Published:Updated:

ஆகாய தாமரை!

ஆகாய தாமரை!
பிரீமியம் ஸ்டோரி
ஆகாய தாமரை!

சாதனை / என்.மல்லிகார்ஜுனா

ஆகாய தாமரை!

சாதனை / என்.மல்லிகார்ஜுனா

Published:Updated:
ஆகாய தாமரை!
பிரீமியம் ஸ்டோரி
ஆகாய தாமரை!
ஆகாய தாமரை!

ண்கள் மட்டும்தான் சாகசம் செய்யவேண்டுமா? எங்களுக்கு என்ன குறைச்சல்... பெண்களுக்கும் தில் இருக்கிறது’ என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள், பிரிட்டனைச் சேர்ந்த 'பிரீட்லிங் விங்க் வாக்கர்ஸ்’ குழுவைச் சேர்ந்த பெண்கள். இதில் குறிப்பாக ஆண்களாலும் வியந்து பார்க்கப்படுபவர், சார்லோட்டி வோஸ்.

பறக்கும் விமானத்தின் இறக்கைகள் மீது நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும் சாகசங்களைச் செய்து காண்பிப்பதுதான் இந்தக் குழுவினரின் வேலை. பறக்கும் விமானத்தில் நிற்பதே பெரிய சாகசமாக வியந்து பார்க்கப்படும் நேரத்தில், சார்லொட்டி வோஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் வித்தைகளைக் காட்டி உலகையே வியக்க வைக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த த்ரில் நாயகி டிகிரி முடித்த கையோடு வேலைவாய்ப்பு தேடி ஒவ்வொரு அலுவலகமாக அலைந்தாராம். ஏனோ வேலை கிடைக்கவே இல்லை. அதனால் மன உளைச்சலுக்கு ஆளான வோஸ், என்ன செய்வதென்றே புரியாமல் தொலைக்காட்சியே கதியென்று கிடந்தாராம். அப்போது விமான சாகச நிகழ்ச்சியைப் பார்த்த அவரது அம்மா, 'உன்னால ஒரு வேலைக்கே போக முடியலை... அங்கே பாரு பொண்ணுங்க எப்படியெல்லாம் தைரியமா பறக்குற விமானத்தில் நிற்கிறாங்க... பேசாம நீயும் இதில் போய் சேர்’ என்று சொல்லி இருக்கிறார்.

அப்போதுதான், அந்தக் குழுவில் சேரவேண்டும் என்ற ஆசை வோஸ்க்கு வந்திருக்கிறது. உடனே விங்க் வாக்கர் குழுவுக்கு விண்ணப்பம் அனுப்பி இருக்கிறார். 'இதில் சேர்வதென்றால்... மன உறுதியும், நெஞ்சில் தில்லும் இருக்கவேண்டும்’ என்று சொல்ல, 'அது, என்னிடம் நிறையவே இருக்கிறது’ என்று இணைந்துகொண்டார்.

ஆகாய தாமரை!

ஏர் ஷோ நடக்கும் இடங்களுக்குச் சென்று பறக்கும் விமானத்தின் மீது தங்களுடைய திறமைகளைக் காட்டுகிறார்கள். கரணம் தப்பினால் மரணம் என்பது போல் எந்த நிமிடமும் உயிருக்கு ஆபத்து இருந்துகொண்டே இருக்கும்.  

விமானத்தில் நிற்பது நடப்பது என்பதை பலரும் செய்துவந்த நிலையில், வோஸ் கடுமையாகப் பயிற்சிகள் மேற்கொண்டு விங்க் வாக்கர் ஆகத் தேர்ச்சி பெற்றார். முதன் முதலாக ஸ்காட்லாந்தில் நடந்த ஏர் ஷோவில், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன்பு பறக்கும் விமானத்தில் தன் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசத்தை அரங்கேற்ற, கூடியிருந்த மக்களும் தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களும் வியப்பின் உச்சத்துக்கே போய்விட்டனர்.  150 மைல் வேகத்தில் மேலும் கீழுமாகவும், சாய்வாகவும், தலைகீழாகவும் பறக்கும் விமானத்தின் இறக்கைகள் மீது இது வரை  யாரும் செய்யாத பல்வேறு சாகசங்களைச் செய்து அசரடிக்கிறார்.

ஆகாய தாமரை!

இது குறித்துப் பேசும் வோஸ், ''இந்த பயணம் வாழ்க்கையை த்ரில்லிங்காக வைத்திருக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும் அழைக்கிறார்கள். அதனால் இன்னும் புதுப்புது சாதனைகளை செய்து காட்ட விரும்புறேன். எனக்கு மேலே இருக்கும்போது பயம் தெரிவது இல்லை... கீழே இறங்கிவந்து வாழ்க்கையைப் பார்த்தால்தான் பயமாக இருக்கிறது...'' என்கிறார்.

ஆகாய தாமரை!

மாடி பஸ்ஸில் போகிறபோதே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து வயிறு கலங்கும் நம்மவர்கள் பலருக்கு நடுவே, அந்தரத்தில் பறந்தபடி பல்டி அடிக்கிற அம்மையாருக்கு சத்தியமாக அடிக்க வேண்டாமா ஒரு சல்யூட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism