பிற கண்களுக்கு கல்லாகத் தெரியும் பொருளில், கலைஞன் உயிர்ப்புள்ள சிலையைத் தேடுவான். மற்றவர்கள் ஒரு மரத்தின் கனத்தை எடைபோடும் நொடியில், கலைஞன் மனதுக்குள் சிற்பத்தை வடித்துவிடுவான். அந்த வல்லமைதான் கலையின் உச்சம்.

கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் வசிக்கும் அத்தனை மனிதர்களும் அப்படியான உச்சத்தைப்பெற்ற கலைஞர்களாக இருக்கிறார்கள். ஒரு மரத்தைப் பார்த்ததுமே அதற்குள் அடங்கியிருப்பது விநாயகரா, சரஸ்வதியா, வெங்கடாஜலபதியா, கண்ணன்-ராதையா, ஆஞ்சநேயரா, தட்சிணாமூர்த்தியா என்பதைக் கணக்குப்போட்டுச் சொல்லிவிடுகிறார்கள். அவர்களின் கரங்கள் செய்யும் சாகசத்தால் அடுத்த சில மணி நேரங்களில், மரம் சிற்பமாக உயிர்பெற்று நிற்கிறது.

`இந்தியாவின் கலைப்பெருமை’ என்று கள்ளக்குறிச்சி சிற்பங்களைச் சொல்லலாம். உலகம் முழுதும் பயணித்து, மக்களை வசீகரிக்கும் இந்தச் சிற்பங்கள், இந்த மண்ணுக்கே உரிய கலையாக அங்கீகரிக்கப்பட்டு, புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

“பல நூறு வருஷ பாரம்பர்யம் இந்தக் கலைக்கு இருக்கு. ஆதிகாலத்துல எல்லோரையும்போல எங்க மக்களும் ஏர்க்கலப்பை, மண்வெட்டினு தச்சுவேலைதான் செஞ்சுக்கிட்டிருந்தாங்க. ஒரு கட்டத்துல தேர் வேலை, கோயில் வாகன வேலைனு வாழ்க்கை மாறிடுச்சு. தேர் வேலைங்கிறது ஓர் ஆள் செஞ்சு முடிக்கிற ஒத்தை வேலை இல்லை. பலவிதமான கலைகளோட கலவை. நேர்த்தியும் ரசனையும் வேணும். முகப்புல குதிரை வைக்கணும், கோபுரத்துல கோயிலோட தலபுராணத்தை விளக்குற மாதிரி சிற்பங்கள் வைக்கணும். அந்த வேலைப்பாட்டைப் பார்த்துட்டு, அழகுக்காகவும் வழிபாட்டுக்காகவும் `அதே மாதிரி சிற்பங்களைத் தனியா செஞ்சு கொடுங்க’னு சிலபேர் கேட்கப்போக, இன்னைக்கு அதுவே பிரதான தொழிலா ஆகிப்போச்சு. இந்தப் பகுதியில மட்டும் 15-க்கும் மேற்பட்ட பட்டறைகள் இருக்கு. சிலபேர் வீட்டுக்குள்ளேயே சின்ன அளவுல பட்டறை போட்டு தொழில் செய்றாங்க. ஆண், பெண் வித்தியாசம் இல்லாம ஆயிரக்கணக்கான மக்கள் இந்தத் தொழிலை நம்பி வாழ்றாங்க’’ என்கிறார் நடராஜன்.

அண்ணா நகர் பிரதான சாலையில் உள்ள நடராஜனின் சிற்பக்கூடம், தெய்வங்களின் அவதாரக்கூடமாகக் காட்சியளிக்கிறது. சாந்தமே உருவான புத்தர், வீணையை மீட்டியபடி நடனம்புரியும் சரஸ்வதி, கருணை பொங்கும் முகத்துடன் இயேசு, ஆங்காரமான நர்த்தன விநாயகர், கால்களால் உலகை அளக்கும் நடராஜர், வெங்கடாஜலபதி என ஏராளமான மரச் சிற்பங்கள் விற்பனைக்குத் தயாராக உள்ளன. இது தவிர, மரத்தாலான கலைப்பொருட்களும் நிறைந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்டோர் வேலைசெய்து கொண்டே இருக்கிறார்கள்.

நடராஜனின் தாத்தா பாபுவும், அப்பா சின்னையனும் வீடுகளுக்காக மரவேலை செய்தவர்கள். இன்று, நடராஜன் மரச் சிற்பியாகிவிட்டார்.

பொதுவாக, மரவேலைகளை விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்களே செய்வார்கள். ஆனால், கள்ளக்குறிச்சியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சிற்பத்தொழில் செய்கிறார்கள் என்பது ஆச்சர்யம்.

“பலநூறு வருஷத்துக்கு முன்னாடி எங்க மூதாதையர் ஒடிசாவில் இருந்து இடம்பெயர்ந்து ஆந்திராவுக்கு வந்து, அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தாங்க. நாடோடியாக இருந்த காலத்துல எங்கெல்லாம் கொஞ்ச நாளைக்கு நிலைச்சு தங்கியிருந்தாங்களோ, அங்கெல்லாம் இந்த சிற்பத்தொழில் நடந்தது, நடந்துக்கிட்டு இருக்கு. கேணி வெட்டுறவங்க, கல் செதுக்கிறவங்கனு எங்க சமூகத்தில் பல பிரிவுகள் இருக்கு. எங்க பிரிவை `மரச்செட்டியார்’னு சொல்றாங்க. இங்கே மட்டுமில்லாம சின்னசேலம், கீரனூர், பெரம்பூர் பக்கத்துல இருக்கும் அரும்பாவூர் பகுதியிலயும் பலநூறு பேர் இந்தச் சிற்பத்தொழிலை செய்றாங்க. கோயில் வேலை, வாகன வேலை செய்றவங்களும் உண்டு. எங்காளுங்க யாரும் பள்ளிக்கூடம் போனது இல்லை. படிப்பெல்லாம் இந்தப் பட்டறையிலதான். நானெல்லாம் பத்து வயசுலயே பட்டறைக்கு வந்தவன். தேர் வேலை, சிற்ப வேலை மட்டுமில்லாம கார்விங் வேலையும் செய்வேன்’’ என்கிறார் செந்தில்குமார். விநாயகர் சிலை செய்வதில் பெயர்போனவர் இவர்.

தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர், மீனாட்சி திருக்கல்யாணம், நடராஜர், சரஸ்வதி, லட்சுமி, மாரியம்மன், தன்வந்திரி, பெருமாள், சிவன், ஆஞ்சநேயர், விநாயகர், புத்தர் சிற்பங்கள் கள்ளக்குறிச்சியின் அடையாளங்களாக இருக்கின்றன. அண்மைக்காலமாக தலைசாய்த்து படுத்தபடி இருக்கும் வாஸ்து விநாயகர் சிற்பத்துக்கு நிறைய டிமாண்ட். ஒவ்வொரு சிற்பத்துக்கும் அங்க இலக்கணங்கள் அதிநுட்பமாக செதுக்கப்படுகின்றன. 10 இஞ்ச் முதல் 20 அடிகள் வரை செய்கிறார்கள். பெரும்பாலும் ஆர்டரின் பேரில்தான் செய்யப்படுகின்றன. சிலர் செய்து இருப்புவைத்து விற்கிறார்கள். வாஸ்து விநாயகர், ஷீரடி பாபா, ஆஞ்சநேயர் சிலைகள் நிறைய விற்பனை ஆகின்றன. ஒரு காலத்தில் கோயிலின் உற்சவர் சிலைகள் இங்கே செய்யப்பட்டன. இப்போது பெரும்பாலான கோயில்களில் உற்சவத்துக்கு ஐம்பொன் சிலைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் அந்த வாய்ப்பு பறிபோய்விட்டது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், தனவந்தர்களின் வீடுகளில் அலங்காரப் பொருட்களாக இந்தச் சிற்பங்கள் பயன்படுகின்றன. பரிசுப் பொருளாகவும் வாங்கிச் செல்கிறார்கள். கலைப்பொருளாகக் கருதி வாங்கி பாதுகாக்கவும் செய்கிறார்கள். மாதத்துக்கு 500 சிற்பங்களுக்கு மேல் இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கள்ளக்குறிச்சிக்கு வருகிறார்கள்.

“மாவலிங்க மரம் அல்லது வாகை மாதிரி பால் வர்ற மரத்துக்குத்தான் ஆயுள் கெட்டி. அந்த மரங்கள்தான் செதுக்கச் செதுக்க பாலீஷ் கொடுக்கும். வளையாம அடிதாங்கும். இங்குள்ள காடுகள்ல ஏகப்பட்ட மரங்கள் நிக்குது. போதாக்குறைக்கு திருவண்ணாமலை கலெக்டர், வனப்பகுதிகள்ல இந்த மரங்களை நட்டு வளர்க்க உத்தரவிட்டிருக்கார். விரும்பிக் கேட்டா தேக்கு, சந்தன மரங்கள்லயும் செஞ்சு கொடுப்போம். இந்தத் தொழிலுக்கு நிதானமும் பொறுமையும் இருக்கணும். டிராயிங் தெரியணும். பெயின்ட்டிங்கும் தெரிஞ்சிருக்கணும். நல்ல கற்பனை வளம் வேணும். நல்ல மனநிலை வேணும். கவனமெல்லாம் ஒருமுகப்பட்டு வேலையில இருந்தாத்தான் காரியம் நல்லாயிருக்கும்.

மரத்தை தோது பார்த்து கட்டையா அறுத்துக்குவோம். அந்தக் கட்டை மேல செதுக்கவேண்டிய சிற்பத்தை சாக்பீஸ்வெச்சு முழுசா டிராயிங் பண்ணிருவோம். இந்த டிராயிங் வேலையை எல்லாரும் பண்ண முடியாது. அதுக்குனு நல்ல அனுபவம் வாய்ந்த மாஸ்டர்கள் இருக்காங்க. பேஸ், அகலம், ஸ்ட்ரக்சர் எல்லாம் வரைஞ்சிடுவோம். கட்டையை ரெண்டாப் பிரிச்சு, உடம்புக்கு அளவெடுக்கணும். மனித உடம்புக்கான இலக்கணமும் சிற்ப இலக்கணமும் ஒண்ணுதான். எந்தச் சிற்பமா இருந்தாலும், முகம் மட்டும் ஒரு பாகம். அதுல நெற்றி, கண், புருவம், மூக்கு, வாய், தாவாங்கட்டை வரணும். முகத்துல இருந்து நெஞ்சுப்புள் ஒரு பாகம். அங்கேயிருந்து தொப்புள் ஒரு பாகம். அங்கேயிருந்து குறி ஒரு பாகம். அங்கேயிருந்து முட்டி இரண்டரை பாகம். பாதம் ரெண்டு பாகம். மொத்தம் எட்டரை பாகத்துக்குள்ள சிற்பம் அடங்கிரும். முகங்கள்லயும் மூணு வகை இருக்கு. ஆண் முகம், பெண் முகம், அலி முகம். ஆண் முகம் சதுரமா இருக்கும். பெண் முகம் முட்டை வடிவத்துல இருக்கும். அலி முகம் ரெண்டும் சேர்ந்த மாதிரி இருக்கும். கண்ணுல மூணு வகை இருக்கு. திருஷ்டிக்கண், தியானக்கண், கத்திக்கண். சுவாமிகளுக்கு தியானக்கண். ஆழ்ந்த மயக்கத்துல இருக்கிற மாதிரி இருக்கணும். பெண் சிற்பங்களுக்கு கத்திக்கண். பார்வையே நெஞ்சுல குத்துற மாதிரி இருக்கணும். பூதகணங்கள், கோபத்துல இருக்கிற சிற்பங்களுக்கு திருஷ்டிக்கண். பார்த்தாலே குறுகுறுனு இருக்கும். நடராஜர் சிலையும் நட்சத்திரமும் ஒரே மாதிரியான உருவம். மனிதனோட கழுத்துல இருந்து இடுப்பு வரைக்குமான மனித உடம்பு மாட்டு முகத்தை ஒத்திருக்கும். உடுக்கையின் வடிவத்துல தான் பெண்களின் இடுப்பு இருக்கும். இப்படிப் பல வரைமுறைகள் இருக்கு. சிற்பத்துல மூக்கு, மார்பு ரெண்டும் முக்கியம். மூக்கு, சரியா அமையலைனா முகத்துல லட்சணம் இருக்காது. அதேபோல மார்பு சரியா இல்லைனா உடம்புல உயிர் இருக்காது. சிற்பத்தை வாங்க வர்ற வியாபாரிங்க மூக்கையும் மார்பையும் பார்த்துத்தான் விலை பேசுவாங்க. 2,000 ரூபாய்லருந்து 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் சிலைகள் இருக்கு’’ என்கிறார் நடராஜன்.

பொதுவாக, மரவேலைக்கு கடினமான தொழில் கருவிகளைப் பயன்படுத்துவர். ஆனால், சிற்பத் தொழிலுக்கான ஆயுதங்கள் மிகவும் நுண்ணியதாக இருக்கின்றன. தலைமுடி கனத்தில்கூட உளி வைத்திருக்கிறார்கள். `மரத்தில் இருந்து ஓர் இழை கூடுதலாக உதிர்ந்தாலும், சிலையின் தன்மை சிதைந்து விடும்’ என்கிறார்கள்.

இவ்வளவு சிரத்தையோடு உருவாக்கும் சிற்பத்துக்கு விலைதான் கிடைப்பதில்லை. மரத்தின் விலைக்கும் தச்சுக்கூலிக்கும் மட்டுமே விலை. கலைக்கும் கைத்திறனுக்கும் விலையில்லை. இரண்டு அடி சிற்பம் 1,000 ரூபாய்க்கு விற்கிறார்கள். வியாபாரிகள் கொழிக்கிறார்கள்.

“மர வேலைங்கிறது ஒட்டுமொத்த உடலோடவும் தொடர்புடையது. கலைஞனோட எல்லாப் புள்ளியும் வேலையில ஒருங்கிணையணும். சில சமயம் சாப்பாடு, தூக்கம் மறந்துகூட வேலைசெய்வோம். உளியைத் தொட்டுட்டா மனசுக்குள்ள வேறெந்த நினைப்பும் வராது. உள்ளே வரைஞ்சுவெச்சிருக்கிற சிற்பத்தை மரத்துல கொண்டுவந்த பிறகுதான் சுயநினைவே வரும். ஆனா கஷ்டத்துக்கும் உழைப்புக்கும் தகுந்த கூலி இப்போ கிடைக்கலை. இன்னும் எங்காளுங்க, தச்சுக்கூலியை கணக்குப் பண்ணித்தான் சிற்பத்துக்கு விலை சொல்றாங்க. எங்கக்கிட்ட ரெண்டாயிரத்துக்கும், மூவாயிரத்துக்கும் வாங்கிட்டுப் போற யாவாரிங்க முப்பதாயிரம், நாப்பதாயிரம்னு விக்கிறாங்க. இங்கேயிருந்தே வெளிநாட்டுக்காரங்கக்கிட்ட போன்ல பேரம் பேசுவாங்க. எங்களுக்கு மார்க்கெட் பண்ற அளவுக்கு ஞானமில்லை. இந்தப் பட்டறை தாண்டி வெளி உலகமும் தெரியாது. மத்த கைவினைப் பொருட்களுக்கு இருக்கிற விற்பனை வாய்ப்பு இந்த மரச்சிற்பத்துக்கு இல்லை. முன்னாடி பூம்புகார் விற்பனை நிலையத்துல இருந்து சிற்பங்களை வாங்கிட்டுப் போவாங்க. இப்போ அவங்களும் வாங்குறதில்லை. சிற்பம் செய்றவங்களை வெறும் தொழிலாளிகளாத்தான் பார்க்குறாங்களே ஒழிய, கலைஞர்களா நினைச்சு கௌரவப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் இல்லை. வெளியூர் வியாபாரிகளை நம்பித்தான் இப்போ தொழில் நடக்குது. எங்களுக்குப் பிறகு இந்தக் கலை வாழுமானு சந்தேகமா இருக்கு’’ என்கிறார் செந்தில்குமார்.

கள்ளக்குறிச்சியில் அநேக சிற்பப் பட்டறைகளில் இசை விநாயகர் சிற்பங்கள் இருக்கின்றன. நடுவில் இருக்கிற பெரிய விநாயகர் புல்லாங்குழல் வாசிப்பார். அவரைச் சுற்றிலும் இருக்கிற பத்து விநாயகர்கள் நம் பாரம்பர்ய இசைக்கருவிகளை வாசிக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம், நிராமணியைச் சேர்ந்தவர் சிவகுமார். ``சொந்தமா கொஞ்சம் நிலம் இருக்கு. அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். நான் சின்ன வயசுலயே நல்லா ஓவியம் வரைவேன். ஏதாவது கலைத்தொழில்ல ஈடுபடணும்னு ஆசை. 10-வது முடிச்சுட்டு கள்ளக்குறிச்சிக்கு வந்துட்டேன். பாஸ்கர் பட்டறை, சொக்கலிங்கம் பட்டறைனு பல இடங்கள்ல தொழில் கத்துக்கிட்டேன். 16 வருஷமா தனியா தொழில் பண்றேன். தூங்குவாகை மட்டுமில்லாம வேம்பு, சந்தன மரங்கள்லகூட சிற்பம் செய்றதுண்டு. பல கோயில்களுக்கு உற்சவர் சிலை செஞ்சு கொடுத்திருக்கேன். பெரிய ஹோட்டல்கள், ரிசார்டுகளுக்கு இன்டீரியர் அலங்காரத்துக்கும் சிற்பங்களை வாங்கிட்டுப் போறாங்க. தூங்குவாகையில சிற்பம் செய்றது கொஞ்சம் சுலபம். உளியை தட்டுனா தோலு உரிஞ்சுக்கிட்டு வரும். வேம்பு அப்படியில்லை. உறுதியான மரம். ஒரு தோலு அதிகமா உரிஞ்சுதுன்னா, சிலையோட நுணுக்கம் கெட்டுப்போகும். அதிகமா கவனம் எடுத்து செய்யவேண்டியிருக்கு.’’ - விநாயகரின் தும்பிக்கையை லாகவமாகச் செதுக்கியபடியே சொல்கிறார் சிவகுமார்.

இந்த மரச் சிற்பத் தொழிலில் பெண்களும் இருக்கிறார்கள். உப்புக்காகிதம் கொண்டு சிற்பத்தை பாலீஷ்செய்வது, வண்ணம்தீட்டுவது, பேக்கிங்செய்வது போன்ற வேலைகளை மட்டுமே செய்கிறார்கள். ஒரு சில பெண்கள் மட்டும் சிற்பியாகவும் இருக்கிறார்கள். ``முதல்ல நானும் உப்புக்காகிதம்தான் தேய்ச்சுக்கிட்டு இருந்தேன். என் வீட்டுக்காரர் சிற்பம் செய்வார். அவர்தான் எனக்குக் கத்துக் கொடுத்தார். இது கடினமான வேலை இல்லை. ஆனா, கவனம் பிசகாம செய்யணும்’’ என்கிறார் தனம்.

காலத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, தமிழ்க்கலை மரபின் மிஞ்சிய நீட்சியாக வளர்ந்து நிற்கிறது கள்ளக்குறிச்சி மரச்சிற்பக்கலை. இயந்திரங்களின் பயன்பாடே இல்லாமல் கரங்களாலேயே உருவாக்கப்படும் இந்தச் சிற்பங்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் ஏராளம். ஆனால், அவற்றின் பலன் இந்தக் கலைஞர்களுக்குக் கிடைக்கவில்லை. இடைத்தரகர்களும் வியாபாரிகளுமே செழிக்கிறார்கள். ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்கி, இளம் தலைமுறையினருக்குப் பயிற்சி அளிப்பதோடு, மார்க்கெட்டிங் நுட்பத்தையும் பயிற்றுவிக்க வேண்டும். கூட்டுறவு சங்கம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து தந்தால் இந்தக் கலை தழைத்து வளரும்!