Published:Updated:

NO.1 விண்வெளி வீரர்1

NO.1 விண்வெளி வீரர்1
பிரீமியம் ஸ்டோரி
NO.1 விண்வெளி வீரர்1

அனுபவம்: ஜி.எஸ்.எஸ்

NO.1 விண்வெளி வீரர்1

அனுபவம்: ஜி.எஸ்.எஸ்

Published:Updated:
NO.1 விண்வெளி வீரர்1
பிரீமியம் ஸ்டோரி
NO.1 விண்வெளி வீரர்1
NO.1 விண்வெளி வீரர்1

'விநாடி வினா என்பது சீரியஸான போட்டி. ஆனால், அதிலும் புன்னகை வரவழைக்கும் விநாடிகள் உண்டு’ என்கிறார் ஆயிரத்துக்கும் அதிகமான விநாடி வினா நிகழ்ச்சிகளை நடத்திய க்விஸ் மாஸ்டர் ஜி.எஸ்.சுப்ரமணியன். சில வேடிக்கையான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார்.

ரு விநாடி வினா நிகழ்ச்சியில் தப்பான பதிலைக் கூறிவிட்டு... உடனே சரியான பதில் கூறுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார் ஒருவர். அப்படித்தான் ட்ரையத்லான் பற்றிய கேள்விக்கு, 'அமிர்தா... ஸாரி... அமுதா!'' என்றார். தேசிய விருது குறித்த ஒரு கேள்விக்கு, 'சுபாஷிணி... தப்பு தப்பு... சுஹாசினி’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதனால் அவரிடம், 'இனிமேல் நீங்கள் முதலில் சொல்லும் விடையைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்வேன். அதனால் யோசித்து சரியான பதில் சொல்லுங்க...’ என்றேன். 'அதெப்படி சார், நான்தான் உடனே தப்பை திருத்திக்குறேனே. நான் கடைசியா சொல்வதைத்தான் கணக்கிலே எடுத்துக்கணும்’ என்று வாதிட்டார். இறுதிச் சுற்றில் இரு அணிகளுக்கிடையே சம மதிப்பெண்கள். டைபிரேக்கிங் கேள்வி கேட்கப்பட்டது. நம் குழப்பவாதி, 'கும்ளே... இல்ல காம்ப்ளி’ என்றார். கும்ளேதான் சரியான விடை என்பதால் அவர் அணி தோற்றுப் போனது.

  இளைஞர்கள் தனித்தனியாகப் பங்கு கொள்ளும் போட்டி. அவர்களில் இரண்டு பேர் ஒரே கல்லூரியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவருக்கு அன்று தொண்டை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் எதையோ சைகையில் கூற... அவர் நண்பர் அதை'மொழிபெயர்த்தார். சார், குரலே வரவில்லை... விடைகளை பேப்பரில் எழுதிக் காட்டாலாமா?’ என்று கேட்டார். சொல்லும்போதே அவருக்கு சிரிப்பு... அதைக் கேட்ட எனக்கும் சிரிப்பு. காரணம் அது வானொலி விநாடி வினா. கேட்பவர்கள் எப்படி இவர் பேப்பரில் எழுதியதை படிக்க முடியும்? அதற்காக இந்தப் பின்னணியை நேயர்களுக்கு விளக்கிவிட்டு அவர் தோழரை ஏற்பாடு செய்தோம்.

  மாத இதழ் ஒன்றுக்காக சிறுவர் சிறுமிகளுக்கான விநாடி வினா நிகழ்ச்சி ஒன்றை நடத்தினேன். 'விண்வெளியில் முதலில் பயணம் செய்தவர் யார்?’ என்ற கேள்விக்கு ஒரு சிறுவன் தாங்க முடியாத பெருமையுடன் அழுத்தம் திருத்தமாக விடையைக் கூறினான். உடனே பிற சிறுவர்கள் வாய்விட்டு சிரித்துவிட்டனர். 'சரியாகத்தானே விடை சொன்னோம். எல்லோரும் கை தட்டாமல் எதற்கு கேலியாகச் சிரிக்கிறார்கள்’ என்று திகைப்பு அவனுக்கு. காரணம் புரிந்ததும் மிகவும் பப்பிஷேம் ஆகிவிட்டது அவனுக்கு. ஆம், அவன் கூறிய பதில் 'யூரின் காகரின்’ என்று. சரியான பதில், யூரி காகரின்!

  அண்ணாசாலையில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் 'சூப்பர் குடும்பம்’ என்று ஒரு விநாடி வினா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வோர் அணியிலும் ஓர் ஊழியரும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த வேறு இருவரும் இடம் பெற்றனர். இறுதிச் சுற்றுக்கு நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இரண்டு உலகப் போர்களிலும் கலந்து கொள்ளாத ஒரே ஐரோப்பிய நாடு எது? என்ற கேள்வியைக் கேட்டேன். ஓர் அணி பதில் தெரியாமல் தவித்தபோது பார்வையாளர்களில் ஒருவர், தவித்த தன் நண்பருக்கு உதவும் வகையில் தன் கைக்கடிகாரத்தை தொட்டுக் காட்டினார். அதாவது கேள்விக்கான விடை ஸ்விட்சர்லாந்து. ஸ்விஸ் கைக்கடிகாரங்கள் உலகப் புகழ் பெற்றவை. எனவே, நண்பர் இதைப் புரிந்துகொண்டு சரியான விடை அளிப்பார் என்று நினைத்தார். ஆனால் நடந்தது வேறு. பிரகாசமான முகத்துடன், 'பாரிஸ்’ என்று விடை அளித்தார். ஏனென்றால் அந்த கைக்கடிகாரத்தை ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள ஒரு கடையில் நண்பருடன் வாங்கினாராம். பதில் அளிக்கும் அவசரத்தில் பாரிஸ் ஒரு நகரம்... நாடு அல்ல என்பதுகூட அவருக்கு உறைக்கவில்லை.

  தொலைக்காட்சிக்காக ஒரு வித்தியாசமான விநாடி வினா நிகழ்ச்சியை நடத்தினேன். அதில் 'எப்படியும் மதிப்பெண் உண்டு’ என்று ஒரு சுற்று. அதாவது சரியான பதிலைச் சொன்னாலும் சரி, பதில் தெரியாமல் விழித்தாலும் சரி மதிப்பெண் கிடைக்கும்படியான கேள்விகள். உதாரணத்துக்கு 'ரகசியங்களில் தான் எதுவாக இருப்பதாக கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறார்?’ என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டால் கூட, 'தான் ரகசியங்களில் மௌனமாக இருப்பதாகக் கூறினார். உங்கள் மௌனத்தால் சரியான விடையை உணர்த்தி விட்டீர்கள். பிடியுங்கள் மதிப்பெண்கள்’ என்று அளித்தேன். இப்படியே மூன்று அணிகளுக்கு (விடைகள் வராவிட் டாலும்கூட) மதிப்பெண்கள் கிடைத்தது. இறுதி அணிக்கு 'கான் வித் தி விண்ட்’ என்ற பிரபல நூலை எழுதிய மார்கரெட் மிஷல் வேறு எத்தனை நூல்கள் எழுதினார்? என்று ஒரு கேள்வி கேட்டேன். சரியான பதில் தெரியவில்லை என்றால் அமைதியாக இருப்பார்கள். 'வேறு நூல்கள் எழுதவில்லை என்று மௌனத்தால் தெரிவித்து விட்டீர்கள்’ என்றபடி மதிப்பெண் அளித்துவிடலாம் என்பது என் திட்டம். ஆனால், அந்த அணியில் ஒருவர் அவசரமாக, 'இரண்டு’ என்றார். வேறு வழியின்றி சமாளிக்கும் விதமாக, 'உங்கள் அணியில் ஒருவர் தவறான பதில் சொன்னாலும்... இன்னொருவர் சரியான விடையை மௌனத்தின் மூலமாகக் கூறிவிட்டார்’ என்று சொல்லி மதிப்பெண் அளித்தேன்.

  தொலைக்காட்சியில் ஒரு 'லைவ்’ விநாடி வினா நிகழ்ச்சி. சரியான விடைகளை மக்கள் தொலைபேசி மூலம் கூறிப் பரிசு பெறலாம் என்பதால், 'இப்போது நீங்கள் திரையில் காணப்போவது எந்த இடம்?’ என்று கேட்டேன். 'ஆதிசங்கரர்’ என்ற திரைப்படத்தில் சங்கரர் சிருங் கேரியில் பாதயாத்திரை செய்யும் காட்சியை விஷ§வலாகக் காட்டுவதாகத் திட்டம். ஆனால், சோதனையாக எந்த இடத்திலிருந்து காட்சியை ஒளிபரப்ப வேண்டுமோ அதற்கு சற்று முன்பாகவே அந்தக் காட்சியை ஓடவிட்டார்கள். இதனால் சிருங்கேரி என்ற வார்த்தை உள்ள ஒரு ஷாட்டும் அதில் இடம்பெற்றுவிட்டது. உடனே சட்டென்று, 'இந்தக் கேள்வி உங்கள் பொது அறிவுக்கு மட்டுமல்ல விழிப்பு உணர்வுக்கும் விடப்பட்ட சவால்’ என்று சொல்லி சமாளித்தேன்.

  கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய விநாடி வினா. இலக்கியங்களில் இடம்பெற்ற, ஆனால் உண்மையில் அல்லாத நான்கு பறவைகளின் பெயர்களை நான்கு அணிகளுக்கும் வைத்திருந்தேன். சாம்பலான பிறகும் உயிர்த்தெழும் சக்தி கொண்ட 'ஃபீனிக்ஸ், சந்திரன் ஒளியை உண்டு வாழும் சாதகம், பாலில் இருந்து நீரைப் பிரிக்கக் கூடிய அன்னம், ஜோடி இறந்தால் தானும் இறந்துவிடும் அன்றில் ஆகியவைதான் அந்தப் பெயர்கள்.

அணிகள் உட்கார வைக்கப்பட்டபின், ஃபீனிக்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் தயக்கத்துடன், 'தப்பா நினைச்சுக்காதீங்க சார். ஃபீனிக்ஸ் என்ற பெயர் எங்களுக்கு அபசகுனமாப்படுது. சாதகம் என்ற பெயர் எங்கள் அணிக்கு இருந்தால் ரிசல்ட்டும் சாதகமா இருக்கும்’ என்றார்கள். நான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் சாதகம் அணியினர் இதற்கு உடன்பட்டதால் மாற்றி அமர சம்மதித்தேன். இறுதியில் வெற்றி ஃபீனிக்ஸ் அணிக்குத்தான் கிடைத்தது. சாதகம் அணியின் முடிவு பாதகமாகவே இருந்தது. ஆம், மூன்றாவது இடம்.

  கல்லூரி மாணவிகளுக்கு ஒரு திடீர் விநாடி வினா நடத்தினேன். முதல் சுற்றில் அவர்கள் அணிந்திருந்த உடையின் வண்ணத்தைத் தொடர்புப்படுத்திக் கேள்விகள் கேட்டேன். பிங்க் வண்ண உடை அணிந்திருந்த மாணவியிடம், 'பிங்க் சிட்டி எனப்படுவது எது?’ (ஜெய்ப்பூர்) என்றும் பச்சை உடை அணிந்தவரிடம், 'ஷேக்ஸ்பியர் பச்சைக்கண் அரக்கன் என்று யாரை அல்லது எதைக் குறிப்பிடுகிறார்?’ (பொறாமை) என்றும் நீல உடை அணிந்திருந்தவரிடம், 'ப்ளூ வேலின் (அதாவது நீல திமிங்கிலத்தின்) சிறப்பு என்ன?’ (மிக அதிக எடை கொண்ட பாலூட்டி உயிரினம்) என்று கேள்விகள் கேட்டேன். அந்த நீல நிற உடை அணிந்திருந்த அந்த மாணவி முகம் சிவக்க எழுந்து சென்றுவிட்டார். மிகவும் பருமனாக இருந்த அந்தப் பெண்ணை 'திமிங்கிலம்’ என்ற பட்டப்பெயர் வைத்துக் கிண்டல் செய்வார்கள் என்பது அதற்குப் பிறகுதான் எனக்குத் தெரிந்தது.

  சென்னை புத்தகக் கண்காட்சியில் நடத்திய விநாடி வினா நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்க மூன்று குறிப்புகள் கொடுக்கப்பட்டன. பொருந்தும் பொதுவான வார்த்தைதான் விடை. ஒற்றைக்கால் நடனம், நிதியமைச்சர், ரகசியமோ ரகசியம் என்று குறிப்புகள் கொடுத்தேன். சிதம்பரம் என்பதுதான் விடை. ஒருவர் மிகவும் உறுதியுடன் 'சுந்தரம்’ என்று பதில் சொன்னார். அவர் அடுத்த சுற்றுக்கு தேர்வாகவில்லை என்றாலும், என் மனதில் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது. அதனால் விடைத்தாளில் அவர் தொலைபேசி எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து விளக்கம் கேட்டேன். பயங்கரமாகச் சிரித்தவர், 'சுந்தரம்’ என்பது அவர் மனைவி பெயர் என்று சொன்னார். ஒற்றைக் காலில் நின்று எதையும் சாதித்துக் கொள்ளும் வீட்டின் நிதி அமைச்சராம் அவர். ஐயோ ஐயோ!

NO.1 விண்வெளி வீரர்1

''நீ செஞ்ச திருட்டுக்கு என்ன தண்டனை தெரியுமா?''

''நீங்க தானே எசமான் எனக்கு 420-ன்னு செல்லமா பேர் வெச்சீங்க அதுகூட உங்களுக்கு மறந்து போச்சா''. 

- பி.நீலவேணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism