இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர். விராட் கோஹ்லி சுத்தமாக ஃபார்மில் இல்லை. இங்கிலாந்து பௌலர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சை யாராலும் சமாளிக்க முடியவில்லை. இதுமாதிரியான சவால்கள் என்றால், கோஹ்லிக்கு ரொம்பவே பிடிக்கும். அசத்திவிடவேண்டும் என்று முடிவெடுத்து களம் இறங்கினார். ஆனால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளைச் சமாளிக்க முடியவில்லை. தொட்டால் கேட்ச், விட்டால் போல்டு என்று மிரட்டியெடுத்தனர். வீராவேசமாக இறங்கிய கோஹ்லி, ஒவ்வொரு போட்டியிலும் சொற்ப ரன்களில் தன் விக்கெட்டுகளை இழந்தார். இங்கிலாந்து தொடர் மிக மோசமாக மாறியது. அவருடைய வீக்னெஸ் எதுவென்று மற்ற நாட்டு அணிகளுக்கும் நன்றாகத் தெரிந்தது. அதற்கேற்பப் பந்துவீசி எளிதில் கோஹ்லியை அவுட்டாக்க ஆரம்பித்தனர். `கோஹ்லியின் கதை முடிந்தது...' என்று அத்தனை பேரும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கோஹ்லி விடவில்லை. அவர் தனது பேட்டிங் பாணியை சட்டென்று மாற்றிக்கொண்டார். எதிரணியினரின் பந்துவீச்சினை துவம்சம் செய்யத் தொடங்கினார். இந்த உடனடி மாற்றத்துக்குக் காரணம், மூத்தோர் சொல்! கோஹ்லி அப்போது ராகுல் டிராவிடை அணுகினார். அவரிடம் தன் தவறுகள் என்ன என்று கேட்டு தன்னைத் திருத்திக்கொண்டார். அதற்கேற்ப தன்னுடைய ஒட்டுமொத்த பேட்டிங் பாணியை மாற்ற ஆரம்பித்தார். அதற்காக மிகக் கடுமையாக உழைத்தார். இதுதான் கோஹ்லியின் குணம். இதுதான் அவரை சூப்பர் ஸ்டாராக்கியது.

வெற்றிப்பசி தணியாத ஆங்கிரி பேர்டு விராட் கோஹ்லி. `டெஸ்ட்டில் கேப்டன்’, `லிமிட்டட் ஓவர் கிரிக்கெட்டில் தோனிக்குத் தளபதி’ எனப் பொறுப்புகளை இழுத்துப்போட்டு எடுத்துச் செய்யும் முழுமையான விளையாட்டு வீரர். ரசிகர்களால் `கிரிக்கெட்டின் கடவுள்’ என அன்புடன் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் காலகட்டத்துக்குப் பிறகு, அவருடன் ரசிகர்கள் ஒப்பிடத் தொடங்கிய ஒரே வீரர் கோஹ்லி மட்டும்தான். காட்டுத்தனமாக விளாசுவது கிடையாது; மைதானத்தில் உருண்டு, புரண்டு பௌலர்களைக் காமெடியாக்கும் ஏலியன் அப்ரோச்சும் இல்லை; பின்னே எப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்த விளையாட்டு வீரர் ஆனார் கோஹ்லி? அந்த சக்சஸுக்கு பின்னால் இருக்கும் ஒரே காரணம், `கிரிக்கெட்டை நேர்த்தியாக ஆடு’ என்பது மட்டும்தான். கோஹ்லி, கிரிக்கெட் புத்தகத்தில் இருக்கும் ஷாட்களை மட்டும்தான் ஆடுவார். ஆனால், ஒவ்வொரு பந்தையும் அவர் விரட்டும் டைமிங், தெறி ரகம். இப்போதைய சூழ்நிலையில் கோஹ்லியை போல்டு ஆக்குவது என்பது எப்பேர்ப்பட்ட பௌலருக்கும் சவாலான விஷயம். ஏனெனில், பந்தைக் கணித்து ஷாட் தேர்வு செய்வதில் டிராவிடும் சச்சினும் கலந்த செய்த கலவை.

கோஹ்லி பிறந்து வளர்ந்தது எல்லாம் டெல்லியில். அப்பா பிரேம் கோஹ்லி, ஒரு கிரிமினல் லாயர். குடும்பத்துக்கு என பிரத்யேக பிசினஸும் இருந்தது. இதனால், வருமானத்துக்குப் பஞ்சம் இல்லை. சராசரி இந்திய இளைஞனைப்போல கோஹ்லிக்கும் சின்ன வயதில் இருந்தே கிரிக்கெட் ஆசை வர, தினமும் பேட் பிடித்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். எட்டு வயதில் அவரை ஒரு கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துவிட்டார் அப்பா பிரேம்.

சின்ன வயதில் இருந்தே சுட்டித்தனமும், ஓவர் கான்ஃபிடன்ஸும் கோஹ்லியிடம் இருந்தன. மற்ற பசங்களுக்கு பேட்டிங் வாய்ப்பையே கொடுக்க மாட்டார். இன்னிங்ஸ் முழுவதும் தானே விளையாட வேண்டும், ஓவரின் எல்லா பந்துகளையும் தானே சமாளிக்க வேண்டும், அணியை கடைசி வரை இருந்து வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என நினைக்கும் ஆள் என்பதால், கோஹ்லிக்கும் அகாடமியில் அவரது அணியில் உள்ள நண்பர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். பேட்டிங் மீது இருக்கும் தீராக்காதல் அவரை மெள்ள மெள்ள ஒரு நல்ல பேட்ஸ்மேனாக உயர்த்த, 14 வயதில் டெல்லி அணியில் கோஹ்லிக்கு இடம் கிடைத்தது.

2006-2007 ரஞ்சி சீஸனில் முதன்முறையாக டெல்லி அணிக்காக விளையாட ஆரம்பித்தி ருந்தார் கோஹ்லி. ஷிகர் தவான், ஆகாஷ் சோப்ரா, மிதுன் மன்ஹாஸ், ரஜத் பாட்டியா, ஆசிஷ் நெஹ்ரா என சீனியர் வீரர்கள் நிறைந்த அணியில், ஜூனியர் வீரர்களாக 18 வயது நிரம்பிய கோஹ்லியும், இஷாந்த் ஷர்மாவும் இணைந்தார்கள். கர்நாடக அணி முதல் இன்னிங்ஸில் 446 ரன்களை குவித்திருந்தது. டெல்லி அணியில் சீனியர் வீரர்கள் மைதானத்துக்கு வருவதும் பெவிலியனுக்கு ஓட்டம் பிடிப்பதுமாக இருக்க 14 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது டெல்லி. விராட் கோஹ்லி அன்றைய தினம் முழுவதும் கடுமையாகப் போராடி மேலும் விக்கெட் விழாமல் பாதுகாத்தார். அன்று 40 ரன்களில் நாட்அவுட்டாக உறங்கச்சென்றவருக்கு அந்த இரவு கொடியதாக மாறியது. விராட் மிகவும் நேசிக்கும் அவரது அப்பா பிரைன் ஸ்ட்ரோக் வந்து திடீரென இறந்துபோனார். நள்ளிரவு 3 மணிக்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது பயிற்சியாளரை மொபைலில் தொடர்பு கொண்டார் கோஹ்லி. சோகம் அப்பிய குரலில், ``அப்பா இறந்துட்டார். நான் 40 ரன்களுடன் நாட்அவுட்டாக இருக்கிறேன். நாளைக்கு என்ன செய்யட்டும்?’’ எனக் கேட்டார். ``உனக்கு விருப்பமானதைச் செய்'' எனப் பயிற்சியாளர் சொல்ல, சட்டென ``நான் நாளை கிரிக்கெட் ஆடப்போறேன்’’ என்றார் 18 வயது கோஹ்லி. ``இது உன்னைப் பரிசோதிக்கும் ஆட்டம். உன்னை இந்த உலகத்துக்குக் காட்டவேண்டிய தருணம் இது’’ என நம்பிக்கை அளித்தார் பயிற்சியாளர் ராஜ்குமார். ``விராட் கோஹ்லி மனதிடத்துடன் இருக்கிறார். பேட்டிங் செய்யட்டும். அவரை அவர் போக்கில் விடுங்கள்’’ என சப்போர்ட்டுக்கு வந்தார் டெல்லி அணியின் பயிற்சியாளர் சேத்தன் சௌஹான். கோட்லா மைதானத்தில், அன்றைய தினம் பொறுமையாக விளையாடி 90 ரன்களை விராட் சேர்த்ததால் டெல்லி அணி தோல்வியில் இருந்து தப்பியது. ``அன்றைய தினம் ஒரு தவறான ஷாட்டைக்கூட ஆடவில்லை. அதுவரை விராட் அவ்வளவு சிறப்பாக விளையாடி நான் பார்த்ததே இல்லை’’ என இப்போதும் புகழ்கிறார் சௌஹான். போட்டி முடிந்ததும் தனது பயிற்சியாளருக்கு மீண்டும் போன் செய்தவர், ``எனக்கு தப்பாக அவுட் கொடுத்துவிட்டார்கள்’’ என புலம்பினார். அதுதான் கோஹ்லி. அப்பாவின் மரணத்தைத் தொடர்ந்து குடும்ப பிசினஸும் நஷ்டத்தை நோக்கி நகர, குடும்ப பாரங்களைச் சுமக்க ஆரம்பித்தார் கோஹ்லி.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியாவுக்குத் தலைமை தாங்கியபோது கோப்பையை ஜெயித்து அசத்தினார். கோஹ்லி லைம்லைட்டுக்கு வரவே, சீக்கிரமே இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஷேவாக், சச்சின் இல்லாத இலங்கைக்கு எதிரான ஒரு தினத் தொடரில் இன்னிங்ஸை ஓப்பன் செய்யும் பொறுப்பு கோஹ்லிக்கு வந்தது. மிகச் சுமாராகவே விளையாடினார். ஒரே ஆண்டில் உலகக் கோப்பை, இந்திய அணியில் இடம், மீடியா வெளிச்சம், பெங்களூரு அணிக்கு ஐ.பி.எல்-க்கு தேர்வானது போன்ற அடுத்தடுத்த பாய்ச்சல்களில் பேட்டிங்கில் கோஹ்லி ஒழுங்காகக் கவனம் செலுத்தவில்லை. இந்திய அணியில் இருந்து தற்காலிகமாகக் கழற்றிவிடப்பட்டார். ``உன்னைவிட ஸ்மார்ட்டான ஆட்கள் இங்கே அதிகம். உன்னைவிடப் பணக்காரர்கள் இங்கே அதிகம். ஆனால், அவர்கள் எல்லாம் வெளியில் தெரிவது இல்லை. நீ மீடியாவின் கண்களுக்கு தெரிகிறாய் என்றால், அதற்குக் காரணம் கிரிக்கெட்தான். அதை மதிக்காவிட்டால் பத்தோடு பதினொன்றாக நீயும் விரைவில் நடையைக்கட்ட வேண்டியிருக்கும்’’ என கோஹ்லிக்கு அட்வைஸ் செய்தார் அவரின் பிரத்யேகப் பயிற்சியாளர் ஷர்மா. அதன் பிறகு ஜிம் - ட்ரெயினிங் எனக் கடும் உழைப்பைக் கொட்டினார். ஒரு மாநில அணிக்கு விளையாடுவது வேறு, தேசிய அணிக்கு விளையாடுவது வேறு என்பது கோஹ்லிக்குப் புரிய ஆரம்பித்திருந்தது.

கோஹ்லியை ஆரம்பத்தில் இந்திய அணியில் எப்போதுமே ஒரு மாற்று வீரராகவே வைத்திருந்தனர். பெரும்பாலான போட்டிகளில் விளையாடுவதற்குப் போதிய வாய்ப்பு கிடைக்கவே இல்லை. 2009 சாம்பியன்ஸ் டிராஃபியில் யுவராஜ் காயம் காரணமாக விலக, விராட்டுக்கு மீண்டும் ஒரு சான்ஸ் கிடைத்தது. இந்தமுறை வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் கோஹ்லி. வெஸ்ட் இன்டீஸுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் இந்தியா முழுமைக்கும் அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. அடுத்த இரண்டே ஆண்டுகளில் ஐ.சி.சி தரவரிசையில் `நம்பர் 2’ இடம் கோஹ்லி வசம் வந்தது. அதன் பிறகு கேரியரில் ஏறுமுகம்.

இன்றைய தலைமுறையின் ஸ்பெஷல் குவாலிட்டியே பல்வேறு தளங்களிலும் சிறப்பாகச் செயல்படுவதுதான். டெஸ்ட், ஒன்டே மேட்ச், டி 20 என எதுவாக இருந்தாலும் சரி, விராட் இந்தத் தலைமுறையின் விரல்விட்டு எண்ணக்கூடிய பெஸ்ட் பெர்ஃபார்மர்களில் ஒருவர்.

ஏராளமான டெஸ்ட் சாதனைகள் ஒருபக்கம் இருக்க, டி-20 போட்டிகளில் இந்த ஆண்டு விராட் காட்டிய மாஸ் பெர்ஃபார்மென்ஸ், `இந்த நூற்றாண்டின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன் விராட்

கோஹ்லிதான்’ என அனைவரையும் சொல்லவைத்திருக்கிறது. 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவை வாஷ் அவுட் செய்ததில் விராட் கோஹ்லிக்கு பெரும் பங்கு உண்டு. `கோஹ்லிக்கு அடிலெய்டில் நிச்சயம் ஸ்டாண்டு வைக்க வேண்டும்’ என தோனி கேலியாகக்கூடச் சொன்னார்.

விராட்டின் மிகப் பெரிய ப்ளஸ் அவரது கன்சிஸ்டன்சி. தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால்தான் 27 வயதில் இவ்வளவு சாதனைகளை அவரால் படைக்க முடிந்தது. ஒரு தினப் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் அத்தனை சாதனைகளையும் உடைக்கும் ஒரே வாய்ப்பு இப்போதைக்கு கோஹ்லியிடம் மட்டும்தான் இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லியின் அக்ரஸிவ் அணுகுமுறையில் இந்தியா தலைசிறந்த அணியாக மாறி வருகிறது.

ஒரே நேரத்தில், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன், பெஸ்ட் கேப்டன் என இரட்டைச் சவாரி செய்கிறார் கோஹ்லி. இந்தியா போன்ற நாட்டில் இருந்து அத்தனை பிரஷரையும் தாங்கி, விட்டுக்கொடுக்காமல் ஒவ்வொரு போட்டியிலும் மூர்க்கத்தனமாகப் போராடுவது என்பது கோஹ்லியால் மட்டுமே சாத்தியம். கிரிக்கெட் விளையாடுவது என்பதையே ஒரு போருக்குச் செல்வதுபோலக் கருதி, உழைப்பைக் கொட்டும் இந்த இள ரத்தம் இன்னும் ஏகப்பட்ட உயரங்கள் செல்வார் என எதிர்பார்க்கலாம்.

இந்திய அணி கிரிக்கெட் ஆட ஆரம்பித்த காலத்தில் இருந்து சேஸிங் என்றாலே, இந்திய அணிக்கு அலர்ஜி. அதைக் கொஞ்சம் மாற்றியவர் தோனி. ஆனால், சேஸிங்கில் இந்திய அணியை கில்லியாக்கிய பெருமைக் குரியவர் விராட் கோஹ்லி. அதுவும் 260 ரன்களைத் தாண்டிய இலக்குகளைத் துரத்துவது என்றால், கோஹ்லிக்கு ரொம்பவே இஷ்டம். சேஸிங்கில் எவ்வளவு கடினமான இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப் படுகிறதோ, அதையெல்லாம் தனது பேட்டிங்கின் பசிபோக்க பயன்படுத்திக் கொண்டார். உலகிலேயே இதுவரை அதிக சேஸிங் சதம் எடுத்தது சச்சின். 49 சதங்களில் 17 சதங்கள் சேஸிங்கில் வந்தவை. இதற்கு அடுத்த இடம் விராட் கோஹ்லிக்குதான். இது வரை அடித்த 25 செஞ்சுரிகளில் 15 சதம் சேஸிங்கின் போதுதான் அடித்திருக்கிறார். அதில் 13 போட்டிகளில் இந்தியா வென்றிருக்கிறது. 2012-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடர் ஒன்றில், ஓவல் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக 40 ஓவரில் 320 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. விராட் கோஹ்லி அன்று ஆடிய ஆட்டம் அதிரடித் தாண்டவம். அத்தனை சீனியர் பேட்ஸ்மேன்களும் பயப்படும் மலிங்காவின் பந்துவீச்சை நார்நாராய் கிழித்தார். 7.4 ஓவரில் 96 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார் மலிங்கா. இந்தியா 36.4 ஓவரிலேயே சேஸிங்கை முடித்தது. விராட் கோஹ்லி 86 பந்தில் 133 ரன்களைக் குவித்திருந்தார். ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கோஹ்லியை உச்சி முகர்ந்தன. உலகின் அத்தனை கிரிக்கெட் ஜாம்பவான்களும் கோஹ்லியின் பக்கம் கவனம் திருப்பினார்கள். தற்போதைய புள்ளிவிவரத்தின்படி ஒரு தினப் போட்டிகளில் சேஸிங்கில் கோஹ்லியின் சராசரி, 61 ரன்கள்.உலக அளவில் தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் சேஸிங்கில் தி பெஸ்ட் ப்ளேயர் இவரே.

கோஹ்லி டிட்பிட்ஸ்

* கோஹ்லிக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணன். கோஹ்லியின் கிரிக்கெட்டை உன்னிப்பாகக் கவனித்து கருத்துச் சொல்வார் அண்ணன் விகாஸ். ஆனால், பாவ்னாவோ, தம்பி கிரிக்கெட் விளையாடுவதைப் பற்றியே பேச மாட்டார். `தம்பிக்கு நோ அட்வைஸ்’ என்பதுதான் பாவ்னாவின் பாலிசி. இதனால், விராட்டுக்கு அக்கா மீது பாசம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா.

* விராட் கோஹ்லியின் ரோல்மாடல், சச்சின் டெண்டுல்கர். 1998-ம் ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற ஷார்ஜா கோப்பை தொடரில், இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி ஒன்றில் சச்சின் அடித்த சிக்ஸ்தான் விராட்டின் ஆல்டைம் ஃபேவரிட். ஆஸ்திரேலிய பௌலர் காஸ்பிரோவிச்சின் பந்தை அசத்தலாக, நேராக இருக்கும் வீரர்களின் ஓய்வறைப் பக்கம் சிக்ஸர் விளாசினார் சச்சின். விராட் விளையாட ஆசைப்படும் ஒரே ஷாட் அது மட்டும்தான்.

* ஹேர்ஸ்டைல் அடிக்கடி மாற்றுவது கோஹ்லி ஸ்டைல். அவர் வைத்த `மஹாக்’ (MAHAWK) ஹேர் ஸ்டைல் இளைஞர்களிடம் தெறி வைரலானது. கோஹ்லி பியர்ட் ஸ்டைலுக்கு யுவதிகளிடமிருந்து எப்போதுமே க்யூட் வரவேற்பு வந்துவிடும்.

* ஃபிட்னெஸ் மீது அதிக மோகம் உள்ளவர் கோஹ்லி. களத்தில் பயிற்சி செய்வதைவிட ஜிம்மில்தான் அதிக நேரம் இருப்பார். விக்கெட்டு களுக்கு இடையே அவர் ஓடும் வேகத்தைப் பார்க்கும்போது நமக்கே மூச்சிரைக்கும். ``அதற்கு கடுமையான உடற்பயிற்சிதான் காரணம்’’ என்கிறார்.

* ஒரு தினப் போட்டிகளிலும், டி20யிலும் சாம்பியன்களின் சாம்பியனாக இருக்கும் கோஹ்லிக்கு தனிப்பட்ட முறையில் டெஸ்ட் கிரிக்கெட்தான் பிடிக்கும். ``ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் டெஸ்ட் போட்டிகளை நான் பார்த்திருக்கிறேன், ஆனால், ஒருமுறையாவது அப்படியொரு சூழ்நிலையில் களத்தில் இருந்து விளையாட வேண்டும் என ஆசைப்படுகிறேன்’’ என அடிக்கச் சொல்வார்.

* ``ஆயில், சர்க்கரை, உப்பு இந்த மூன்றையும் நமது உணவில் இருந்து எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவு நல்லது’’ என்பார் கோஹ்லி. ``குறைவாக சாப்பிடுவதற்குப் பெயர் டயட் கிடையாது. ஆரோக்கி யமான உணவுகளை தேவையான அளவுக்குச் சாப்பிடுவதற்குப் பெயர்தான் டயட்’’ என்பது கோஹ்லியின் டயட் ரகசியம்.

கோஹ்லி எப்போதுமே லெக் சைடில் ஸ்ட்ராங். கவர் டிரைவ், புல் ஆஃப், ஸ்கொயர் கட் ஆகியவை ஃபேவரிட். கட் ஷாட்டில் மட்டும் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் செய்ய வேண்டும் என்பதுதான் கோஹ்லியின் தற்போதைய டார்கெட்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் டாப் பட்டியலிலும் கோஹ்லிக்கு இடம் உண்டு. `ஓர் ஆண்டுக்கு சராசரியாக 120 கோடி ருபாய் கோஹ்லி சம்பாதிக்கிறார்’ என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. எம்.ஆர்.எஃப், பெப்சி, அடிடாஸ், விக்ஸ், பூஸ்ட், ஆடி, டிவிஎஸ் என 13 முக்கிய பிராண்ட் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1.5 கோடி ரூபாய் வரை இந்த ஆண்டு வருமானம் பார்த்திருக்கிறார் கோஹ்லி.

காரில் லாங் டிரைவ் செய்வது ஃபேவரிட் பொழுதுபோக்கு. ரெனோ டஸ்ட்டர், ஆடி-8, டொயோட்டா ஃபார்ச் சூனர், பிஎம்டபிள்யூ எக்ஸ் 6 ஆகிய நான்கு கார்கள் வைத்திருக்கிறார்.

`சைசெல்' என்ற பெயரில் இந்தியா முழுவதுக்கும் ஜிம் ஆரம்பிக்கும் முயற்சியில் உள்ள ஸ்டார்ட்அப் கம்பெனியில் 90 கோடி ருபாய் முதலீடு செய்திருக்கிறார் கோஹ்லி. இன்னும் இரண்டே ஆண்டு களில் இந்தியா முழுவதும் 100 ஜிம் சென்டர்களை ஆரம்பிக்க வேண்டும் என்பது கோஹ்லியின் ஷார்ட் டேர்ம் கோல்.

யுஏஇ ராயல்ஸ் (டென்னிஸ்), எஃப்.சி கோவா (கால்பந்து), பெங்களூரு யோதாஸ் (மல்யுத்தம்) ஆகிய மூன்று ஃபிரான்சிஸ்களை சொந்தமாக வைத்திருக்கிறார். பிரீமியர் ஃபுட்பாலுக்கு அம்பாசிடராக இருக்கிறார். விராட் கோஹ்லி விளையாடும் ஒரே லீக் ஐ.பி.எல் மட்டும்தான். விஜய் மல்லையாவின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஐ.பி.எல் ஆரம்பித்த காலத் தில் இருந்து ஒன்பது வருடங்களாக விளையாடிவருகிறார் கோஹ்லி.

டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து சரிவைச் சந்தித்த இந்திய அணி, விராட் கோஹ்லி கேப்டனாகப் பொறுப் பேற்ற பிறகு புதுத் தெம்புடன் விளையாடி வருகிறது. இலங்கை, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என ஹாட்ரிக் டெஸ்ட் தொடரை வென்றிருக் கிறார் கோஹ்லி.