அவு பேர்:

கிட்டத்தட்ட பேபி சிட்டர்தான். இது இன்னும் கொஞ்சம் அப்டேட்டட். வீட்டில் இருக்கும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புள்ள இந்த வேலைக்கு, பெண்கள்தான் அதிகமாக வருகிறார்கள். நம் ஊர்களிலும் இந்த வேலை வந்துவிட்டது. என்றாலும், வெளிநாடுகளில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. யூரோப்பில் பார்ட் டைமாகத்தான் இந்த வேலையைப் பார்க்க முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் முழு நேரமாகவே செய்ய அனுமதி உள்ளது. முழு நேரமாக வேலைபார்க்கும் பட்சத்தில் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, விளையாடுவது, அவர்களை ஹோம்வொர்க் செய்யவைப்பது, உணவு தயார்செய்வது என தோட்ட வேலை முதற்கொண்டு, குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே மாறிவிட வேண்டும்.

பெர்சனல் ஷாப்பர்:

உங்களிடம் பணம் இருக்கிறது, ஷாப்பிங் என்றால் உயிர். என்ன செய்வீர்கள்? அதுதான் உங்களுக்கு வேலை. ஆனால், சின்னத் திருத்தம்... அந்தப் பணமும், நீங்கள் ஷாப்பிங் செய்யப்போவதும் இன்னொருவருக்காக. உடைகள், ஃபர்னிச்சர்கள், மேக்கப் கிட்கள் ஆரம்பித்து அனைத்தையும் இன்னொருவரின் ரசனைக்கு ஏற்றபடி பர்ச்சேஸ் செய்துதர வேண்டும். 25,000 டாலர் முதல் ஒரு லட்சம் டாலர் வரை இதில் நீங்கள் சம்பாதிக்கலாம். சிங்கப்பூர், லண்டனில் இந்த வேலை மிகப் பிரபலம்!

ஃபார்ச்சூன் குக்கீ ரைட்டர்:

எடை பார்க்கும் இயந்திரத்தில் மஞ்சள் அட்டை வந்துவிழுமே... அதே கான்செப்ட்தான். ஒருபுறம் உங்கள் எடையும், இன்னொருபுறம் ஒரு சின்ன வாசகமும் எழுதப்பட்டிருக்கும். இந்த `ஃபார்ச்சூன் கோட்ஸ்' கான்செப்ட்டை கொஞ்சம் மாற்றி, ஒரு குட்டி பேப்பரில் வாசகம் ஒன்றை எழுதி, அதை குக்கீஸுக்குள் ஒளித்துவைத்துவிடுவார்கள். அந்த வாசகங்கள் எழுதுவார்களே... அவர்கள்தான் ஃபார்ச்சூன் குக்கீ ரைட்டர்ஸ். இதற்கு முன்அனுபவம் எதுவும் தேவை இல்லை. எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இல்லாமல் ஆங்கிலம் எழுதத் தெரிய வேண்டும். செம சுவாரஸ்யமான ஃபார்ச்சூன் கோட்ஸ்களை, கொடுக்கப்பட்ட டெட்லைனுக்குள் எழுத வேண்டும். அமெரிக்காவில் ஃபார்ச்சூன் குக்கீ ரைட்டர்கள் அதிகம். கொஞ்சம் குறைவான சம்பளம்தான் என்றாலும், பகுதி நேர வேலையாக இதைச் செய்வார்கள். க்ரியேட்டிவ் ஏரியா, மற்றவர்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி, சிறு புன்னகை கொடுப்பது என சுவையான வேலை.

புரொஃபஷனல் லைன் ஸ்டேண்டர்ஸ்

ரஜினி படத்துக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ, ஆன்லைனில் புக்செய்ய மறந்து பஸ்ஸுக்கோ, ட்ரெயினுக்கோ டிக்கெட் வாங்க, இவ்வளவு ஏன் ரேஷன் கடையில் அரிசி வாங்க... என உங்களுக்கு பதிலாக வேறொருவர் வரிசையில் நின்று வாங்கிக்கொடுத்தால், அவர்களின் பெயர்தான் `லைன் ஸ்டேண்டர்ஸ்.’ குறிப்பாக புதிய ஐபோன்கள் வெளியாகும் நாட்களில், இந்த லைன் ஸ்டேண்டர்களுக்குப் பயங்கர டிமாண்ட் இருக்கும். மழை பெய்தாலும், வெயில் கொளுத்தினாலும் வரிசையில் நின்று வாங்கிக் கொடுப்பார்கள். நியூயார்க்கைச் சேர்ந்த ராபர்ட் சாமுவேல் என்பவர் இதைத் தொழிலாகவே நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு மணி நேரம் வரிசையில் நிற்க 25 டாலர், அடுத்து வரும் ஒவ்வோர் அரை மணி நேரத்துக்கும் 10 டாலர் கூடும். இதுபோக அந்த நேரத்தில் மழை, பனி, குளிர் அதிகமாக இருப்பது போன்றவற்றுக்கு கூடுதலாக 5 டாலர் வசூலிக்கப்படும். வீட்ல சொல்றாங்கனு ரேஷன் கடையில நின்ன நாம ஒவ்வொருத்தருமே லைன் ஸ்டேண்டர்ஸ்தான் பாஸ்.

ஸ்லீப் டைரக்டர்:

தூங்க வேண்டும்... அதுதான் வேலை. சில நேரங்களில் வெவ்வேறு அறைகளில் வெவ்வேறு மெத்தைகளில் படுத்துத் தூங்க வேண்டும். பெரிய பணக்காரர்களும் மதிப்புமிக்க கெஸ்ட்களும் வந்து போகும் ஹோட்டல் என்றால், அவர்களின் லக்ஸுரிக்கு எந்தப் பங்கமும் வரக் கூடாதல்லவா? அதற்காகத்தான் இந்த ஸ்லீப் டைரக்டர். அந்த ரூமின் அலங்காரம் அழகாக இருக்கிறதா, சத்தம் இல்லாமல் தூங்க சவுண்ட் ப்ரூஃப் சரியாக இருக்கிறதா என சகலத்தையும் சோதனைசெய்வது இவங்கதான்!

டாக் ஃபுட் டெஸ்ட்டர்ஸ்:

அடுத்த முறை உங்கள் டாமிக்கோ, ஜிம்மிக்கோ டாக் ஃபுட் வைக்கும்போது அதை நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள். அதை விழுங்காமல் சுவையை உங்களால் உணர முடிந்தால், நீங்கள் புரொஃபஷனல் டாக் ஃபுட் டெஸ்ட்டராகும் வாய்ப்பு பிரகாசம். உணவுப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் முன்னர், அதன் சுவையைச் சோதனைசெய்ய `டேஸ்ட் டெஸ்ட்டர்கள்’ இருக்கிறார்கள். அவர்கள் ஓகே சொன்னதும், அந்த உணவு சந்தைக்கு வரும். அதேபோல பெட்களுக்கான (நாய்கள்/பூனைகள்) உணவுகள் புதுவிதமாகத் தயாரிக்கப்படும்போது அதன் சுவையைப் பார்ப்பதற்கு ‘ஃபுட் டெஸ்ட்டர்கள்’ இருக்கிறார்கள். அந்த உணவை குறிப்பிட்ட நேரத்துக்கு மென்று, பெட்களுக்குத் தேவையான சுவையுடன் இருக்கிறதா என நோட்ஸ் எடுத்துக்கொடுக்க வேண்டும். இதற்கு சம்பளமாக மாதம் சில லட்சங்கள் கிடைக்கும். லண்டனில் இந்த வேலை மிகப் பிரபலம்.

லைவ் மேன்னிகுய்ன்:

ஜவுளிக் கடைகளுக்கு வெளியே புது டிரெஸ் அணிந்து பொம்மைகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். அந்த பொம்மைக்குப் பதிலாக ஓர் ஆணோ, பெண்ணோ நின்று போஸ் கொடுப்பதற்குப் பெயர்தான் `லைவ் மேன்னிகுய்ன்’. புதிதாக வந்திருக்கும் ஆடைகள், அல்லது பொருட்களோடு சிலைபோல ஒரு போஸ் கொடுத்து கண்ணாடி அறைக்குள் நிற்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு 25 டாலரிலிருந்து 100 டாலர் வரை சம்பளமாகக் கொடுக்கிறார்கள்.