நிஜ வயலுக்கு நடுவில்தான் இந்த உணவகம் நடக்கிறது. உள்ளே நுழைந்தால், டவுசரும் டீஷர்ட்டுமாக மாடர்ன் இளைஞர்கள் பலரும் விநோதமாக வியர்க்க வியர்க்க மண்சுமந்து, மரம்சுமந்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். ஷாலினி, அருள் என்கிற இரண்டு இளைஞர்கள் இந்த உணவகத்தை நடத்துகிறார்கள். வருகிற ஒவ்வொரு வாடிக்கையாளரையும் அவர்களே வரவேற்கிறார்கள். சென்னை, பழைய மகாபலிபுரம் சாலை, செம்மஞ்சேரியை ஒட்டி அமைந்திருக்கிறது, `தி ஃபார்ம்' ரெஸ்டாரன்ட். சென்னையின் முதல் இகோ ஃப்ரெண்ட்லி `வயல்வெளி' ரெஸ்டாரன்ட் இது!

உள்ளே நுழைந்ததும் முதலில் வரவேற்பது அந்தக்காலத்துப் பாணியில் ஒரு கோயில். அதைக் கடந்து ஒற்றையடிப் பாதை காட்டுகிற வழியில் சென்றால், பிரமாண்ட குடில்... உள்ளேதான் உணவகம்.

``எங்க குடும்பத்துக்குச் சொந்தமான பூர்வீக இடம் இது. சில ஆண்டுகளுக்கு முன்னால இந்த செம்மஞ்சேரி ஏரியா முழுக்க ஐடி வளாகங்கள் முளைக்க ஆரம்பிச்சிருந்தது. தோப்புகளால் நிறைஞ்சிருந்த ஏரியா, கான்கிரீட் கட்டடங்களா மாறத் தொடங்கிச்சு. விவசாயம் பண்ணிட்டிருந்தவங்க, வேலைபார்க்க ஆட்கள் கிடைக்காம நிலங்களை வித்துட்டுப் கெளம்ப ஆரம்பிச்சாங்க. எங்க நிலமும் அப்படி ஆகறதை நாங்க விரும்பலை. ஸோ... இயற்கையை அழிக்காம, அதுல இருந்து வருமானமும் வர்ற மாதிரி ஒரு விஷயம் பண்ண முடிவெடுத்தோம். அதுதான் `தி ஃபார்ம்' உணவு விடுதியா மாறிச்சு.'' எளிய அறிமுகத்துடன் அருள் ஆரம்பிக்க, தொடர்கிறார் ஷாலினி.

``ஆரம்பிச்சு 7 வருஷங்கள் ஆச்சு. இந்த இயற்கைச்சூழலை அப்படியே தக்கவெச்சுக்கணும்ங்கிறதுக்காக செயற்கையா எந்த மாற்றத்தையும் செய்யலை. ஆரம்பத்துல, வர்ற கெஸ்ட்டுகளுக்கு எங்க கான்செப்ட்டே புரியாது. கொஞ்சம் கொஞ்சமாதான் புரிஞ்சிக்கிட்டாங்க. எங்கக்கிட்ட இருந்த மாடுகளையும், விவசாய நிலங்களையும் அப்படியேவெச்சுக்கிட்டு, மீதி இடத்தைத்தான் ரெஸ்டாரன்ட்டுக்கு ஒதுக்கினோம். எங்க நிலத்துல விளையுற எல்லாப் பொருட்களுமே ஆர்கானிக்தான்.'' - பெருமை பொங்கச் சொன்னார் ஷாலினி.

இங்கே சைவம்-அசைவம், சவுத் இந்தியன், கான்டினென்ட்டல் வரை எல்லாமே கிடைக்கிறது.

மெனுகார்டைப் பார்த்தால் உணவு பெயரெல்லாம் ஜம்மென்று இருந்தாலும்... விலை சற்றே அதிகம்!
சாப்பிட வருகிற கெஸ்ட்டுகளை `தி ஃபார்ம் வாக்’ என்று அழைத்துப்போகிறார்கள். மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை, குதிரைத் தொழுவம் என எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டுகிறார்கள். இதைப் பற்றியெல்லாம் டி.வி-யில் மட்டுமே பார்த்த தலைமுறை நேரில் பார்த்ததும் துள்ளாட்டம் போடுகிறது.

உள்ளேயே ஒரு சின்னக் குளம், பிரமாண்டமான தோட்டம். அங்கே விதவிதமான மரங்கள், காய்கறிகள், பழங்கள்... என விளைந்துகிடக்கின்றன. நமக்கு தேவைப்பட்டால் அந்தக் காய்கறிகளையும் பழங்களையும் நாமே பறித்து, எடைபோட்டு விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.

``நிறைய பள்ளிக் குழந்தைகள் இங்கே வர்றாங்க. இயற்கையை முழுசா அனுபவிச்சுட்டுப் போறாங்க. அவங்களுக்கு இயற்கை விவசாயத்தைப் பத்தி சொல்லிக் கொடுக்கிறோம். மண்ணுல இறங்கி விளையாடறாங்க. களிமண்ணைவெச்சு விதவிதமான பொம்மைகள் செய்யறாங்க. கான்கிரீட் உலகைப் பார்த்து வளர்ந்தவங்க, இங்கே வந்ததும் ஒவ்வொரு உயிருக்கும் இயற்கையோட உள்ள தொடர்பைப் பத்தி புரிஞ்சுக்கறாங்க, அதை நேசிக்கிற மனசோட திரும்பப் போறாங்க...'' என்கிறார் அருள்.

இங்கே எல்லாமே ஜீரோ வேஸ்ட்தான். குப்பைகள் எல்லாமே எருவாகின்றன. எஞ்சுகிற சாம்பல்கூட பாத்திரம் தேய்க்கத்தான் போகிறது.

இந்த உணவகத்தின் சமீபத்திய சேர்க்கை `ஃபார்ம் ஃபிட்.’

``அந்தக் காலத்துல ஜிம்முக்குப் போகாமலேயே மக்கள் உடம்பை நல்ல ஷேப்ல வெச்சிருந்தாங்க. இன்னிக்கு நிலைமை மாறிடுச்சு. பால் கறப்பதும், மரக்கட்டைகளைத் தூக்கி சுமப்பதும், தோட்டத்தில் களை எடுப்பதும், மண் வெட்டியால் கொத்துவதும், குதிரைகளைக் குளிப்பாட்டுவதும் ஜிம்முக்கு போய் உடற்பயிற்சிகள் செய்வதைக் காட்டிலும் அதிக பலன்களைத் தரும். அதை காட்டறதுதான் `ஃபார்ம் ஃபிட் ஆக்டிவிட்டி.’

வெயில் உடம்புலபடுற மாதிரி இந்தப் பயிற்சிகளை இங்கே வர்ற குழந்தைகளும் பெரியவங்களும் ரொம்பவே விரும்பிச் செய்யறாங்க. இதோட அருமையை உணர்ந்துட்டாங்கன்னா, ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீடுகள்லயும் இந்த விஷயங்களை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிடுவாங்க...'' நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் ஷாலினியும், அருளும்.