கட்டைக்கூத்து... உயிரோடு உணர்வைக் கலந்து தமிழர்கள் உருவாக்கிய பலநூறு கலைவடிங்களில் ஒன்று. இப்படி பல ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வளர்த்த கூத்துகள் பலவும் கிட்டத்தட்ட அழிந்தேவிட்ட நிலையில், அழிவின் விளிம்பில் இருக்கும் கட்டைக்கூத்து எனும் அற்புதக் கலைவடிவத்தைக் காப்பாற்றுவதற்காக ஒன்பது பெண்கள் கைகோத்திருப்பது அழகோ அழகு!

கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப, கல்யாண முருங்கை மரத்தால் (இந்த மரத்தில் செய்யப்படும் பொருட்கள் அதிக கனமில்லாமல் இருக்கும்) செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்துகொண்டு இசையும் அடவுகளும் கலந்து நிகழ்த்தப்படும் தெய்வீகக் கலைதான் கட்டைக்கூத்து. இரவு தொடங்கி, அதிகாலை வரை இடைவெளி இல்லாமல் நடக்கும் இந்தக் கூத்தில் ஆடுவதற்கு மனவலிமையும் உடல்வலிமையும் மிகமிக முக்கியம். திரைப்படங்களின் ஆதிக்கம் தொடங்குவதற்கு முன்பு வரை மக்களின் விருப்பத்துக்கு உரிய கலைகளில் முக்கிய இடத்தில் இருந்தது கட்டைக்கூத்து!

கட்டைக்கூத்தில் பெண்கள் பங்கேற்பது இல்லை. `தெய்வீகக் கலையில் பெண்கள் இடம்பெறக் கூடாது’ என்று காலகாலமாக கடைப்பிடிக்கப்படும் (மூட)நம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், மரத்தினாலான அணிகலன்களோடு நெடுநேரம் களத்தில் நின்று ஆடிப்பாடுவதற்கு உடலில் வலு இருக்காது என்பது முக்கியக் காரணம். அதனால் பெண் வேடங்களையும் ஆண்களே தரித்து ஆடுவார்கள். தொன்றுதொட்டு வரும் இந்த மரபை உடைத்திருக்கிறது, `கிருஷ்ணா கட்டைக்கூத்துக் குழு.’ 23 பேர் கொண்ட இந்தக் குழுவில் 9 பேர் பெண்கள். கர்ணன், தர்மன், துரியோதனன், துச்சாதனன் என்று இந்தப் பெண்கள் கட்டைகட்டி களத்தில் இறங்குகிறார்கள். கணீர்க் குரலும் கம்பீரமுமாகக் கூத்தாடும் இந்தப் பெண்களைப் பார்த்து, பாரம்பர்ய கட்டைக்கூத்துக் கலைஞர்களே விழி உயர்த்தி வியக்கிறார்கள்!

திலகவதி, மகாலட்சுமி, லோகேஸ்வரி, வேண்டா, ஜோதி, ரம்யா, பிரபாவதி, பூங்காவனம், ஈஸ்வரி தேவி என இந்த ஒன்பது பெண்களும் காஞ்சிபுரத்தில் செயல்படும் கட்டைக்கூத்து குருகுலத்தில் பயிற்சி முடித்தவர்கள். பயிற்சிக்குப் பின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடந்தவர்களை ஒருங்கிணைத்து, புதிய கலை மரபைத் தோற்றுவித்திருக்கிறார் இவர்களில் ஒருவரான திலகவதி.

திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் போன்ற தமிழகத்தின் வடமாவட்டங்களில் கூத்தையே உயிர்மூச்சாகக் கருதும் ஏராளமான கலைஞர்கள் வாழ்கிறார்கள். திரௌபதை அம்மன் கோயில், பெருமாள் கோயில் திருவிழாக்களில் இன்றளவும் கட்டைக்கூத்து நடத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட கட்டைக்கூத்துக் குழுக்கள் இயங்குகின்றன.

புகழ்பெற்ற கட்டைக்கூத்துக் கலைஞரான பெருங்கட்டூர் ராஜகோபால், காஞ்சிபுரம் அருகே உள்ள புஞ்சையரசன்தாங்கலில் குருகுலப் பள்ளியைத் தொடங்கினார். இதில், பள்ளிக்கல்வியோடு சேர்த்து கட்டைக்கூத்துப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இங்கே எட்டு ஆண்டுகள் பயிற்சிபெற்றவர் திலகவதி.

“இது ரொம்பக் கடினமான கலை. கட்டைக்கூத்து ஆடினவங்களுக்கு மற்ற எல்லாக் கலையும் சுலபமா வரும். ஆபரணங்கள் மட்டும் 20 கிலோக்கு மேல இருக்கும். தலைக்கு மகுடம், சிகரேக், கிளிக்குச்சி, காதுக்கட்டை, திண்டு, புஜம்னு ஏகப்பட்ட பொருட்கள் இருக்கு. எல்லாத்தையும் அள்ளிக்கட்டி, உடம்புல ஏழெட்டு முடிச்சுகள் வேற போடவேண்டியிருக்கும். கட்டைகளைக் கட்டிமுடிச்சு நிமிர்ந்து நிக்கவே முடியாது. ஆனா, ஆர்வமும் தைரியமும் இருந்தா, பழகப் பழக சரியாயிடும். என்ன பாத்திரம் எடுத்திருக்கோமோ, அது மட்டும்தான் நினைவுல இருக்கும்.

எங்க குரு ராஜகோபால் தாத்தா. இவரோட அப்பா பெருங்கட்டூர் பொன்னுச்சாமி வாத்தியார். இந்தப் பேரைச் சொல்லும்போதே எல்லாக் கலைஞர்களும் வாய்பொத்திப் பேசுவாங்க. இந்தக் கலையை மேம்படுத்தின ஆட்கள்ல பொன்னுச்சாமி வாத்தியாரும் ஒருத்தர். `பெருங்கட்டூர் மரபு’னு தனி மரபையே உருவாக்கினவர். அவருக்குப் பிறகு, ராஜகோபால் தலையெடுத்தார். ஆனா, ஒரு கட்டத்துல, இந்தக் கலைக்கு மதிப்பு குறைஞ்சுபோச்சு. நிறைய கலைஞர்கள், `இந்தப் பிழைப்பு நம்மோட போகட்டும்’னு பிள்ளைகளை வெவ்வேற துறைகளுக்கு அனுப்பினாங்க. இந்தச் சூழல்லதான், `கட்டைக்கூத்துக் கலையை அழியவிடக் கூடாது’னு, ஊருக்கு ஊர் பயிற்சி மையங்களை ஆரம்பிச்சார் ராஜகோபால் தாத்தா.

எங்க கிராமம், காஞ்சிபுரம் பக்கத்துல இருக்கிற மேட்டுமுள்ளுவாடி. எங்க அப்பா, பெரியப்பா, சித்தப்பா எல்லாருமே கூத்துக் கலைஞர்கள்தான். `முத்துமாரியம்மன் நாடக மன்றம்’கிற பேர்ல கம்பெனி நடத்துறாங்க. எங்க கிராமத்துலயும் ஒரு பயிற்சி மையம் ஆரம்பிச்சாங்க... அதுக்கு எங்க சித்தப்பா முனுசாமிதான் பொறுப்பாளர். என்னையும் மையத்துல சேர்த்து, சில அடிப்படை விஷயங்களைக் கத்துக்கொடுத்தார் சித்தப்பா. ஆர்வத்தோட கத்துக்கிட்டேன்.

90-ம் வருஷத்துல கட்டைக்கூத்து குருகுலப் பள்ளியை ராஜகோபால் தாத்தா தொடங்கினார். காலையில இருந்து மதியம் வரைக்கும் பள்ளிப் படிப்பு. மதியத்துல இருந்து மாலை வரைக்கும் கூத்துப் பயிற்சி. சாப்பாடு, ஹாஸ்டல் வசதியெல்லாம் இருந்ததால என்னையும் அங்கே சேர்த்து விட்டாங்க. என்கூட சுகன்யா, மோகனானு ரெண்டு பெண்களும் சேர்ந்தாங்க. ரொம்ப சீக்கிரமே எல்லாத்தையும் கத்துக்க ஆரம்பிச்சேன். உடற்பயிற்சி, நடனம், இசைப் பயிற்சினு ஏகப்பட்ட வகுப்புகளோட பயிற்சி நல்லா நடந்துச்சு. எல்லாமே வயசுக்கு வர்ற வரைக்கும்தான். என்கூடப் படிச்ச ரெண்டு பெண்களும் வயசுக்கு வந்த உடனே நின்னுட்டாங்க. எனக்கும் சோதனை ஆரம்பமாச்சு. குடும்பமே கூத்துல இருந்தாலும், தங்கள் வீட்டுப் பெண் கூத்துல ஆடுறதை யாரும் விரும்பறதில்லை. உறவுக்காரங்க எல்லாம் எதிர்த்தாங்க. நான் பிடிவாதமா இருந்தேன். எங்க முனுசாமி சித்தப்பா எனக்கு ஆதரவா நின்னதால என்னை அனுப்பிவெச்சாங்க.

8 வருஷம்... பயிற்சி முடிச்சு, எங்க குருவுக்கு உதவியாளரா ஒரு வருஷம் இருந்தேன். என்னைப் பார்த்து நிறைய பெண்கள் பயிற்சிக்கு வந்தாங்க. அப்பா, என்மேல் இருந்த நம்பிக்கையில என் தங்கையையும் குருகுலத்துல சேர்த்து விட்டார். குருவோட நிழல்ல இருந்து நிறைய நிர்வாக விஷயங்களையும் கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்துல, தனிச்சு ஒரு அடையாளம் வேணும்கிற எண்ணத்துல குருகுலத்தை விட்டு வெளியே வந்து, `கிருஷ்ணா கட்டைக்கூத்துக் குழு’வை ஆரம்பிச்சோம்’’ என்கிறார் திலகவதி.

கட்டைக்கூத்தில் பெரும்பாலும் மகாபாரதக் கதைகள்தான் இருக்கும். `வில் வளைப்பு’, `பகடைத் துகில்’, `ராஜசூய யாகம்’, `சுபத்ரை கல்யாணம்’ இப்படி பல கதைகளை அரங்கேற்றுவார்கள். ஆர்மோனியம், மிருதங்கம், டோலக், முகவீணை என்று சில இசைக்கருவிகள் இடம்பெறும். மைக் இருக்காது என்பதால் குரலாலேயே கூட்டத்தை ஈர்க்க வேண்டும். அந்தக் காலத்தில் மண்ணெண்ணெய் விளக்கில் வேஷம்தரித்து, பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் கூத்து நடத்துவார்கள். இப்போது ஃபோகஸ் லைட் வந்துவிட்டது. காட்சி அமைப்பிலோ, உள்ளடக்கத்திலோ பெரிய மாற்றங்கள் இல்லை.

உக்கிரமான கூத்தின் இறுக்கத்தைத் தளர்த்தி, இயல்புக்குக் கொண்டு வருபவன் கட்டியங்காரன். நகைச்சுவை தோய, சமூகப் பிரச்னைகளைப் பேசி, பாடி ஆடுவான். இப்போதைய கட்டியங்காரனிடம் கொஞ்சம் சினிமா ஊடுருவி இருக்கிறது. மற்றபடி கட்டைக்கூத்தின் தெய்வீகத்தன்மை இன்று வரை மாறவில்லை.

“தொடக்கத்துல, பெண்கள் கட்டை கட்டுறதை மூத்த கலைஞர்களே விரும்பலை. ஆனா, நாங்க போராடி கால் ஊன்றியிருக்கோம். எல்லாருமே எல்லா வேஷமும் கட்டுவோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேஷத்துக்கு ஸ்பெஷலிஸ்ட். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அடையாளம் இருந்தாலும், அன்னன்னிக்கு ஸ்டேஜுக்கு என்ன தேவையா இருக்கோ அதைத்தான் செய்வோம்’’ என்கிறார் பிரபாவதி. ப்ளஸ் டூ படிக்கிற பிரபாவதி, 10 வயதில் கட்டைக்கூத்து குருகுலத்தில் சேர்ந்தவர்.

கட்டைக்கூத்தில், முகம் எழுதுவது தனிக்கலை. ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வண்ணம் தீட்டி, முகம் எழுதுவார்கள். துரியோதனன், துச்சாதனன் வேடம் என்றால், அனல் கக்கும் வில்லன் தோரணை வரவேண்டும். அதற்காக சிவப்பு வண்ணம் பூசுவார்கள். பீமன் வலிமையானவன். அவனுக்குப் பச்சை நிறம். கிருஷ்ணனின் முகத்தில் தெய்வீகம் ததும்ப வேண்டும். அதற்காக நீலம். இப்படி பாத்திரத்துக்கு ஏற்ப முகம் எழுதுவார்கள்.

“கடைசி வரிசையில நிற்கிற ரசிகரும் முகத்தைப் பார்க்கணும். அதுக்குத் தகுந்த மாதிரி எடுப்பா தெரியத்தான் முகம் எழுதுறது. எவ்வளவு மென்மையான முகமும், எழுதி மீசையை ஒட்டுன பிறகு, கம்பீரமா மாறிடும். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி உடை அணியணும். எல்லாமே பெரியவங்க வகுத்துவச்சது. இது எல்லாத்துக்கும் கனம் கனமா புத்தகங்கள் இருக்கு. கோனமேடை ராமசாமி வாத்தியார், அம்மிணி அம்மாள்னு பெரிய பெரிய ஆளுமைங்க எழுதினது. அதையெல்லாம் படிச்சு மனப்பாடம் பண்ணியிருக்கோம்...’’ என்று சொல்லும் மகாலட்சுமி, காஞ்சிபுரம், பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ மாணவி. இவருடைய அப்பா, மிருதங்க வித்வான்.

``குருகுலத்தில் இருந்து வந்த பிறகு, எனக்கான பாதையை உருவாக்கித் தந்தது பரதநாட்டியக் கலைஞர் சங்கீதா ஈஸ்வரன்தான். மாணவியா இருந்த என்னை வாத்தியாரா மாத்தினது அவங்கதான். குருகுலத்துல இருந்து வந்த பிறகு, ஆட்டிசத்தால பாதிக்கப்பட்ட குழந்தைகள், பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சிகொடுக்க ஆரம்பிச்சேன். `பெண்களை முன்னிலைப்படுத்தி, ஒரு கட்டைக்கூத்துக் கம்பெனி ஆரம்பிக்கணும்’கிற கனவு இருந்துச்சு. குருகுலத்துல தையல்கலைஞரா இருந்த பழனியும் மிருதங்க வாத்தியார் ரெங்கசாமியும் ஆதரவு கொடுத்தாங்க. பயிற்சி முடிச்ச, இடைநின்ன பெண்களை எல்லாம் திரட்டினோம். மொத்தமா எல்லாப் பாத்திரங்களையும் பெண்களைவெச்சே செய்ய முடியாது. கொஞ்சம் அனுபவமுள்ள ஆண் கலைஞர்களையும் சேர்த்து, இரண்டு வருஷத்துக்கு முன்ன இந்த கம்பெனியை ஆரம்பிச்சோம். வழக்கமா கட்டைக்கூத்துல கணீர்னு ஆம்பிளைக் குரல்தான் ஒலிக்கும். எங்க கம்பெனியில வித்தியாசமா பெண்கள் குரல் கேட்க, மக்கள் ஈடுபாட்டோட ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க’’ என்று சிரிக்கிறார் திலகவதி.

இனி, தலைமுறைகள் கடந்தும் இந்தக் கலை வாழட்டும்!