விதவிதமாய் வகைவகையாய் எத்தனையோ திருக்கதைகள் துலங்குகின்றன நம் பாரதத்தில். கடவுளரை மையப்படுத்தியோ, சரித்திரப் புருஷர்களை நாயகர்களாக்கியோ புராணங்களும் பண்டைய இலக்கியங்களும் விவரிக்கும் அந்தத் திருக்கதைகள், ஏதேனும் ஒரு நீதியை, தத்துவத்தைப் போதிக்கும்.

அந்தக் கதைகளை அடியொற்றி நம் முன்னோர்கள் படைத்த சிற்பங்களோ, அவர்கள் கடைப்பிடித்த தர்மத்தை, கலாசாரத்தை நம் கண்முன் நிறுத்தும் கலைப்பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. அவற்றிலும் தெய்வச் சிற்பங்கள் இன்னும் ஒருபடி மேலே!

இங்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது; இறைவன் பிச்சை ஏற்பவனாக வந்து, அடியவர்களின் கர்வத்தை பலியேற்ற திருக்கதை அது. சிவபெருமானின் அருளாடல்களில் ஒன்றான அந்தக் கதை, சிற்பமாகவும் உருப்பெற்று, அரனாரின் அறுபத்து நான்கு திருவடிவங்களில் ஒன்றாகவும் நிலைபெற்றுவிட்டது. அந்தத் திருவடிவை `பிட்சாடனர்’ என்று சிறப்பிப்பார்கள்.

`இறைவன் அன்பைப் பிச்சை ஏற்கிறார். நம் இதயக் குகையைத் தூய்மையாக்கி, நமது துன்பங்களையும், வினைகளையும் தான் ஏற்று, தனது அருளைச் சொரிய நம்மிடம் வருகிறார்’ என்பதை விளக்கும் அற்புதமான சிவ வடிவம் இது.

இந்தத் திருவடிவத்துக்குக் காரணமான திருக்கதையையும் சிற்பச் சிறப்பையும் விரிவாக அறிவோமா?

திருக்கதையில் பிட்சாடனர்!

தாருகாவனத்தில் முனிவர்கள் குடும்பத்தோடு கடும் தவம் புரிந்தனர். உண்மையான வழியை மறந்த அவர்களுக்கும் கருணை புரிய, பிட்சாடனராக வடிவெடுத்தார் ஈசன். ஆடையற்ற ஆண்டியாக, இறைவன் செல்கிறார். பிட்சாடனரின் அழகில் மனதைப் பறிகொடுத்த முனி பத்தினிகள், தம்மை மறந்து ஆடைகள் நெகிழ, அவர் பின்னே செல்கின்றனர்.

முனிவர்களிடையே மோகினி வடிவில் திருமால் தோன்றுகிறார். அந்த மோகினியின் அழகில் மூழ்கி, காமவயப்பட்டு, முனிவர்கள் தவச் சாலைகளைவிட்டு, அவள் பின்னே செல்கின்றனர். தங்கள் மனைவியர் பிட்சாடனர் பின் செல்வதையும், தாங்கள் மோகினியின் பின் செல்வதையும் ஒரு கட்டத்தில் உணர்கின்றனர். தங்களது பிழைக்கு வருந்திய அவர்கள், பிட்சாடனரை தண்டிக்க எண்ணி அவரை அழிக்க ஆபிசார வேள்வி செய்தனர்.

அதனின்றும் எழுந்த சிங்கம், புலி, யானை, பாம்பு, முயலகன் முதலானவற்றை அவர் மீது ஏவினர். பிட்சாடனர் புன்னகைத்தார். ‘தங்கிய மாதவத்தின் தழல் வேள்வியினின்று எழுந்த சிங்கமும், நீள் புலியும் செழுமால் கரியோடு அலறப் பொங்கிய போர் புரிந்து பிளந்து ஈர்உரி போர்த்து’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியது போன்று அருளாடல் புரிகிறார். பாம்புகள் பரமனுக்கு அணிகலன்கள் ஆயின. விலங்குகளின் தோல்கள் ஆடையாயின. முயலகனோ அவர் திருவடியின் கீழ் மிதிபட்டு ஆணவம் அழிந்த தன்மையைக் காட்டி நிற்கிறான். இப்படிப்பட்ட பிட்சாடனர் கோலம் பற்றி கந்த புராணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம் ஆகியவை விளக்குகின்றன.
திருக்கதையைப் படித்தோம். இனி, பிட்சாடன மூர்த்தத்தின் சிற்பச் சிறப்பையும், திருவுருவ தத்துவத்தையும் அறிந்துகொள்வோம்.

ஆகமங்களும் சிற்பங்களும் அம்சுமத்பேதாகமம், காமிகாகமம், காரணாகமம், சில்பரத்னம் ஆகிய நூல்கள், பிட்சாடனர் திருவடிவம் குறித்து விளக்குகின்றன. பெரும்பாலும் சிவாலயங்களில் உற்ஸவ மூர்த்தியாகவே திகழ்கிறார். குறிப்பிட்ட சில திருத்தலங்களில் தூண் சிற்பமாக இவரைத் தரிசிக்க இயலும்.

பிட்சாடனர் திருவடிவில் உமையம்மை இல்லை. பிச்சைப் பெருமான் இடக்காலை ஊன்றி, வலக்காலை வளைத்து நடந்து செல்கிறார். நான்கு கரங்கள் உடையவர். முன் வலக்கரத்தில் உள்ள அறுகம்புல்லால் மானை ஈர்த்தும் பின் இடக்கரங்கள் ஒன்றில் உடுக்கை ஏந்தியும், மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம் ஏந்தியும், முன் இடக்கரத்தில் கபாலம் கொண்டும் திகழ்கிறார். ஆடையாக பாம்பையே அரையில் அணிந்துள்ளார். நெற்றிப் பட்டமும், முக்கண்ணும் கொண்டு திகழ்கிறார்.

அவர் தலை ஜடாமண்டலத்துடனும் வலக் காலில் வீரக்கழலும் உள்ளன. பாதுகைகளாக விளங்கும் வேதங்கள், பிச்சைப் பாத்திரமான கபாலம் ஏந்திய கை, தொப்பூழ் (உந்தி) வரை நீண்டிருக்கும். இது கட்க முத்திரையில் உள்ளது. உடுக்கை கொண்ட வலக் கை, காது வரை நீண்டு ஓங்கி விளங்கும்.

`பிட்சாடனர் திருவுருவம், ஐந்தொழிலை விளக்கும்’ என்பார்கள். அதாவது, அவரின் திருக்கரங்களில் திகழும் உடுக்கையின் ஒலி- உலக உற்பத்தி; திரிசூலம் - அழித்தல்; மானுக்குப் புல் அளித்தல் - அருள் புரிதல்; குண்டோதரனை அடக்கி ஆளுதல் - மறைத்தல் தொழிலையும், கபாலம் ஏந்தி நிற்பது - காத்தல் தொழிலையும் உணர்த்துகிறது. இவர் அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனையாகவும், பாதச் சிலம்பு ஆகமங்களாகவும், பாதுகைகள் வேதங்களாகவும் உள்ளன.

தேவார மூவரும் பிட்சாடனரும்!

தமிழ் வேதத்துள் சிவபெருமான் பிட்சை ஏற்று மகிழ்வது திரும்பத் திரும்ப சொல்லப்படும் நிகழ்ச்சியாகும். திருஞானசம்பந்தர் அருளிய திருவாழ்கொளிப்புத்தூர் பதிகப் பாடல் பிட்சாடனரின் கோலத்தைப் போற்றி அவருடைய திருவடிகளில் மலரிட்டு வாழ்த்தும் முறையில் அமைந்துள்ளது.

வேதிக்குடி பதிகத்தில்... சிவனார் நாகங்களை ஆபரணங்களாக அணிந்துகொண்டு, மலையரசனின் மகளான பார்வதி தேவியுடன் எருது வாகனத்தில் ஏறிக்கொண்டு, வீடுகள் தோறும் சென்று, ‘அழகிய சொற்களை உடைய பெண்களே பலி தாருங்கள்’ என்று கேட்பதை,

`விடலேறுபடநாகம் அரைக் கசைத்து
வெற்பரையன் பாவையொடும்
அடலொன்று அது ஏறி
அஞ்சொலீர் பலி என்னும் அடிகள்’

என்று, பாடிப் பரவுகிறார் திருஞானசம்பந்தர். இலக்கிய வளம் மிகுந்த இக்காட்சிகள், படிப்போர் மனதில் நீங்காத இடம் பெறுகின்றன. அப்பரடிகள், பல இடங்களில் பிட்சாடன கோலத்தை புகழ்ந்திருந்தாலும் ஆமாத்தூர் பதிகத்தில் அவர் கூறும் பிட்சாடனக் கோலம் தலைசிறந்து விளங்குகின்றது.

இதில் இறைவன் பிட்சைக்குச் செல்கிறான் என்றாலும், மிகுந்த கவர்ச்சியான கோலத்தில் செல்கிறான். `அவன் தோலுடுத்தி, நூல்பூண்டு, நறுமணம் மிக்க அழகூட்டும் பொடிகளைப் பூசிக்கொண்டு, வலிமைமிக்க எருது ஏறி, பலவிதமான பாடல்களைப் பாடிக்கொண்டே கபாலத்தை ஏந்தி, பிச்சையெடுத்துக்கொண்டே செல்கிறான். அவன் என்னைக் கண்ணம்பால் எய்துவிட்டான். அவன் பேசிய பேச்சில் என் மனம் உருகிவிட்டது. அக்கோலத்தை பெண்களே நீங்களும் வந்து பாருங்கள்’ என்று அழைப்பதாக உள்ள அந்தப் பாடல்:

‘வண்ணங்கள் தாம்பாடி வந்துநின்று
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசி
கடியதோர் விடையேறிக் காபாலியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசி
தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத்தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்.

சுந்தரர் சிவபெருமானின் பிட்சாடன கோலத்தை நிந்தா ஸ்துதியாகப் பாடிப் பரவியுள்ளதைக் காண்கிறோம்.

‘மலைமகள்... உலகுய்ய வைத்த
காரிருள் பொழில் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
ஊரிடும் பிச்சை கொள்வதென்னே’

`ஓணகாந்தன் தளி’ எனும் தலத்துக்கான பதிகம் இது. இதில், ‘பெருமானே உன் மனைவி தர்ம சாலையை அமைத்து முப்பத்திரண்டு அறங்களையும் செய்துகொண்டிருக்கின்றாள். அப்படியிருக்க, நீர் போய் இல்லந்தோறும் பிட்சை எடுத்து உண்கிறீர். இதன் காரணத்தை அறியேனே’ என்று ஓணகாந்தன் தளிப் பதிகத்தில் வினவுகிறார் சுந்தரர்.

திருத்தலங்களில் பிட்சாடனர் சிவாலயங்களில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் மாலையில் பிட்சாடனர் வலம் வருவார். மயிலை, சிதம்பரம், திருவண்ணாமலை மற்றும் சில தலங்களிலும் இதனைக் காணலாம். சில தலங்களில் பிட்சாடனருடன், மோகினியும் திருவீதி உலா வருவார். திருவெண்காடு அருகிலுள்ள மேலப் பெரும்பள்ளம் எனும் திருவலம்புரத்தில் வீணை ஏந்திய பிட்சாடனர் திருமேனி உள்ளது. இந்த வடிவை அப்பர் அடிகள் ‘வட்டணைநாதர்’ என்று திருத்தாண்டகத்தில் பாடுகிறார். ‘முறித்ததொரு தோல் உடுத்து முண்டஞ்சாத்தி முனி கணங்கள் புடைசூழ முற்றந்தோறும் தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார்’ என்று இந்த வடிவைப் போற்றுகிறார். வழுவூர், திருநின்றவூர் ஆகிய தலங்களில் உள்ள திருமாலின் மோகினி செப்புத் திருமேனிகள் குறிப்பிடத்தக்கவை.

திருச்செங்காட்டங்குடியில் `அஷ்டமூர்த்தி மண்டபம்’ என்னும் வீர சபை உள்ளது. இதில் பிட்சாடனர் எழுந்தருளியுள்ளார். (இக்கோயிலிலுள்ள வைரவமூர்த்தியும், பிட்சாடனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்)

கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய தலங்களில் கற்சிலை வடிவில் பிட்சாடனர் காட்சி அளிக்கிறார். மேலும், தில்லை, காஞ்சிபுரம், திருச்செங்காட்டங்குடி, திருவையாறு, திருவிடைமருதூர், திருவெண்காடு, கும்பகோணம், வழுவூர், பந்தநல்லூர், பிரம்மதேசம் ஆகிய தலங்களிலுள்ள பிட்சாடன மூர்த்தங்கள் கண்டு இன்புறத்தக்கன.

பிட்சாண்டார் கோயில்

திருச்சியின் ஒரு பகுதியாக உள்ள ஊர் உத்தமர் கோயிலாகும். இங்குப் பெரிய திருமால் ஆலயம் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தப் பெருமாள் கோயில் மும்மூர்த்தி ஆலயமாகத் திகழ்கிறது. இங்கு சிவபெருமான் ‘பிட்சாண்டார்’ என்ற பெயரில் சிவலிங்கத் திருமேனியாகத் தனி ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார். இவருடைய தேவியான சௌந்தர பார்வதிக்கும் தனிச் சந்நிதி உள்ளது. கருவறைக் கோட்டத்தில் பிட்சாடனரின் திருவுருவம் உள்ளது. சைவர்கள் இக்கோயிலைப் `பிக்ஷாண்டார் கோயில்’ என்று அழைக்கின்றனர்.
மழைத் தெய்வம்

மிகத் தொன்மையான காலத்தில் மக்களின் வளமைச் சடங்குகளில் ஒன்று, அந்தி மயங்கும் வேளையில் ஆண்களோ, பெண்களோ நிர்வாணமாக இருந்து நடனமாடுவதாகும். இப்படிச் செய்வதால் நல்ல மழை பெய்வதுடன், பூமியும் செழிக்கும் என நம்புகின்றனர். இந்தச் சடங்கு இன்னும் சில மலைவாழ் மக்களிடமும் பழங்குடிகளிடமும் இருப்பதாகக் கூறுகின்றனர். இதை அடியொற்றியே பிட்சாடனர் வழிபாடு வழக்கத்தில் வந்ததென்று கருத இடம் இருக்கிறது. பிட்சாடனருடன் பூதங்கள் காட்டப்படுவது, அவர் அருளால் பஞ்ச பூதங்கள் செழிப்பதை உணர்த்துகிறது. நிர்வாணமாக இருந்து, வீணை வாசித்துப் பாடுவதால் மழை பெய்யும் என்பது நம்பிக்கையாகும். வீணை வாசிக்கும் கோலத்திலுள்ள பிட்சாடனர் திருமேனிகள் இதையொட்டி அமைக்கப்பட்டுள்ளன.