தமிழ்க் கவிதைகளில் ஒரு மஹா வாக்கியம், ‘பிரம்மராஜன்’. அவர் நடத்திவந்த `மீட்சி’ சிற்றிதழில் நானும் பங்கு பெறுவதுண்டு. அவரது முதல் கவிதைத் தொகுதியான `அறிந்த நிரந்தரம்’ ழ-வெளியீடாக 1980-ம் ஆண்டில் வந்தபோதிருந்தே அவருடன் தொடர்பில் இருந்தேன். அப்போது ஒருநாள் அவர், இயற்கையான சூழலில் ஓர் இலக்கியச் சந்திப்பு நடத்துவது பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

`தமிழ்க்கவிதை தன் பாரம்பர்யப் பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, இன்றைய தேக்கநிலையில் இருந்து மீளவும், ஒட்டுமொத்த உலகத்தையும் உள்ளடக்கிய கவிதை என்ற நிகழ்வில் தன்னை உணர்ந்துகொள்ளவும் தேவையான ஓர் உரையாடலை, அப்போதைய தமிழ்ச் சூழலில் மேற்கொள்வது மிகவும் பயனளிக்கும்’ என்று ஒரு கடிதத்தில் தெரிவித்திருந்தார். பல தடவைகளில் மீண்டும் `இலக்கியச் சந்திப்பு’ குறித்து நேரிலும் பேசினோம். அப்படி அவரது மூளைக் குழந்தையாக உருவானதுதான் கவிதைப் பட்டறை. அதற்குப் `பதிவுகள்’ (Impressions) என்று தலைப்பிட்டோம். அதை குற்றாலத்தில் நடத்தும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதற்கு முன்னராக கார்லோஸ் போன்ற நண்பர்கள் சேலத்தில் கூடி தொடங்கிய `இலக்கு’ என்ற அமைப்பு, 1982-ம் ஆண்டில், ஒரு கருத்தரங்கத்தை நடத்தி 1970-80 கால கட்டங்களில் உருவான படைப்புகள் பற்றிய அவதானிப்பை மேற்கொண்டு, `இனி என்ன?’ என்ற கேள்வியை முன்வைத்தது. அவை, `70-களில் கலை இலக்கியம்’ என்ற நூலாக வெளிவந்தன. தொடர்ந்து 1985-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற அடுத்த `இலக்கு’ கருத்தரங்கில் பல புதிய குரல்கள் ஒலித்தன. அவை `புதுக்கவிதையும் புதுப் பிரக்ஞையும்’ என்று நூலாகவும் வந்திருந்தன.

ஏற்கெனவே எஸ்.வி.ராஜதுரை எழுதி, 1975-ம் ஆண்டில் வெளிவந்த `எக்ஸிஸ்டென்ஷியலிஸம் ஓர் அறிமுகம்’ என்ற நூல் மிகப்பெரிய அளவில் அறிவுஜீவிகள் மத்தியில் தாக்கத்தை, ஒரு வகை அதிர்ச்சியை உண்டாக்கியது என்றே சொல்ல வேண்டும். மேற்கத்தியக் கவிதைகள், கதைகளின் பாதிப்போடு மட்டுமே வெளிவந்துகொண்டிருந்த படைப்புகள், இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளிகள் மத்தியில், சாரு நிவேதிதா குறிப்பிட்டதுபோல், `கோட்பாட்டுச் செயல் மிகுந்த வேகம் உண்டாயிற்று’. ஏற்கெனவே தமிழ் நவீனக் கவிதைகளின் புரியாத்தன்மை, சர்ரியலிசத் தன்மைகள் குறித்து பலவிதமான கேள்விகளை எழுப்பி, ஆத்மார்த்தமாக அவற்றுக்கான விடைகளைக் காண முயற்சித்துக் கொண்டிருந்த தமிழவனின் முக்கியமான புத்தகமான `ஸ்ட்ரக்சுரலிசம்’ 1982-ம் ஆண்டில் வெளிவந்தது. பேராசிரியர் லூர்து, திருநெல்வேலியிலிருந்து இதைப் பதிப்பித்தார். 350 பக்கங்களுக்கு மேலான புத்தகத்தின் விலை 30 ரூபாய்தான். `முன்வெளியீட்டுத் திட்டத்தில் இதற்குப் பணம் அனுப்பியவர்கள், பத்துப் பேர்கூட இல்லை’ என்று சொன்ன நினைவு. மேற்கில் பல துறைகளிலும் பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய இந்த ‘அமைப்பியல் வாதம்’ தமிழில்தான் விரிவான நூலாக முதன்முதலில் வெளிவந்தது. நாகார்ஜுனன் போல பலரும் அதனால் கவரப்பட்டு, `புதுக்கவிதை பற்றிய புரிதலும் புதுக்கவிதையின் அமைப்பு குறித்த விவாதங்களும் தத்துவார்த்தரீதியாக வாசிக்கப்பெறுகிற’ ஒரு காலகட்டம் உருவாகியிருந்தது. 1970-களின் ஆரம்பத்தில் பெரும் பாய்ச்சல் கண்ட புதுக்கவிதை, 80-களில் தேக்கம் கண்டது. `மீட்சி’, `படிகள்’ தவிர, பல இலக்கியப் பத்திரிகைகளும் அப்போது தங்கள் இயக்கத்தை நிறுத்தியிருந்தன.

இந்தச் சூழலில்தான் முதலாவது ‘பதிவுகள் கவிதைப் பட்டறை’ நடத்தப்பட்டது. 1987-ம் ஆண்டு செப்டம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தினோம். குற்றாலத்தில் கேரளா அரசுக்குச் சொந்தமான இரண்டு பெரிய கட்டடங்கள் உண்டு. ஒன்று கேரளா பேலஸ்; இன்னொன்று திவான் பங்களா. இரண்டும் அற்புதமான குட்டி வனங்களுக்கு நடுவே அமைந்தவை. குற்றாலத்தில் சில ஞாயிற்றுக்கிழமைகள் பூராவும் வெவ்வேறு இடங்களைத் தேடி, தற்செயலாக திவான் பங்களாவை, முனைவர் மீனாகுமாரி அவர்களின் துணைவர் நண்பர் கனகராஜ் காண்பித்து, `இது எப்படி?’ என்றார். `ஆஹா... இதுதானே நாங்கள் கற்பனை செய்துகொண்டிருந்த இடம்’ என்றேன். நீண்ட மரங்களினூடாக நெளியும் சாலையில் போனால், நட்டநடுவில் அறுகோண வடிவில் அழகான ‘ஸ்கார்ப்பியன் ஹால்’. அங்கேயே தங்கும் வசதி. சுற்றி மரங்கள் பாய் விரிக்கும் நிழல், பின்னால் அருவித் தண்ணீர் ஓடும் அழகான ஓடை. (1956-ம் ஆண்டு வரை செங்கோட்டை, திருவாங்கூர் சமஸ்தான ஆளுகைக்குள் இருந்தது. அதிலிருந்து ஆறு ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குற்றாலத்தில் ராஜாவுக்கும் திவானுக்கும் ஆளுக்கொரு பங்களா இருந்ததில் வியப்பில்லை.) அதன் பொறுப்பாளரான கொல்லம் கலெக்டரிடம் அனுமதிபெற்று உறுதிசெய்ததுமே, பட்டறை வெற்றிபெற்ற உணர்வு வந்துவிட்டது. மூத்த எழுத்தாளர்களும் புதிய எழுத்தாளர்களும் சந்திக்க வேண்டும் என்ற அடிப்படையான நோக்கம் இருந்ததால், எல்லோரையும் அழைக்க வேண்டும் என்று எனக்கு ஆவல். அந்த ஜனநாயக மனப்பான்மைக்கு மறுப்பேதும் சொல்லவில்லை பிரம்மராஜன். எந்த ஒரு குழு மனப்பான்மையுமில்லாமல் அழைப்பு அனுப்பினோம். முதல் பதிவுக் கட்டணமான 20 ரூபாய் சுந்தர ராமசாமியிடமிருந்து மணி ஆர்டராக வந்தது... மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, கடிதமும் அனுப்பியிருந்தார்.

முந்தின நாளே பெங்களூர் நண்பர்கள் கோ.ராஜாராம், மகாலிங்கம், எல்லோரும் வந்துவிட்டார்கள். நான் அலுவலகம் சென்றே தீரவேண்டிய நெருக்கடி. பிரம்மராஜன் காலையிலேயே வீட்டுக்கு வந்துவிட்டார். இடைகால் கிராமத்தின் ஆஸ்தான ஓவியரின் சலூனுக்குச் சென்று, சிகை திருத்த வந்தவர்களிடம் அனுமதிபெற்று அவசர அவசரமாக ஒன்றிரண்டு கவிதைகளை கார்ட்போர்டில் எழுதி வாங்கினோம்.

E. E. Cummins-ன்
F
A
L
L
E
N
Leave

போன்ற கவிதைகளை மட்டும், நல்ல ஓவியரான பிரம்மராஜனே எழுதிக்கொண்டார். எல்லோருக்கும் குற்றாலத்துக்கு வழியைக் காட்டிவிட்டு, நான் அலுவலகம் போனேன். மனம் கொள்ளாத பரபரப்புடன் மாலையில் வந்து, வந்திருந்த எல்லோரையும் சந்தித்தேன். ஒரு பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அது ஆண்டுதோறும் தொடர்ந்தது. நான் பரபரப்புடன் இருக்கும்போது, எல்லோரும் ``அண்ணாச்சி... அதது அது பாட்டுக்கு நடக்கும். வாங்க ஒரு தம் போடுங்க” என்பார்கள், குறிப்பாக முருகேசபாண்டியன். முதல் பதிவுகளின்போதுதான் அவருக்குத் திருமணம்.

இரண்டாவதிலிருந்து எந்தப் பட்டறைக்கும் வரத் தவறியதே இல்லை.

மேஜை கிடையாது, நாற்காலி கிடையாது. ஓரிரு முறை மைக் மட்டும் இருந்தது. விரிக்கப்பட்ட பந்தி ஜமுக்காளத்தில் வட்டமாக அமர்ந்துகொண்டு பட்டறை ஆரம்பமானது. ஜமுக்காளத்தைக்கூட பாதிப் பேர் சுருட்டிக்கொண்டு சிகரெட் புகைக்கச் சௌகரிமாக, வெறும் தரையில் அமர்ந்திருந்தார்கள். தரைதான் ஆஷ்ட்ரே. முதல்நாள் நிகழ்ச்சிகளை சுந்தர ராமசாமி உரையுடன் தொடங்கினோம். `மரபுக் கவிதையைப் பொறுத்தவரை, அதில் யாப்பு சரியாக அமைந்திருப்பதே அதை நல்ல கவிதையாகக் கொள்ள போதுமான அளவுகோல் எனலாம். மரபை மறுக்கும் நவீனக் கவிதையில் எது நல்ல கவிதை என்று இனம்காணுவது எப்படி?’ என்பதை குறிப்புகளிலிருந்து விளக்கமாகப் பேசி, அழகாகத் தொடங்கிவைத்தார். அவரைத் தொடர்ந்து கோவை ஞானி, ஆர்.சிவக்குமார் கட்டுரைகள் வாசித்தார்கள். தொடர்ந்து விவாதம். கோவில்பட்டியிலிருந்து தேவதச்சன், சமயவேல், கௌரிஷங்கர், அப்பாஸ் ஆகியோரைச் சேர்த்துக்கொண்டு கோணங்கி கையால் அற்புதமாக எழுதப்பட்ட பலவித போஸ்டர்கள், கவிதைகளுடன் வந்தான். அவன் வருகை ஒரு பெரிய கலகலப்பை உண்டு பண்ணிற்று. எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு நண்பர்கள் சுமார் 120 பேர் வந்திருந்தனர். திருவனந்தபுரத்திலிருந்து நகுலன் வந்திருந்தார்.

அரங்கினுள் விவாதித்தது போக, நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொருவரும் அவரவர்கள் கேள்வியுடன் அவரவருக்குப் பிரியமான மூத்த எழுத்தாளர்கள், சக எழுத்தாளர்கள் ஆகியோருடன், திவான் பங்களாவின் மரத்தடி தொடங்கி, கொட்டிக்கொண்டிருந்த அருவிக்கரை வரை ஆங்காங்கே நின்றும் நடந்தும் பேசிக்கொண்டிருந்தனர். முதல்நாள் இரவு ‘அமேடியஸ் மொஸார்ட்’ திரைப்படம் திரையிட்டோம். அற்புதமான இரவாக இருந்தது அது.

இரண்டாம் நாள் ஹைலைட் நாகார் ஜுனன்தான். `கவிதை என்பது கவிஞனின் பீறிட்டெழுந்த உணர்ச்சியோ அல்லது அவனது அனுபவ விளிம்பில் ஏற்பட்ட விகசிப்போ கிடையாது. அது எழுத்து ரீதியான ஒரு பொருள்’ என்ற அதிர்ச்சி வாக்கியங்களுடன் ஆரம்பித்து, `மௌனத்தைப் பேசவைப்பதே கவிதை’ எனும் மார்ட்டின் ஹைடெக்கரின் மேற்கோளை நிறுவினார். ஆழமாக, உணர்ச்சிபூர்வமாக நாகார்ஜுனன் பேசியதைக் கேட்டு உண்மையிலேயே சபை மௌனமாகிவிட்டது. யாருக்கும் மதிய உணவுக்கு எழுந்திருக்கக்கூட மனமில்லை. சுந்தர ராமசாமி நெகிழ்ச்சியான ஒரு குரலில், `இதைப் பற்றி எங்கள் தமிழ் மூளைக்கு இன்னும் விளக்கமாகச் சொல்லணும், மத்தியானம் தொடரலாம்’ என்று அமர்வை முடித்துவைத்தார். சாப்பிடவிடாமல் நாகார்ஜுனனை மொய்த்துக்கொண்டி ருந்தார்கள்.

மதியம் கவிதையாக்கம் (Poetic Process) பற்றி நான் கட்டுரை வாசித்தேன். இரண்டாவது நாள் `Missing’ படம் திரையிடப்பட்டது. மூன்றாவது நாள், தூரத்திலிருந்து வந்த நண்பர்களுக்கு ஊர் திரும்ப வசதியாக பிரம்மராஜன், பிரமிள் கவிதைகளை கட்டுடைப்புச் செய்து வாசித்த நல்ல கட்டுரையும் விவாதமுமாக மதியத்துடன் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டோம். முதல் பட்டறையில் கவிதை வாசிப்பை நிகழ்த்த முடியவில்லை. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் அப்போது பணிபுரிந்த, இலங்கை எழுத்தாளர் எம்.ஏ.நுஃமான், தான் கொண்டுவந்திருந்த கவிதைகளை வாசிக்க முடியாதது குறித்துச் சொன்னார். ஆனால், நிகழ்ச்சி நிறைவாக இருந்ததால் அதில் தனக்கு வருத்தமில்லை என்றும் சொன்னார். கணையாழியில் நல்லவிதமாக ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். சுந்தர ராமசாமி, நகுலன், ஞானி யாவரும் மகிழ்ச்சியையே தெரிவித்தார்கள்.ஆனால், எனக்கும் பிரம்மராஜனுக்கும் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

அடுத்த ஆகஸ்ட்டில் இரண்டாவது பதிவுகளுக்குத் தயாரானோம். 1988-ம் ஆண்டு அக்டோபர் 21, 22, 23 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்தோம். சென்ற ஆண்டு நடைபெற்ற பட்டறையின் குறைபாடுகளை நீக்கி, அதைவிட நன்றாக நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், கட்டுரை வாசிப்பும் விவாதமும், அரங்கினுள்ளேயே மூத்த கவிஞர்கள் - இளைய கவிஞர்கள் சந்திப்பு, உரையாடல், கவிதை வாசிப்பு என்று மூன்று பகுதிகளாக நிகழ்வு நடைபெறும் என்றும், வழக்கம்போல முதல் கட்டத் தகவலை இன்லேண்ட் லெட்டரில் அனுப்பினோம். இதே செய்தியை `கணையாழி'யில் வழக்கம்போல இலவசமாக விளம்பரம் போட்டு உதவினர் கஸ்தூரிரங்கனும் அசோகமித்திரனும்.

1.கவிதையின் தேக்கநிலை, 2. கவிதையின் அர்த்த அளவுகளை நோக்கி, 3.கவிதையும் பிற கலைகளும், 4. நவீன வாழ்க்கையில் கவிதை என்ற விசாலமான தலைப்புகளில் கட்டுரைகளைக் கேட்டிருந்தோம். ஞானி, நாகார்ஜுனன், துரை சீனிச்சாமி, ஆர்.சிவக்குமார், எத்திராஜ் அகிலன், நாகூர் ரூமி என்று எழுதக் கேட்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் யாராவது தவறிவிடக்கூடும் என்பதால் ஒவ்வொரு தலைப்பிலும் இரண்டாவது ஒருவரிடமும் கேட்டு வைத்துக்கொள்வோம். சிலசமயம் அப்படிக் கேட்கப்படுபவர்கள் வருத்தப்படுவதும் உண்டு. அப்போதெல்லாம் கடிதங்கள் மூலமாக மட்டுமே தொடர்புகொள்ள முடியும். அதற்காக அவசரக் கடிதங்களை ரயில்வே மெயில் சர்வீஸுக்குப் போய் தாமதக் கட்டணம் ஒட்டி, தபாலில் சேர்ப்பேன். அப்படி அவசரமாக எழுதும்போது நண்பர் ரவிக்குமாரின் வங்கி விலாசமே சட்டென்று நினைவுவர, அவருக்கு ஒரு தபாலும் அங்கேயுள்ள இன்னொரு நண்பருக்கு ஒரு தபாலும் சேர்த்து வங்கி முகவரிக்கே அனுப்பிவிட்டேன். ரவிக்குமாரும் கடிதத்தைக் கொடுத்துவிட்டார். ஆனால் நண்பருக்கு வருத்தம். `என் முகவரிகூட தெரியாத அளவுக்கா இருக்கிறேன் நான்?’ என்று கடுமையாகச் சாடி கடிதம் எழுதியிருந்தார். எல்லாவற்றையும் வாங்கித் தோளில் போட்டுக்கொண்டோம். ஒவ்வொரு பட்டறையிலும் ஒவ்வொன்று நிகழும்.

இரண்டாவது பட்டறைக்கு முதலில் பதிவுக்கட்டணம் 30 ரூபாய் அனுப்பியது, இமையம். இரண்டாவது பட்டறை, கவிதை வாசிப்பில் பல இளைஞர்களைக் கவர்ந்தது. ராஜசுந்தரராஜன் அதில் ஒருவர்.

எஸ்.ராமகிருஷ்ணனை கோணங்கி அழைத்து வந்திருந்தார். இரண்டாவது பட்டறைக்கு உடல்நிலை காரணமாக சு.ரா வர இயலாதென்று எழுதியிருந்தார். கடைசி நொடியில் நாகார்ஜுனனாலும் வர இயலவில்லை. அவர், நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நடத்திய அணுஉலைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டார். நகுலன் இயலாமையை முதலிலேயே சொல்லிவிட்டார். அரங்கத்துக்கு கொல்லம் போய் அனுமதி வாங்கி வந்திருந்தேன். ஒத்திவைப்பதும் இயலாது. அதனால் சு.ராவுக்கு, கண்டிப்பாக வந்து சிறப்பிக்கவேண்டி எழுதியிருந்தேன். நிகழ்ச்சிகள் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கையில் தூரத்தில் சு.ரா தளர்வாக வந்துகொண்டிருந்தார். ஓடியே போய் அழைத்துவந்தேன். அவ்வளவு உடல்நலக் குறைவிலும் முயற்சிகள் பங்கப்பட்டுவிடக் கூடாதேயெனும் ஈடுபாடு. அந்தப் பட்டறை முடிந்து சென்றதும் அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். `நீங்களும் பிரம்மராஜனும் சோர்ந்து காணப்பட்டீர்கள், இதனால் அடுத்த ஆண்டு பட்டறை நடக்குமா என்றுகூடத் தோன்றியது. அப்படி ஆகிவிட்டால் இளைஞர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் ஏற்படக்கூடும்’ என்று எழுதியிருந்தார். அதுவே அடுத்த ஆண்டுக்கான உற்சாகத்தை அப்போதே வழங்கியது.

மூன்றாவது பட்டறை 1989-ம் ஆண்டு அக்டோபர் 2, 3, 4 தேதிகளில் நடைபெற்றது. இதற்கு எம்.டி.எம்., ஜெயமோகன் போன்ற புதியவர்கள் வந்திருந்தார்கள். நாகார்ஜுனன், பிரம்மராஜனின் `ஞாபகச் சிற்பம்’ நூலின் கவிதைகளை கட்டுடைத்தல் மூலம் விளக்கும் கட்டுரை (`கவிதையும் கட்டுடைத்தல் விமர்சனமும்’) ஒன்றை வாசித்தார். அந்த நிகழ்வுக்கு பிரமிள் வந்திருந்தார். கட்டுரை வாசிப்பில் அவர் பெயரை தப்பாகக் குறிப்பிட்டதாக வருத்த முற்று, பிரமிள் பாதியில் சென்றுவிட்டார். அந்த வருடம் ஆத்மாநாமின் மொத்தக் கவிதைகளின் தொகுதியை வெளியிட்டோம். நாகார்ஜுனின் அமைப்பியல்வாதம் குறித்த பகிர்வுகளும் எம்.டி.எம்-மின் பின்நவீனத்துவக் கருத்தாடல்களும் (`நவீன கவிதையும் நவீன கவிதையின் அணுகு முறைகளும்’) மையமாக அமைந்தன. மூன்றாவது பட்டறையில் எல்லோரையும் மிகவும் கவர்ந்தவர் பழமலய். விவாதங்களில் ஒருவித எளிமையோடும் காத்திரமாகவும் கேள்விகளை முன்வைத்தார். குற்றாலத்தில் அரங்குக்கு வருவதற்கான வழிகளைப் பாதையெங்கும், இரவெல்லாம் சுவரொட்டிகள் ஒட்டி, அதன் மூலம் தெரிவிப்போம். எப்போதுமே பாண்டியராஜன், திருமேனி சிவா, மகரந்தன், தர்மராஜன் போன்ற இளைய நண்பர்கள், தொண்டர்கள்போல உதவிகளைச் செய்வார்கள். உண்மையில் பட்டறையின் நடப்பு என்பது அவர்களாலேயே பெரிதும் சாத்தியப்பட்டது எனலாம். வழக்கம்போல் அரங்கிற்கு வெளியே நிறைய விஷயங்கள் பகிரவும் அலசவும்பட்டன. அந்த வகையில் பங்கேற்பாளர்கள் எவ்வித ஏமாற்றமும் அடையவில்லை. அவர்கள் வாசிப்புக்கான பாதை மேலும் திறந்துவிடப்பட்டிருப்பதாகவே பலரும் எழுதினார்கள். குறிப்பாக ஜெயமோகன்.

அடுத்த நான்காண்டுகளுக்கு குற்றாலம் கவிதைப் பட்டறையை நடத்த இயலவில்லை. ஆனால், ஒகேனக்கல்லில் 1991-ம் ஆண்டில் பிரம்மராஜன் நடத்தினார். 1993-ம் ஆண்டில் `பதிவுகள்’ கவிதைப் பட்டறை, கவிதைக்கு மட்டும் சிறப்பளிக்கிறீர்களே சிறுகதை, நாவல் பற்றி யோசிக்கவில்லையா என்று பலரும் கேட்டுக்கொண்டதன் பேரில் இலக்கியக் கருத்தரங்கமாக மாற்றப்பட்டது. 1993-ம் ஆண்டு அக்டோபர் 1, 2, 3 தேதிகளில் திவான் பங்களாவில் வைத்து நடைபெற்றது. இம்முறை முதல் நாள் கவிதை, இரண்டாம் நாள் சிறுகதை, மூன்றாம் நாள் நாவல் பற்றிய கருத்தரங்கு. விரிவான ஏற்பாடுகளை விக்ரமாதித்யன் ஆரம்பத்திலிருந்தே உடனிருந்து செய்து மிக உதவிகரமாக இருந்தார். கோமல் சுவாமிநாதன், இளையபாரதி, பொன்னீலன், `இந்தியா டுடே’ அரவிந்தன், நஞ்சுண்டன் என்று புதிய, அதிகமான பார்வையாளர்கள். மூன்று துறைகளிலும் நிகழ்வுகள் போக்குகள் இரண்டும் விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்த அரங்கில் பிரேம்-ரமேஷ் இருவரின் பங்களிப்பும் காத்திரமானது. நாவல்களில் பின்நவீனத்துவப் பங்களிப்பு மற்றும் பாதிப்புகள் குறித்து புதிய திறப்புகளை வழங்கினார்கள். கோணங்கி, சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் விவாதங்களைச் சரியான திசையில் கொண்டுசென்றார்கள். `இந்தியா டுடே’, `தினமணி’, `சுபமங்களா’ பத்திரிகைகளில் விரிவான கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.

ஐந்தாவது `பதிவுகள்’, ஐந்து ஆண்டுகள் கழித்தே நடத்த முடிந்தது. 1998-ம் ஆண்டு செப்டம்பர் 30, அக்டோபர் 1, 2 தேதிகளில் நடைபெற்றது. முதல் நாள் கவிதை, அடுத்து சிறுகதை, நாவல் என்றே திட்டமிடப்பட்டது. இம்முறை உலகக் கவிதை, உலகச் சிறுகதை, உலக நாவல் ஆகியவற்றை முறையே மனுஷ்ய புத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், சா.தேவதாஸ் அறிமுகம் செய்தார்கள். யவனிகா ராம் போன்ற இளம் படைப்பாளிகள் தங்கள் வாசிப்பு அனுபவம் பற்றி உரையாற்றினார்கள். பஞ்சாங்கம், பாவண்ணன், சு.வேணுகோபால் `தமிழ் நாவல் தற்போது’ என்பது பற்றி கட்டுரை வாசித்தும் உரையாற்றியும் பங்களித்தார்கள். ஆறாவது `பதிவுகள்’ 2000-ம் ஆண்டு டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் நடைபெற்றது. இதில் திலகவதி கலந்துகொண்டு, நூல் வெளியீட்டு அரங்கில் தேவதேவன், கலாப்ரியா, மகாதேவன் ஆகியோரது கவிதை நூல்களையும் தற்கால மலையாளக் கவிதைகள் நூலையும் வெளியிட்டு, அவ்வளவையும் குறித்த தன் தேர்ந்த பார்வைகளை முன்வைத்தார்.

இதில் முக்கியமான நிகழ்வாக கவிதை மொழிபெயர்ப்பு பட்டறை நடைபெற்றது. மலையாளத்திலிருந்து கல்பற்றா நாராயணன், டி.பி.ராஜீவன், பி.ராமன், பி.பி.ராமச்சந்திரன், வீரான்குட்டி, கன்னடத்திலிருந்து சிந்தாமணி கொட்லகரெ, ச.ஹ.ரகுநாத் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களது கவிதைகளை தமிழிலும், சில தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்க் கவிதைகளை மலையாளம் மற்றும் கன்னடத்திலும் மொழிபெயர்த்து அபிப்ராயங்களும் விமர்சனங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மலையாள - தமிழ் மொழிபெயர்ப்புகளை ஜெயமோகனும் கன்னடப் பகுதியை பாவண்ணனும் ஒருங்கிணைத்தார்கள். மிகச் சிறப்பான நிகழ்வாக அமைந்தது. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஜெயமோகன் சுமார் 60 பக்க அளவில் `திண்ணை’ இணைய இதழில் பதிவுசெய்திருந்தார். சமகாலத் தமிழ்க் கவிதைகள் தந்த பாதிப்பு மலையாளக் கவிஞர்களிடையே வெளிப்பட்டபோது, அங்கே இந்தப் போக்கை ‘குற்றாலம் எஃபெக்ட்’ என்று வர்ணித்தார்கள்.

கடைசியாக `பதிவுகள்’ 2007-ம் ஆண்டு அக்டோபர் 13, 14 தேதிகளில் கேரளா பேலஸில் நடைபெற்றது. இதனை நடத்துமாறு வேண்டுகோள்விடுத்த பலரால் இதில் கலந்துகொள்ள இயலவில்லை. கோணங்கி, பா.வெங்கடேசன், ஜெயமோகன், அ.ராமசாமி, யவனிகா, கண்டராதித்தன் ஆகியோர் பங்களிப்பை வழங்கினார்கள்.

இப்போதும் நண்பர்கள் ` `பதிவுகள்’ சந்திப்பை நடத்துங்கள்’ என்று கோருகிறார்கள். `நாங்கள் செலவைப் பார்த்துக்கொள்கிறோம்’ என்றுகூடச் சொல்கிறார்கள். அது ஒரு விஷயமில்லை. ஒரு தொகுப்பு வெளியிடும் செலவைவிடக் குறைவு. சில நடைமுறை ஒழுங்கீனங்கள் சோர்வை ஏற்படுத்தினாலும், ஒரு தொகுப்பைவிட எவ்வளவோ விஷயங்களை எவ்வளவோ பேருக்கு எடுத்துச்செல்கிறோம் என்ற மகிழ்ச்சியே போதும். மேலும் சென்னை, பெங்களூரு, சேலம், ஈரோடு, கோவை, தர்மபுரி என்று தொலைவிலிருந்து வருகிறவர்கள் தங்கள் செலவிலேயே வருகிறார்கள். உற்சாகமாகக் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் பிரிகிறார்கள்.

முதல் பட்டறைக்கு வந்துசென்ற எம்.ஏ.நுஃமான் எழுதியிருந்தார், `குற்றாலம் வந்திருந்தபோது நீங்கள் காட்டிய ஆதரவுக்கும் உபசரிப்புகளுக்கும் நன்றி. இரண்டு நாட்களே கலந்துகொண்டாலும் பட்டறை எனக்கு மிகவும் பயனுடையதாக இருந்தது. பலரைச் சந்தித்து அறிமுகம் செய்துகொள்ளவும், கருத்துக்களைக் கேட்கவும் அது வாய்ப்பளித்தது. இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்’. இது மூத்த எழுத்தாளரின் பதிவு என்றால், யவனிகா ராம் முதன்முறையாக 1998-ம் ஆண்டில் வந்து சென்ற பின் எழுதியிருந்தார், ` `பதிவுகள்’ போன்ற உற்சாக அரங்குகள், உள், வெளி குவிப்பற்ற சம்பாஷணைகள் யாவும் புதிய படைப்பாளிகளின் தடுமாறும் நடைக்களமாக, தவறி விழுந்தாலும் எழுந்துகொள்கிற இயல்பை வளர்க்கிறது. எல்லோரையும் சந்தித்துக்கொள்ளவும், தன்னை ‘திரட்சி’ செய்துகொள்வதற்குமான சூழலை முதன்முதலாய் அனுபவித்த உணர்வு நெடுநாள் நிற்கும்.’

`பதிவுகள்' சந்திப்பைப் பொறுத்து எத்தனையோ பேர் எனக்குத் தோள் கொடுத்தவர்கள் உண்டு. அவ்வளவு பேரையும் இப்போதும் நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக `பதிவுகள்' உருவாகக் காரணியான பிரம்மராஜனைப் பிரதானமாக நினைத்துக் கொள்கிறேன்.