‘`அடிப்படையில் நான் பெயின்ட்டர். நல்லா போட்டோவும் எடுக்கத் தெரியும். விதவிமான கேமராக்களைப் பார்க்கும்போது `நல்லா இருக்கே!’னு சேகரிக்க ஆரம்பிச்சு, இப்போ 4,300 கேமராக்கள் வெச்சிருக்கேன்’’ - சிம்பிளாக சிரிக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

இந்தியாவின் முதல் வின்டேஜ் கேமரா அருங்காட்சியகம் திறந்திருக்கிறார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் வின்டேஜ் கேமராக்களுடன் கெத்துகாட்டுகிறது அருங்காட்சியகம்.

கேமரா வடிவிலான கட்டடமே அத்தனை அழகு. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டம் தொடங்கி புகைப்பட வரலாறு, நம் கண் முன்னே விரிகிறது. வெவ்வேறு சிறப்புகள் கொண்ட அத்தனை கேமராக்களையும் ஒரே இடத்தில் பார்ப்பதே வித்தியாசமான அனுபவம்தான்.

‘`நான் கல்லூரியில் சேர்ந்து முறையா பெயின்ட்டிங் கத்துக்கலைங்க. சுயமாகத்தான் கத்துக்கிட்டேன். ஓவியர் ராஜா பரணி, ஓவியர் அதி வீரபாண்டியன் இருவரிடமும் உதவியாளரா சேர்ந்து வேலைசெய்ய ஆரம்பிச்சுட்டேன். மேனுவலா பண்ணிட்டிருந்த பெயின்டிங், டிஜிட்டலுக்கு மாற ஆரம்பிச்சிருந்த நேரம்... ஆசியாவின் முதல் டிஜிட்டல் பெயின்டிங் ஸ்டுடியோ ஆரம்பித்தேன்.’’

``அடிப்படையில் நீங்க ஓர் ஓவியர், உங்களுக்கு எப்படி வந்தது இந்த ஆர்வம், எப்போ தொடங்கியது இந்த கேமரா வேட்டை?''

``ஓவியருக்கும் கேமராவுக்கும் உண்டான தொடர்புதான். தத்ரூப ஓவியர்களோட வாழ்க்கையை அழிச்சது கேமரா. ரெம்ப்ரண்ட், ரெனாய்ர் எனப் பல பெரிய ஓவியர்கள் தத்ரூப ஓவியங்களில் மிரட்டியிருக்காங்க. கேமரா கண்டுபிடிக்கப்பட்டதுக்கு அப்புறமா உடனே போட்டோ கையில் கிடைச்சிடும். பல மாதங்கள் வெயிட் பண்ணத் தேவை இல்லை. பெரிய செலவில்லைங்கிறதால தத்ரூப ஓவியர்களோட வாழ்க்கை அப்படியே காலி. கேமராவோட அபரிமிதமான வளர்ச்சிக்கு அப்புறமா தத்ரூப ஓவியங்கள்ல இருந்து, நவீன ஓவியத்துக்குப் பலரும் மாறினாங்க. அப்ஸ்ட்ராக்ட், கியூபிஸம், டாட்டிஸம், சர்ரியலிஸம் இப்படிப் பல வடிவங்களுக்கு மாற ஆரம்பிச்சாங்க. இப்படி ஓவியத்தோட பல பரிணாமங்கள் மாற முக்கியமான காரணம் கேமராதான். சுருக்கமா சொல்லணும்னா, ஓவியர்களை ஒழிச்ச மிகப் பெரிய எதிரி கேமரா. மொத்த எதிரிகளையும் ஒண்ணா சேர்த்துப் பார்க்கணும்னு திடீர்னு ஒரு ஆசை. இதுவரைக்கும் 4,300 எதிரிகளைப் பார்த்துட்டேன். பல சைஸ்கள்ல சேகரிச்சுட்டேன். அதே நேரத்தில் டிஜிட்டல் வடிவத்தில் ஆர்ட்டிஸ்ட்களுக்கு மிகப் பெரிய உதவியா இருக்கிறதும் இதே கேமராதான். நீங்க அமெரிக்காவில் இருந்தாலும், ஒரே ஒரு போட்டோ இருந்தா, நான் உங்களை வரைஞ்சு டிஜிட்டலா மாற்ற முடியும். இன்றைய ஓவியங்கள்ல போட்டோகிராஃபியும் முக்கியப் பங்கு வகிக்குது. இந்தியாவின் முதல் ட்ரிக் ஆர்ட் மியூசியம் பண்றப்பவும் எனக்கு கேமராதான் உதவியா இருந்தது.’’

14 வருஷங்கள் ஆகிடுச்சு கேமராக்கள் சேகரிக்கத்தொடங்கி... இப்படிக் கஷ்டப்பட்டு சேகரிச்ச விஷயங்கள் எல்லாருக்கும் போய்ச் சேரணும்னு நினைச்சேன். கேமரா மாதிரியே ஒரு பில்டிங் கட்டி, அதுக்குள்ள கலெக்ட் பண்ண எல்லா கேமராவையும் கண்காட்சியா வைக்கணும்னு தோணிச்சு. அந்தக் கனவுதான் இந்த இடம்.

இப்போ இங்கே உலகத்திலேயே மிகப்பெரிய கேமரானு சொல்லப்படுற கிட்டத்தட்ட 600 கிலோ எடைகொண்ட ‘த மம்மோத்’ முதல் வெறும் 11 கிராம் எடையே கொண்ட சின்ன கேமரா உட்பட எல்லாமே இங்கே இருக்கு.’’

``இந்த அருங்காட்சியகத்துல வேற என்ன ஸ்பெஷல்?’’

மூன்று குறும்படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் ஒளிபரப்பப்படுகிறது. ஜெர்மனியில இருந்து எல்லாத் தகவல்களையும் சேகரிச்சு, புறா கேமரா எப்படித் தயாரானது, போர்க்காலங்களில் புறா கேமரா எப்படிப் பயன்படுத்தப்பட்டதுங்கிற தகவல்களைவெச்சு ஆறு நிமிஷத்துக்கான குறும்படத்தைத் தயார் பண்ணியிருக்கோம். ‘ஹிஸ்டரி ஆஃப் கேமரா’னு கேமராவோட வரலாற்றை ஐந்து நிமிஷத்துக்கான குறும்படமா பண்ணியிருக்கோம். இப்படி 20 நிமிடங்களில் இந்த அருங்காட்சியகத்தில் உலகத்தோட மொத்த கேமரா வரலாறையும் படமாகப் பார்த்து நீங்க தெரிஞ்சுக்க முடியும்.’’

``பயங்கர கமல் ஃபேனா இருக்கீங்களே பாஸ்..?''

‘`என் வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் என்னை உற்சாகப்படுத்தியதில் முக்கியமானவர் கமல் சார். ஜாஹீர் ஹூசேன் சார் கண்காட்சியைத் தொடங்கிவெச்சதுனா, அந்த நிகழ்ச்சி கமல் சாரோட வாழ்த்துடன்தான் ஆரம்பிச்சது. டிஜிட்டல் தொழில்நுட்பம் ஓவியங்கள்ல வர ஆரம்பிச்சது முதல் அதை கமல் சார் கவனிச்சுக்கிட்டு வர்றார். எது வரைஞ்சாலும் அவர்கிட்டதான் முதல்ல போய் காண்பிப்பேன். அவர் ரொம்பப் பாராட்டின ஓவியங்களில் ஒண்ணு, ‘கமல் க்ளாஸ் ரூம்’ ஓவியம். அவரோட 50 பரிணாமங்களையும் அதில் வரைஞ்சிருப்பேன். கமல் சார் ஹெட்மாஸ்டர் மாதிரி புதுப்புது விஷயங்களை மத்தவங்களுக்கு சொல்லித்தருவார். மாணவன் மாதிரி புது விஷயங்களை மத்தவங்ககிட்டே இருந்து கத்துப்பார். என்னைப் பொறுத்தவரைக்கும் ஸ்டூடன்ட்டும் அவர்தான், ஹெட்மாஸ்டரும் அவர்தான். இந்த கான்செப்ட் வெச்சுதான் அந்த ஓவியத்தை நான் வரைஞ்சேன்’’

இங்கே இருக்கிற அதிசய கேமராக்கள்!

புறா கேமரா:

இது உலகப்போர் நடந்தபோது ஹிட்லர் 60-70 கிராம் எடையுள்ள கேமராக்களை புறா வயிற்றில் கட்டிப் பறக்கவிட்டிருக்கிறார். புறா பறந்து போகும்போது ஒரே ஒரு ஷாட்தான் எடுக்கும். சில நேரங்களில் ஷாட் கிடைக்காமலும் போகலாம். அப்படி அந்த ஷாட்களை வைத்து, எதிரிகள் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை உளவுபார்க்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பிஸ்டல் கேமரா:

மரணதண்டனைக் குற்றவாளியைத் தூக்கில் போடும் காலகட்டத்துக்கு முன்னர், சில நாடுகளில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிற தண்டனை முறை இருந்தது. இந்தத் தண்டனையை நிறைவேற்றும்போது ஒரு குற்றவாளியைச் சுடுவதற்கு முன்பு இந்த கேமரா முதலில் படம் எடுத்துவிடும். பிறகுதான் புல்லட் வெளியே வரும்.

3டி கேமரா:

உலகத்தின் முதல் 3டி கேமரா 1948-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இங்கே அதைக் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள் அதைவெச்சு மதுரை மீனாட்சியம்மன் கோயிலையும் தாஜ்மஹாலையும் போட்டோ எடுத்திருக்கிறார்கள். அந்த போட்டோக்களின் நெகட்டிவ் மற்றும் கேமராவையும் தேடிப்பிடித்து இந்த மியூசியத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்.

வாக்கிங் ஸ்டிக் கேமரா:

வாக்கிங் ஸ்டிக்போல எடுத்துச்செல்ல முடியும். போகும் இடத்தில் க்ளிக் பண்ணி போட்டோ எடுக்கலாம். அதுவும் ஒரேயொரு க்ளிக்தான் எடுக்க முடியும். அதை டெவலப் செய்துவிட்டுத்தான் மீண்டும் பயன்படுத்த முடியும்.