Published:Updated:

ஒளி விளக்கு

 ஒளி விளக்கு
பிரீமியம் ஸ்டோரி
ஒளி விளக்கு

கலை: இரா.மங்கையர்க்கரசி/ படங்கள்:/செ.சிவபாலன்

ஒளி விளக்கு

கலை: இரா.மங்கையர்க்கரசி/ படங்கள்:/செ.சிவபாலன்

Published:Updated:
 ஒளி விளக்கு
பிரீமியம் ஸ்டோரி
ஒளி விளக்கு
 ஒளி விளக்கு

ஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய காலத்தில், கோயிலில் உள்ள விளக்குகளுக்கு தொடர்ந்து நெய் தந்து, அப்பகுதி மக்களுக்கு நிறைய மாடுகளையும், அவற்றைப் பராமரிக்க இடங்களை யும் வழங்கினாராம் மாமன்னர் ராஜராஜ சோழன். விளக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த மன்னரது ஆட்சிக்கு உட்பட்ட கும்பகோணத் துக்கு அருகில் உள்ள நாச்சியார்கோவில் பகுதி மக்களுக்கு இன்றும் விளக்குதான் வாழ்க்கையாகவே சுடர்கிறது! 

1,000 வருடங்களுக்கு மேலாகவே இங்கு உள்ள மக்களின் அடிப்படைத் தொழில், குத்துவிளக்கு தயாரிப்பது. இன்றும் இங்கு, 3,000-க்கும் அதிகமானோர் இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய குத்துவிளக்கு, கேரளாவின் கூத்தாட்டுகுளம் டவுன் கிறிஸ்துவ தேவாலயத்தில் உள்ளதாம். ஒன்பது அடுக்கு களுடன் சுமார் 6,640 கிலோ எடையுள்ள இந்த விளக்கும் நாச்சியார்கோவிலில் தயாரானதுதான். பித்தளையில் விளக்கு செய்வதற்கு முன்னர், அதன் பாகங்களை அச்சு எடுத்துத் தருவது இங்கு உள்ள பெண்கள்தான். இந்த அச்சு களை அடிப்படையாகக் கொண்டுதான் வார்ப்பு மூலம் விளக்கு தயாரிக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஒளி விளக்கு

பல தலைமுறைகளாக குத்துவிளக்கு தயாரித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த ராஜா, ''ஒரு விளக்கு முழுசாத் தயாராக முதல்படி இந்த அச்சுதான். மண் அச்சு இல்லாம நேரடியா விளக்கு தயார் செஞ்சோம்னா பித்தளை அதிகமா தேவைப்படும்...'' என்கிறார்.

நாம் சென்றபோது மும்முரமாக அச்சு தயார் செய்துகொண்டு இருந்தார் அமுதவள்ளி. ''எந்த டிஸைன் விளக்கு, எண்ணிக்கை எவ்வளவுன்னு முதல் நாளே பட்டறையில் இருந்து சொல்வாங்க. அதன்படி அச்சு தயார் பண்ணி காய வைச்சிருப்போம். வேலையை எங்களுக்குள் பிரிச்சுக்குவோம். ஒருத்தர் விளக்கின் தண்டை அச்சு எடுத்தா, இன்னொருத்தர் அடித்தட்டை அச்சு எடுப்போம். கஷ்டப்பட்டு பட்டறையில வேலை பார்க்கும் எங்க வீட்டு ஆம்பிளைகளுக்கு எங்களால் செய்ய முடிஞ்ச உதவி...'' என்றவரின் பேச்சுதான் நம்மிடம். அவரது கையும், கண்ணும் பரபரவென மின்னல் வேகத்தில் அச்சை வடிவமைத்தது!

பல வருடங்களாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள காளிதாஸ், ''ஒரு முறைக்கு சுமார் 300 கிலோ பித்தளையை உலையில் உருக்குவோம். அதில், பெரிய ஐந்தடி விளக்குன்னா நாலும், ஓர் அடி குத்துவிளக்குன்னா 60 எண்ணிக்கை வரையிலும் செய்வோம். விளக்கின் பாகங்களை தனித்தனியா வார்த்த பிறகு அதை கிரைண்டிங் செக்ஷனில் கொடுத்து பிசிறுகளை நீக்குவோம். பின்னர் பட்டறையில் கொடுத்து சரியான அளவுக்கு அந்த பாகங்களைக் கடைசல் செய்து பாலீஷ் போட்டால் விளக்கு ரெடி. இதுவே, வேலைப்பாடுகள் வேணுமின்னா பாலீஷ் போட்டதும், நகாசு வேலை பண்றவங்ககிட்ட தருவோம். அவங்க வேலை முடிந்ததும், மறுபடி பாலீஷ் போட்டுட்டா அம்சமா விற்பனைக்குத் தயாராகிடும். நகாசு விளக்குக்கு வேலை கொஞ்சம் கூடுதல், அதனால அதுக்கு விலையும் கொஞ்சம் ஜாஸ்தி!'' என்றார்.

நாச்சியார்கோவிலில் கிட்டத்தட்ட 300 பட்டறைகள் இருக்கின்றன. சிறிய, பெரிய விளக்கு, நகாசு விளக்கு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு பட்டறையில் தயாராகிறது. பட்டறையாளர்களிடம், வியாபாரி கள் மொத்தமாகப் பித்தளையும், வேலையாட்கள் கூலியும் தந்து தேவைக்கேற்ப விளக்குகளைச் செய்து வாங்கிச் செல்கின்றனர். ஒரு சிலர், சொந்தப் பட்டறையில் விளக்கு செய்து பாத்திரக் கடைகளுக்கு விற்பனை செய்வதுடன், வெளிநாடு களுக்கு ஏற்றுமதியும் செய்கின்றனர். குறிப்பிட்ட டிஸைனில், இன்னின்ன வேலைப்பாடுகள் கொண்ட விளக்கு வேண்டும் என ஆர்டர் செய்கின்றவர்களும் உண்டாம்.

 ஒளி விளக்கு

திருமணங்களுக்கும், ஆலயங்களுக்குமே அதிகமான தேவைகள் இருப்பதனால்... ஆவணி, தை போன்ற முகூர்த்த மாதங்களிலும், தீபாவளி சமயங்களிலும் அதிக அளவில் விளக்குகள் விற்பனையாகுமாம். ஆடி மாதம் மட்டும் கொஞ்சம் டல்.

''மக்களின் வழிபாட்டில், நாங்க செய்யுற விளக்கும் ஓர் அங்கமா இருக்குனு நினைக் கறப்போ இது, கடவுள் சேவைங்கிற எண்ண மும், ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது...'' என்கிறார் காளிதாஸ்.

நிஜம்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism