'ஆடிக்கு அழைக்காத மாமன், மாமியாரை தேடிப்பிடித்து அடி’ என்ற வேடிக்கையான சொலவடையை, பொண்ணு கட்டிய வீட்டில் சீந்தப்படாத யாரோ ஒரு புது மருமகன்தான் உருவாக்கி இருக்க வேண்டும். பொண்ணு கொடுத்த அப்பனும் ஆத்தாளும் படுற வேதனை அவனுக்கு எப்படித் தெரியும்.

இந்த மாதிரி யாரிடமும் சொல்லடி படக்கூடாது என்றோ என்னமோ, பெற்றவர்கள் கடனை உடனை வாங்கி விருந்து வைத்து, துணி, மணி எடுத்துக் கொடுக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் விரலை நீட்டிப் பேசும் மருமகனின் ஆசையைப் புரிந்துகொண்டு, நீட்டும் விரலுக்கு ஒரு மோதிரமும் எடுத்துப் போட்டு ஒரு வழியாக புது மாப்பிள்ளையை சாந்தப்படுத்துகிறார்கள்.

சோப்பு டப்பா டிபன் பாக்ஸில் அரை வயிற்றுச் சோறும் அவசர கோலத்தில் பூசிய பவுடர் வாசமுமாக கம்பெனி வேலைக்குப் போய் சொற்ப சம்பாத்தியமும் சிறிதளவு 'போனஸும்’ வாங்குகிறவர்களுக்காவது கொஞ்சம் பணம் வரும். ஆனால், நிலத்தில் கிடந்து பாடுபடும் கூலிக்காரர்கள் இந்த சீஸன் செலவுக்கு என்னதான் செய்வார்கள். ஆடி மாதமாவது விதை ஊன்றுவதற்கும் வாய்க்கா, வரப்புப் போடுவதற்கும் ஆட்களை வேலைக்குக் கூப்பிடுவார்கள். கையில் கொஞ்சம் காசு சேரும். ஆனால், இந்த ஐப்பசி மாதங்களில் வேலையே கிடைக்காது. காட்டில் இருக்கும் பயிர்கள் எல்லாம் தாவணி போட்ட பெண் ஆளாவதற்கு முன்இருப்பது போல தோகை போட்டவாறு மாயம் காட்டும். இனி பிறக்கப் போகும் மார்கழி கடைசியில் அல்லது தை மாச ஆரம்பத்தில்தான் பூத்து, காய்த்து துவண்டு அறுவடைக்குத் தயாராகும்.

அந்த நேரத்தில் இந்த தீபாவளி வந்தால் மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல... அவருடன் வருகிற ஆட்களுக்கும்கூட எண்ணெய் வழிய வழிய பலகாரம் சுட்டுப் போடலாம். கறி எடுத்து கொழம்பு வைக்கலாம். கடன்சுமை இல்லாமல், வந்தவர்களோடு நிஜமாகவே மனசுவிட்டு சிரித்துப் பேசலாம் ஆனால், எந்த வரும்படியும் இல்லாமல் பிஞ்சுப் பயிராக வெள்ளாமைகள் எல்லாம் பூத்துக் கிடக்கையில் இந்த தீபாவளி வந்தால் என்னதான் செய்வது என்று வயிற்றெரிச்சல் படாத மாமனார்களும் இல்லை, மாமியார்களும் இல்லை.

இந்த நிலையில்தான் இருந்தாள் சின்னக்கிளி. தீபாவளி என்ற சொல்லைக் கேட் கையிலேயே அழுகை, அழுகையாய் வந்தது. அவள் வீட்டுக்குள் என்ன இருக்கிறது? நாலஞ்சு ஈயச் சட்டிகளை தவிர்த்து, அவள் வீட்டையே செல்வாக்கான வீடாக மாற்ற முயன்று மினுக்மினுக்கென்று மிணுங்கிக் கொண்டிருந்த இரண்டு பெரிய பித்தளை சொம்புகள், சருவம், ஒரு வெங்கல வட்டில் அத்தனையும் ஆடி அழைப்புக்கு மாப்பிள்ளையையும், மகளையும் அழைத்து வந்தபோதே தெருக்கோடியில் கடை வைத்திருக்கும் தணிகாசலத்தின் கடைக்குப் போய்விட்டன. இப்போது என்ன செய்வது? நினைக்க, நினைக்க சின்னக்கிளிக்கு வயிறு கலங்கியது.

ஊருக்குள் தீபாவளி களை வந்துவிட்டது. உண்டானவர்களுக்கு எந்த விசேஷம் வந்தாலும் சந்தோஷம்தானே? வீட்டுக்கு வீடு நெல் அவித்து புழுங்கல் வாசனையோடு திரணை, முற்றம், வாசல் என்று காயப் போட்டிருந்தார்கள். கொழிச்சி எடுத்த குருணை அரிசியைப் போட்டு,போட்டு சின்னச்சின்னக் குஞ்சுகளை வெடைக்கோழிகளாக வளர்த்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் சந்தைக்குப்போய் எலும்பும், தோலுமான ஆடுகளை வாங்கி வந்து அகத்திக் கொழையாகக் கொண்டு வந்து செழிக்கப் போட்டார்கள். மாடுகளுக்கு ஆட்டி வைக்கும் பருத்திக் கொட்டையில் ஒரு கை எடுத்து வந்து அதற்கு ஊட்டி கொழுக்க வைத்தார்கள். இதனால் வரிச்செலும்பு தெரிய வீட்டுக்கு வந்த ஆடுகளின் மேனியில் கொழுப்பு ஏறி, ஒருவித மினுமினுப்பு வந்துவிட்டது. தீபாவளி நெருங்க, நெருங்க சின்னக்கிளிக்கு படபடப்பும் கூடியது. என்ன செய்யலாம், மாப்பிள்ளையை அழைத்து விருந்து வைக்க என்னதான் செய்யலாம் என்று யோசித்தவள்... கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.

அதன்படி ஒவ்வொரு நாளும் நாலைந்து வீட்டுக்குப் போய் காய்ந்து கொண்டிருந்த புழுங்கலில் அழுந்த உட்கார்ந்து, உட்கார்ந்து பேசிவிட்டு வந்தாள். நூல் பிரிந்த பழைய சுங்கடிச் சேலையில் அவித்த புழுங்கல் நிறையவே ஒட்டியவாறு அவளோடு கூடவே வந்தது. இப்படியே ஒரு மரக்கால் நெல்லை சேர்த்து விட்டாள்.

ஒரு கோழிக் குஞ்சை தூக்கிக் கொண்டு போன காக்கையைக் கல்லை விட்டு விரட்டி, கூப்பாடு போட்டத்தில் அந்தக் காக்கா, குஞ்சை கீழே போட்டுவிட்டு தன்னை விட்டால் போதுமென்று ஓடியது. சின்னக்கிளிக்கு சந்தோஷம் பொறுக்கவில்லை. அப்படியே கோழிக் குஞ்சைப் பொத்தினாற்போல் தூக்கிக் கொண்டு வந்து வீட்டுக்குள்ளேயே வளர்க்க ஆரம்பித்து விட்டாள்.

தான் வேலை செய்யும் பண்ணையார் வீட்டில் வருசா, வருசம் சம்பளம் வாங்குகிறவள் இந்தத் தடவை சம்பளத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டாள். பதிலுக்கு கண்டாங்கிச் சேலையும், பட்டுக்கரை வேட்டியும் வாங்கிக் கொண்டு வந்து அடுக்குப் பானைக்குள் பத்திரப்படுத்தி வைத்தாள். 'பகல் முழுக்க வெய்யிலில் கிடந்து வேலை செய்ததில் கண்ணு ரெண்டும் பொங்கிப் போச்சு... கொஞ்சம் வெண்ணை கொடுங்க... கண்ணுச் சூட்டுக்குப் போட’ என்று சொல்லிச் சொல்லியே ஏழெட்டு வீட்டில் வாங்கிக் கொண்டு வந்து நெய்யாகக் காய்த்து வைத்தாள்.

அன்றுதான் தீபாவளி. விடியற்காலமே மருமகனும், மகளும் இவளின் அழைப்புக்கு வீட்டுக்கு வந்து விட்டார்கள். முதல்நாள் ஆட்டி வைத்திருந்த சோள மாவில் தோசையும், பணியாரமும் சுட்டுப் போட்டத்தில் வீடெங்கும் எண்ணெய் மணத்தது. பிறகு, பூண்டு உரித்துப் போட்டு காய்ச்சிய எண்ணைக் குளிப்பு குளித்து முடித்ததும், பட்டுக்கறை வேட்டியில் மாப்பிள்ளை புதிதாகத் தெரிந்தான். மாப்பிள்ளையைப் பார்த்து சின்னக்கிளி பூரித்துப் போனாள். இரண்டு மிளகாய் வற்றலை எடுத்து மருமகனுக்கு கண்ணேறு கழித்தாள். மத்தியானம் மூங்கிச்சம்பா சோறும். கோழிக்குழம்பும், நெய்யுமாக... ருசி தாங்காமல் மாப்பிள்ளை வேட்டியைத் தளர்த்தி விட்டுக் கொண்டு சாப்பிட்டதில் இரண்டு முறை ஏப்பம் பிரிந்தது. நிம்மதியான தூக்கம் போட்டதில் குறட்டை மெல்லியதாக வெளி வாங்கியது. மேற்கில் பொழுது சாய்ந்த பிறகுதான் புதுத்தம்பதிகள் தூக்கம் கலைந்து எழுந்தார்கள்.

அவர்கள் எழுந்ததுமே வத்தலைக் கிள்ளிப் போட்டு முருங்கை இலை சேர்த்து கேப்பை மாவோடு சூடாக சுட்ட அடையைக் கொண்டு போய் மருமகனின் முன்னால் வைத்த போது அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. கையோடு, பக்கத்து வீட்டில் கொஞ்சமாய் கறந்து கொண்டு வந்த ஆட்டுப் பாலில் சுக்கும், கருப்பட்டியும் தட்டிப் போட்ட காப்பி வேறு.

தீபாவளி விருந்து முடிந்து ஊருக்குப் புறப்பட்ட போது பொண்டாட்டி மீது சின்னக்கிளியின் மருமகனுக்கு ஆசை பொங்கியது. தெரு என்றுகூட பார்க்காமல் அவள் தோளை உரசிக் கொண்டே நடந்தவன், 'என்ன இருந்தாலும் உன் ஆத்தா மாதிரி யாருக்கும் மாமியா அமையாது. என்ன மாதிரி என்னைக் கவனிச்சிக்கிட்டா. நான் கொடுத்து வச்சவன்’ என்றதும் அவன் பொண்டாட்டி பூமாலை வெடுவெடுத்தாள்.

'இனிமே என் ஆத்தா பேச்சை எங்கிட்ட பேசாதரும். இம்புட்டு செஞ்சவகைக்கு ஒரு மோதரம் போடக் கூடாதாக்கும்? அவ மூஞ்சியிலேயே நானு இனி முழிக்கப் போறதில்ல அடுத்து தைப் பொங்க விருந்துக்கு என்னைக் கூப்பிடாதரும்’ என்றாள் கடுப்போடு.

மாமியார், மாமனார், மச்சான், நாத்தனார் என்று பெரிய கூட்டுக் குடும்பத்தில் சிக்கிக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் நூறு ரூபாய் சேர்த்து வைத்து ஆத்தா கையில் ரகசியமாய் கொடுத்த கஷ்டம் அவளுக்கு அல்லவா தெரியும்?