Published:Updated:

தாய் வீடு

தாய் வீடு
பிரீமியம் ஸ்டோரி
தாய் வீடு

பயணம்: சு.குமரேசன்

தாய் வீடு

பயணம்: சு.குமரேசன்

Published:Updated:
தாய் வீடு
பிரீமியம் ஸ்டோரி
தாய் வீடு
தாய் வீடு

ருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரே அரண்மனை!’ என்ற தனித்தன்மையுடன் புதுமையாகவும், அதேநேரம் மாறாத பழம்பெருமையோடும் இளமை துள்ளக் காட்சி தருகிறது, மைசூர் அரண்மனை. கதிரவன் மறையும் வேளையில் மஞ்சள் தேய்த்துக் குளித்த புதுப் பெண்ணைப் போல் ரம்மியமான ஒளிவிளக்குகளோடு மின்னும் அரண்ம¬னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

'இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள், மைசூர் அரண் மனையைப் பார்க்காமல் திரும்பவே மாட்டார்கள். உலகிலேயே அதிகமான பயணிகளைக் கவர்ந்து இழுக்கும் அரண்மனைகளில், முதல் இடம் இந்த மைசூர் அரண்மனைக்குத்தான்’ என்று பெருமிதத்தோடு சொல்கிறார், சுற்றுலா வழிகாட்டி சோமசேகர். அவர் சொல்வது உண்மைதான். ஏனென்றால் இந்தியாவில் தாஜ் மஹாலுக்கு அடுத்ததாக அதிகச் சுற்றுலா பயணிகள் (ஆண்டுக்கு 2.70 கோடி பேர்) வந்து ரசிக்கும் இடம், மைசூர் அரண்மனை என்கிறது சுற்றுலாப் புள்ளிவிவரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் இங்கே நடைபெறும் தசரா பண்டிகை (விஜய தசமி திருவிழாவின் பத்தாம் நாள்) உலகப் புகழ் பெற்றது. அப்போது அரச கும்பாபிஷேகம், அரச தரிசனம், பல்லக்கு யாத்திரை, யானை வலம், மல்யுத்த போட்டி, நடனப் போட்டி, கச்சேரி அரங்கேற்றம், அரச தர்பார் என்று ஏராளமான கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த தசரா நிகழ்ச்சியை மகாராஜா குடும்பமே நடத்திவந்தது. 1965-க்கு பிறகு கர்நாடக அரசாங்கம், இதனை அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. மாநில முதல்வர்கள் முதல் குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிநாட்டு அதிபர்கள் வரை பலரும் வருகை தந்து இருக்கிறார்கள்.

தாய் வீடு

இந்த மைசூர் அரண்மனை, உடையார் சாம்ராஜ்யத்தின் தலைநகராக (1399-1947) இருந்தது. உடையார்களின் சாம்ராஜ்யம் தனித்து இயங்கியது என்றாலும், விஜயநகரப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்தது. மைசூர் அரண்மனையின் உண்மையான பெயர் 'அம்பா விலாஸ்’. அம்பா என்றால் கன்னடத்தில் அன்னை என்று பொருள். மைசூர் மகாராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு இதுதான் தாய்வீடு என்பதை பறைசாற்றும் விதமாகவே பெயர் வைக்கப்பட்டதாம். அம்பா விலாஸ் அரண்மனையை மும்முடி கிருஷ்ண ராஜ உடையார் 1912-ம் ஆண்டு கட்டத் தொடங்கினார். இதைக் கட்டி முடிக்க 15 ஆண்டுகள் ஆனது. என்றாலும் 1940-ம் ஆண்டுதான் தோட்டம், கல்யாண மண்டபம், கோயில் என அரண்மனைக்கு முழு வடிவம் கிடைத்தது. அரண்மனையின் மொத்தப் பரப்பளவு 72 ஏக்கர்கள். அதில் அரண்மனைக் கட்டடம் உள்ள பகுதி மட்டும் எட்டு ஏக்கர்.

தாய் வீடு

மைசூரின் கிழக்கு, மேற்குப் பகுதியைச் சுட்டும் வகையில் அரண்மனையின் கிழக்கு மற்றும் மேற்கில் இரு கோபுரங்களை உடையார் நிறுவினார். அதில் ஆக்ரோஷ சிங்கங்களும், அழகிய மயில்களும், கம்பீர யானைகளையும் காண முடிகிறது. அரண்மனை கோபுரம் 146 அடி உயரம் கொண்டது. மைசூரின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் காட்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தாய் வீடு

இங்கிலாந்து இளவரசி குயின் எலிசபெத்தும் மைசூர் மும்முடி கிருஷ்ண ராஜ உடையாரும் நண்பர்களாக இருந்தனர். பல தலைமுறைகள் கடந்த பிறகும் இப்போதும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் ஏதாவது விசேஷம் நடந்தால், உடையார் பரம்பரையினருக்கு முறையான அழைப்பிதழ் வந்துவிடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சார்லஸின் மகன் திருமணத் துக்குக்கூட அழைப்பிதழ் வந்திருக்கிறது. ''இந்தத் திருமணத்துக்கு மொத்தமே 1,000 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பபட்டதாம். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பக்கத்து ஸீட் எங்கள் மகாராஜா ஸ்ரீ கண்டதத்த நரசிம்ம உடையாருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது!'' என்று பெருமைப்படுகிறார்கள் அரண்மனைவாசிகள்.

தாய் வீடு

இந்தியாவில் இன்னமும் அரசு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அரண்மனையின் கடைசி அரசர் ஸ்ரீ கண்டதத்த உடையார்தான். இவர் ஒரு இன்டர்நேஷனல் ஃபேஷன் டிஸைனர். அது மட்டுமில்லாமல் முன்னாள் எம்.பி., முன்னாள் இந்திய கிரிக்கெட் போர்டு சேர்மன், பெங்களூர் கோல்ஃப், ரேஸ்கோர்ஸ் சேர்மன் எனப் பல பதவிகளை வகித்தவர்.

மைசூர் மகாராஜா குடும்பம் பெருமையோடு திகழக் காரணம் மும்முடி கிருஷ்ண ராஜ உடையார்தான். மைசூரில் கொழித்த பருத்தி, பட்டு, சந்தனம், தங்கம், வாசனைத் திரவியங்களை உலகெங்கும் வாணிபம் செய்துவந்தார். அதனால் உலகின் மிகச்சிறந்த கட்டடக்கலை வல்லுநர்கள் பலர் அரண்மனை கட்டுவதற்கு ஆலோசனை வழங்கினார்கள். பெல்ஜியத்தில் இருந்து பளிங்குக் கற்கள், ஐரோப்பாவில் இருந்து கட்டுமானப் பொருட்கள், இத்தாலியில் இருந்து அலங்காரக் கண்ணாடிகள், ரோம் நகரத்தில் இருந்து மர சாமான்கள் வழங்கி மகாராஜாவை ஊக்குவித்தனர். பிரிட்டனைச் சேர்ந்த ஹென்றி இர்வின் என்ற கட்டடக் கலை நிபுணர், 15 ஆண்டுகள் இங்கேயே தங்கி இருந்து, 'இந்தோசிராமிக்’ முறையில் அரண்மனையைக் கட்டி முடித்தார்.

தாய் வீடு

இங்கு இரண்டு ராயல் கோர்ட்டுகள் (தர்பார் ஹால்), கல்யாண மண்டம், அம்பா விலாசங்கள் (யானை இருப்பிடங்கள்), இந்து கோயில்கள், இஸ்லாமிய, கிறிஸ்துவ கோபுரங்கள் ஆகியவையும் ஒருங்கமைந்து வேற்றுமையில் ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது. அரண்மனைக்குள் அமைந் திருக்கும் 12 இந்துக் கோயில்களில்... சோமேஷ்வர கோயில் சிவனுக்கும், லட்சுமி ரமண கோயில் விஷ்ணுவுக்கும், ஸ்வேதா வரஹர் கோயில், வரஹசுவாமிக்கும் நிறுவப்பட்டுள்ளது. இவை மிகவும் புகழ் பெற்றவை.

தாய் வீடு

அரண்மனைக்குள் உள்ள கல்யாண மண்டபம் ஒன்றின் மேல் கூரை முழுக்கக் கண்ணாடிகளால் வேயப்பட்டு உள்ளது. பெயி ன்ட்டிங் செய்யப்பட்ட இந்தக் கண்ணாடிகள், ஸ்காட்லாந்தில் இருந்து வாங்கப் பட்டவை. இங்கே வரவேற்பு மண்டபம், தர்பார், பொது மக்கள் ஹால், விருந்தினர் ஹால் என நூற்றுக்கும் அதிகமான அறைகள் இருக்கின்றன. தரையில் போடப்பட்டிருக்கும் மயில் தோகை டைல்ஸ் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

இரண்டு மணி நேரம் மெய்மறந்து சுற்றிப்பார்க்க வைக்கும் இந்த மைசூர் அரண்மனை, பூகோளத்தின் அழகிய ஆச்சர்யக்குறி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism