தமிழ்ச் சமூகத்தில் 1900களில் இருந்தே ருசி ரசிகர்களின் அபிமானத்தைத் தொட்டுத் தொடர்கிறது காபி. வீட்டில் தயாரிக்கப்படும் காபிக்காக எவ்வளவோ மெனக்கெடுகிறோம். குறிப்பிட்ட காபி கொட்டைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கி, வறுத்து, அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தி, காலை எழுந்தவுடன் காபியுடன் நாட்கள் தொடங்கும்.

வரலாற்று ஆய்வாளர் பிரதீப் சக்கரவர்த்தி தனது ஆய்வு நூலில் குறிப்பிடுகிற சம்பவம் இது... `1916ம் ஆண்டில் புதுப்பெண்ணாக திருநெல்வேலி மாவட்டம் அனந்தகிருஷ்ணபுரத்துக்குச் சென்றார் என் பாட்டி. அவர்தான் அந்த ஊரிலேயே முதன்முதலாக ஃபில்டர் காபி தயாரித்தவர். அவர் எடுத்துச் சென்ற ஃபில்டரை ஊரே ஆச்சர்யத்தோடு பார்த்ததாம். அந்தச் சுவை பலருக்கும் பிடித்துப்போக, அந்தப் பகுதி முழுக்க ஃபில்டர்கள் பெருகி, காபி மணம் பரவத் தொடங்கியது...’

எப்படியோ எத்தியோப்பியாவில் பிறந்த காபி, தமிழகத்தின் தென்பகுதி கிராமத்திலும் புதிய உறுப்பினராக மாறி, தன் ருசியை சுவாரஸ்யமாக்கிக்கொண்டே இருக்கிறது, நூறு ஆண்டுகளையும் தாண்டிஇதற்குச் சுவை சேர்க்கும் வகையில் சென்னையின் பல டீக்கடைகளில் ஃபில்டர் காபி டீக்காக்ஷன்கள் சாஷேக்களில் காத்திருக்கின்றன,'அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ என்பது பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ஆய்வு நூல். நூலின் முதல் கட்டுரையில் காபி ஆராய்ச்சியே நிகழ்த்தியிருக்கிறார் ஆசிரியர்

1917ம் ஆண்டு வாக்கிலேயே ஏழைக் குடியானவர் மத்தியிலும் நீராகாரம், கஞ்சி மற்றும் மோருக்கு மாற்றாக காபி நுழைந்துவிட்டதை திருநெல்வேலி கெஜட்டிலிருந்து மேற்கோள் காட்டிச் சொல்கிறார் அவர். `மூத்த தலைமுறையினர் முகஞ்சுளிக்கும் வண்ணம் காப்பி பழக்கம் இருந்தது’ என்று கெஜட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீராகாரம் என்பது ஆரோக்கிய பானம்; காப்பியோ உற்சாக பானம். `களைப்பு நீக்கும் ஜீவசக்தி காப்பி; ஊக்கமும் உற்சாகமும் தருவது காப்பி' எனப் புகழ் பாடுகிறது, அன்றைய விளம்பரம். காபியின் படையெடுப்பு பண்பாட்டுக் கோட்டைகளை தவிடுபொடியாக்கிக் கொண்டிருந்த காலத்தில், பண்பாட்டுக் காவலர்களோ மதுவைவிடவும் காபி தீமை பயப்பது என்று வாதாடிக்கொண்டிருந்தனர். காந்தி சீடர்கள் காபிக்கு 'குட்டிக் கள்’ என்ற பெயர் சூட்டினர்.

1936ம் ஆண்டு முதல் 72 நகரங்களில் தொடங்கப்பட்ட `இந்தியன் காபி ஹவுஸ்’, காபியோடு பல்வேறு கலை, இலக்கியம், அரசியல், தத்துவ விவாதங்களைக் கண்டிருக்கிறது. ஆனால், காபி போர்டின் நிர்வாகக் கோளாறுகளால், 1950களில் இந்த நிறுவனமே வீழ்ச்சியடையத் தொடங்கியது. பல கிளைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் வேலை இழக்கத் தொடங்கினர். கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன் புதியதொரு முயற்சியை மேற்கொண்டது இந்த வேளையில்தான். தொழிலாளிகளே முதலாளியாகும் கூட்டுறவு அமைப்பை அவர்தான் பரிந்துரைத்தார். சென்னை தி.நகர், கே.கே.நகர், புதுச்சேரி, நெய்வேலி, பெங்களுரு, திருவனந்தபுரம், திருப்பதி, சிம்லா உள்பட இந்தியாவெங்கும் 51 இடங்களில் இட்லி சாம்பாரும் காபியும் அளிக்கும் `இந்தியன் காபி ஹவுஸ்’ ஓட்டல்கள் மறுமலர்ச்சி பெற்றன. இன்றைக்கும் அங்கு பணியாற்றுகிறவர்கள் அத்தனை பேரும் கூட்டுறவு அடிப்படையில் முதலாளிகளே. காபி ஒருவரின் வாழ்வையே மாற்றியமைக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம்!

புதுமைப்பித்தனில் தொடங்கிய காபி இலக்கியம் இந்தியன் காபி ஹவுஸில் கலாசார காபியாகவே பரிமாறப்பட்டது. இலக்கிய, கலாசார, தத்துவ, அரசியல் சங்கமத்துக்கான ஓரிடமாகவே புகழ்பெற்றது. இங்கு விவாதிக்கப்படாத விஷயங்களே இல்லை என்கிற அளவுக்கு அறிவுஜீவிகளின் காபி படையெடுப்பு இருந்தது. இயக்குநர் சத்யஜித் ரே, அறிஞர் அமர்த்தியா சென், மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஒவியர் எம்.எஃப்.உசேன் போன்ற பிரபலங்களும் காபி ஹவுசின் ரெகுலர் விசிட்டர்களே.

16ம் நூற்றாண்டில் ஏமனில் இருந்து கொங்கு கடற்கரைக்கும் மலபார் கடற்கரைக்கும் வந்து சேர்ந்த காபி, இன்று புதிய பரிணாம வளர்ச்சியை எட்டியிருக்கிறது.அந்தக் காலகட்டத்தில் இந்த பானம் கடுங்காபியாக (பிளாக் காபி) அருந்தப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. ஐரோப்பாவில் காபி அலை வீசத் தொடங்கிய பிறகு, ஈஸ்ட் இந்தியா கம்பெனி தன் அதிகாரிகளுக்காக கொல்கத்தாவிலும் மெட்ராஸிலும் காபி ஹவுஸ்களைத் தொடங்கியது. அதோடு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காபி பயிரிடுவது லாபம் தரக்கூடியதாக இருக்கும் என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். 1800களின் இறுதியில் இந்தியர்களும் காபி பயிரிடத் தொடங்கி, ஏற்றுமதியும் செய்திருக்கிறார்கள். உதாரணமாக... இப்போது `கஃபே காபி டே’ நடத்தி வருகிற நிறுவனத்தின் மூதாதையர் 1870ம் ஆண்டிலேயே தங்கள் நிலத்தில் காபி பயிரிட்டிருக்கிறார்கள். அருகில் இருக்கும் நிலத்திலோ, ஆங்கிலேயரின் காபி செடிகள்! 1900களில் ஏற்றுமதி தடை போன்ற பிரச்னைகள் ஏற்பட்ட பிறகுதான், உள்ளூர் காபி மார்க்கெட்டில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. 1924ம் ஆண்டில் `எம்டிஆர்’ (பெங்களூரு) காபியை பிரபலப்படுத்தியபோது, அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டார்களாம்

பெங்களுரு எம்.ஜி.ரோட்டில் 1959ம் ஆண்டில் இந்தியன் காபி ஹவுஸ் தொடங்கப்பட்டது. அதே காலகட்டத்தில் கோஷி’ஸ் காபி, பேரேடு கஃபே, தோம்’ஸ் கஃபே, பாத்திமா கஃபே ஆகியவையும் தொடங்கப்பட்டு பிரபலமாகின. இவ்விடங்களிலும் சுடச் சுட விவாதங்கள் நடைபெறத் தொடங்கின. பாத்திமா கஃபேயில் காபி குடித்துக்கொண்டே இசை கேட்க வசதியாக, ஜூக் பாக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

60களிலும் 70களிலும் இளைஞர்கள் மனதில் இந்த மியூசிக் காபி இடம்பிடித்தது.காபி கிடைக்கும் இடங்கள் இரண்டுவிதமாக இருக்கும். முதலாவது... அமைதியாக, அமர்ந்து பேச வாய்ப்பளிக்கக்கூடிய இடங்கள். ஸ்டார்பக்ஸ், கஃபே காபி டே போன்றவை இந்த ஃபார்முலாவில்தான் வெற்றி கண்டிருக்கின்றன. ஒரு காபி வாங்கிவிட்டால் போதும்... 'வேற என்ன வேணும்?’ என்றோ, 'எழுந்து போ’ என்றோ யாரும் சொல்ல மாட்டார்கள். இரண்டாவது... பரபர காபி. உதாரணம் உடுப்பி ஓட்டல்கள். காபியை நாம் ஆற்றிக்கொண்டிருக்கும்போதே முதுக்குக்குப் பின்னால் ஒருவர் நின்று கொண்டிருப்பார் இடம் பிடிக்க!

1990களில் சாஃப்ட்வேர் துறை தன் சிறகுகளை பெங்களூருவில் விரித்ததும் காஸ்ட்லி காபி பரவலாகக் காரணமாக அமைந்தது. 1996ம் ஆண்டில் ப்ரிகேட் ரோடில் முதல் கேப்பசினோ தொடங்கப்பட்டது. இத்தாலியில் இருந்து 7 லட்சம் ரூபாய் விலையில் எஸ்பிரஸ்ஸோ மெஷின் இறக்குமதியானது. டபரா செட்களுக்கு மாற்றாக அழகான பெரிய கோப்பைகள் இடம்பெற்றன. லாத்தே, மோச்சா, ஐரிஷ், அமெரிக்கானோ என விதம்விதமான பெயர்களில் காபி நிரப்பப்பட்டது.

பெங்களூருவில் தொடங்கிய காபி பார் கான்செஃப்ட் (வெளிநாட்டு இறக்குமதி ஐடியாதான்!), சென்னை உள்பட இந்தியாவின் மற்ற மெட்ரோக்களுக்கும் செயின் ஸ்டோர்கள் வழியாக வந்து சேர்ந்தது. 2011ம் ஆண்டில் இருந்து ஸ்டார்பக்ஸ், கோஸ்டா காபி, குளோரியா ஜீன்ஸ், காபி பீன் என பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுத்தன. மால்கள், ஏர்போர்ட்டுகளிலும் இடம்பிடித்தன. ஆனால், கஃபே காபி டேயின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இந்தியாவின் 219 நகரங்களில் 1,600 காபி ஷாப்கள். வெளிநாடுகளிலும் கிளை பரப்ப ஆரம்பித்தாயிற்று. இதன் வெற்றிக்குக் காரணங்கள் இரண்டு. காபி தோட்டம் முதல் காபி ஷாப் வரை எல்லாமே இவர்களின் பரம்பரையில் தொடர்ந்து கொண்டிருப்பது முதல் காரணம். இன்றும் கஃபே காபி டேயில் அளிக்கப்படும் காபி, இவர்களின் குடகுத் தோட்டத்தில் விளைந்ததாகவே இருக்கிறது. நவீன வசதிகளையும் காபியோடு கலப்பது இன்னும் சாதகமாகிறது. லேட்டஸ்ட் உதாரணம்... வைஃபை வசதி, முதல் அரை மணி நேரத்துக்கு இலவசம். அதனால்தான், 'இங்கு காபி மட்டுமல்ல... காதல் சொல்லலாம். கதை படிக்கலாம். பிசினஸ் பேசலாம். கம்பெனியே தொடங்கலாம்’ என்கிறார்கள் இந்த நிறுவனத்தினர். கம்பெனி தொடங்கலாம் என்பது காமெடியாகச் சொல்லப்பட்டதல்ல. வாழும் உதாரணமே உண்டு. ஓலா கேப்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய பூவேஷ் அகர்வால் ஓராண்டு காலம் மும்பையில் கஃபே காபி டேயில் காபி தயாரித்து அளிப்பவராகப் பணியாற்றியவர்தான்

காபி ஷாப்கள் வளர்ந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. 1997ம் ஆண்டில் மட்டுமே வெளிமாநிலங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் சாஃப்ட்வேர் நபர்கள் பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இப்போது இந்த எண்ணிக்கை 12 லட்சத்துக்கும் அதிகம். இவர்களில் பலர் தனித்திருப்பவர்கள். பணிக்குப் பிறகு இவர்கள் ரிலாக்ஸாக இருக்க வீடும் அலுவலகமும் அல்லாத ஒரு சூழல் தேவைப்பட்டது. அந்த இடத்தை காபி ஷாப்களே அளித்தன.

பித்தளை அல்லது தாமிரத்தாலான பெரிய காபி ஃபில்டர், டபரா செட் இவற்றை வாங்கி அடுக்கி வைத்து `கும்பகோணம் டிகிரி காபி' என்கிற போர்டு பொருத்தி, கிழக்குக் கடற்கரை சாலையிலும், ஜிஎஸ்டி சாலையிலும் நூற்றுக்கும் அதிக காபி கடைகள் இயங்குகின்றன.

கும்பகோணம் லட்சுமி விலாஸ் காபி கிளப் 50 ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்றிருந்தது. இங்கே ஏராளமானவர்கள் ஃபில்டர் காபி குடிப்பதற்காகக் காத்திருப்பது வழக்கம். அப்படி ஓர் அலாதி சுவை! கும்பகோணத்துக்கு வருகை தரும் இசைக்கலைஞர்கள் வாயிலாக இந்த காபியின் புகழ் தமிழகம் எங்கும் பரவியது.

லவாஸா காபி நிறுவனம் இந்திய காபி ஆர்வலர்களுக்கு இத்தாலியன் காபி கலாசாரத்தைக் கற்றுத் தருவதற்காக சென்னையில் கல்வி மையம் அமைத்திருக்கிறது. காபி டேஸ்ட்டிங், காபி கல்ட்டிவேஷன் அண்ட் பிராசஸிங், எஸ்பிரஸ்ஸோ பிரிபரேஷன், கேப்பசினோ, லத்தே ஆர்ட் அண்ட் காபி டிசைன் ஆகிய கோர்ஸ்களும் இங்கு உண்டு. பயிற்சி பெற கட்டணம் கிடையாது என்பதே காபி குடித்த ஃபீல் கொடுக்கிறது

பருவநிலை மாற்றங்களால் அழிந்து வருகிற பல்வேறு விஷயங்களில் இப்போது காபியும் ஒன்றாகி உள்ளது. அதனால், எதிர்காலத்தில் காபியே இல்லாமல் போகலாம் அல்லது காபி குடிப்பது லக்ஸுரியான ஒரு செயலாக மாறிவிடலாம். இந்த நிலை தொடருமானால் 2050ம் ஆண்டில் காபி உற்பத்தி பாதி அளவாகக் குறைந்துவிடும். 2080ம் ஆண்டிலோ

வைல்டு காபி' என்று அழைக்கப்படுகிற பராம்பர்யமான மரபியல் பண்புகள் கொண்ட காபி பயிரும் காணாமல் போய்விடும்.

அதனால் என்ன? இன்று நம் முன்னே அருமையான டிகிரி காபி மணம் வீசுகிறதே!

காபி டேட்டா

ஒவ்வொரு நாளும் உலகில் 2.25 பில்லியன் கப் காபி பருகப்படுகிறது.

2015-ம் ஆண்டில் உலக காபி வணிகத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 19 பில்லியன் டாலர்.

70 நாடுகளைச் சேர்ந்த 120 மில்லியன் மக்கள் காபி சார்ந்த பணிகளால்தான் வாழ்கிறார்கள்.

உலக காபி உற்பத்தி, 1960-ம் ஆண்டில் இருந்ததைவிட இப்போது மும்மடங்கு அதிகரித்திருக்கிறது.

காபி குடிக்கும் பழக்கம் ஒவ்வோர் ஆண்டும் 5 சதவிகித அளவுக்கு அதிகரிக்கிறது.

மழைப்பொழிவு குறையும்போதெல்லாம் 10-12% காபி உற்பத்தி குறைகிறது.

லண்டன், நியூயார்க் ஆகிய சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்பவே நம் ஊரிலும் காபி விலையில் ஏற்றமும் இறக்கமும் உள்ளது.

இந்தியாவின் அரிய வகை காபி (சிங்கிள் ஆர்ஜின்), அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸின் ஒரு பிரத்யேக காபி ஷாப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அராபிகா, ரோபஸ்டா... இவை இரண்டும்தான் காபியின் பிரதான வெரைட்டிகள். உலக காபி உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்த அதிக இடத்தில் இருப்பது இந்தியாதான். அராபிகா உற்பத்தியில் நம்மோடு போட்டியிடுகிறது பிரேசில். ரோபஸ்டா உற்பத்தியில் வியட்நாம் போட்டிக்கு வருகிறது.

இந்தியாவில் 3,42,000 ஹெக்டேர் நிலத்தில் காபி பயிரிடப்படுகிறது. சராசரி உற்பத்தி 2,62,000 டன் (2012-ம் ஆண்டு கணக்கீடு)

ஒட்டுமொத்த இந்திய காபி உற்பத்தியில் 71 சதவிகிதம் கர்நாடகாவிலும், 21 சதவிகிதம் கேரளாவிலும், தமிழ்நாட்டில் 5 சதவிகிதமும் செய்யப்படுகிறது.

முதன்முதலில் ஆப்பிரிக்காவில் அறியப்பட்ட காபி இன்று உலகில் 70 நாடுகளில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக நிலநடுக்கோட்டில் உள்ள பகுதிகளில். அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, இந்தியா, ஆப்பிரிக்கா ஆகியவையே காபி உற்பத்தியில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன.