Published:Updated:

துடுப்பெடுக்க வர்றீங்களா?

துடுப்பெடுக்க வர்றீங்களா?
பிரீமியம் ஸ்டோரி
துடுப்பெடுக்க வர்றீங்களா?

விசிட் /எஸ்.ரஜித், படங்கள்/சொ.பாலசுப்ரமணியம்

துடுப்பெடுக்க வர்றீங்களா?

விசிட் /எஸ்.ரஜித், படங்கள்/சொ.பாலசுப்ரமணியம்

Published:Updated:
துடுப்பெடுக்க வர்றீங்களா?
பிரீமியம் ஸ்டோரி
துடுப்பெடுக்க வர்றீங்களா?
துடுப்பெடுக்க வர்றீங்களா?

மெட்ராஸ் போட் கிளப்  - சென்னையில் உள்ள கிளப்களுக்கு எல்லாம் பெரிய அண்ணா. 1867-ம் ஆண்டு சென்னையின் மையப்பகுதியாக இருந்த அடையாறில் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. நீண்ட துடுப்புகளைக் கொண்டு படகை வலிக்கும் ரோயிங் விளையாட்டை ஊக்குவிப்பதே, இந்த கிளப்பின் நோக்கம். அந்தக் காலத்து அடையாறு ஆற்றில் தொடங்கப்பட்ட விளையாட்டு, இன்று அந்த நதி சீர்கெட்டு இருக்கும் நிலையிலும் தொடர்வதுதான் ஆச்சர்யம். 

கிளப் குறித்த தகவல்களைத் தருகிறார் தலைவர் ஜி.ரபிந்திரநாத் ராவ். ''படகுப் போட்டியை ஊக்குவிப்பதே இந்த கிளப்பின் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது. லாப நோக்கு இல்லாமல் இந்த கிளப், செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்பில் ஏராளமான மரப் படகுகள் முன்பு இருந்தன. சர்வதேச அளவில் இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றத்துக்கு ஏற்ப ஃபைபர் கிளாஸில் செய்யப்பட்ட எடை குறைந்த, வலுவான படகுகளும் கார்பன் ஃபைர் கொண்டு செய்யப்பட்ட துடுப்புகளையும் இப்போது உபயோகிக்கத் தொடங்கி இருக்கிறோம். இந்த படகுகளின் விலை ஒரு லட்சம் தொடங்கி ஆறு லட்சம் வரை இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருவர் மட்டுமே ஓட்டும் படகில் தொடங்கி இருவர் மற்றும் நால்வர் பயன்படுத்தும் படகுகள் போட்டிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த படகுப் போட்டியை கோல்டன் ஸ்போர்ட் என்று சொல்வார்கள். ஏனென்றால் டென்னிஸ், நீச்சல் போன்ற எந்த விளையாட்டை விடவும் அதிகமான உடல் வலிமையும் உழைப்பும் இந்த ரோயிங் விளையாட்டுக்குத் தேவைப்படுகிறது. மேலும் படகினை பேலன்ஸ் செய்யும் திறனும், குழுவோடு இணைந்து இயங்கும் தன்மையும் அவசியம். இந்த விளையாட்டை அனுபவித்துச் செய்பவர்களால் வாழ்வில் எந்த வகையான சவால்களையும் சந்தித்து எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், இந்த விளையாட்டுக்குக் கண்கள் தொடங்கி கால் விரல் வரை பயன்படும். கால், கை, வயிறு, தோள்பட்டை என உடல் முழுவதற்கும் சீரான பயிற்சி கிடைக்கிறது.

இந்த படகுப் போட்டியை ரிகெட்டா என்று சொல்வார்கள். சர்வதேசப் போட்டி களில் 2,000 மீட்டர் தூரத்தை படகு மூலம் கடக்க வேண்டும். இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான போட்டிகளில் 1,000 மீட்டர் மட்டுமே இலக்காக வைக்கப்படுகிறது. இந்த இலக்கை சுமார் மூன்று நிமிடத்தில் கடந்து முடிப்பதற்குள் எத்தனை வலிமையான உடல் கொண்டவர்கள் என்றாலும் களைப்படைந்து விடுவார்கள்.

உலகிலேயே மிகவும் பழைமையான ரிகெட்டா போட்டி எனப்படுவது ஆக்ஸ்போர்டு - கேம்ப்ரிட்ஜ் ஆகிய இரு பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடக்கும் போட்டி ஆகும். இது 1829-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெறுகிறது. இதை அடுத்த இரண்டாவது பழைமையான போட்டி மெட்ராஸ் போட் கிளப் மற்றும் கொழும்பு ரோயிங் கிளப்புக்கு இடையே நடக்கும் ரிகெட்டா போட்டிதான். இது 1898 முதல் நடந்து வருகிறது. ஒரு ஆண்டு சென்னை அடுத்த ஆண்டு கொழும்பு என்று போட்டிகள் நடக்கின்றன. ஆண்கள் போட்டிக்கு தீபம் ட்ராபி என்றும் பெண்கள் போட்டிக்கு அடையாறு ட்ராபி என்றும் பெயர்.

மெட்ராஸ் போட் கிளப்பில் இப்போது சுமார் 1,500 அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். இதில் 350 ரோயிங் மெம்பர்களும் 100 மாணவ மெம்பர்களும் அடக்கம். இந்த கிளப்பில் சேர்வதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. ஏற்கெனவே இங்கு அங்கத்தினராக இருப்பவர்கள் முன்மொழிய வேண்டும். இது தவிர, அங்கத்தினராகச் சேர அவர் தகுதியானவர்தானா என்பதை ஒரு கமிட்டி மூலம் நேர்முகத் தேர்வு நடத்தி, அந்த கமிட்டி ஒப்புதல் அளித்தால் மட்டுமே சேர்க்கப்படுவார். இதுபோன்று ரோயிங் போட்டிகளில் சேர்வதற்கும் நிறைய முன் அனுபவமும், நிறைய தகுதிகளும் வேண்டும். இங்கு ரோயிங் செய்யும்போது அரை நிக்கரும், வெள்ளை டி ஷர்ட்டும் அணிய வேண்டும்.

இந்த போட் கிளப் அங்கத்தினர்களுக்கும், அவர்கள் அழைத்து வரும் விருந்தினர்களுக்கும் அணிந்துவரும் உடைகளுக்கும் சில கண்டிப்பான விதிமுறைகள் உண்டு. ரோயிங் செய்வதற்கு உயரம் மிகவும் அனுகூலமாக இருக்கிறது. ஏனென்றால், உயிரமானவர்களுக்கு நீண்ட கால்கள், கைகள் இருப்பதால் அதிக சக்தியோடு, துடுப்பை வலிக்க முடிகிறது. கால்களில் இருந்து அதிக சக்தி கிடைக்கும்.

துடுப்பெடுக்க வர்றீங்களா?

இந்த கிளப்பின் முதல் மாடியில் மாபெரும் நீச்சல் குளம் இருக்கிறது. இது தவிர பார், ரெஸ்டாரென்ட், ஜிம் போன்றவை புகழ் பெற்றவை. புத்தாண்டு கொண்டாட்டம் இங்கே பட்டையைக் கிளப்பும். எங்கள் கிளப்பில் கொண்டாடப்படும் 31 டிசம்பர் இரவை 'தி பெஸ்ட்’ என்று சொல்வார்கள்.

இந்த கிளப்பை ஒரு குடும்பம் என்று சொல்லலாம். பரம்பரை பரம்பரையாக இங்கே மெம்பராக இருப்பார்கள். இதற்கு உதாரணமாக சென்னை பாரி நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான எஸ்.ராதாகிருஷ்ணன் இங்கே தொடர்ந்து ரோயிங் பயிற்சி செய்பவர். இப்போது அவர் மகன் ஜெகன், பேரன் அனிருத் ஆகியோரும் ரோயிங்கில் பயிற்சி பெற்று நிறையப் பரிசுகள் பெற்றுள்ளார்கள்.

துடுப்பெடுக்க வர்றீங்களா?

காயத்ரி ஆச்சார்யா, பவித்ரா ராவ் விஜயாசாரி, ஆர்த்தி ராவ் என்ற மெட்ராஸ் போட் கிளப்பைச் சேர்ந்த நான்கு பெண்களும், சீனாவில் நடந்த சர்வதேச போட்டியில் இந்தியாவின் குழுவாகப் பங்கேற்றார்கள் என்பது சிறப்பு. சமீபத்தில் சீனாவில் நடந்த ஜூனியர் ஏஷியன் கேம்ஸ் போட்டியில் பங்குபெற இந்தியா முழுவதிலும் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட 15 பெண்கள், தேர்ந்து எடுக்கப்பட்டு ஹைதராபாத்தில் அவர்களுக்கு மூன்று மாதம் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. மெட்ராஸ் போட் கிளப்பைச் சேர்ந்த சுருதி காமத், ஃபசீலா ஷ§ஸேன் ஆகியோர் தேர்வானார்கள்.

சுருதி காமத், மணிப்பூரைச் சேர்ந்த மோனோ லிசா, ப்ரியா தேஷி கேரளாவைச் சேர்ந்த நிம்மி ஆகிய நால்வர் குழு, தாய்வான் அணியை வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது...'' என்று பெருமைகளைச் சொன்னார்.

சென்னை போட் கிளப் அங்கத்தினர்களுக்காக பிரத்யேகமான ஆங்கில மாதப் பத்திரிகையும் இயங்கி வருகிறது. அதன் பெயர் என்ன தெரியுமா?

துடுப்புகள் பேசுகின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism