கேரளாவை ‘கடவுளின் தேசம்’ என்று சொல்வார்கள். ‘கடவுளின் தோட்டம்’ எது தெரியுமா? மேகாலயா மாநிலத்தில், ‘மாவ்லின்னாங்’ (Mawlynnong) நகரம். 2003-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இப்போது வரை ‘ஆசியா கண்டத்தின் சுத்தமான கிராமம்’ என்கிற விருதைத் தக்கவைத்திருக்கிறது மாவ்லின்னாங்.

மேகாலயா மாநிலத்தில், ஷில்லாங் நகரத்தில் இருந்து 90 கி.மீ தூரத்தில் இருக்கிறது மாவ்லின்னாங். இங்கு குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதுபோல, சுத்தத்தையும் கற்றுத்தருகிறார்கள். மாவ்லின்னாங்கில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் மாதிரி ‘சுத்தம்’ என்கிற சப்ஜெக்ட்டும் ஒரு பாடம். இதில் கிரேடு-1, கிரேடு-2-வில் ஃபெயில் ஆகும் மாணவர்கள் யாரிடமும், அந்த ஊரில் உள்ள 95 குடும்பங்களும் ‘அன்னம் தண்ணி’ புழங்க மாட்டார்கள். அதாவது, தயவுதாட்சண்யம் பார்க்காமல் குழந்தைகளாக இருந்தாலும் உணவு, தண்ணீர் கிடைக்காதாம். ‘‘குழந்தைகள் மனது ஈரமான தரை மாதிரி; அவர்கள் மனதில் என்ன பதியவைக்கிறோமோ, அதுதான் கடைசி வரை ஆழமாகப் பதிந்திருக்கும்! அதனால்தான் குழந்தையாக இருக்கும்போதே சுத்தத்தைப் பற்றி அவர்கள் மனதில் பதியவைக்கிறோம்!’’ என்கிறார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

வெற்றிலை குதப்பிய வாயில் இருந்து சிவப்புக் கலரில் குற்றாலத்தைத் தெறிக்கவிடுவது, காலி சிப்ஸ் பாக்கெட்களை நசுக்கித் தூர எறிவது, தெருவில் சிறுநீர் கழிப்பது என்று எந்த ‘ச்சீய்’ விஷயங்களையும் மாவ்லின்னாங் கிராமத்தில் பார்க்க முடியாது. அப்படியே குப்பைகள் காணப்பட்டாலும், ‘இது எங்க ஏரியா கன்ட்ரோல்ல வராது’ என்று தொகுதி பாகுபாடு எல்லாம் பார்க்காமல், 95 குடும்பங்களில் உள்ள 500 பேரில் யார் வேண்டுமானாலும், பாரபட்சம் பார்க்காமல் விளக்குமாறைக் கையில் எடுக்கிறார்கள். நீங்கள் மாவ்லின்னாங்குக்கு எப்போது சென்றாலும், குறைந்தபட்சம் இருவரையாவது விளக்குமாறும் கையுமாகப் பார்க்கலாம்.

மேகாலயாவிலேயே `ஊழல் இல்லாத கிராமம்’ என்றும் இதைச் சொல்லலாம். இதற்குக் காரணம் இருக்கிறது. மாவ்லின்னாங்கில் எங்குமே சிமென்ட் வீடுகள் கிடையாது; கல் பாலங்கள் கிடையாது. கூரை வீடுகள், மரப் பாலங்கள், மூங்கில் வேலிகள் என இயற்கைதான் எல்லாவற்றிலும் சிரிக்கிறது. இதில் சிலர் உச்சகட்டமாக, பறவைகள்போல் மர உச்சியில் வீடு கட்டியும் தங்கி இருக்கிறார்கள். ‘எங்கள் ஊரின் அழகைப் பார்க்க வேண்டுமா?’ என்று பொதுநலம் கருதி, இங்கு காட்டேஜ் போல மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு வீட்டையும் கட்டி வைத்து இருக்கிறார்கள்.

டாப் ஆங்கிளில் பார்த்தால், இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்யப்பட்ட அழகான வால்பேப்பரைப்போல இருக்கிறது கிராமம். இதில் தங்கி மாவ்லின்னாங்கின் மொத்த அழகையும், பூ வாசத்தையும் அனுபவிக்கலாம்.

ஒரு தடவை அரசாங்கத்தில் இருந்து இலவச வீடுகள் கட்டித் தருவதற்கு அதிகாரிகள் வந்தபோதும், சுக்குத் தண்ணி கொடுத்து மனம் கோணாமல் மறுத்து வழியனுப்பினார்களாம் இந்த கிராம மக்கள்.

மாவ்லின்னாங்கில் புகழ்பெற்ற விஷயம் - இங்குள்ள `ரூட் பிரிட்ஜ்’ என்னும் மரவேர்ப் பாலம். ‘மேன் மேக்ஸிமம்; மெஷின் மினிமம்’ என்னும் கொள்கைபோல், தொழில்நுட்பம் எதையும் பயன்படுத்தாமல், வாழை மரத்தின் வேர்களை வைத்தும், வலிமையான மூங்கில்களை வைத்தும் முழுக்க முழுக்க மேனுவலாகக் கட்டப்பட்ட பாலம் இது. சிமென்ட் பாலம் போல் முழுமையாக இதை மூட முடியாதே! அதற்கும் வழி செய்திருக்கிறார்கள். நடுவில் உள்ள ஓட்டைகளை, பாறைகளைக்கொண்டும் மண்ணைக் கொண்டும் கவர் செய்திருக்கிறார்கள். சலசலக்கும் நதிக்கு மேல், சூப்பர் சிங்கர் குருவிகளின் பின்னணிக் குரலைக் கேட்டுக்கொண்டே இந்தப் பாலத்தில் காலாற நடப்பதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சீனாவுக்கு எப்படி பெருஞ்சுவரோ, மாவ்லின்னாங் கிராமத்துக்கு இந்த வேர்ப்பாலம். ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயில் போல், இதன் வரலாறு மேகாலயாவுக்கே தெரியாத ஒரு புதிர். கிட்டத்தட்ட இரண்டு கி.மீ தூரத்துக்குக் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் பயணித்தால், பக்கத்தில் உள்ள ரிவாய் என்னும் கிராமத்துக்கும், சுற்றியுள்ள மலைகளுக்கும் எளிதாகப் பயணிக்கலாம்.

‘ஹேய்ய்ய்... புளியங்காய்...’ என்று புளியமரத்தில் புளியம்பழங்கள் தொங்குவதையே பூரிப்பாகப் பார்க்கும் இந்த 21-ம் நூற்றாண்டில், மாவ்லின்னாங் நம்மைக் கிட்டத்தட்ட 17, 18-ம் நூற்றாண்டுகளுக்கு முந்தையை இயற்கைச் சூழலுக்கு இழுத்துச் செல்கிறது. ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, அன்னாசிப் பழத் தோட்டங்கள் 10-ல் 4 வீடுகளுக்கு நம்மை வரவேற்கும். இதில் `சோஷாங்’ என்னும் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை கொண்ட பழம், மாவ்லின்னாங்கில் எல்லா வீடுகளிலும் உண்டு. கொட்டைப் பாக்கு, புரூம்கார்ன் என்னும் பயறு வகை, கறுப்பு மிளகு, நாவல் பழங்கள், வெற்றிலைகள், வாழை போன்றவைதான் இங்கு பெரும்பான்மையாக விளையும் விவசாயப் பொருட்கள்.

ஒரு முக்கியமான விஷயம்... இங்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை மிகப் பெரிய சட்டமீறலாகக் கருதுகிறார்கள். தோட்ட வேலைகளுக்கு மூங்கில் கூடைகளைத்தான் பயன்படுத்துகின்றனர். குப்பைத் தொட்டிகள்கூட மூங்கில்தான்.

`சிறுபான்மையினர்’ என சொல்லப்படும் கிறிஸ்துவர்கள்தான் மாவ்லின்னாங்கில் பெரும்பான்மையினர். ஹாலிவுட் படங்களில் ஆப்பிரிக்கப் பழங்குடியினர் இரவு வெளிச்சத்தில் தங்கள் பாரம்பரியப் பாடலைப் பாடுவார்களே, அதுபோல் இங்கும் நடக்கிறது. இங்குள்ள ஏஞ்ஜெலிக்கன் தேவாலயத்தில் இரவானால் அனைவரும் கூடிவிடுகிறார்கள். ‘இன்னிக்குக் கொஞ்சம் வேலை அதிகம்; நாளை பார்க்கலாம்’ என்றெல்லாம் டபாய்க்காமல், ‘டாண்’ என 7 மணிக்கு ஆஜராகிவிடுவார்கள் ஊர்வாசிகள். 18-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த சர்ச், இப்போதும் பிரபலம்.

சரி; எல்லாம் ஓகே! மாவ்லின்னாங்குக்கு ஒரு சுற்றுலா போய் வரலாமா?

2003-ம் ஆண்டு வரை இது டூரிஸ்ட் ஸ்பாட் கிடையாது. சிரபுஞ்சிக்கு அருகில் இருப்பதால், 'போனால் போகுது' என்று அவ்வப்போது எட்டிப் பார்த்த டூரிஸ்ட்டுகள், இப்போது மாவ்லின்னாங்குக்கு மெயின் டூர் அடித்துவிட்டு, சிரபுஞ்சியை எட்டிப் பார்த்துவிட்டுச் செல்கிறார்களாம்.டிஸ்கவரி சேனல், ‘சுத்தமான இந்தியா’ என்ற பெயரில் மாவ்லின்னாங்கை கவர் செய்ய, சூடு பிடித்தது டூரிஸம். அதனால், வாகனப் புகை, நெரிசல் போன்ற எதுவும் இல்லாமல் இருந்து வந்த மாவ்லின்னாங், இப்போது டூரிஸ்ட்களால் நிரம்பி வழிகிறது. இது மாவ்லின்னாங் மக்களுக்குச் சிக்கலைத் தந்தாலும், மேகாலயா அரசாங்கத்துக்கு டூரிஸம் வாயிலாக பொருளாதாரம் செழிக்கிறதாம்.

இந்தியாவின் பொருளாதாரம் கொட்டிக் கிடக்கும் ‘ஆஸம்’ கிராமம், டூரிஸம் என்ற பெயரில் நாசம் ஆகாமல் இருக்க எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திப்போம்!