அந்த நிலப்பரப்பில் நிற்கும்போது பெருமிதமாக இருக்கிறது. அரியலூருக்கு அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமர்ந்துகொண்டு, தெற்காசியாவின் பெரும் பகுதியை ஆட்சிசெய்த ராஜேந்திரச் சோழனின் படை, கடல்கடந்து வந்து நிலைகொண்ட பகுதி; அரபு, சீன வர்த்தகர்களோடு போட்டியிட்டு, சோழ தேசத்து வர்த்தகர்கள் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த இடம்; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடல் பயணம் மேற்கொள்பவர்கள், பருவக்காற்று மாற்றத்துக்காகக் காத்திருக்கவும் ஓய்வெடுக்கவும் பயன்படுத்திய கடலோரப் பரப்பான மலேசியாவில், கிடா மாநிலத்தில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதியில் நின்றுகொண்டிருக்கிறோம். முதல்நாள் பெய்த சாரல் மழையில், மரங்கள் குளித்துச் சிலிர்த்திருக்கின்றன. இந்தோனேஷிய காட்டுத்தீயால் எழுந்த புகைமூட்டம் நிலமெங்கும் பரவியிருக்கிறது.

பினாங்கு மாநிலத்தின் ஜார்ஜ் டவுனில் இருந்து 75 கி.மீ தொலைவில் இருக்கிறது பூஜாங் பள்ளத்தாக்கு. தமிழர்களின் ஆயிரமாண்டு சரித்திரத்தோடு பிணைந்திருக்கும் பகுதி இது. காவிரிப்பூம்பட்டினம், மாமல்லபுரம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் இருந்து கடல் வழியில் கிழக்கு முகமாகப் பயணிக்கும்போது, கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டது இந்த கிடா சிகரம். 1,230 மீட்டர் உயரம்கொண்ட இந்தச் சிகரத்தை ஒட்டி, சுமார் 224 சதுர கிலோமீட்டருக்கு சரிந்து கிடக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு, மலாக்கா நீரிணையின் நுழைவுவாயிலாக இருக்கிறது. அக்காலத்தில் தெற்காசியா முழுவதும் இருக்கும் வணிகர்கள் இங்கு குழுமி தங்கம், ஈயம், இரும்பு வணிகம் செய்திருக்கிறார்கள்.

பூஜாங் பள்ளத்தாக்கை உள்ளடக்கிய கடாரத்தை, ஸ்ரீவிஜயத்தை ஆண்ட சைலேந்திர வழித்தோன்றல்களே ஆண்டுவந்தார்கள். தலைமுறையாக சோழப் பேரரசுக்கும் சைலேந்திர மன்னர்களுக்கும் நெருங்கிய தோழமை இருந்தது.

புத்த மதத்தைச் சேர்ந்த ஸ்ரீவிஜய மன்னன் சூளாமணிவர்மன், சோழ தேசத்துக்கு வணிகம் செய்யவரும் தங்கள் வணிகர்களின் வழிபாட்டுக்காக, ஒரு பௌத்த விகாரம் கட்ட வேண்டும் என்று சோழப் பேரரசன் ராஜராஜ சோழனிடம் வேண்டுகோள் விடுத்தான். சூளாமணிவர்மனின் வேண்டுகோளை ஏற்ற ராஜராஜன், நாகப்பட்டினத்தில் `சூளாமணி வர்ம விஹாரம்' எனும் பெயரில் புத்த விஹாரம் ஒன்றைக் கட்ட நிலத்தையும், அதைப் பராமரிக்க ஆனைமங்களம் எனும் ஊரில் விளையும் உணவுப் பொருட்களையும் நிரந்தர மானியமாக ஒதுக்கித் தந்தான். அந்த அளவுக்கு சோழர்களுக்கும் ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் உறவு செழித்திருந்தது.

ஆனால், சோழ வணிகர்கள் தெற்காசிய வணிகத்தில் தலையெடுத்து வளர்ந்துவருவதைப் பொறுக்காத ஸ்ரீவிஜய நாட்டின் அதிகாரிகளும் வணிகர்களும் பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டனர். சோழ வணிகர்களின் கப்பல்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

சோழ வர்த்தகர்கள் ராஜேந்திரச் சோழனிடம் முறையிட்டார்கள். கோபமுற்ற ராஜேந்திரன், தம் பெரும்படையை கடல் இறக்கி, ஸ்ரீவிஜயம் நோக்கிப் படையெடுத்தான். கடாரம் உள்ளிட்ட ஸ்ரீவிஜயம், முழுமையாக ராஜேந்திரனின் ஆளுமைக்குள் வந்தது. கூடவே, `கடாரம்கொண்டான்’ என்ற பட்டப் பெயரும்.

கடாரம் உள்ளடங்கிய ஸ்ரீவிஜய தேசம் ராஜேந்திரச்சோழன் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, சோழ வணிகர்கள் மடடுமின்றி, சீன, அரேபிய வணிகர்களும் அச்சமின்றி வணிகம் செய்தார்கள். அந்தக் கடாரம்தான் இன்று மலேசியாவில் உள்ள கிடா மாநிலம். சிகரமும் பள்ளத்தாக்குமாக விரிந்து கிடக்கிறது கிடா மாநிலம். `இம்மாநிலத்தின் தொல்பொருள் களஞ்சியம்’ என்று சொல்லத்தக்க வகையில் ஏராளமான புதைபடிமங்களை தன்னுள்ளே சுமந்துகொண்டிருக்கிறது பூஜாங் பள்ளத்தாக்கு. பசுமை பொருந்திய இந்தப் பள்ளத்தாக்கு, கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கின் சூழலை நினைவூட்டுகிறது.

`பூஜாங்’ எனும் மலாய் மொழிச்சொல், நாகத்தைக் குறிக்கும். `இந்தப் பள்ளத்தாக்கில் தவழ்ந்து ஓடும் மெர்போக், பூஜாங் ஆறுகளின் ஓடுபாதை, நாகத்தின் உருவத்தில் இருப்பதால், இந்தப் பெயர் வந்திருக்கலாம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

14-ம் நூற்றாண்டு வரையில் செழிப்பும் வனப்பும் நிரம்பிய பகுதியாகவும், கடல் வர்த்தகப் பகுதியாகவும் விளங்கியிருக்கிறது இந்தப் பள்ளத்தாக்கு. தமிழகத்தைச் சேர்ந்த கடலோடிகளும் வர்த்தகர்களும் பூஜாங் பள்ளத்தாக்கில் தங்கள் கலாசாரத்தையும் பண்பாட்டையும் விதைத்திருக்கிறார்கள்.

கி.பி.4-ம் நூற்றாண்டுக்கும் 10-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தப் பள்ளத்தாக்கு ஏந்தலாக இருந்துள்ளது. புத்தர் சிலை உள்ளிட்ட பல புதைபொருட்கள் இங்கு மீட்கப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த சோழ நாணயங்கள், சிவன், விநாயகர், துர்க்கைச் சிலைகள், பிற கலைப்பொருட்களை அந்தப் பகுதியிலேயே அருங்காட்சியகம் வைத்துப் பாதுகாக்கிறது மலேசிய அரசு.

``மனித நடமாட்டம் அற்று, அடர் வனமாகக் கிடந்த இந்தப் பகுதியில் 1840-ம் ஆண்டில்தான் முதன்முறையாக அகழ்வாய்வு செய்யப்பட்டது. அதில், ஓர் இந்துக் கோயிலின் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு, யாரும் அதில் ஆர்வம் காட்டவில்லை.

மலாய் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைத் தலைவராக இருந்த டாக்டர் ராம சுப்பையா உள்ளிட்டோரின் தீவிர முயற்சியின் காரணமாக, 1970-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பள்ளத்தாக்கின் மீது மலேசிய அரசின் கவனம் குவிந்தது...’’ என்கிறார், பூஜாங் பள்ளத்தாக்கை எங்களுக்குச் சுற்றிக்காட்டிய, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்விப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ்.

``பூஜாங் பள்ளத்தாக்கை உள்ளடக்கிய இந்தப் பகுதி, `கெடா’, `கிடாரம்’, `காழகம்’, `கடாரம்’, `கடஹா’ என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலின் தெற்குச் சுவரிலுள்ள 1030-ம் ஆண்டு மெய்கீர்த்தியில், ராஜேந்திர சோழனின் படையெடுப்புகள் பற்றியச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதில், “ராஜேந்திரன் அலைகடல் நடுவில் கப்பல்களை அனுப்பிய பின், கடார மன்னனான விஜய துங்கவர்மனை சிறைப்பிடித்து, அந்த மன்னனின் செல்வத்தையும் கைப்பற்றினான்” என்று இருக்கிறது. மேலும், திருவாலங்காடு செப்பேட்டிலும் கடாரப் படையெடுப்பு பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன’’ என்கிறார் பூஜாங் பள்ளத்தாக்கு பற்றி தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறவரும் கிடா மாநிலத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் வழக்குரைஞருமான வீ.நடராஜன்.

கிடா மாநிலத்தைச் சேர்ந்த சமூகசேவகர் ஜெயராமன், ‘‘பூஜாங் பள்ளத்தாக்குப் பற்றி நினைக்கும்போது, உடம்புக்குள் ஒரு புத்துணர்வு வருகிறது. மலேசியாவில் வாழும் இன்றைய தமிழ் இளைஞர்கள், மாமன்னன் ராஜேந்திர சோழன் வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம். வரலாறு வெறும் கதை அல்ல; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் மன்னன், தனது வீரத்தால், இந்தப் பகுதியை வென்றெடுத்து, அனைத்து நாட்டு வணிகர்களும் அச்சமின்றி வணிகம் செய்ய வழிவகுத்திருக்கிறான். ராஜேந்திர சோழன் கடாரத்தை மட்டும் வெற்றிகொள்ளவில்லை. இங்கு வாழ்ந்த மக்களின் மனதையும் வென்றுள்ளான். தமிழர்களின் பண்பாட்டுப் புதையலாக இருக்கும் இந்தப் பள்ளத்தாக்கை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும்..’’ என்கிறார் உணர்ச்சி பொங்க.

நாம் அங்கிருந்து திரும்பும்போது, லேசான தூறல்... கடராத்தின் குட்டிக் குன்றிலிருந்து தவழ்ந்து வந்த அருவி, ``மகிழ்ச்சி, மகிழ்ச்சி...’’ என்று குரல் கொடுத்துக் கத்துவதைப்போல இருந்தது!

‘‘கடாரம் வெற்றிக்கு கைகொடுத்த கங்கை!’’

ராஜேந்திரசோழன் குறித்துத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிற எழுத்தாளர் பாலகுமாரனிடம் பேசினோம்.

‘‘கங்கைகொண்ட சோழபுரத்தை ஆண்ட ராஜேந்திர சோழன், மிகச் சிறந்த வீரன், அறிஞன். இதனாலேயே இவனுக்கு, `பண்டித சோழன்’ என்ற பட்டப்பெயரும் உண்டு. கடலின் தன்மை தெரிந்து, காற்றின் தன்மை தெரிந்து, இருட்டில் சுடர் மூலம் வழியறிந்து, ஆமைகள் போகிற நீரோட்டப்பாதை தெரிந்து, நூற்றுக்கணக்கான மரக்கலங்களோடு அவன் கிழக்கே உள்ள நாடுகளுக்குப் போயிருக்கிறான். இன்றைய சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, இந்தோனேஷியா... எனப் பல நாடுகளில் அவன் கால்கள்பதித்திருக்கிறான். போரில் வென்று, பெரும் பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறான். ராஜேந்திர சோழன் கங்கையை வெற்றிகொண்ட பிறகுதான், கடாரத்தை வெற்றிகொள்கிறான். கங்கையை ஒட்டிய பகுதிகளில் ராஜேந்திர சோழன், படையெடுத்துச் சென்ற பாதையில் பயணம்செய்து வந்தேன். கங்கை நதி கலக்கும், டயூமண்ட் துறைமுகம் பகுதியில் உள்ள மீன்பிடிப் படகுகள் வித்தியாசமானவை. மேல் அடுக்கில் மீன்பிடிப்பு சாதனங்களும், அடுத்த அடுக்கில் ஆடு மாடுகளை ஒரு கரையிலிருந்து, மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் வகையிலும் படகுகள் உள்ளன.

ராஜேந்திர சோழன், கங்கை படையெடுப்பின்போது, வங்காளப் பகுதியின் படகுகளையும் மரக்கலங்களையும் கொண்டுவந்துள்ளான். இவற்றை மாதிரியாகவைத்து. கடாரம் பயணத்துக்குப் பெரிய கப்பலைக் கட்டியுள்ளான். மாமன்னன் ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா 2014-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த அவரது கல்லறை, பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் இருந்துவருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் ஒரு பழங்காலக் கோயிலாக அந்தக் கல்லறை அமைந்துள்ளது.

ராஜேந்திர சோழன், அவரது எண்பதாவது வயதில் காஞ்சிபுரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுற்றிப்பார்க்க வந்தபோது, பிரம்மதேசம் கிராமத்தில் இயற்கை எய்திவிட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வில் தெரிவித்து உள்ளனர். அந்தப் பகுதிக்குச் சென்றபோது, என் உடல் சிலிர்த்தது. பல படையெடுப்புகளில் வெற்றி சூடியவன், இந்த எளிய இடத்தில் தனது உயிரைத் துறந்துள்ளதை நினைத்து கைக்கூப்பி நின்றேன்’’ என கம்மியக் குரலில் சொன்னார் பாலகுமாரன்.