Published:Updated:

ஆவணக் கலைஞன்

ஆவணக் கலைஞன்
பிரீமியம் ஸ்டோரி
ஆவணக் கலைஞன்

சாதனை / ந.வினோத்குமார்படங்கள் /சு.குமரேசன்

ஆவணக் கலைஞன்

சாதனை / ந.வினோத்குமார்படங்கள் /சு.குமரேசன்

Published:Updated:
ஆவணக் கலைஞன்
பிரீமியம் ஸ்டோரி
ஆவணக் கலைஞன்
ஆவணக் கலைஞன்

ந்தியாவின் பத்து பிரதமர்கள், ஐந்து ஜனாதிபதிகளிடம் புகைப்​படக்காரராக வேலை பார்த்த தமிழர் யார்?’ என்று பொது அறிவுக் கேள்வி போட்டிகளில் கேட்கப்​பட்டால்... ஆச்சர்யம் இல்லை! அவர், சி.எம்.விநாயகம். பிரதமர்கள், ஜனாதிபதிகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மௌன சாட்சியாக தனது கேமரா மூலம் பதிவு செய்தவர். 

''இதோ இந்த போட்டோவைப் பாருங்க. பிரதமர், ஜனாதிபதி பதவி வகிப்பவர்கள் விமானத்தில் போகிறபோதும், வருகிற போதும் முப்படைகளின் உயர் அதிகாரிகள் சல்யூட் வைக்கணும். அந்த மூன்று உயர் அதிகாரிகளில் யார் சீனியரோ, அவர் நடுவில் நிற்பார்...'' என்றபடியே நம்முன் பரவலாகப் புகைப்படங்களை எடுத்து வைத்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு தகவல் சொல்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''1948-ல கோலார் தங்கவயலில் பிறந்தேன். அண்ணன் ஒருத்தன் இருந்தான். தங்க சுரங்கத்துல வேலை பார்க்கும்போது என் அப்பா இறந்துட்டார். அப்ப நான் மூணு மாசக் குழந்தை. எங்களை வளர்க்க எங்க அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. கே.ஜி.எஃப். கிறிஸ்துவ பள்ளியில் இலவசமா படிக்க வாய்ப்பு கிடைச்சுது. பத்தாவது வரைக்கும் அங்கதான் படிச்சேன்.

ஆவணக் கலைஞன்
ஆவணக் கலைஞன்

லீவுக்கு மெட்ராஸ் வருவோம். எங்க மாமா, கவர்னர்கிட்ட டிரைவரா இருந்தார். அவர்தான் உஸ்மான் ரோட்ல இருந்த 'சின்னிஸ் போட்டோ ஸ்டூடியோ’வுல என்னை வேலைக்கு சேர்த்துவிட்டார். ஃபிலிம் டெவலப்பிங் நல்லா பண்ணுவேன். அதனால சின்னி என்கிட்ட ரொம்ப அன்பா இருப்பார்.

அப்புறம் 'பேசும்படம்’ பத்திரிகையில் கொஞ்ச காலம் வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் கே.ஆர்.விஜயா நடித்த முதல் படமான 'கற்பகம்’ படத்துல நான் ஸ்டில் போட்டோகிராபரா வேலை பார்த்தேன். ஒருநாள் என் ஃபிரண்டு ஒருத்தன், 'டெல்லியில வேலை இருக்கு... 125 ரூவா சம்பளம். உடனே வாடா’ன்னு எழுதியிருந்தான். யோசிக்கவே இல்லை. சட்டுன்னு கிளம்பிட்டேன்.

ஒரு போட்டோ ஸ்டூடியோவுல சேர்ந்தேன். 175 ரூவா சம்பளம். எந்தப் பிரச்னையும் இல்லாம ஓடிட்டு இருந்துச்சு.

ஆவணக் கலைஞன்
ஆவணக் கலைஞன்

அதுக்கப்புறம் அட்வர்டைசிங் ஏஜென்ஸிக்கு 225 ரூவா சம்பளத்துக்குப் போனேன். அந்த வருஷத்துல எனக்கு கல்யாணமாச்சு. அவளும் மெட்ராஸ்தான். அதுக்கப்புறம் ஹிந்துஸ்தான் டைம்ஸ்ல வேலை. நான் எடுத்த போட்டோக்கள் என் பெயரோடு வரும்.  ஒரு முறை கார்டூனிஸ்ட் சங்கரன்பிள்ளை டெல்லியில 'டால்ஸ் மியூஸியம்’ வெச்சிருந்தார். 'ஷங்கர்ஸ் வீக்லி’ பத்திரிகையும் நடத்தினார். அவர் என்னிடம், ''சின்னக் குழந்தைகளுக்காக புக் ஒண்ணு பண்ணப் போறேன். 14 மாநிலங்களில் போய்ப் படம் எடுக்கணும். 600 ரூவா சம்பளம். சேர்ந்துக்கறியா?''ன்னு கேட்டார். கொஞ்சம் யோசிச்சு... தலையை ஆட்டிட்டேன். சுதந்திர தினக் கொண்டாட்டம் நடக்கிறப்போ, பல மாநில கலாசார நடனங்களை ஆடிட்டு வருவாங்க. அவங்களை போட்டோ எடுத்து மியூஸியத்துக்குக் கொடுப்பேன். எனது போட்டோக்களை அடிப்படையா வெச்சுத்தான் 'டால்ஸ் மியூஸிய'த்தில் பொம்மைகள் செய்வாங்க.

ஆவணக் கலைஞன்
ஆவணக் கலைஞன்
ஆவணக் கலைஞன்

1983-ன்னு நினைக்கிறேன். யூ.பி.எஸ்.சி. மூலமா போட்டோகிராபிக் ஆபீஸர் தேவைன்னு விளம்பரம் வந்தது. அப்ளை செஞ்சேன். ரிட்டன் டெஸ்ட், இன்டர்வியூ பாஸ் பண்ணியதும் எனக்கு 'கேப்டன்’ ரேங்க் கொடுத்தாங்க. முப்படைகளின் உயர் அதிகாரிகள் இங்கிருந்து வெளிநாடு போனாலோ.... வெளிநாடுகளில் இருந்து ராணுவ உயர் அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்தாலோ... அவங்க கூடவே இருந்து அவங்க போற இடத்துக்கெல்லாம் போய், படமெடுத்து ஆல்பம் போட்டுக் கொடுக்கிறது என் வேலை.

1984-ல 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ - அதான் தங்கக் கோயிலுக்குள்ள ராணுவம் நுழைஞ்சுதே, அந்த ராணுவ நடவடிக்கையை நேரில் இருந்து புகைப்படம் எடுத்தவன் நான். அதே மாதிரி 1987-ல அமைதிப்படை ஸ்ரீலங்காவுக்குப் போனபோது நானும் போயிருந்தேன். மூணு மாசத்துல என்னை பெங்களூரூவுக்கு தூக்கிப் போட்டுட்டாங்க.

அந்த சமயம் தகவல் ஒளிபரப்புத் துறையில் மூன்று போட்டோ ஆபீஸர்ஸ் தேவைன்னு விளம்பரம் வந்தது. அப்ப ராஜீவ் காந்தி பிரதமரா இருந்தார். நான் ஏற்கெனவே கேப்டன் ரேங்க் என்பதால், ஈசியா கிடைச்சது. அன்னிக்கு ஆரம்பிச்சதுதான் பிரதமர்கள், ஜனாதிபதிகளோடு எனது பயணம்... 2008-ல ரிட்டயர்மென்ட் கொடுத்தாங்க.

ஆவணக் கலைஞன்

பெரிய தலைவர்கள் ஒவ்வொருத்தர் ஒரு விதம். பார்வையாளர்கள் எத்தனை பேர் வந்தாலும் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அவங்க எல்லாரையும் பார்த்து முடிச்சிட்டு மதியம் 2 மணிக்கு மேலதான் அடுத்த வேலையைப் பார்ப்பாங்க. அவங்ககிட்ட எனக்குப் பிடிச்சது என்னன்னா... நமக்கு போட்டோ தேவைன்னா பொறுமையா இருந்து நமக்கு போஸ் கொடுத்துட்டுத்தான் போவாங்க. அவங்களோட வெளிநாடுகளுக்குப் போகும்போது கிடைக்கிற அவகாசத்தில் என் போன்றவர்களைத் தேடிவந்து அன்பா பழகுவாங்க. என்னோட அனுபவத்துல, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் மாதிரி 'மீடியா ஃப்ரெண்ட்லி’ யாரும் இல்லை.

ஆவணக் கலைஞன்

இத்தனை வருஷம் நான் போட்டோகிராபரா இருந்தாலும், இது வரைக்கும் ஒரே ஒரு கேமராதான் சொந்தமா வாங்கியிருக்கேன். ராலி காட்-120 என்கிற ஜெர்மன் தயாரிப்பு கேமரா. அதுவும் கால ஓட்டத்துல வேற ஒருத்தர் கைக்குப் போயிடுச்சு. மத்தபடி, நான் முழுக்கவும் அரசாங்கம் தந்த கேமராவில்தான் படம் எடுத்திருக்கேன். இதுல என்ன வருத்தம்னா, என் என் மனசுக்குப் பிடிச்ச மாதிரி பல படங்கள் எடுப்பேன். ஆனா, அதில் பலவற்றை பாதுகாக்க முடியலை. அதை நினைச்சாத்தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

இப்பவும் நான் அப்பப்ப போட்டோ எடுக்கிறேன். ஆனா, அது பணத்துக்காக இல்லை. குடும்பத்தின் மிக முக்கியமான வி.ஐ.பி-யான என் பேரனோட கிரிக்கெட் விளையாடுறதுல டைம் போகுது. வாழ்க்கை ரொம்ப திருப்தியா இருக்கு. அதுக்கு மேலே என்ன வேணும்?!'' வாய் நிறையச் சிரிப்புடன் விடைகொடுக்கிறார் விநாயகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism