செலிப்ரிட்டீஸுடன் செல்ஃபி... அட்லீஸ்ட், ஒரு ஆட்டோகிராஃப்... இதற்கே பிறவிப்பயனையே அடைந்துவிட்டதைப்போல் சந்தோஷத்தில் குதிப்பார்கள் சாமானிய ரசிகர்கள். `எனக்கு ஐ.ஜி-யைத் தெரியும்' என்கிற ரேஞ்சில், அந்த போட்டோவை சோஷியல் நெட்வொர்க்கில் போட்டு லைக் வாங்குகிற `சீன்' ராமசாமிகளும் உண்டு.

அதேநேரம், சினிமா நட்சத்திரங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் நெருக்கமாக இருந்தும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அமைதியாக இருக்கிறார்கள் சிலர். அதை ஸ்டேட்டஸ் சிம்பலாக, எங்கேயும் எப்போதும் இவர்கள் வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை என்பது இன்னும் ஆச்சர்யம். அவர்களில் சிலரை தேடிப்பிடித்தபோது, கூச்சத்தில் நெளிந்தார்கள். ஒருவழியாகப் பேசவைத்தோம்.

சரஸ்வதி

சரசு அக்கா... என்றால் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகள் அத்தனைபேருக்கும் அவ்வளவு பிரியம். இவருடைய வேலை, நடிகைகளுக்கும் மாடல்களுக்கும் அட்டகாசமாக சேலை கட்டிவிடுவது. இவருக்கு 100-க்கும் மேலான ஸ்டைல்களில் சேலை கட்டத் தெரியும். சாதாரண சேலைக்கு 5 நிமிடங்கள், விளம்பரங்களில் கட்டிவிட அதிகபட்சமாக 10 நிமிடங்கள் என அசுர வேகத்தில் சேலை கட்டக்கூடிய ஆற்றல் பெற்றவர்.

'``எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ரொம்பச் சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிவெச்சிட்டாங்க. அந்த வாழ்க்கையைப் புரிஞ்சுக்கிறதுக்குள்ளயே உறவு முடிஞ்சுபோச்சு. உலகம் தெரியாத அந்த வயசுல, ரெண்டு பெண் குழந்தைங்களோட தனியா நின்னேன். அம்பிகா, ராதாவுக்கு காஸ்ட்யூமரா இருந்த என் அண்ணன் ரவி மூலமா நடிகைகளுக்கு அசிஸ்டன்ட்டா வேலைபார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. தாட்சாயணிங்கிற காஸ்ட்யூம் டிசைனர்கிட்டதான் சேலை கட்டுறதைப் பத்தின நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். மேக்கப் மேன் பாபு மூலமா நடிகைகளுக்கு சேலை கட்டிவிடுற வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது.''

சரஸ்வதியின் இரண்டாவது மகள் ஜீவிதாவும் அம்மா வழியில் சேலை கட்டிவிடும் வேலை செய்கிறார். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஜோதிகா, தமன்னா, ஹன்சிகாவுக்கு சேலை கட்டிவிட்டவர் ஜீவிதாதான்.

மகளைவிட அம்மா சரசு சேலை கட்டிவிட்ட நடிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம். ஸ்ரீதேவி, ஹேமமாலினி, சிம்ரன், தமன்னா, சினேகா, ஸ்ரேயா, சோனாலி பிந்த்ரே, மம்தா மோகன்தாஸ், த்ரிஷா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், அமலா பால், காஜல் அகர்வால், ஜோதிகா, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, நித்யா மேனன், சமந்தா என லிஸ்ட் ரொம்ப நீ.........ளம்.

சரஸ்வதி புடவை கட்டிவிட்டால் அது அவ்வளவு சீக்கிரம் கலையாதாம்.

``நான் சேலை கட்டிவிட்டேன்னா, கல்யாணம் முடிஞ்சு, மத்த சடங்கெல்லாம் முடிஞ்சு, மறுபடி சாயந்திரம் ஃபங்ஷனுக்கு ரெடியாகுற வரைக்கும் சேலை கொஞ்சம்கூட கசங்காது; அவிழாது. `என்னக்கா மேஜிக் பண்றீங்க?’னு கேட்பாங்க. அது கடவுள் கொடுத்த வரம்...'' என்கிறார் நெகிழ்ச்சியாக.

கண்ணன் நாராயணன்

படத்துக்குப் படம் சூர்யாவின் நடிப்பில் வித்தியாசம் இருக்கிறதோ, இல்லையோ அவரது உடலமைப்பில் நிறைய வித்தியாசம். இதற்குக் காரணம் இவர்தான். சூர்யாவின் பர்சனல் ஃபிட்னெஸ் ட்ரெய்னர். எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படித்த கண்ணன் நாராயணன், ஃபுட்பால் மற்றும் கராத்தேயில் சாம்பியன். இத்தனையையும் உதறிவிட்டு, ஃபிட்னெஸ் பக்கம் வந்திருக்கிறார்.

``ஃபிட்னெஸ்ங்கிறது ரொம்பப் பிடிச்ச விஷயம். அந்த ஆர்வம்தான் நேஷனல் லெவல் பாடி பில்டர்னு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. அம்மா, அப்பா ஆசைக்காகத்தான் இன்ஜினீயரிங் முடிச்சேன். படிப்பை முடிச்சதும், முழுநேரத்தையும் ஃபிட்னெஸ் ட்ரெயினிங்குக்காகவே ஒதுக்கிட்டேன்'' என்கிற கண்ணனுக்கு சூர்யாவின் அறிமுகம் கிடைத்தது எப்படி?

``திலினானு லங்கன் ஹேர் ஸ்டைலிஸ்ட் எனக்கு அறிமுகமானார். அவருக்கு ஆறே மாசத்துல சிக்ஸ்பேக் வர்றதுக்கு ட்ரெயின் பண்ணினேன். அவர்தான் சூர்யாவுக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட். என்னோட ஃபிட்னெஸ் ட்ரெயினிங் அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போய், சூர்யாவுக்கு அறிமுகப்படுத்தி வெச்சார். அப்ப அவர், `7ஆம் அறிவு’ படத்துல நடிச்சுக்கிட்டிருந்தார். அதுக்கு முன்னாடி அவருக்கு ஃபிட்னெஸ் ட்ரெயினரா இருந்தவங்க கொடுத்த ஸ்டைலுக்கும் என்னோட ஸ்டைலுக்கும் உள்ள வித்தியாசங்
களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். ரிசல்ட்டும் அவருக்கு ஹேப்பி.''

சூர்யாவே ஹேப்பியாகிற அளவுக்கு கண்ணன் நாராயணனின் ஸ்டைல் என்ன?

``என்னோட ஸ்டைல்ல மெஷின்களே இருக்காது. நேச்சுரல் வொர்க்அவுட்ஸ்தான் என் ஸ்பெஷாலிட்டி. `பூட் கேம்ப்’னு சொல்ற அந்த புது டெக்னிக்ல சூர்யாவுக்கும் பிராக்டீஸ் கொடுத்தேன். அந்தப் பயணம் அடுத்தடுத்த படங்கள்லயும் தொடர ஆரம்பிச்சது. `அஞ்சான்’ படத்துல பீச் சாங்குக்கு மட்டும் சிக்ஸ்பேக் வேணும்னு கேட்டார். அதே மாதிரி `மாற்றான்’ படத்துல `நாணி கோணி...’ பாட்டுக்கும் சிக்ஸ்பேக் தேவைப்பட்டது. `சிங்கம் II'-ல போலீஸ் பாடி... அதுக்கு வேறவிதமான வொர்க்அவுட்ஸ்... `24’ல ரெண்டு கெட்டப்புக்கும் வேற வேற மாதிரி வொர்க்அவுட்ஸ்... இதோ, இப்போ `சிங்கம்-III'ல மறுபடி போலீஸ் கெட்டப்புக்கு பல்க் பாடிக்கான வொர்க்அவுட்ஸ்...''

சூர்யாவுக்கு மட்டுமின்றி, ஜோதிகாவுக்கும் ஃபிட்னெஸ் ட்ரெய்னர் இவர்தான்.

யாஸ்மின் கராச்சிவாலா

பாலிவுட் நடிகைகளைவிடவும் பிஸியாக இருக்கிறார் யாஸ்மின். கத்ரினா கைஃப், தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா, அலியா பட், கரீனா கபூர், இலியானா, ப்ரீத்தி ஜிந்தா, மலாய்கா அரோரா... இன்னும் பாலிவுட்டின் பியூட்டிஃபுல் லேடீஸ் அத்தனை பேரின் 'சைஸ் ஜீரோ'வுக்குப் பின்னால் இருப்பவர் யாஸ்மின் கராச்சிவாலா. மும்பையின் நம்பர் ஒன் ஃபிட்னெஸ் ட்ரெயினர். மும்பையில் `பாடி இமேஜ்’ என்கிற பெயரில் ஃபிட்னெஸ் ஸ்டுடியோ வைத்துள்ள யாஸ்மினுக்கு இதில் 24 வருட அனுபவம். `பிலேட்ஸ்’ என்கிற பயிற்சியை முதன் முதலில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

``நம்மூர் லேடீஸுக்கு பெரிய பிரச்னையே தொப்பைதான். கல்யாணமாகாத பொண்ணுங்ககூட பார்க்கிறதுக்கு ஒல்லியா இருப்பாங்க, ஆனா, தொப்பை இருக்கும். ஜிம்ல பண்ற அடிப்படையான பயிற்சிகளால, அந்தப் பிரச்னையை சரிபண்ண முடியாது. அதனாலதான் பிலேட்ஸ் பயிற்சியைக் கொண்டு வந்தேன். `பிலேட்ஸ்’ என்றால் மற்ற பயிற்சிகளைப்போல தசைகளை எந்த வகையிலும் பாதிக்காத மிதமான ஸ்டைல் உடற்பயிற்சி. அதுதான் என் பேரை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்தது'' என்கிற யாஸ்மின், இந்த நட்சத்திர அந்தஸ்தை எல்லாம் கனவில்கூட கற்பனை செய்ததில்லையாம்.

``கரீனா கபூர்தான் என்னோட முதல் செலிப்ரிட்டி க்ளையன்ட். 12 வருஷங்களுக்கு முன்னாடி, செம குண்டா வந்தாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு அவங்களோட வெயிட்டைக் குறைச்சோம். அடுத்து கத்ரினாவும் அதே மாதிரி குண்டு உடம்போடத்தான் வந்தாங்க. `நிஜமாவே என்னை ஒல்லியாக்கிடுவீங்களா?’ என்ற கேள்வியோட வந்தவங்களை ஸ்லிம்மா மாத்தினேன். தீபிகா படுகோன் ஒரு ஸ்போர்ட்ஸ் பர்சனாச்சே... அதுக்கேத்த உடல்வாகோடு வந்தாங்க. அவங்களுக்கு பிலேட்ஸ் பயிற்சி கொடுத்து வயிற்றுத் தசைகளைக் குறைச்சேன்.''

கிரிக்கெட் வீரர்கள் பலரும் யாஸ்மினின் ஃபிட்னெஸ் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்கள்.

``செலிப்ரிட்டிகளின் பர்சனல் ட்ரெயினராக இருப்பது எந்தளவுக்குப் பெருமையான விஷயமோ, அதே அளவுக்கு பெரும் சவாலும்கூட'' என்பது யாஸ்மினின் அனுபவம்.

``எனக்குப் பிடிக்காத வார்த்தைனா, அது டயட். அதுக்குப் பதில் `ஈட் ஸ்மார்ட்’ங்கிறதுதான் என்னோட அட்வைஸ். கலோரிகளை எண்ணி எண்ணிச் சாப்பிடுற ஸ்டைலே எனக்குப் பிடிக்காது. ஒருநாள் உணவை 6 வேளைகளா பிரிச்சு சாப்பிடுங்க. ஒவ்வொரு வேளை உணவுலயும் நார்ச்சத்து, புரோட்டீன், நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட்னு எல்லாம் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. இது செலிப்ரிட்டீஸுக்கு மட்டுமில்லை. ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கணும்னு நினைக்கிற எல்லாருக்குமானது...''

கல்யாணி தேசாய்

துல்கர் சல்மான், மம்முட்டி, ப்ருத்விராஜ், நாகர்ஜுனா, அகில் அகினேனி என மல்லுவுட், டோலிவுட் ஹாட் ஸ்டார்ஸின் பர்சனல் டிசைனர் கல்யாணி தேசாய். வயது 24. ``படங்களுக்கு வொர்க் பண்றதுங்கிறது வேற... நிஜ வாழ்க்கையில ஒருத்தருக்கு டிசைன் பண்றது ரொம்பக் கஷ்டம். அவங்களோட பர்சனாலிட்டியைக் கொஞ்சமும் டிஸ்டர்ப் பண்ணாம செய்யவேண்டியிருக்கும்’' என்கிற தேசாய், மும்பைக்காரர். தற்போது வசிப்பது பெங்களூரில்.

`` `கோன் பனேகா குரோர்பதி’யின் தெலுங்கு வெர்ஷன் ஷோவுல நாகார்ஜுனாவுக்கு நான்தான் டிசைனர். என்னோட ஸ்டைல் பிடிச்சுப்போய் அவரோட பையன் அகில் அகினேனிக்கும் டிசைன் பண்ணச் சொன்னார். ஒரே நேரத்துல அப்பாவுக்கும் மகனுக்கும் டிசைன் பண்றதுல கிடைக்கிற த்ரில்லும் திருப்தியும் செம ஃபீல் தெரியுமா?''

``துல்கர் சல்மானுக்கு ஒன்றரை வருஷமா ஸ்டைலிஸ்ட்டா இருக்கேன். அப்புறம் மம்முட்டி சாருக்கும் டிசைன் பண்ண வாய்ப்பு கிடைச்சது. ப்ருத்விராஜ், எந்த ஈவென்ட்டுங்கிறதை முன்னாடியே என்கிட்ட டிஸ்கஸ் பண்ணிடுவார். அதுக்கேத்தபடி டிசைன் பண்ணுவேன்’' என்கிறார் கல்யாணி தேசாய்.

கல்யாணியின் செலிப்ரிட்டி லிஸ்ட்டில் ஆண்கள் மட்டுமே இருக்கிறார்கள். நடிகைகளுக்கு டிசைன் செய்யக் கேட்டால்... இவரது பதில் ``நோ.’’ ஏம்மா?

``நான் முதன்முதல்ல டிசைன் பண்ணினதே எங்க அண்ணனுக்குத்தான். நான் டிசைன் பண்ணின காஸ்ட்யூம்ல அவன் போகும்போதும் நிறைய பாராட்டுக்களோட திரும்பி வருவான். அப்பதான், `ஆண்களுக்கான காஸ்ட்யூம் டிசைனிங்கை என் ஸ்பெஷாலிட்டியா மாத்திக்கிட்டா என்ன?’னு யோசிச்சேன். ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படிக்கிறபோது என்னோட கிளாஸ்மேட்ஸ் எல்லாரும் லேடீஸுக்கான டிசைனிங் அசைன்மென்ட்ஸை எடுத்துக்கிட்டாங்க. எனக்கு மிச்சமிருந்தது ஆண்களுக்கான ஏரியாதான். `மத்தவங்க பண்ணாததை நான் ஏன் பண்ணக் கூடாது?’னு தைரியமா அதை செலக்ட் பண்ணினேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா, இன்னிக்கு நான் இருக்கிற இந்த இடத்துக்கும் எனக்கான அடையாளத்துக்கும்கூட அதுதான் காரணம்.''

ரேச்சல்

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து சாதாரண ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக சென்னைக்கு வந்து, இன்று செலிபிரிட்டிகளின் ஃபேவரிட் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாகி இருக்கிறார் ரேச்சல்.

தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம், சுஷ்மிதா சென், லாரா தத்தா, ஜெனிலியா, தமன்னா, ஸ்ருதிஹாசன், த்ரிஷா, அசின், ஜோதிகா, குஷ்பூ, பிந்துமாதவி, நயன்தாரா, கார்த்தி, ஜீவா, ஆர்யா... என நீள்கிறது ரேச்சலின் செலிப்ரிட்டி கஸ்டமர்களின் லிஸ்ட். `ரெமோ’வில் சிவகார்த்திகேயனின் லேடி கெட்டப்புக்கு இவர்தான் ஹேர் ஸ்டைலிஸ்ட். `இருமுகன்’, `காஷ்மோரா’ படங்களில் நயன்தாராவுக்கு.

``மும்பையில் பிரபலமான ஹேர் ஸ்டைலிஸ்ட்டான ஓஸ் பெஞ்சமின் என்னோட அக்கா. அவங்கக்கிட்டதான் ஹேர் ஸ்டைல் கத்துக்கிட்டேன். ஓபராய் ஹோட்டல்ல ஹேர் ஸ்டைலிஸ்ட்டா கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். சென்னை வந்ததும், கொரியோகிராஃபர் சுனில்மேனன் மூலமா ஃபேஷன் ஷோவுல வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது. அதுதான் என் தலையெழுத்தையே மாத்தினது. தொடர்ந்து மூணு வருஷங்கள், `மிஸ் இந்தியா’ கான்ட்டெஸ்ட்டுல வொர்க் பண்ணினேன். அது மூலமா நிறைய நட்புகளும் அறிமுகங்களும் கிடைச்சது. அது அப்படியே சினிமா பக்கம் கூட்டிட்டுப் போச்சு. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்னு எல்லாப் படங்களுக்கும் எல்லா பெரிய ஆர்ட்டிஸ்ட்ஸ் கூடவும் வொர்க் பண்ணிட்டேன்.ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி, ரஜினி சாருக்குக்கூட ஹேர் கட்டும் ஹேர் ஸ்டைலும் பண்ணியிருக்கேன்.

நான் ரொம்ப புரொஃபஷனல். செலிப்ரிட்டீஸ் என்கிட்ட வந்துட்டாங்கன்னா, என் கண்ணுக்கு அவங்களோட தலைமுடி மட்டும்தான் தெரியும். என்னோட கவனம் எல்லாம் அதை அழகாக்கிறதுலதான் இருக்கும். செலிப்ரிட்டீஸோட என் ரிலேஷன்ஷிப்பை ஃப்ரெண்ட்ஷிப்னுகூட சொல்ல முடியாது. அவங்ககூட நான் வொர்க் பண்றேன்... அவ்வளவுதான்.'' அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் ரேச்சல்.

ஜாய் கிரிஸில்டா

முன்னணி ஹீரோக்களின் மனைவிகளாலும் மும்பை முகங்களாலும் நிரம்பிவழிகிற தமிழ் சினிமாவின் காஸ்ட்யூம் டிசைனிங் ஏரியாவில், எந்தப் பின்புலமும் இல்லாமல் புகுந்து புறப்பட்டு வருகிறார் ஜாய் கிரிஸில்டா. விஜய், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ்குமார், அதர்வா, விஷ்ணு... எனப் பல ஹீரோக்களுடைய ஃபேவரிட் காஸ்ட்யூம் டிசைனர் இந்த நாகர்கோவில் பொண்ணுதான்.

``சின்ன வயசுலயே டைரக்டராகணும்னு ஆசை. ஒரு ஸ்டேஜுல அதெல்லாம் எனக்கு செட் ஆகாதுனு தெரிஞ்சது. `வேற என்ன பண்ணலாம்?’னு யோசிச்சப்ப ஃபேஷன் டிசைனிங் ஐடியா வந்தது. விஸ்காம் முடிச்சுட்டு, பெங்களூருல ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படிச்சேன்.

சினிமா இண்டஸ்ட்ரியில இருந்த ஃப்ரெண்ட்ஸ் மூலமா, `ராஜதந்திரம்’ படத்துக்கு காஸ்ட்யூம் பண்ற வாய்ப்பு வந்தது. அதுல ரெஜினாவுக்கும் வீராவுக்கும் பண்ணினேன். அதுதான் முதல் படம்னாலும், ரிலீஸ் கொஞ்சம் லேட் ஆனதால, `ஜில்லா’ படத்துல விஜய் சாருக்கு டிசைன் பண்ற அதிர்ஷ்டம் அடிச்சது. என் வொர்க் அவருக்குப் பிடிச்சுப் போய், இப்ப விஜய் சாருக்கு பர்சனலா காஸ்ட்யூம் டிசைன்ஸ் பண்ணிக் கொடுத்துக்கிட்டிருக்கேன்.''

அதன் பிறகு ஜாய் கிரிஸில்டாவுக்கு டேக் ஆஃப்தான்.

`டார்லிங்’, `கணிதன்’, `மிருதன்’, `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, `வீரதீர சூரன்’, `றெக்க’, `புரூஸ்லீ’... என பட வாய்ப்புகளும் வரிசைகட்டி நிற்க ஆரம்பித்திருக்கின்றன.

``பிரபலங்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்றதுங்கிறது சாதாரண விஷயமில்லை. நிறைய ரிசர்ச் பண்ணணும். சினிமாவுக்கு வொர்க் பண்றபோது பட்ஜெட், கதை, கேரக்டர்னு பல விஷயங்களையும் கவனிக்கணும். டைரக்டர்ஸ் மொத்த கதையையும் எங்கக்கிட்ட சொல்வாங்க. அதை முழுசா புரிஞ்சுக்கிட்டு ஒவ்வொரு சீனுக்கும் ஏத்தபடி கதையோடவும் கேரக்டரோடவும் பொருந்திப் போற மாதிரி டிசைன் பண்ணணும்'' என்கிற ஜாய் கிரிஸில்டாவுக்கு டிசைனிங் வாய்ப்புகளுக்குக் குறைவில்லாமல் கதாநாயகியாக நடிக்கக் கேட்டும் அழைப்புகள் வருகின்றனவாம்.

ஜாய்க்கு அதற்கு முன் பெருங்கனவு ஒன்று இருக்கிறதாம். என்ன... என்ன? சூப்பர் ஸ்டாருக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்வது.

சத்யா

சத்யாவின் ஒவ்வொரு வரிப் பேச்சும் விஜய்யில் ஆரம்பித்து விஜய்யில்தான் முடிகிறது. கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களில் ஒருவராக இருந்த சத்யா, இன்று விஜய்க்கு ரொம்பவே பக்கத்தில் இருக்கிறார். `தெறி' படத்தில் `ராங்கு ராங்கு...’ பாடல் காட்சிக்காக விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைன் செய்தவர். விஜய் தற்போது நடித்துவரும் `பைரவா’ படத்திலும் காஸ்ட்யூம் டிசைனர்.

''சின்ன வயசுலேருந்து நான் வெறித்தனமான விஜய்ணா ஃபேன். சினிமா ஆசையிலயே திரிஞ்சேன். நல்லா டிரெஸ் பண்ணப் பிடிக்கும். அந்த ஆசையும் சினிமா ஆசையும் சேர்ந்ததால காஸ்ட்யூம் டிசைனிங் கோர்ஸ் பண்ணினேன். என்னோட இன்னொரு இன்ட்ரஸ்ட், கிரிக்கெட்.

படிச்சிட்டிருந்தப்ப ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த கிரிக்கெட் ப்ளேயர்களை செலெக்ட் பண்ணி, ஒரு கேம்ப் நடத்தினாங்க. அப்ப அங்க நான் ஃப்ரீ டைம்ல விஜய் மாதிரி டான்ஸ் பண்றது, காமெடி பண்றதுனு செம கெத்து காட்டுவேன். என்கூட இருந்த ஒரு ஃப்ரெண்ட் அதைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகி, அவனோட கேமராமேன் அப்பாகிட்ட அறிமுகப்படுத்தி வெச்சான். அந்த அறிமுகம் மூலமாதான் சின்னச்சின்ன கமர்ஷியல்ஸ் பண்ணிட்டிருந்தேன். அது மூலமா, `மூன்று பேர் மூன்று காதல்’ படத்துல வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது.''

சர்ப்ரைஸ் விலகாமல் பேசும் சத்யாவுக்கு மாபெரும் திருப்புமுனை... `மான் கராத்தே.’ அந்தப் படத்துக்காக விகடன் அவார்டும் கிடைத்திருக்கிறது. `ராஜா ராணி’, `ஜிகர்தண்டா’, `ரஜினிமுருகன்’, `ரோமியோ ஜூலியட்’ என தமிழ் சினிமாவில் ஹிட்டடித்த பல படங்களில் சத்யாவின் பெயர் இருக்கிறது. ஆனாலும், விஜய் படம்தான் இவருக்கு ஸ்பெஷல்.

``விஜய்ணாகூட வொர்க் பண்றதெல்லாம் ஒரு வரம். அவரை இது வரைக்கும் எல்லா படங்கள்லயும் அழகழகா காட்டிட்டாங்க. நான் இன்னும் என்ன ஸ்பெஷலா பண்ணப் போறேங்கிற பதைபதைப்பு எனக்குத்தான் அதிகமா இருந்தது. ஆனா, அவரோ செம சிம்பிள். `கேமராமேன்கிட்ட கலரையும், டைரக்டர்கிட்ட டிசைனையும் காட்டிடுங்க. அவங்களுக்கு ஓ.கேனா எனக்கு ஓ.கே’னு சிம்பிளா முடிச்சிடுவார். `பைரவா’ படத்துல இதுவரைக்கும் பார்க்காத புது ஸ்டைல்ல விஜய் சாரை பார்க்கப் போறீங்க...'' பூரிப்பாகப் பேசுகிறார்.

தரணி செல்வகுமார்

`சர்ஃபிங்’ எனப்படுகிற அலை விளையாட்டில் நடிகர்கள் ஆர்யா, சித்தார்த், பரத், ஜீவாவுக்கு பயிற்சி தருகிறவர் கோவளத்தைச் சேர்ந்த தரணி செல்வகுமார். சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் எனப் பலதுறை பிரபலங்களுக்கும் சர்ஃபிங் குரு இவர்.

மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த தரணி செல்வகுமார் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயராம். அதைவிட சர்ஃபிங் ட்ரெயினர் என்பதில்தான் இவருக்கு கெத்து. ``ஆர்யாதான் முதல்முதல்ல சர்ஃபிங் கத்துக்கணும்னு வந்தார். ஷூட்டிங் முடிச்சிட்டு ஃப்ரீயா இருக்கிற நேரம் அவங்களுக்கு இது மாதிரியான வித்தியாசமான டைம் பாஸ் தேவைப்படுது. அப்புறம் நடிகர்கள் பரத், சித்தார்த், ஜீவா, வீரா, மிலிந்த் சோமன், ரெஜினா, பாடகி தன்வி ஷா, கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக்,னு நிறைய செலிப்ரிட்டீஸ் வர ஆரம்பிச்சாங்க.

நமக்கெல்லாம் சச்சின் டெண்டுல்கரா இருந்தாலும், அவருக்கு அவரோட கோச்தானே ஸ்பெஷல்? அப்படித்தான் இங்கேயும். எனக்கும் அவங்களுக்குமான உறவு என்பது ஒரு கோச்சுக்கும் ஸ்டூடன்ட்ஸுக்குமான உறவாகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு நடிகரும், வி.ஐ.பி-யும் கத்துக்கிட்டுப் போகும்போது கட்டிப்பிடிச்சு போட்டோ எடுத்துப்பாங்க. `நீதான்யா பெஸ்ட்’னு பாராட்டுவாங்க. ஏன்... ஆர்யா, டின்னருக்கே கூட்டிட்டுப் போயிருக்காரு. அடிக்கடி போன்ல பேசற அளவுக்கு ஃப்ரெண்ட் ஆகிடுவாங்க. ஆனா, அது எதையும் நான் மண்டையில ஏத்திக்கிறது இல்லை. என் கனவெல்லாம் வேற லெவல். அடுத்த ஒலிம்பிக்கில் ஒரு பங்கேற்பாளனாகவோ, கோச்சாகவோ கலந்துக்கணும்.''

தரணியின் லட்சியக் கனவு பலிக்கட்டும்.