அருவி, ஆறு, கிணறுகளில் மணிக்கணக்காகக் குளிக்கும் சந்தோஷங்கள் எல்லாம் போயே போச்சு. பக்கெட் தண்ணீரில் பத்து நிமிடங்களுக்குள் குளிக்கும் அவசர யுகம். இந்த நேரத்தில், 'விதவிதமா குளிக்கிறாங்க... பார்க்கலாம்(?) வாங்க’ என்று அழைத்ததுமே, ஆசையுடன் கிளம் பினோம்.

திருநெல்வேலி மாவட்டத்தில், இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம். ஆழ்வார்குறிச்சியில் இருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள சிவசைலம் கிராமத்தில் 33 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது, 'உலக நல்வாழ்வு ஆசிரமம்’. மா, பலா, வாழை, தென்னை எங்கெங்கும் நிறைந்திருப்பதால் குளுகுளு காற்று சிலுசிலுக்கிறது.

'உணவே மருந்து... மருந்தே உணவு. கனிகளை உண்க... பிணியின்றி வாழ்க!’ என்று ஆசிரம முகப்பிலேயே இயற் கையை நேசிக்கும் வாசகங்கள் நம்மை வரவேற்கிறது. உள்ளே, உடல் முழுக்க மண் கரைசலைப் பூசிக்கொண்டு திரிந்த மனிதர்களைப் பார்த்ததும் ஆச்சர்யம் ஏற்பட்டது. ஏதோ, ஆதிவாசிகளின் கிராமத்துக்குள் நுழைந்தது போல் உணர்வு. கால் ஆரம்பித்து தலை வரையிலும் செம் மண்ணைப் பூசிக்கொண்ட கும்பல் ஒன்று ஹாயாக வெயிலில் உலா வந்தது. ஒரு செம்மண் மனிதரை நிறுத்தினோம்.

''இதுதான் புற்றுமண் குளியல். கரையான்கள் செம்மண்ணைக் கொண்டு கட்டியிருக்கும் புற்றுமண் மருத்துவக் குணத்தோடு மிகவும் மிருதுவாக இருக்கும். இந்த மண்ணை தண்ணீரில் கரைத்து உடம்பு முழுக்க பூசிக்கொண்டு 20 நிமிடங்கள் வெயிலில் நின்றால் மண்காய்ந்து போய், தேகம் விறுவிறுக்க ஆரம்பிக்கும். அதன்பிறகு, நன்றாகத் தேய்த்துக் குளித்தால், தோல் துவாரங்களில் இருக்கும் அடைப்பு, அழுக்கு எல்லாம் நீங்கி, உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இதேமாதிரி, வாழைஇலைக் குளியல், மண் பட்டி சிகிச்சை, நீராவிக் குளியல்னு ஏகப்பட்ட ஐட்டங்கள் இருக்கு'' என்றவர், மரத்தடி ஒன்றை சுட்டிக் காட்டினார் அந்த 'மண்ணர்’. அங்கே.... வயிற்றில் ஈரத் துணியை மடித்து வைத்த நிலையில் மர நிழலில் மல்லாக்கப் படுத்திருந்தனர் சிலர்.

நெருங்கினோம். சலித்து எடுக்கப்பட்ட செம்மண்ணை துணியில் வைத்து மடித்து தண்ணீரில் முக்கி எடுத்து வயிற்றின் மேல் விரித்து வைத்த நிலையில் கண்களை மூடியபடி படுத்துக் கிடந்தனர். கேட்டால், 'வயிற்றுத் தொப்பையில் உள்ள தேவையற்ற கொழுப்பு களைக் கரைப்பதற்கான ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்’ என்று கண்களைத் திறக் காமல் சொன்னார்கள்.

கூடுதல் தகவல் கேட்ட நம்மை அழைத்துப் பேசினார் ஆசிரம நிர்வாகியான டாக்டர் நல்வாழ்வு. எல்லோரும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசையில், அவரது தந்தை தொலை நோக்கோடு வைத்த பெயராம். ''நான், இயற்கை மருத்துவம் (Bachelor of Naturopathy and Yogic Science) படித்து மருத்துவராக இருக்கிறேன். இயற்கையான காய், கனிகளை உண்டு, தூய நீரைப் பருகி வாழ்ந்தால் மனிதனை நோய்க்கிருமிகள் அண்டாது என்பதைத்தான், உலக நல்வாழ்வு ஆசிரமத்தில் எடுத்துச் சொல்கிறோம்'' என்று முன்னோட்டம் கொடுத்தவரிடம் குளியல் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டோம்.

''இது எல்லாமே பாரம்பரியமாக நம் முன்னோர்கள் செய்துவந்த சிகிச்சை முறைகள்தான். மனித வாழ்க்கையோட அடிப்படையே மண்ணும்... மரமும்தானே? நமக்கான உணவும் இங்கே இருந்துதான் கிடைக்கிறது. நோய் தீர்க்கும் மருந்தும் இந்த இயற்கையில் இருந்துதான் கிடைக்கிறது. அந்தவகையில், இந்தக் குளியல் சிகிச்சைகள் எல்லாமுமே நம் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளி யேற்றுவதுதான். வாருங்கள்.... வாழை இலைக் குளியலைப் பார்க்கலாம்'' என்றவர், மரங்களுக்கு இடையே ஒளிந்திருந்த ஒரு கட்டடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

விரித்திருந்த கோரைப்பாயில் பெரிய அளவிலான வாழை இலைகள் விரிந்து கிடக்கின்றன. சிகிச்சை எடுப்பவர் அதன்மீது படுத்துக்கொள்ள.... அவர் உடலின் மீதும், பக்கவாட்டிலும் மேலும் சில வாழை இலைகளைப் போர்த்தி சணல் கயிற்றால் கட்டுகிறார்கள். உடல் பகுதி எதுவும் வெளியே தெரியாதபடி படுத்திருப்பவரின் மீது சூரிய ஒளி 'சுள்’ளென்று விழுகிறது. 15 நிமிடங்கள் கழித்து இலையைப் பிரித்தெடுத்துப் பார்த்தால், வியர்வை மழையில் குளித்து எழுந்திருக்கிறார்..

இந்த வாழை இலைக் குளியலில், உடல் தசையில் உள்ள கழிவுகள் எல்லாம் வியர்வையாக வெளியேறுவதோடு, உடம்பில் மறைந்திருக்கும் கிருமிகளும் அழிந்து விடுமாம். இதே பாணியில் நீராவிக் குளியல், சூரியக் குளியல் ஆகிய சிகிச்சைகளும் நடக்கின்றன. மூலிகை எண்ணெய் தடவிய மசாஜ் குளியலும் உண்டு.

மனஅழுத்தம், படபடப்பு, தூக்கமின்மை, டென்ஷன் என்று பல்வேறு சிக்கல்களில் இருப்பவர்கள் இங்கே வருகிறார்கள். நாள் முழுக்க காய்கறி, பழங்கள், ஜூஸ் போன்றவைதான் இங்கே அனைவருக்குமான உணவு. காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி, யோகா, பிராணாயாமம் சொல்லித் தருகிறார்கள். சுக்கு காபி, பார்லி கஞ்சிதான் காலை உணவு. அதன்பிறகு, இயற்கை மருத்துவ சிகிச்சைகள் ஆரம்பமாகின்றன. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கறிவேப்பிலை, நெல்லிக்காய், கேரட், வெண் பூசணி, சுரைக்காய்னு விதவிதமான ஜூஸ் வகைகள் தரப்படுகின்றன.

எந்த நேரமும் சுக்கு காபியும் ஜூஸ் வகைகளும் தயாராகிக் கொண்டே இருக்கிறது. மதிய உணவாக திராட்சைப் பழங்கள், அச்சுவெல்லம் கலந்த நனைந்த அவல், ஊற வைத்த சிறுபயிறுடன் கலந்த தேங்காய்த் துருவல், காய்கறி சாலட், முளைவிட்ட தானியங்கள், வாழைப்பழம்.... என்று தட்டு முழுக்க பச்சையம்!

''உடலுக்குத் தேவையான எல்லாவித ஊட்டச் சத்துக்களும் காய், கனியில் கிடைத்து விடுமா?'' என்று கேட்டோம்.

''தேங்காய், வாழைப்பழம் இந்த இரண்டிலுமே நம் உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் அடங்கி இருக்கின்றன. எனது தந்தை ராமகிருஷ்ணன் 25 ஆண்டு காலம் வெறுமனே தேங்காய், பழம் மட்டுமே சாப்பிட்டு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இதனாலேயே அவருக்கு 'தேங்காய்ப் பழச்சாமியார்’ என்ற பெயரே உண்டு!

சுவைக்காக இயற்கை உணவுகளை தீயில் சுட்டும் உப்பு சேர்த்தும் சாப்பிட ஆரம்பித்தப் பிறகுதான் மனிதனுக்கு புதுப்புது நோய்களும் துன்பங்களும் வர ஆரம்பித்தன. உடலுக்குள் நச்சுப் பொருட்கள் சேர ஆரம்பித்ததன் மூலமே சமைத்து உண்ணும் பழக்கத்தால்தான்! அதனால்தான் 'சமைத்து உண்பது தற்கொலைக்குச் சமம்!’ என்கிறோம்.

உதாரணத்துக்குச் சொல்கிறேன்.... 'ஒரு தோட்டத்தில் மா, புளி, வேம்பு என்று தனித்தனியாக மரங்களை நட்டு வளர்க்கிறோம். ஒரே மண் - தண்ணீரை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு சுவை, சத்துள்ள பழங்களை தருவதில்லையா? அதேபோல்தான் நம் உடலும். கிடைக்கும் உணவுப்பொருளை ஜீரணம் செய்து நமக்குத் தேவையான சத்துக்களை தனித்தனியாக தயாரித்து எடுத்துக் கொள்ளும்'' என்கிறார் விளக்கமாக.

''சிகிச்சைக்கு வருகிறவர்களை திடுதிடுப்பென காய்கறி உணவுகளைச் சாப்பிடச் சொல்கிறீர்களே.... சரிப்பட்டு வருமா?''

''நோய் நொடி என்று சிகிச்சைக்கு வருபவர்களை படிப்படியாகத்தான் இயற்கை உணவுக்குப் பழக்கப்படுத்துகிறோம். அதாவது, 'வடை, பாயாச விருந்தைக் காட்டிலும், ரசம் சோறு சிறந்தது. ரசச் சோற்றைக்காட்டிலும் மோர்ச்சோறு சிறந்தது. மோர்ச்சோற்றைக்காட்டிலும் கஞ்சி சிறந்தது. கஞ்சியைக்காட்டிலும் கூழ் மேலானது. ஆனால், இவை எல்லாவற்றையும் விட காயும் கனியும் மட்டுமே மனிதனுக்கான மிகச்சிறந்த உணவு!’ என்பதுதான் உலக நல்வாழ்வு ஆசிரமத்தின் கொள்கையே.

ஏனெனில், சமைத்த உணவு வகைகளை சாப்பிட்டுக் கொண்டே தியானம், மண் குளியல்..... போன்ற இயற்கை சிகிச்சை முறைகளைப் பின்பற்றுவது என்பது தினமும் குளிக்காமல் புதிது புதிதாக நறுமணப் பொருட்களை மட்டுமே பூசிக் கொள்வது போன்ற மூடத்தனம். அதனால், காலைக் கடன் முடித்தவுடன் இனிமா சிகிச்சை கொடுத்து குடலைச் சுத்தமாக்குகிறோம். பின்னர் யோகா, நடைப் பயிற்சி, வாழை - மண் - நீராவிக் குளியல்..... என்று இயற்கை சிகிச்சைகளைச் செய்கிறோம். குடல், இரைப்பை உள்ளிட்ட வயிற்றுப் பகுதியை சுத்தம் செய்ய அடிக்கடி ஜூஸ் வகைகளைக் குடிக்கச் செய்கிறோம். இந்த இயற்கை சிகிச்சை முறைகளின்போது உடம்பில் இருக்கும் நச்சுப் பொருட்கள் யாவும் சிறுநீர், மலம், வியர்வை.... போன்ற கழிவுகளோடு வெளியேறி உடல் தூய்மையானதாகிவிடும். இதன்பின்னர் முறையான இயற்கை உணவுப் பொருட்களை உண்ண ஆரம்பித்தால், பித்தம், காமம், சினம், பொய்மை, களவு, வெறியுணர்வு.... போன்றவை ஒழிந்து சாத்வீக குணம் மேலோங்கும்!'' என்று தீர்க்கமாகச் சொல்கிறார் டாக்டர் நல்வாழ்வு!

இயற்கையோடு இணைந்தாலே இனிமைதானே?