கர்னாடக சங்கீதத்தின் மணி மகுடத்தில் விலைமதிப்பற்ற மாணிக்கக் கல்; அனுதினமும் உலகைத் தனது சுப்ரபாதத்தால் துயில் எழுப்பும் இசைக்குயில் என்றெல்லாம் போற்றப்படும்
எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு, இது நூற்றாண்டு. விஷ்ணு சகஸ்ரநாமம், சுப்ரபாதம் போன்ற ஸ்லோகங்களைத் தன் மந்திரக் குரலால் பாடி மெய்சிலிர்க்கவைத்தவர். `காற்றினிலே வரும் கீதம்’, `குறையொன்றுமில்லை’ போன்ற காலத்தால் அழியாத பாடல்களால் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்தவர். இளம் இசைக் கலைஞர்களை மட்டுமின்றி, ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தையும் தன் இசையால் வசீகரித்தவர். பக்தியும் பாவமும் இணைந்த தனித்துவமான இசை மேதையான எம்.எஸ்., 1916, செப்டம்பர் 16-ம் தேதி பிறந்தார். நூற்றாண்டு கடந்தும் இந்தியாவின் பெருமிதங்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். `கோகில கான இசைவாணி’ என்று அந்தக் காலத்தில் கொண்டாடப்பட்ட எம்.எஸ்-ஸின் பரிபூரண வாழ்க்கையை, பாரதரத்னா, பத்மபூஷண், பத்மவிபூஷண், மகசேசே போன்ற பெருமைமிக்கப் பல விருதுகள் பெருமைப்படுத்தியுள்ளன. இன்று பெரிதும் புகழப்படும் கர்னாடக இசைக்கலைஞர்கள் பலரும் எம்.எஸ்-ஸைப் பார்த்து வளர்ந்தவர்கள். எம்.எஸ்-ஸால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர், எம்.எஸ் உடனான தங்கள் அனுபவங்களை இங்கே நெகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அருணா சாய்ராம்

``என் பெற்றோருக்கு எம்.எஸ் அம்மாவின் பாட்டு மேல் அவ்வளவு ஈடுபாடு. எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் அம்மாவைச் சந்தித்துவிடுவார்கள். என் பெற்றோர் மூலம் சிறு வயதிலேயே எனக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது. பத்து வயது முதலே எம்.எஸ் அம்மாவின் அருகாமையில் இருந்திருக்கிறேன். ஒரு சந்திப்பு எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. குடும்பத்தோடு எம்.எஸ் அம்மாவைச் சந்திக்கப் போயிருந்தோம். அப்போது எனக்கு 14 வயது. நான் பாடத் தொடங்கியிருந்த நேரம். அம்மா, என்னைப் பாடச் சொன்னார்கள். வராளி ராகம் பாடி, `ஏதி ஜென்மம் இதி...’ என்ற தியாகராஜ சுவாமியின் கிருதியைத் தொட்டேன். இசைக்கென்றே பிறந்த ஒரு பெரும் ஆளுமைக்கு முன்பாகப் பாடுகிறோமே என்ற பயம் ஒரு பக்கம்; நடுக்கம் ஒரு பக்கம்; என்னால் சிறப்பாகப் பாட முடியவில்லை. மேல் `ஸ’வில் சஞ்சாரம் செய்யும்போதெல்லாம் பிழை செய்தேன். எனக்குப் பெரும் வருத்தமாகப் போய்விட்டது. இப்படி ஒரு வாய்ப்பைக் கோட்டைவிட்டு விட்டோமே என்ற வருத்தத்தில் கண்கள் நிரம்பிவிட்டன. அதைக் கவனித்த எம்.எஸ் அம்மா, கனிவோடு என் கையைப் பிடித்துக்கொண்டு, `என்ன வருத்தம் உனக்கு... சரியா பாடலேனு நினைச்சு கலங்கிறியா... அப்படின்னா என்னைப் பார்த்துக்கோ... நானும் உன்னை மாதிரிதான். ஆரம்பத்துல சின்னச் சின்னத் தடுமாற்றங்கள் வரும். இன்னைக்கு நான் நல்லவிதமா பாடலையா? இதையெல்லாம் பெரிசா நினைக்கக் கூடாது... கத்துக்கிட்டு இன்னும் சிறப்பாப் பாட முயற்சிக்கணும். இறைவன் வைக்கிற சின்னச் சின்னப் பரீட்சைகள் இதெல்லாம்’ என்று வாஞ்சையோடு சொல்லி என்னைத் தேற்றினார்கள். எவ்வளவு பெரிய மேதை. அவ்வளவு தாய்மையோடு என்னை அரவணைத்து, நான் சோர்ந்து போய்விடக் கூடாது என்று உற்சாகப்படுத்திய தன்மையை எந்த வார்த்தைகொண்டு போற்றுவது?

அப்போது இருந்த மனநிலை, `பாட்டு எல்லாம் நமக்கு சரிவராது. இதோடு விட்டுவிடுவோம்’ என்பதுதான். அதைப் பார்வையிலேயே புரிந்துகொண்டு, அன்று அவர்கள் சொன்ன அந்த வார்த்தைதான் என்னை இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. `அம்மாவுக்கே இப்படித்தான் இருந்திருக்கிறது. நமக்கு இருக்காதா என்ன..?’ என்ற எண்ணம்தான் என்னை மேலும் மேலும் இசையிலேயே வைத்திருந்து கற்றுக்கொள்ளத் தூண்டியது. என் வாழ்வின் திருப்புமுனையான தருணம் அது. இன்று, எல்லோரும் ஆமோதிக்கும் வகையில் இருக்கிறேன் என்றால், அதற்கு அம்மாவின் ஆசிதான் காரணம்.

அம்மாவிடம் பாடிக்காட்டிய அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஒரு போட்டியில் முதல் பரிசு பெற்று, அம்மாவின் கையாலேயே தங்கப் பதக்கம் வாங்கியது மற்றுமொரு மறக்க முடியாத தருணம். பதக்கத்தைக் கொடுக்கும்போது, அம்மா கண்ணாலேயே சிரித்தார்கள். `அப்பவே நான் சொன்னேன் பார்த்தியா?’ என்று அவர்கள் சொன்னதுபோல் இருந்தது.

அம்மாவின் இசை பற்றி நிறையப் பேசலாம். அவர்களின் குரல்... இனிமை, குழைவு, கம்பீரம் என முப்பரிமாணமும் கொண்டிருந்தது. ஸ்ருதியைக் கவ்விக்கொண்டு ராகபாவத்தோடு, அந்தக் குரல் எழுந்து எழுந்துவரும். அது கடவுள் கொடுத்த கொடுப்பினை. அம்மா சாகித்யங்களை உச்சரிக்கும்போது தங்கத்தை பாலீஷ் செய்வதைப் போல பளிச் பளிச்சென்று நம் காதில் விழும். எம்.எஸ் அம்மா, தன் கலையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டார்கள். அதனால், அது உச்சநிலைக்குச் சென்றுவிட்டது. பூஜைக்கு உகந்த மலர் மாதிரி ஆகிவிட்டது. தமக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல், தாம் ஈட்டிய செல்வத்தையெல்லாம் மக்களுக்கு அள்ளிக்கொடுத்தார்கள். அவர்களின் ஆன்மா மேம்பட்டு மேம்பட்டு இறைநிலைக்குச் சென்றுவிட்டது. அதனால்தான் இன்றுவரை அவரின் பெயர் நிலைத்திருக்கிறது.
அம்மா என் திருமணத்துக்கு வந்து வாழ்த்தியது பெரும் கொடுப்பினை. அவர்களுடைய ஆசிதான் இன்றுவரை என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது.’’

நித்யஸ்ரீ

``இசைக் குடும்பத்தில் பிறந்தவள் என்பதால், எம்.எஸ் அம்மாவை ரொம்பவே நெருக்கமாகப் பார்க்கும், பேசும் வாய்ப்புகள் எனக்கு அமைந்தன. விபரம் தெரியாத வயதில் இருந்தே அம்மாவைப் பார்த்திருக்கிறேன். பார்த்தால், நம்மால் கண்ணை எடுக்க முடியாது. அழகு என்பதைத் தாண்டி, தெய்விகம் ததும்பும் பூரணமான முகம். நூறு ஆண்டுகள் கழித்தும் அவர்கள் கொண்டாடப்பட அந்த தெய்விகம்தான் காரணம். நம்மை அறியாமலேயே நாம் ஈர்க்கப்படுவோம்.

ரொம்பவே எளிமையாக இருப்பார்கள். எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார்கள். எனக்கு 10 வயது இருக்கும்போது, மியூசிக் அகாடமியில் அம்மாவிடம் பரிசு வாங்கினேன். என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்ட அம்மா, `பட்டம்மா பேத்தியா..? நீ பரிசு வாங்குறதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் பேத்தி மாதிரி நீ’ என்று சொன்னார்கள். அது பெருமைக்குரிய நேரம். இப்போது வரைக்கும் அந்தக் காட்சி என் மனதில் இருக்கிறது. 1988-ம் ஆண்டில் இருந்து, செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் மியூசிக் அகாடமியில் `ஸ்பிரிட் ஆஃப் யூத்’ என்ற பெயரில் இளைஞர்களுக்கான இசைவிழா ஒன்று நடத்தப்படுகிறது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் நான்தான் பாடினேன். அப்போது நான் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தது எம்.எஸ் அம்மா. நான் பாடி முடித்ததும் அம்மாவும் சதாசிவம் மாமாவும் என்னை ஆசீர்வாதம் செய்தார்கள். அப்போது அம்மா சொன்ன வார்த்தைகள் அப்படியே மனதில் இருக்கின்றன. `ரொம்ப நல்லாப் பாடினே...’' என்ற வழக்கமான வார்த்தைகளாக இல்லாமல், `நல்லப் பாடகியாக உருவாவதற்கு எதெல்லாம் தேவையோ, அதெல்லாம் நிறைஞ்சு இருக்கு. இனிமே உன்னோட பங்களிப்புதான் முக்கியம். உன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள். தீவிரமா உழைக்கணும்; என்னுடைய ஆசீர்வாதம் எப்போதும் உனக்கு உண்டு’ என்று சொன்னார்கள். அது எனக்கு ரொம்பவே உற்சாகமாக இருந்தது.

அம்மா கடைசிவரை கோட்டூர்புரத்தில்தான் இருந்தார்கள். நாங்களும் அங்குதான் இருந்தோம். பல தருணங்களில் அம்மாவைச் சந்திக்கும் வாய்ப்புகள் அமைந்தன. ஒரு நவராத்திரி சமயத்தில், எம்.எஸ் அம்மாவின் மகள் விஜயா ராஜேந்திரன், `அம்மாவுக்காக நீ ஒரு மணி நேரம் பிரத்யேகமா வந்து பாடணும்’ என்று அழைத்தார்கள். எம்.எஸ் அம்மாவின் முன்னால் பாடுவதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும்? போய்ப் பாடினேன். அம்மா, அவ்வளவு உன்னிப்பாக ரசித்துக் கேட்டார்கள். அப்போது விஜயா மாமி, ` `கிரிதர கோபாலா’வும், `காற்றினிலே வரும் கீத’மும் நித்யா ரொம்ப நல்லாப் பாடுறா... அவ பாடுறதைக் கேட்க நீங்க பாடுறது மாதிரியே இருக்கும்மா’னு சொன்னாங்க. உடனே அம்மா, ``நித்யா கிரிதர கோபாலா பாடு’’ என்றார்கள். `உங்களுக்கு முன்னாடி அந்தப் பாட்டைப் பாட பயமா இருக்கும்மா’’ என்றேன். ``நான் கேட்கணும் பாடு’ என்ற பிறகு பாடினேன். அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். வாழ்வில் மறக்க முடியாத நேரம் அது.

நான் முன்பெல்லாம் கச்சேரிகள் செய்யும்போது, நடுவில் தண்ணீர்கூட குடிக்க மாட்டேன். இதை எம்.எஸ் அம்மா கவனித்திருக்கிறார்கள். ஒருநாள் அம்மாவைச் சந்தித்தபோது, `நீ கச்சேரியில தண்ணிகூட குடிக்க மாட்டியாமே... அது ரொம்பத் தப்பு. ஹார்லிக்ஸ், பால் ஏதாவது எடுத்துக்கிட்டுப் போய் கச்சேரிக்கு நடுவில குடிக்கணும். அதுதான் நல்லது. ரொம்ப நேரம் பாட அப்போதான் உடம்புல சக்தியிருக்கும்’ என்றார்கள். எனக்குக் கண் கலங்கிவிட்டது. நான் தண்ணீர் குடிப்பதில்லை என்று கவனித்தது மட்டுமல்ல... சந்தித்த நேரத்தில் அதை நினைவு வைத்திருந்து, அறிவுரை சொன்னதை இன்று நினைத்தாலும் கண் கலங்கத்தான் செய்கிறது. இப்போதுவரை அதை நான் கடைப்பிடிக்கிறேன்.’’

காருக்குறிச்சி கே.என்.சசிகிரண்

``நான் நான்கு வயதிலேயே பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடிப்பேனாம். அந்த வயதில் எம்.எஸ் அம்மா என்னை அமரவைத்து, ராகம் சொல்லச் சொல்லிக் கேட்பார்களாம். சிறு வயதிலேயே அவர்களின் ஆசீர்வாதம் பெற்ற பெருமை எனக்கு உண்டு. எனது 19-வது வயதில் `சம்பிரதாயா’ என்ற பெயரில் ஒரு கச்சேரி நடத்தினேன். அதற்கு செம்மங்குடி சீனிவாச அய்யர், பட்டம்மாள் அம்மா, எம்.எஸ் அம்மா மூவரும் வந்திருந்தார்கள். எம்.எஸ் அம்மா கச்சேரியை முழுவதும் கேட்டார்கள். கச்சேரி முடிந்து பேசியபோது, தன் அனுபவங்களை முன்வைத்து, ரொம்பவே பாராட்டிப் பேசினார்கள். அவ்வளவு பெரிய மேதை, இவ்வளவு எளிமையாக வந்து, வளர்ந்துவரும் ஒரு கலைஞனை மனம்திறந்து பாராட்டுவது மிகவும் உற்சாகமூட்டியது. அம்மாவுக்கு வயதாகி நினைவு தப்பியிருந்த நேரத்தில், நவராத்திரிக்காக அவர்களுக்கு முன்னால் பாடினோம். பாட்டைக் கூர்ந்து கேட்டார்கள். பாடி முடித்ததும், `பாடுறவங்க ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது; தயிர் சாப்பிடக் கூடாது’ என்று சொன்னார்கள். அந்த மாதிரி நேரத்திலும் பாட்டு, பாட்டைத் தவிர வேறு எதையும் சிந்திக்காத அவர்களின் அர்ப்பணிப்பு ரொம்பவே வியப்பாக இருந்தது.

`ஒரு கலைஞர் இப்படித்தான் வாழ வேண்டும்’ என்பதற்கு எம்.எஸ் அம்மாதான் உதாரணம். தன்னிடம் இருந்த அத்தனை செல்வத்தையும் அள்ளிக்கொடுத்தவர். நன்றாக இருந்த நேரத்தில் தன்னிடம் இருப்பதில் கொஞ்சத்தைக் கொடுப்பது வேறு. ஆனால், தனக்கே தட்டுப்
பாடாக இருந்த நேரத்திலும் கொடுத்தார்கள். சம்பாதித்த மொத்தத்தையும் கொடுத்தார்கள். அம்மாவின் உதவியால் பல்லாயிரம் பேர் பார்வை பெற்றிருக்கிறார்கள். நிறையத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். யார் போய்க் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வார்கள். எதையும் விளம்பரம் செய்தது இல்லை. அதிக ராயல்டி வாங்கிய இசைக்கலைஞர் அவர்தான். மொத்த ராயல்டியையும் சாரிட்டிக்கு எழுதிவிட்டார்கள். டீக்கடை முதல், பெரிய மியூசிக் ஸ்காலர் வரை அவருக்கு எல்லா இடங்களிலும் ரசிகர்கள் உண்டு. இது இசையுலகில் உட்சபட்ச சாதனை. கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் அம்மாவின் நூற்றாண்டைக் கொண்டாடிவருகிறோம். அமெரிக்காவில் இருக்கும் 120 மாணவர்களை ஒருங்கிணைத்து, அமெரிக்க மியூசிக் பின்னணியில் எம்.எஸ் அம்மாவின் பாடல்களைப் பாடவைத்து, `எம்எஸ் அம்மாவின் பக்தி சிம்பொனி’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறோம். `எம்.எஸ் மேளா’ என்ற பெயரில் ஒரு போட்டியையும் நடத்துகிறோம். என்னுடைய இசைக்கு மட்டுமின்றி, வாழ்க்கைக்கும் அம்மாதான் ரோல்மாடல்.’’

நெய்வேலி சந்தானகோபாலன்

``அப்போது எனக்கு 23 வயது. ஒரு பெட்ரோல் பங்க்கில் டூவீலருக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு கார் வந்து நின்றது. அதில் எம்.எஸ்.அம்மா. என்னைப் பார்த்துச் சிரித்தவர், `நீங்கதானே நெய்வேலி சந்தானகோபாலன்... நேத்து ரேடியோல உங்க பாட்டைக் கேட்டேன். பைரவி ரொம்ப நல்லாப் பாடுறீங்க. நாளைக்கு வீட்டுக்கு வாங்க’ என்றார். அடுத்த நாளே, அவர்களின் வீட்டுக்குப் போனேன். இன்முகத்தோடு வரவேற்ற அம்மா, அவர்களின் இசை அனுபவங்களை எல்லாம் பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் கையாலேயே சுக்கு காபி போட்டுக்கொடுத்தார்கள். அவர்களின் அன்பு மழையில் நனையும் பாக்கியம் அன்று எனக்குக் கிடைத்தது. எவ்வளவு பெரிய மேதை, தினமும் ரேடியோ கேட்டு, இளம் பாடகர்களைக் கவனித்து, அவற்றை நினைவு வைத்துக்கொள்வது வியப்புதான். பெரிய பாடகியாக மட்டுமல்ல... ரசிகையாகவும் அவர்கள் இருந்தார்கள். என் குருநாதர் டி.என்.சேஷகோபாலன் பாட்டு அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு ரசிகையாக கச்சேரியில் வந்து உட்கார்ந்திருப்பார்கள்.

கர்னாடக சங்கீதத்தில் `மனோதர்ம சங்கீதம்’ என்று ஒன்று உண்டு. `எதுவாக இருந்தாலும் மேடையில் பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மேதைமையுடன் வருவார்கள். ஆனால், எம்.எஸ் அம்மா, மேதையாக இருந்தபோதும், ஒவ்வொரு கச்சேரிக்கும் தனித்தனியாக ரிகர்சல் பார்ப்பார்கள். `ரசிகர்கள் தங்களோட நேரத்தை நமக்காகச் செலவழிக்கிறாங்க. அவங்களுக்கு மிகச் சிறந்த இசையைக் கொடுக்கணும். அந்தப் பொறுப்புஉணர்வு கலைஞர்களுக்கு இருக்கணும்’ என்று அவர்கள் சொல்வார்கள்.

தனிப்பட்ட முறையில் நான் பெருமையாக நினைக்கும் ஒரு விஷயம், எம்.எஸ் அம்மாவுக்கு வாசித்த டி.கே.மூர்த்தி, வி.வி.சுப்பிரமணியம், கண்டதேவி அழகிரிசாமி ஆகிய மூன்று பேரும் எனக்கும் வாசித்திருக்கிறார்கள். நானே விரும்பி அவர்களை அழைத்தேன். அது எனக்கு வாய்த்த மிகப் பெரிய பாக்கியம். லலிதா சகஸ்ரநாமத்தில் அம்மாவின் சக்தியை விளக்கும்போது, முதல் நாமம் ஸ்ரீமாதா... இரண்டாவது நாமம் ஸ்ரீமகாராஹ்னி... சக்தி, தாயாக இருந்தாலும், அவளுக்கு மகாராணிங்கிற பதவியும் இருக்கிறது. எம்.எஸ் அம்மா இசையில் மகாராணி. அதே நேரத்தில், எல்லோரிடத்திலும் தாயுள்ளத்தோடு கனிவும் கருணையுமாகப் பழகியவர்கள்.’’

ரமணன், எழுத்தாளர், விமர்சகர்

`எம்.எஸ் அம்மா, இசை என்பதைத் தாண்டிப் பல விஷயங்களை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாகச் சாதித்தவர். பன்முகங்கள் கொண்ட துணிவான புதுமைப் பெண். எம்.எஸ் அம்மாவின் வாழ்க்கை ஏழு ஸ்வரங்களால் ஆனது. ஆனால், அது வெறும் இசை ஸ்வரங்கள் இல்லை. துணிவு, ஆர்வம், உழைப்பு, புலமை, பக்தி, ஈதல், எளிமை என்ற ஏழு ஸ்வரங்களால் ஆன அற்புதமான வாழ்க்கை. மிக இளம் வயதிலேயே தனது குலமரபுகளை உடைத்தெறிந்து, மண வாழ்க்கையை ஏற்கத் துணிந்தவர். கடுமையான உழைப்பு, பாடும் பாடல் எதுவாக இருந்தாலும் அதன் பொருள், உச்சரிப்பை பண்டிதர்களிடம் ஒரு மாணவியைப்போல் கற்ற பண்பு, இசையை தெய்வமாகக் கருதி கேட்பவருக்கும் அதை உணரச் செய்த பக்தி, வாழ்நாள் முழுவதும் தன் இசைத்திறனால் ஈட்டிய அத்தனை செல்வத்தையும், கல்வி, மருத்துவம், ஆன்மிக நிறுவனங்களுக்குக் கொடையாக கொடுத்த மிகப் பெரிய மனம், இவை எல்லாவற்றையும் தாண்டி துளியும் கர்வம் இல்லாமல் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர்.’’