மகாபாரத காலத்தில் அவந்தி தேசத்தின் தலைநகராகத் திகழ்ந்ததும், ஷிப்ரா நதிக்கரையில் அமைந்ததும், சரித்திரப் பிரசித்திப் பெற்றதும், ஜோதிர்லிங்கத் தலமுமான உஜ்ஜயினியை 'ருத்ரபூமி’ எனப் போற்றுகிறார்கள் பக்தர்கள்!

மத்தியப்பிரதேசத்தில், உஜ்ஜயினியின் மையத்தில் மகாகாளேஸ்வரர் கோயில் கொண்டிருக்க, அவரைச் சுற்றிலும் 84 மகாதேவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். ஊரின் ஒரு முனையில் சக்தி பீடநாயகியாம் ஹர் ஸித்தியும், மற்றொரு முனையில் காளிதேவியும், கால பைரவரும் சாந்நித்தியத்துடன் அருள்பாலிக்கும் உஜ்ஜயினி மாநகரை,

ருத்ர பூமி’ என்று பக்தர்கள் போற்றுவதில் வியப்பில்லை. வாருங்கள், நாமும் அந்தப் புண்ணிய பூமியை, அங்கு நிகழும் வைபவங்களைத் தரிசிப்போம்!

ஷிப்ரா நதி ஹாரத்தி

ஹரித்வார், காசி போன்ற முக்கியமான தலங்களில் எல்லாம், பாயும் ஜீவநதிகளுக்கு, மாலை வேளைகளில்ஆரத்தி ஆராதனை நடப்பது வழக்கம். அதேபோல், உஜ்ஜயினியின் ஷிப்ரா நதிக்கும் ஒவ்வொரு நாளும் ஆரத்தி வைபவம் நிகழ்கிறது. ஆயிரக்கணக்கானோர் இந்த வைபவத்தைத் தரிசித்து மகிழ்கின்றனர்.

உஜ்ஜயினியின் நாயகன்!

அவந்தி ராஜ்ஜியத்தின் தலைநகரமாக விளங்கிய உஜ்ஜயினி, விக்ரமாதித்தனால் ஆளப்பட்ட பூமி. இங்கே நடுநாயகமாகக் கோயில் கொண்டிருக்கும் மகாகாளேஸ்வரர் தென் திசை நோக்கி அமர்ந்திருப்பதால், இவரை தட்சிணாமூர்த்தியின் அம்சமாகவே கருதுகிறார்கள். இவருடைய லிங்கத் திருமேனி, பன்னிரு ஜோதிர் லிங்கங்களிலேயே பெரியது

இப்போதுள்ள ஆலய வளாகம் மன்னர் ரானோஜி ஷிண்டேவின் பங்களிப்பு. சர்வதோபத்ர கலையம்சப்படி அமைக்கப்பட்டுள்ளது இங்குள்ள கோடி தீர்த்தம். மகாகாளேஸ்வரர் ஆலயம் மூன்று நிலைகளைக் கொண்டது. கீழ்த் தளத்தில் மகாகாளேஸ்வரர் அருள்கிறார். இரண்டாம் நிலையில், ஓம்காரேஸ்வரரும், மூன்றாம் நிலையில் நாக சந்திரேஸ்வரரும் குடிகொண்டுள்ளனர். மகாகாளேஸ்வரரைச் சுற்றி கணபதி, பார்வதி, கார்த்திகேயன் மற்றும் நந்திகேஸ்வரர் அருள்கிறார்கள். மேலும் ராமன், அவந்திகாதேவி, விருத்த மகாகாளேஸ்வரர், அனாதி கல்பேஸ்வரர், ஆஞ்சநேயர், சப்த ரிஷிகள் ஆகியோரையும் இந்தக் கோயிலில் தரிசிக்க முடிகிறது.

மூன்றாம் நிலையில் குடிகொண்டுள்ள நாக சந்திரேஸ்வரர், பத்து தலைகள் கொண்ட நாக சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை நாக பஞ்சமி அன்று மட்டும் இவருடைய சந்நிதி திறந்திருக்கும். நாகராஜனான தக்ஷகன் இங்கு சிவனாரைக் குறித்து தவமிருந்து அருள் பெற்றதாகப் புராணம் கூறும். இது சர்ப்பதோஷ நிவர்த்தி தலமாகவும் திகழ்கிறது.

தினமும் நடைபெறும் பஸ்மார்த்தி இத்தலத்தின் சிறப்பம்சம். சிவன் என்றாலே, 'மயானவாசி’ என்பர். முற்காலத்தில் மகாகாளேஸ்வருக்கு மயானத்திலிருந்து வரும் பஸ்மம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறுவர். சமீபகாலமாக அதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் பஸ்மத்தைக் (விபூதி) கொண்டு, காலை சுமார் 4 மணியளவில் அபிஷேகம் செய்யப்படுகிறது. அனைவருக்கும் இந்த பஸ்மம் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.

அட்சய திரிதியை, ஆனி11 அன்று பர்ஜன்ய அனுஷ்டானம், நாக பஞ்சமி நாக சந்திரேஸ்வரர் தரிசனம் முதலான வைபவங்கள் இங்கே பிரசித்தம். கார்த்திகை மாத சுக்லபக்ஷ சதுர்த்தசியன்று (வைகுண்ட சதுர்த்தசி) 'ஹரிஹர மிலானா’ எனப்படும், சிவனும் – விஷ்ணுவும் உலாவாக வந்து சந்திக்கும் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது

மகா சிவராத்திரியின்போது உஜ்ஜயினியே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். அன்று, இந்த ஆலயத்துக்கு வந்து, 84 மகாதேவர்களில் ஒருவரான ஸ்வப்னேஸ்வரை, மகா காளேஸ்வரராக வணங்கி ஆசி பெறுவதும் வழக்கம்.

ஹர்ஸித்தி மாதா

மஹாகாளேஸ்வரரின் ஆலயத்தின் பின்புறம், ஷிப்ரா நதியின் ராம கட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது இந்த தேவியின் ஆலயம். பழங்காலத்தில் 'மங்கள சண்டி’ என்றும், தற்போது 'ஹர்ஸித்தி’ என்றும் பெயர் பெற்றவள் இந்த அம்பிகை; சக்தி பீட நாயகி. இவள் அருளும் பீடம் சக்தி பீடங்களில் 13வதாகும்.

சதிதேவியாகிய தாட்சாயினி தேவி, தன் தந்தை தட்சனுக்கு எதிராகப் போராடி, அவன் வளர்த்த வேள்வித் தீயில் குதித்ததாகவும், கடும் கோபம்கொண்ட ஈசன், சதியின் உடலைச் சுமந்து அண்டத்தை சுற்றி வந்ததனால், உலகம் இருளில் மூழ்கியதாகவும் புராணம் கூறும். உலகைக் காப்பாற்ற எண்ணிய மகாவிஷ்ணு சுதர்சன சக்கரத்தை ஏவி, அம்பிகையின் உடலைச் சிதைத்தார். சிதறிய அம்பிகையின் உடல் பாகங்கள் வெவ்வேறு இடங்களில் விழுந்து சக்தி பீடங்களாக உருவாகின. அப்படி, தேவியின் முழங்கை பாகம் விழுந்த இடம் உஜ்ஜயினி என்பர்.

இங்கு, அன்னபூர்ணா தேவி, ஹர்ஸித்தி மாதா, மகா காளி ஆகியோர் முறையே மேலிருந்து கீழாக ஒரே பீடத்தில் அருள்பாலிக்கின்றனர். தாந்த்ரீகர்களும் யோகிகளும் இங்கு தேவியை வழிபட்டு, சக்திகள் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது

பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் பூர்த்தி செய்யும் வல்லமை பெற்றவள் ஹர்ஸித்தி என்பது நம்பிக்கை. நான்கு வாயில்களைக்கொண்ட இந்த ஆலயத்தின் முகப்பில் உயரமான, நூற்றுக்கணக்கான தீபங்களைக் கொண்ட தீப ஸ்தம்பங்கள் இரண்டு உள்ளன. விசேஷ நாட்களில், தீப ஸ்தம்பங்களில் உள்ள விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலிக்கும். இங்கு, சாரதா நவராத்திரி, துர்கா பூஜையாக ஒன்பது நாட்களும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. யந்திர பூஜைதான் இந்தத் தலத்தின் விசேஷம். ஹர்ஸித்தி மாதா சண்ட, ப்ரஸண்ட அசுரர்களை வதம் செய்து, தேவர்களின் துயர் தீர்த்ததாக தலபுராணம் சொல்கிறது. ராஜா விக்ரமாதித்தன் வணங்கிய தலம் இது. இங்கே, தினமும் மாலை நடைபெறும் ஹாரத்தி மிகவும் விசேஷமானது.

சாந்திபனி ஆஸ்ரமம்

உஜ்ஜயினி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ளது இந்த ஆஸ்ரமம். சாந்திபனி முனிவரிடம் கிருஷ்ணர், பலராமர், சுதாமா போன்றோர் கல்வி பயின்ற இடம் இது. இவர்கள் மூவருக்குமே இங்கே சிலைகள் உள்ளன. ஆஸ்ரமத்தின் தீர்த்தம் கோமதி குண்டம். தீர்த்தக் கரையோரம் நந்தியின் சிலையும் ஒன்று உண்டு.

சிந்தாமணி கணேஷ்

ஷிப்ரா நதிக்கரையில் ஸ்வயம்புவாக உருவானவர் இந்த கணபதி. இவர் சகல கவலைகளில் இருந்தும் நமக்கு விடுதலை அளிப்பவர் என, இவருக்கு

சிந்தாஹரன் கணேஷ்’ என்ற பெயரும் உண்டு. தேவியருடன் அருளும் இவரைப் பற்றிய பதிவுகள், பிரபந்த சிந்தாமணி நூலிலும் உண்டு. உயரமான கருங்கல் கோபுரமும், குவிமாட கர்ப்பகிரஹமும் இந்தக் கோயிலின் சிறப்பம்சங்கள்.

கர் காளி

ஷிப்ரா நதிக் கரையில், நகரத்தைவிட்டு சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கர் காளிகா மந்திர். ஊமையாக இருந்த காளிதாசனின் நாக்கில் பீஜாட்சர மந்திரத்தை எழுதி, அவருக்குக் காளிமாதா கவித்திறனை வழங்கியதாகச் சொல்வர். விக்ரமாதித்தனின் அரசவையின் நவரத்னங்களில் ஒருவராக விளங்கி, நாட்டுக்கும் இலக்கியத்துக்கும் தொண்டு செய்த பெருமையும் காளிதாசனுக்கு உண்டு. 7ம் நூற்றண்டில் ஹர்ஷவர்த்தனும், புது யுகத்தில் குவாலியர் அரச பரம்பரையும் இந்த ஆலயத்தின் புனரமைப்பில் பங்கேற்றதாக வரலாற்று குறிப்புகள் உண்டு. இங்கு தாந்த்ரீக முறையில் பூஜைகள் நடைபெறுகின்றன. உஜ்ஜயினிக்கு வருவோர் இந்த காளிமாதாவைத் தரிசிக்காமல் செல்வதில்லை. இந்த ஆலயத்தில் நவராத்திரி விசேஷம்; சண்டி பாராயணம் மிகவும் சிறப்பான வழிபாடாகும்.

கால பைரவர்

இவர் 'கபிலம்பர்’ என்றும் அழைக்கப்படுகிறார். அஷ்ட பைரவர்களில் முதலாமவர் மட்டுமல்லாமல், உஜ்ஜயினியின் க்ஷேத்ரபாலகராகவும் அருள்கிறார். கால பைரவ ஆராதனையில், உஜ்ஜயினி ராஜ்ஜியத்தை சேர்ந்த கபாலிகர்களும் அகோரர்களும் (அகோரி) மிகவும் முக்கியமானவர்கள். பிரத்யேக பாறையில், வெள்ளித் தலைக் கவசமும் சிந்தூர அலங்காரமும் கொண்ட திருவடிவினராகத் திகழும் இந்த பைரவர், அனைவரது துக்கங்களையும் களைந்து அருள்பாலிக்கிறார். தாந்த்ரீக சம்பிரதாயப்படி மது, மாம்ச, மத்ஸ்யா முத்ரா, மைதுன சமர்ப்பணம் எனும் பஞ்சமகர (பஞ்சதத்வம்) உபசரணைகள் முற்காலத்தில் நடந்தன என்றும், தற்போது மது மட்டும் சமர்ப்பிக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர். மற்றவை மந்திர ரூபமாக சமர்ப்பிக்கப்படுகின்றனவாம்.

மங்கள் நாத்

இந்த ஆலயம், நகரத்தைவிட்டு சுமார் 4 கி.மீ தொலைவில் அழகான இயற்கைப் பின்னணியில் அமைந்துள்ளது. இது, செவ்வாய்க்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், சிவனே அங்காரகனாகக் காட்சியளிக்கிறார். இதுவும் ஒரு தாந்த்ரீக பூமியானதால் செவ்வாய் தோஷம், சொத்து, மண வாழ்க்கை மற்றும் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட இங்கு பல பரிகார வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

பீர் மட்ஸ்யேந்திரநாத்

ஷிப்ரா நதிக்கரையில், கால பைரவரிலிருந்து, பர்த்ருஹரி குகைக்குச் செல்லும் பாதையில், அழகிய மற்றும் அமைதியான சூழலில், குவி மாட அமைப்புடன், நான்கு வாயில்களுடன் அமைந்துள்ளது மிகவும் பிரபலமான பீர் மட்ஸ்யேந்திரநாத். உஜ்ஜயினியின் நாதா பிரிவைச் சேர்ந்த தலைவர் மட்ஸ்யேந்திரநாத் தீவிர சிவ பக்தர். அவருடைய சமாதி இங்கு அமைந்துள்ளதால், இதனை, 'பீர் மட்ஸ்யேந்திரநாத்’ என அழைக்கின்றனர். சமாதியும், 'பீர்’ என்ற அடைமொழியும் இருப்பதால் இஸ்லாமியரும் இங்கு சென்று வழிபடுவதையும் காண முடிகிறது. கர் காளிகா, கால பைரவர், மங்கள்நாத் ஆலயங்கள் மற்றும் பீர் மட்ஸயேந்திரநாத் அனைத்துமே ஒரே வழித்தடத்தில் அமைந்துள்ளதால் (அதிகபட்சமாக 6 கி.மீ), தனியாகவும் குழுவாகவும் வருபவர்களுக்கு ஷேர் ஆட்டோக்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.

இன்னும் சில தகவல்கள்...

உஜ்ஜயினியைச் சுற்றி சுமார் 118 கி.மீ தூரம் பயணிக்கும் யாத்திரைதான் பஞ்ச குரோச யாத்திரை. வைசாக கிருஷ்ண பக்ஷ தசமி அன்று, மகாகாளேஸ்வரர் ஆலயத்துக்கு வெளியே சுமார் ஒரு கி.மீ தொலைவில் இருக்கும் நாகசந்திரேஸ்வரரை வணங்கி, உத்தரவு பெற்றுத் தொடங்கும் இந்த யாத்திரை, அமாவாசையன்று உஜ்ஜயினியில் நிறைவுபெறும்

உஜ்ஜயினி மகாகாள வனத்தின் நான்கு துவாரங்களாக நான்கு கோயில்களைச் சொல்வார்கள். அவை... கிழக்கே பிங்களேஸ்வர், மேற்கே வில்வகேஸ்வர், வடக்கே உத்தரேஸ்வர், தெற்கே காயாவரோஹனர் ஆலயங்கள்.

ருத்திர பூமி விஜயம் பற்றிய சந்தேகங்கள் இருந்தால், 07342559277, 07342561862 ஆகிய தொலைபேசி எண்களில் மகாகாளேஸ்வர் நிர்வாகத்தை அணுகலாம்.

இணையதளம்: www.mahakaleshwar.nic.in

எப்படிச் செல்வது?

சென்னையில் இருந்து உஜ்ஜயினிக்கு செல்ல ஐந்து ரயில்கள் உள்ளன. அவற்றில், சூப்பர் ஃபாஸ்ட் ரயில், ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ். இது, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சென்னையில் இருந்து கிளம்புகிறது. சுமார் 28 மணி நேர பயணம். ஒரு நபருக்கு ஸ்லீப்பர் கிளாஸ் கட்டணம் சுமார் ரூ.700/. சென்னையில் இருந்து ஐதராபாத் அல்லது மும்பை வழியாக இந்தூர் வரை செல்ல விமான வசதி உள்ளது. சென்று வர சுமார் ரூ.10,000 வரை ஆகலாம். அங்கிருந்து உஜ்ஜயினிக்கு கார், பஸ்ஸில் செல்லலாம். உஜ்ஜயினியில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன.