லைஎன்றாலும், காய்கறிகளையும் பழங் களையும் படகுகளில் வைத்து வியா பாரம் செய்வதைப் பார்க்கவே அழகாக இருந்தது. கூடவே, 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த இடத்தையும் மனம் தேடியது. ஆற்றுக்கு அடியில் இருக்கும் மீன் கூட்டங்கள் பிரட் துண்டுகளை வீசியதும், தண்ணீருக்கு மேல்வந்து அடித்துக் கொள்ளும் காட்சி செம ரகளை.

அப்புறம் சில கோயில்களை எட்டிப் பார்த்தோம். தாய்லாந்தில் புத்த மதம்தான் பிரதானம். எல்லோரும் புத்தரை விழுந்து விழுந்து வணங்குகிறார்கள். நம்மூர் விநாயகரைப் போல ரொம்ப ஃப்ரெண்ட்லியாகவே டீல் செய்கிறார்கள். பிள்ளையார் சதுர்த்தி வந்தால் நடனமாடும் பிள்ளையார், கார்கில் பிள்ளையார் என்று செய்து வழிபடுவதைப் போல் அவர்களும் இரண்டு தலை புத்தர், நான்கு தலை புத்தர், சந்தோஷ புத்தர், தூங்கும் புத்தர் (எவ்வளவு பெருசாய் தூங்குகிறார் தெரியுமா?) என்று விதவிதமாக வடிவமைத்து வழிபடுகிறார்கள்.

பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்ட் பக்கம் ஒதுங்கினோம். வண்டலூர் ஜூவைப் பார்த்து பிரமித்திருக்கிறீர்களா? நீங்கள் இந்த சஃபாரி வேர்ல்டுக்குப் போய்வந்தால், வண்டலூர் பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டீர்கள். அந்த அளவுக்குப் பிரம்மாண்டமானது. மான், குரங்கு, ஆடு, மாடு தொடங்கி... சிங்கம், புலி, கரடிகள் கூட சுதந்திரமாக உலவுகின்றன. இந்த அசைவ விலங்கினங்கள் சாமான்ய விலங்குகளின் எல்லைக்குள் வந்து விடாமல் தடுக்க ஜுராஸிக் பார்க் ஸ்டைலில் இரட்டைத் தானியங்கிக் கதவுகளும், லோ-வோல்டேஜ் மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலிகளும் இருக்கின்றன. விதவிதமான பறவைகள் கூட்டமும் பறந்து விடாமல் பாதுகாக்கப்படுவது அதிசயம். சுதந்திர வானம் திறந்தே வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சரணாகதி அடைந்துள்ளன பறவைகள்.

சஃபாரி வேர்டில் நடக்கும் டால்ஃபின், கடல் சிங்கம் சாகசங்களையெல்லாம் 'ப்ரியா’ படத்திலேயே நமக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டார் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன். ஆனால் இப்போது, இன்னும் நவீனமாக நடத்துகிறார்கள். 'ப்ரியா’ காலத்தில் இல்லாத குரங்குகள் ஷோ, யானைகள் ஷோ எல்லாம் படுஜாலி. குரங்குகள் செய்யும் ராவடிகளைப் பார்த்தால் நம்மூர் மன்மோகன்களுக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வரும்.

'த குட் த பேட் அண்ட் த அக்லி’ போன்ற கௌபாய் படங்களைப் பார்க்காதவர்கள், இங்கு நடக்கும் சண்டைக் காட்சிகளைப் பார்த் தால், கௌபாய் ரசிகர்களாகி விடுவார்கள். அந்தப் படங்களில் வருவதைப் போலவே கிளப், குதிரை லாயங்கள், உணவகங்கள், சலூன், பேங்க், மரண தண் டனைக் களங்கள் என்று ஒரு கௌபாய் வில்லேஜை பக்காவாக நிர்மாணித்து இருக்கிறார்கள். 'இரும்புக்கோட்டை முரட்டு சிங் கம்’ படத்தை நேரில் பார்ப்பது போலவே குதிரை சேஸ், தூக்குத் தண்டனை, துப்பாக்கிச் சண்டை, வெடிகுண்டு வீச்சு என்று ரணகளப்படுத்துகிறார்கள். கட்ட டங்கள் வெடித்துச் சிதறுவதும், விழுந்து நொறுங்குவதுமாய் இருக்க... அரைமணி நேரத்தில் அடுத்த ஷோவில் எல்லாமே புதிதாய் எழுந்து நிற்கின்றன.

பட்டாயா அருகில் உள்ள டைகர் ஃபார்முக்குப் போனோம். ரோட்டு நாய் மாதிரி நம் கையை நக்குகின்றன புலிகள். தங்கள் சந்ததியிடம் காட்டி பெருமைப்பட்டுக் கொள்வதற்காக பலரும் போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், புலியுடன் போட்டோ எடுப்பதற்கான கட்டணம்தான் எக்குத்தப்பு.

'குடிச்சா குடிச்சிட்டுப் போ...’ என்று பன்றிக் குட்டிகளுக்கும் பால் ஊட்டும் புலியைப் பார்க்கலாம். பன்றி ரேஸ், யானைகள் ஷோ என்று ஒருநாள் முழுக்க டைகர் ஃபார்மில் பொழுதைக் கழிக்கும் அளவுக்கு சுவாரஸ்யங்கள் உண்டு. ரிங் மாஸ்டர் சொல்வதைச் செய்துவிட்டு, வீசப்படும் சிறு துண்டு மாமிசத்துக்காகப் புலிகள் அலைவதைப் பார்க்கும்போது கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது. இங்கெல்லாம் ப்ளூ க்ராஸ் இல்லையோ?

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொன்று, முதலைகள் ஷோ. முதலையைப் பார்த்தாலே நம்மில் பலருக்கு அருவெறுப்பாக இருக்கும். அதன் முரட்டு தோலும், கடினமான செதில்களும் அச்சம் தரும். ஆனால் ஆணும், பெண்ணும் அந்த முதலைகளை இழுத்து வெளியே போட்டு, அதன் மீது படுத்துக் கொள்கிறார்கள். தம்மாத்துண்டு குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு பெரிய பெரிய முதலைகளை எல்லாம் வசியம் செய்து, அதன் திறந்த வாயில் தலையை நுழைத்து கைதட்டல் வாங்குகிறார்கள். ஷோ முடிந்து வெளியே வந்தால் குச்சியில் சொருகி தீயில் வாட்டி முதலைக் கறி விற்கிறார்கள். 'முதலை வாயில்தான் நாம் போக முடியவில்லை. நம் வாயிலாவது முதலை போகட்டும்’ என்று பலரும் வாங்கி சந்தோஷமாகச் சுவைக்கிறார்கள். (கடிக்கவே கடினமாக இருக்கிறது) ஒரு சில நேரங்களில், முட்டைகளை உடைத்து முதலைக் குஞ்சை வெளியில் எடுத்து விடும் வாய்ப்பும் கிடைக்குமாம். ஆனால் ஒன்று. உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு எதற்காகத் தலையை ஆட்டினாலும், உங்களிட மிருந்து கணிசமான பணத்தைக் கறந்து விடுவார்கள்.

பட்டாயாவில் கலாசார ஷோவும், யானைகள் ஷோவும் குதூகலம் தரக்கூடியவை. யானைகள் பேஸ்கட் பால் ஆடுவது, ஃபுட் பால் ஆடி கோல் அடிப்பது எல்லாம் ஆச்சர்யமில்லை. அது டீ-ஷர்ட்டில் படம் வரைகிறது. யானையை இப்படியும் பழக்க முடியுமா என்று வியக்க வைக்கிறார்கள்.

கோரல் ஐலாண்ட் ஒரு தவிர்க்க முடியாத சுற்றுலா தலம். ஸ்பீட் போட்டில் ஜேம்ஸ்பாண்ட் போன்று நம்மை கற்பனை செய்து கொண்டு பயணிக்கலாம். முடிந்தால் கூலிங்கிளாஸ் போட்டுக் கொள்ளுங்கள். கடற்கரையில் 70 'தாய் பாட்'டுக்கு (அவங்க பணம்) பேரம் பேசி வாங்கலாம்) வாட்டர் ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்து தண்ணீரில் விரட்டலாம். பாரா க்ளைடருக்குப் பணம் கட்டி வானத்தில் பறக்கலாம். முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் போட்டுக்கொண்டு கடலுக்கடியில் போய் மீன்களைத் தொட்டு விளையாடலாம். பர்ஸ் கொஞ்சம் பழுக்கும் என்றாலும், கிடைக்கும் அனுபவங்களுக்கு ஏற்ற விலைதான்.

தாய்லாந்துக்குப் போனால் காலை முதல் இரவு வரை குடிக்கலாம் என்ற கனவோடு போகிறவர்களுக்கு தொண்டை காய்ந்து போகும். பகலில் சரக்கு வாங்குவது சாத்தியமே இல்லை. சாயங்காலம் 5 மணிக்கு மேல்தான் விற்கிறார்கள். கூடுதல் விலைக்கு ஆசை காட்டியும் எங்களால் பீர் கூட வாங்க முடியவில்லை.

தாய்லாந்து கலாசாரத்தின் முக்கிய அம்சம் இரு கைகளையும் முகத்துக்கு நேரே குவித்து, தலை தாழ்த்தி வணக்கம் சொல்வது. நாம் கை கூப்புவதை மறந்து ஹாய் சொன்னாலும் தலை தாழ்த்தி வணங்குகிறார்கள். அவர்கள் அப்படி வணக்கம் சொல்லும் போது நமக்கு கொஞ்சம் கூச்சமாகக்கூட இருக்கிறது. தாய்லாந்து சுற்றுலாவை முடித்து விட்டு விமானம் ஏறிய போது, 'தப்பாக' நினைத்து குடும்பத்தை விட்டு வந்தது பெரும் குற்ற உணர்வாய் தகித்தது.

தாய்லாந்து போக ஆசையா?

இன்னமும் மன்னர் ஆட்சி நடக்கும் நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. (இங்கிலாந்து மாதிரி எம்.பி-க்கள், பிரதமர் உண்டு.) எங்கு போனாலும் அரசரின் போட்டோவைப் பார்க்கலாம். தாய்லாந்தின் தலைநகரம் பாங்காக். சென்னையில் இருந்து சுமார் 3.30 மணி நேரம் பறந்தால் பாங்காக் போய் விடலாம். சென்னையிலேயே விசா எடுத்து செல்லும் வசதி இருந்தாலும் பாங்காக் ஏர்போர்ட்டில் இறங்கி 'ஆன் அரைவல் விசா’ வாங்கிக் கொள்வது எளிது. 1000 தாய்பாட்டும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவும் இருந்தால் போதும். ஒரு தாய்பாட் என்பது இந்திய மதிப்பில் சுமார் 1.75 ரூபாய். சென்னையில் தாய்பாட் கிடைப்பது கடினம் மற்றும் விலையும் அதிகம். அமெரிக்க டாலராக எடுத்துச் சென்றால் அங்கு எளிதாகவும் நல்ல மதிப்பிலும் தாய்பாட்டாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்தியர்கள் அதிகமாக சுற்றுலா செல்வதால் இந்திய உணவைத் தேடி அலையத் தேவையில்லை. ஆனால் வட இந்தியா, ஆந்திரா, கேரளா, தமிழகம் என்று பல இந்திய ஸ்டைல்களை ஒன்றாகக் கலந்து வைத்திருப்பார்கள். தாய் உணவு என்பது சீன உணவு மாதிரி அத்தனை பயமுறுத்தும் விஷயமில்லை. சாதம் சாப்பிடுகிறார்கள். தொட்டுக் கொள்ள கடல் உணவுதான் பிரதானம். தெருவுக்கு தெரு மீனை நம்மூரில் சோளக்கதிர் சுட்டு விற்பது போல் விற்கிறார்கள். சாதத்துடன் வாத்துக் கறி சாப்பிடுபவர்கள் அதிகம். அசைவ சூப்பை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

தெருவுக்கு தெரு கண்ணாடி மூடிய தள்ளு வண்டியில் பழங்களை அரிந்து வைத்து விற்கிறார்கள். சுடச்சுட காலியாகும் மதுரை பஜ்ஜி மாதிரி, பழங்கள் விற்றுத் தீர்கின்றன.