ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயார், திருச்சானூர், திருப்பதி

மானே மடமயி லேயிசை பாடிடு மாங்குயிலே
தேனே நவமணி யேமிடி நோய்தவிர் தெள்ளமுதே
வானே முதலெங்கு மாயவளேயிவ் வறுமையினி
நானே பொறுக்கிலன் வந்தாள் செந்தாமரை நாயகியே

ஸ்ரீவிநாயகர்

முன்னவனே யானை முகத்தவனே முக்திநலம்
சொன்னவனே தூயமெய்ச் சுகத்தவனே மன்னவனே
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின்தாள் சரண்

ஸ்ரீமகாலட்சுமி

மாயனாம் மலருக்கு மணமே போற்றி
மறைமொழி வழங்கும் மாண்பே போற்றி
நேயமுற்றவனை நீங்காய் போற்றி
நிலங்கொள் நீர்மை நிறைவே போற்றி

ஸ்ரீகாளிகாம்பாள், சென்னை

அங்குசபாச மேந்தி அபயமே வரதம் தாங்கும்
பங்கய கரத்தள் பீதாம்பரமணியிடையாள் பொற்பூண்
பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள்
பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி

ஸ்ரீமூகாம்பிகை, கொல்லூர்

மங்கை நாயகியே போற்றி
மாமறைப் பொருளே போற்றி
சிங்க வாகனத்தின் மேவுந்
தேவியே போற்றி போற்றி

ஸ்ரீசுப்ரமண்யஸ்வாமி, திருச்செந்தூர்

சண்முகக் கடவுள் போற்றி சரவணத் துதித்தாய் போற்றி
கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி
தண்மலர் கடப்ப மாலைதாங்கிய தோளா போற்றி
விண்மதி வதன வள்ளிவேலவா போற்றி போற்றி

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்

அந்திகாலம் உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
எந்தைராம ராமராம ராமவென்னும் நாமமே

ஸ்ரீமாரியம்மன், சமயபுரம்

மூவர்க்கும் முற்பொருளாய் முத்தொழிற்கும் வித்தாகி
நாவிற்கும் மனதிற்கும் நாடரிய பேரறிவாய்
தேவர்க்கும் முனிவர்க்கும் சித்தர்க்கும் நாகர்க்கும்
யாவர்க்கும் தாயாகும் எழில் பரையை வணங்குவாம்

ஸ்ரீகிருஷ்ணர், உடுப்பி

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் கனிவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே

ஸ்ரீசரஸ்வதி

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே