கலம்காரி, ஆந்திராவின் பாரம்பரிய ஓவியக்கலை. `கலம்’ என்றால், பாரசீக மொழியில் பேனா. `காரி’ என்றால் சித்திரக்காரர். பேனாவைக்கொண்டு துணியில் வரையும் தனித்துவம்மிக்க சித்திரக்காரரின் கலைதான் `கலம்காரி.’ முற்றிலும் இயற்கை வண்ணங்கள். இயற்கையான இடுபொருட்கள் கொண்டு துணியைக் கவனமாகப் பக்குவப்படுத்தி வரைகிறார்கள். சாதாரண வெண்துணி, கலம்காரி ஓவியனின் கரம்பட்டவுடன் உயிர்ப்புள்ள சித்திரக்கூடமாக உருமாறுகிறது.

கலம்காரிக்கு சுமார் 3,000 ஆண்டுகால வரலாறு உண்டு. தொடக்கத்தில் இந்தக் கலை, இறைவனுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. கோயில் அலங்காரங்கள், தேர் அலங்காரங்கள், தொம்பைகள், சுவாமி வீதி உலாக்களில் உயர்த்திப் பிடிக்கப்படும் குடைகள் போன்றவை கலம்காரி ஓவியங்கள் மூலமாகவே உருவாக்கப்பட்டன. பிற்காலத்தில் அரசர்கள் இதைத் தனக்காக்கிக்கொண்டார்கள். அரண்மனை அலங்காரங்கள், ஆடைகள், மேஜை விரிப்புகள் என அடுத்த பரிணாமம் பெற்ற இந்தக் கலை, இன்று நவீன உருவெடுத்து உலகத்தையே வசீகரித்திருக்கிறது.

ஆதிகாலத்தில் குகைகள், கோயில்களில் வரையப்பட்ட ஓவியங்கள் காலத்தின் தாக்குதல்களைக் கடந்து இன்றும் மிஞ்சியிருக்கின்றன. காரணம், இயற்கையான வண்ணங்கள், வரைபொருட்கள். அதன் தொடர்ச்சிதான் கலம்காரி. சரியாகப் பராமரித்தால், கலம்காரி வரையப்பட்ட துணி நூற்றாண்டுகள் கடந்தும் பழுது அடையாது. புராணங்கள், நம்பிக்கைகள், தெய்வீகக் கதைகள், நாடகக் காட்சிகளை உள்ளடக்கி அந்தக்கால கலைஞர்கள் வரைந்த கலம்காரி ஓவியங்கள் ஆந்திராவில் இன்றும் காணக் கிடைக்கின்றன.

`கலம்காரி ஓவியத்தின் பிறப்பிடம்’ என்று அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பகுதியில் இருந்த ஹூப்ளியைக் குறிப்பிடுகிறார்கள். கால ஓட்டத்தில், அங்கிருந்து காளஹஸ்திக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் கலைஞர்கள் இடம் பெயர்ந்தார்கள். இன்று அந்த இரு நகரங்களுமே ஆந்திர

தேசத்து கலைநகரங்களாக மாறிவிட்டன. ஆந்திராவை ஆண்ட முகலாய மன்னர்களும் கோல்கொண்டா சுல்தானும் கலம்காரியை ஊக்குவித்தார்கள். கிருஷ்ண தேவராயர் காலம் இந்தக் கலையின் பொற்காலமாக இருந்தது. கலைஞர்களுக்கு ஏகப்பட்ட மானியங்களும் கௌரவங்களும் வழங்கப்பட்டன. அவருக்குப் பின் வந்த நாயக்கர்களும் இந்தக் கலையைக் காப்பாற்றினார்கள்.

நாயக்கர்கள், ஆட்சி செய்த அத்தனை பகுதிகளுக்கும் கலைஞர்களை அழைத்துச் சென்றார்கள். அவ்விதம், 1540-களில் செவ்வப்ப நாயக்கர் காலத்தில் 20-க்கும் மேற்பட்ட கலம்காரிக் கலைக் குடும்பங்கள் தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட்டன. அவர்களுக்கென்று தஞ்சாவூர் அரண்மனையை ஒட்டிய பகுதிகளில் இடம் வழங்கப்பட்டது. தாங்களே துணியை நூற்று, கலம்காரி சித்திரம் வரைந்து அரச குடும்பத்துக்கு ஆடைகளையும், அரண்மனை அலங்காரத் துணிகளையும், திரைச்சீலைகளையும் வழங்கினார்கள் இந்தக் கலைஞர்கள். நாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, இந்தக் குடும்பங்கள் வெவ்வேறு பகுதிகளுக்குச் சிதறி, கலையில் இருந்தும் விலகிவிட்டன. எம்பெருமாள் குடும்பம் மட்டும், நூற்றாண்டுகள் கடந்து இன்றளவும் தவம்போல அந்தக் கலையைச் சுமந்துகொண்டிருக்கிறது.

கும்பகோணத்துக்கு அருகே உள்ள சிக்கல்நாயக்கன்பேட்டைதான் எம்பெருமாளின் ஊர். கலம்காரியின் மரபு குலையாமல், காலத்துக்கு ஏற்ற பல புதுமைகளைப் புகுத்தி, `தஞ்சை கலம்காரி’ என்ற புதிய மரபையே உருவாக்கியிருக்கிறார் எம்பெருமாள். இப்போது அவரின் மகன் ராஜ்மோகன், நவீன ஓவிய நுட்பங்களைக் கலந்து, இந்தக் கலையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். கலம்காரியால், சிக்கல்நாயக்கன்பேட்டையே சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. தஞ்சைக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டினர், இந்தக் கிராமத்துக்கும் வருகிறார்கள். பலர் சில நாட்கள் தங்கி, பயிற்சி பெற்றும் செல்கிறார்கள்.

ராஜ்மோகன், கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் படித்தவர். மாடர்ன் ஆர்ட்டில் தனித்துவம் பெற்ற இவர், இப்போது கலம்காரி ஓவியங்கள் வரைகிறார்.

“மசூலிப்பட்டணம், காளஹஸ்தி மரபுகள்ல, அந்தந்தப் பகுதி வாழ்க்கைமுறை, ஆட்சிமுறையோட தாக்கங்கள் நிறைய இருக்கும். தொன்ம உருவங்கள் நிறைஞ்சிருக்கும். எங்கள் சித்திரங்களில் தஞ்சை மரபும், இங்குள்ள முகபாவங்களும் கலந்திருக்கும். கலைகள் அந்தந்த மண்ணுக்கும் மரபுக்கும் ஏற்ற வகையில மாறலேன்னா, அழிஞ்சுபோயிடும். கலம்காரி இன்னைக்கு வரைக்கும் இங்கே நிலைச்சிருக்க, இந்த மண்ணோட தன்மைக்கு மாறினதுதான் காரணம்.

செவ்வப்ப நாயக்கர் காலத்துக்குப் பிறகு, கலம்காரிக் கலைஞர்கள் பக்கத்துல இருக்கிற கோடாலிக்கருப்பூர்ப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அரசனுக்கும், அரண்மனைக்கும் மட்டுமானதா இருந்த கலை, அடுத்த கட்டத்துக்கு இறங்கியது. இந்த மக்களுக்குத் தெரிஞ்ச ஒரே தொழில் நெசவும் சித்திரமும்தான். காலப்போக்கில் இயற்கை வண்ணங்களால் சேலைகள் தயாரிச்சு வியாபாரம் செஞ்சாங்க. அடர் நிறங்களில், ஒரிஜினல் தங்க ஜரிகைகள் கொண்டு நெய்யப்பட்ட ராஜ களை மிகுந்த சேலைகளை சாதாரண மக்கள் வாங்க முன்வரலை. இன்னைக்கு லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம், மும்பை சத்ரபதி சிவாஜி மியூசியம், அகமதாபாத் காலியோ மியூசியம், டெல்லி நேஷனல் மியூசியம்னு பல இடங்கள்ல அபூர்வமான கலைப்பொருளா இந்தச் சேலைகளைப் பாதுகாக்கிறாங்க. ஆனா, அந்தக்காலத்துல இதுக்கு விலை கிடைக்கலை. சில பேர் லுங்கி நெசவு செஞ்சு, நாகப்பட்டினம் துறைமுகம் மூலம் ஈரான், ஈராக் நாடுகளுக்கு எல்லாம் அனுப்பியிருக்காங்க. காலப்போக்குல இந்தக் கலை சாப்பாட்டுக்கு உதவாதுனு தெரிஞ்ச பிறகு, பல குடும்பங்கள் சேலம், சென்னைனு பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, வெவ்வேறு தொழில்களுக்கு மாறிட்டாங்க.

எங்க தாத்தாவோட அப்பா, மன்னார் நாயுடு கோடாலிக்கருப்பூரை விட்டுட்டு இங்கே வந்து குடியேறினார். கலம்காரியை அழியவிடாமக் காப்பாத்தணும்கிற உந்துதல்ல இந்தப் பகுதியில இருக்கிற மடங்களை எல்லாம் போய் சந்திச்சு, அவங்களோட உதவியால திரும்பவும் கலம்காரி ஓவியங்களை வரையத் தொடங்கியிருக்கார். இன்னைக்கும் மன்னார் நாயுடு வரைஞ்ச பல கலம்காரி ஓவியங்கள் இந்தப் பகுதியில் இருக்கிற மடங்களில் இருக்கு. பல அபூர்வ சித்திரங்கள் கொண்ட துணிகளை தீப்பந்தம் கொளுத்தி வீணாக்கிட்டாங்க. மிச்சமிருந்த ஓவியங்களை எல்லாம் சேகரிச்சு, பாதுகாத்துவெச்சிருக்கேன்...’’ என்று வருத்தம் தொனிக்கச் சிரிக்கிறார் ராஜ்மோகன்.

கலம்காரிக்கான வரைபொருட்கள், வண்ணங்கள் அனைத்தையும் ஓவியரே தன் கைப்பட தயாரிக்கிறார். ஓவியம் வரைய ஆயத்தமாகும் முன், துணியைப் பக்குவப்படுத்த வேண்டும். அது மிகப் பெரிய வேலை.

``சுத்தமான காடாத்துணி. இந்தத் துணியை அந்தக் காலத்துல எங்க குடும்பத்துப் பெண்களே நெசவு செஞ்சிருக்காங்க. இப்போ அதுக்கு வாய்ப்பில்லாமப்போச்சு. கோவை, ஈரோடு பகுதிகள்ல இருந்து வாங்குறோம். நெசவு செஞ்சு, கஞ்சிபோட்டு அனுப்புவாங்க. அதை நெடுங்காலம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும், வண்ணங்கள் படியவும், பதப்படுத்தணும். 10 மீட்டர் துணியைப் பதப்படுத்த, கறந்து சூடு மாறாத பசும்பால் 5 லிட்டர், பிஞ்சுக் கடுக்காய்த்தூள் 100 கிராம், மஞ்சள் 150 கிராம், பசுஞ்சாணம் 3 கிலோ தேவை. எல்லாத்தையும் 25 லிட்டர் தண்ணியில கரைச்சு, வடிகட்டி காடாத்துணியை 6 மணி நேரம் ஊறவைக்கணும். பிறகு, நேரடியா வெயில்படாத இடத்துல விரிச்சு, காயவைக்கணும். பிறகு, நல்லா மடிச்சு, மரச்சுத்தி வச்சு அரை மணி நேரத்துக்கு மேல அடிச்சு, பெரிய வெயிட்டை வச்சுட்டா துணி வெளிர் மஞ்சள் நிறத்துல அயர்ன் பண்ணின மாதிரி ஆகிடும். இந்த மாதிரி பதப்படுத்தினாதான் துணி நெடுங்காலம் சிதையாம இருக்கும். வண்ணங்களையும் ஈர்க்கும்...’’ ஆர்வமாக தொழில்நுட்பத்தை விவரிக்கிறார் ராஜ்மோகன்.

மன்னார் நாயுடுவுக்குப் பிறகு, அவரது மகன் ராதாகிருஷ்ணன் இந்தக் கலையை விடாமல் தொடர்ந்தார். அவர் காலத்தில் தஞ்சை மரபு கலம்காரி, இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளுக்கெல்லாம் சென்றது. தேசிய விருதும் அவரைத் தேடி வந்தது. அவருக்குப் பிறகு எம்பெருமாள். குகை ஓவியக் காட்சிகள், புராணக் காட்சிகளை உள்ளடக்கிய கலம்காரி மரபை சற்று விரித்தார் இவர். தாந்திரிக் டிசைன்கள், கோயில்களில் அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய சித்திரங்களை எல்லாம் கலம்காரிக்குள் கொண்டு வந்தார். தேசிய விருது, சில்பகுரு விருது, நேஷனல் மெரிட் என இவரும் ஏகப்பட்ட அங்கீகாரங்களைப் பெற்றவர்தான்.

“துணி தயாரான உடனே, தேவையான அளவுக்கு வெட்டிக்கணும். எங்க தாத்தா காலத்துல 20 மீட்டர் நீளமுள்ள துணிகள்லகூட சித்திரங்கள் வரைஞ்சிருக்காங்க. அது மாதிரியான சித்திரங்கள் நிறைய சேகரிச்சிருக்கேன். `வள்ளி திருமணம்’, `அரிச்சந்திரன் கதை’, `ராமாயணம்’, `மகாபாரதம்’னு முழுக்கதைகளும் சித்திரங்களா இருக்கும். `ராமாயணம்’னா அவுட்லைன்ல படிமமா ராமரை வரைஞ்சு அவருக்குள்ள மொத்த கதையையும் வரையுறது கலம்காரி மரபு. துணியில வரையுறதுக்கு முன்னாடி, காகிதத்துல வரைஞ்சு பாக்குறதுண்டு. மன்னார் நாயுடு வரைஞ்ச லே அவுட்கள்கூட இப்போ என் சேகரிப்புல இருக்கு. வெள்ளைக் காகிதங்களை ஒண்ணோட ஒண்ணா ஒட்டி, அதுல லே-அவுட் வரைஞ்சிருக்காங்க. இந்த லே-அவுட்டை வெச்சுத்தான் துணியில வரையணும்...’’ என்கிறார் ராஜ்மோகன்.

புளியமரத்தின் சிறு குச்சிகளைச் சேகரித்து, மிதமான தீயில் எரித்து, அந்தக் கரியை பென்சில்போலப் பயன்படுத்துகிறார்கள். இழுத்த பக்கமெல்லாம் ஓடியாடி நர்த்தனமாடுகிறது புளியங்குச்சி. முதலில், இந்தப் புளியக்குச்சியில் அவுட்லைனை வரைய வேண்டும். அதன் பிறகு, உள்வேலைகள். அவுட்லைனுக்குள் உருவங்கள் வரையப் பயன்படுத்தும் பேனாவுக்குப் பெயர்தான் `கலம்’. நன்கு முற்றிய மூங்கில் குச்சிகளை வெட்டி, நடுப்பகுதியில் துணியைச் சுற்றிப் பிடிமானம் செய்துகொள்கிறார்கள். ஒரு முனையை நன்கு சீவி, பென்சில் முனை அளவுக்கு சீவி, அதில் வண்ணம் தொட்டு முக்கிய பாகங்களை வரைகிறார்கள்.

கலம்காரியின் சிறப்பே அதன் வண்ணங்கள்தான். மொத்தம் ஐந்து நிறங்கள். கறுப்பு, சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள்.

“கறுப்பு நிறம் தயாரிக்கிறதுதான் கொஞ்சம் சிரமம். 200 கிராம் வெல்லத்தைக் கரைச்சுவெச்சுக்கணும். நல்ல பிஞ்சுக் கடுக்காயை ஒருநாள் முழுவதும் ஊறவெச்சு, அந்தத் தண்ணியில அரை லிட்டர் எடுத்துக்கணும். துருப்பிடிச்ச இரும்பு 150 கிராம். மாசிக்காய் பவுடர் 20 கிராம். எல்லாத்தையும் மண்பானையில போட்டு கழுத்தளவுக்குப் புதைச்சுவெச்சுடணும். 21-வது நாள் எடுத்து வடிகட்டினா, கறுப்பு நிறம் தயாராகிடும். அடர் கறுப்பு வேணும்னா கூடுதலா கொஞ்சம் கடுக்காய்த் தூளும், மாசிக்காயும் சேர்த்துக்கலாம்.

மண்துஷ்டி குச்சி, சுருளிப்பட்டை ரெண்டையும் சம அளவு எடுத்து, அவிச்சு இடிச்சு, கொஞ்சம் படிகாரம் சேர்த்துக் கொதிக்கவெச்சா, சிவப்பு ரெடியாகிடும். மஞ்சளுக்கு, கொஞ்சம் கடுக்காய், விரளி மஞ்சளும் சாதா மஞ்சளும் சம அளவு சேர்த்து இடிச்சுக் கொதிக்கவைக்கணும். நீலத்துக்கு அவுரிச்செடி இருக்கு. அதைக் காயவெச்சு, வேகவெச்சா, நீலம் கிடைச்சிடும். மஞ்சளும் நீலமும் சேர்த்தா, பச்சை. எல்லா நிறத்துலயுமே, துணியில பிடிக்கிறதுக்காக கொஞ்சம் கருவேலம் பிசின் சேர்த்துக்குவோம்...’’ என்கிறார் ராஜ்மோகன்.

வண்ணம் தீட்டும் தூரிகைகளையும் இவர்களே செய்கிறார்கள். தென்னை மட்டை, பனை மட்டை, ஈச்சம் மட்டைகளை ஊறவைத்து, தேவையான அளவுக்கு வெட்டிக் கொள்கிறார்கள்.

வரைந்து முடிந்து, வண்ணங்கள் காய்ந்ததும், சித்திரம் குலையாமல் இருக்க மீண்டும் துணியைப் பக்குவப்படுத்த வேண்டும். கொழுந்து வேப்பிலை, கடுக்காய், சுருளிப்பட்டை, பால், சாணம், ஆடாதொடை இலைச் சாறு, மஞ்சள் கலந்த தண்ணீரில் துணியை ஊறவைத்து நிழலில் உலர்த்துகிறார்கள்.

ராஜ்மோகன், காலத்துக்கேற்ப கலம்காரிக் கலையைப் பயன்படுத்துகிறார். நட்சத்திர விடுதிகள், வீடுகளின் இன்டீரியருக்கு கலம்காரி சித்திரத் துணிகளை விரும்பி வாங்குகிறார்கள். தவிர, கான்டம்ப்ரரி ஓவிய நுட்பங்களைக் கலந்து, மூன்றுக்கு மூன்று அளவில் துணியில் வரைந்து ஃப்ரேம் செய்தும் விற்கிறார். சேலை, குர்தா, சுருக்குப்பை வரைக்கும் கலம்காரித் துணியில் தயாராகிறது. அஜந்தா, எல்லோரா, குகை ஓவியங்கள், சிவப்பிந்தியர் ஓவியங்களை எல்லாம் கலம்காரியில் வரைகிறார்.

“தொடக்கத்துல எனக்கு இந்தக் கலையில ஈடுபாடு இல்லை. தாத்தா, அப்பாவோட வேலைகளை எல்லாம் பார்த்த பிறகுதான் இதோட மதிப்பு புரிஞ்சது. பழமையான சித்திரங்களை எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சேன். அபூர்வமான நிறைய சித்திரங்கள் சரியாப் பராமரிக்காம அழிஞ்சுபோச்சு. தேர்களை அலங்கரிக்கிற அசைந்தாடிகள், தொம்பைகள், வாசமாலைகள், சுருட்டிகள் எல்லாம் வீணாயிடுச்சு. இதை வெறும் கோயில் கலையாக மட்டும் வெச்சிருந்தா, நெடுங்காலம் காப்பாத்த முடியாதுனு உணர்ந்தேன். எனக்குத் தெரிஞ்ச புது நுட்பங்களை உள்ளே கொண்டு வந்தேன். இப்போ நிறைய பயிலரங்குகள், கண்காட்சிகள் நடத்துறோம். பழங்காலச் சித்திரங்கள், லேஅவுட்களை சரியாகப் பராமரிக்காததால நிறைய அழிஞ்சிடுச்சு. அதை எல்லாம் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போகணும். பூர்வீகம் ஆந்திராவாக இருந்தாலும், தஞ்சை ஓவிய மரபுகள்ல ஒண்ணா சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி வளர்ந்திருக்கு. அதை உறுதிப்படுத்துறவிதமா ஒரு மியூசியம் ஆரம்பிக்கணும்... அதுக்கான முயற்சியிலதான் இப்போ தீவிரமா இறங்கியிருக்கேன்...’’ என்கிறார் ராஜ்மோகன்.