"நீங்க சொர்க்கத்தை அடையப் போறோம்னு பல காலமா ஒரு பாதையில நடந்து போய்க் கிட்டு இருக்கீங்க... ஆனா, பல மைல் நடந்த பிறகுதான் தெரியுது, அந்தப் பாதை சொர்க்கத்துக்கான வழி இல்லைன்னு. இப்ப என்ன செய்வீங்க? பல மைல் நடந்துட்டோம்னு நீங்க போற பாதையிலேயே பயணத்தைத் தொடர்வீங்களா... இல்லை பாதையை மாத்துவீங்களா? இப்ப நம்ம கல்வி முறை சொர்க்கத்துக்கு அழைச்சுட்டுப் போற பாதையா இல்ல. ஆனா, நாம் அதுலதான் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கோம். அதுவும் முன்பைவிட அதி வேகமா நடந்து போய்க்கிட்டு இருக்கோம்’’ - ஒரு சூஃபி ஞானியைப் போல் தன் உரையாடலைத் தொடங்குகிறார் கெளதம்.

கெளதம் சாரங்... கேரள மாநிலம் அட்டப்பாடியில் வசிக்கிறார். இவருடைய பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். ஆனால், இவர் பள்ளிக்கே சென்றது இல்லை. பள்ளிக்குச் செல்லாவிட்டால் என்ன? நான்கு மொழிகள் சரளமாகப் பேசுகிறார்; இணையதளம் வடிவமைத்துத் தருகிறார்; புகைப்படம் எடுக்கிறார்; தச்சுவேலை செய்கிறார்; பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்; தண்ணீர் மேலாண்மையில் பல தொழில்நுட்பங்களைக் கையாள்கிறார். கல்வி முறையால் மட்டும்தான் சாத்தியமாகக்கூடியது என்று நாம் நம்பும் பல விஷயங்களை அட்டப்பாடியில் ஒரு சிறு வனத்தில் அமர்ந்துகொண்டு பள்ளிக்கே செல்லாமல் சாத்தியமாக்கிக்கொண்டிருக்கிறார் கெளதம்.

ஏன் பள்ளிக்கு அனுப்பவில்லை..?

ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கெளதமிடம் கேட்பதைவிட, ஏன் பள்ளிக்கு அனுப்பவில்லை என்று அவர் பெற்றோரிடம் கேட்பதுதானே சரியாக இருக்கும்? இந்தக் கேள்வியை கெளதமின் பெற்றோர் கோபாலகிருஷ்ணன் - விஜயலட்சுமி தம்பதியிடம் முன்வைத்தோம்.

அதற்கு அவர்கள் சிரித்துக்கொண்டே, “நாங்கள் ஆசிரியர்கள்தான். ஆனால், நாங்களே பள்ளிக்குச் செல்லவில்லை. பிறகு எப்படி எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவோம்..?” என்று விளையாட்டாகத் தங்கள் உரையாடலைத் தொடங்கினார்கள். நம் கல்வி முறையின் பிரச்னை குறித்து தீவிரமாகப் பேசத் தொடங்கினார்கள்.

“நாங்கள் இருவரும், 1979-ம் ஆண்டு, கேரள மாநிலம், வயநாட்டில் அரசுப் பள்ளி ஒன்றில் பணியில் சேர்ந்தோம். அங்கு பழங்குடி இன மாணவர்கள்தான் அதிகம். மாணவர்கள் சரியாகப் பள்ளிக்கு வர மாட்டார்கள். மாணவர்களைக்கூட அவர்கள் வீடுகளுக்குச் சென்று அழைத்து வந்துவிடலாம். ஆனால், ஆசிரியர்களை... ஆம், அவர்களும் பள்ளிக்கே வரமாட்டார்கள். அவர்கள் வராதது மட்டுமல்ல... எங்களிடம் வந்து `இந்தப் பசங்களுக்குப் பாடம் கற்பிச்சு ஒண்ணும் ஆகப்போறது இல்லை. வந்தோமா, சம்பளத்தை வாங்கினோமான்னு இருங்க... உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்காதீங்க’ என்று மிக அக்கறையாக அறிவுறுத்தினார்கள். கற்பிக்காமல் எப்படிச் சம்பளம் வாங்குவது? அதனால், ஒருநாள் காலைப் பொழுது, இருவரும் பேசி, இந்த வேலையை விட்டுவிடுவது என்று தீர்மானித்தோம்.

கல்வி புகட்டுவதில் உள்ள சிக்கலால் மட்டும் நாங்கள் வேலையை விடவில்லை. அந்தச் சமயத்தில், இன்னொரு விஷயத்தையும் யோசித்துப் பார்த்தோம். இந்தக் கல்வி முறையில் உள்ள பிரச்னைகள் குறித்து. ஆம், இந்தக் கல்வி மட்டும் ஒழுக்கத்தை, நியாயத்தைக் கற்பித்தி
ருந்தால், நன்கு படித்த எங்கள் சக ஆசிரியர்கள் எங்களிடம், `நீங்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குங்கள்' என்று சொல்லியிருக்க மாட்டார்கள் அல்லவா? ஆக, அடிப்படையாக நம் கல்வியிலேயே ஏதோ சிக்கல் இருக்கிறது. இது அறத்தைப் போதிக்கவில்லை என்பதை உணர்ந்தோம்.
உண்மையான கல்வி என்பது சுதந்திரத்தைப் போதிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நடைமுறையில் இருக்கும் இந்தக் கல்வி, நிறுவனங்களுக்கான அடிமைகளைத்தான் உற்பத்தி செய்கிறது என்பதை உணர்ந்தோம். அதைக் கண்கூடாகப் பார்க்கவும் செய்தோம். இதை மாற்ற வேண்டும் என்று அந்த அமைப்பில் இருந்துகொண்டே போராடிப் பார்த்தோம். ஆனால், எங்களால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை. குறைந்தபட்சம், `இப்படிப்பட்டக் கல்வியை எங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கக் கூடாது’ என்று முடிவு செய்தோம்; எங்களையும் இந்தக் கல்வி முறையில் இருந்து விடுவித்துக்கொண்டோம்; வேலையை ராஜினாமா செய்தோம்.

வேலையை விட்டபின் அட்டப்பாடியில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் கொஞ்சம் நிலத்தை வாங்கி, அங்கு ஒரு சிறு பள்ளியைத் தொடங்கினோம். பள்ளி என்றால், நகரத்தில் இருக்கும் பள்ளிகள் போன்றது அல்ல. எங்கள் பள்ளி, மாணவர்கள் கூடுவதற்கான இடம், தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான களமாக அதைக் கட்டமைத்திருந்தோம். அங்குதான் கெளதமும் படித்தான். ஆனால், பொருளாதாரச் சிக்கலால் அந்தப் பள்ளியைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அது மட்டுமல்லாமல், அங்கு படித்த மாணவர்கள் அனைவரும் வேலைக்காக திருப்பூரை நோக்கிச் சென்றார்கள். அதனால், அந்தப் பள்ளி அத்துடன் செயல் இழந்தது.”

நம் தேடல் நம்மை வழிநடத்தும்...!

மீண்டும் கெளதமுடன் நம் உரையாடலைத் தொடர்ந்தோம். “பள்ளிக்கே செல்லாமல் இது எப்படி சாத்தியமானது...” என்ற நம் கேள்விக்கு, “தேடல் என்பது நம் அனைவரின் இயல்பான குணம். அதில்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நவீனப் பள்ளிகள் அந்த இயல்பான குணத்தைச் சிதைத்துவிட்டு, இந்தச் சந்தைக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் தருகின்றன. எனக்கு இயல்பாகவே மொழிகள் மீது காதல் இருந்தது. அது மட்டுமல்லாமல், நான் இந்தியா முழுவதும் பயணித்திருக்கிறேன். அதனால், மொழிகள் என் வசமானது. வாழ்வாதாரத்துக்காக மட்டும் அல்ல, எனக்கு இணையதள வடிவமைப்புப் பிடிக்கும். அதனால், அதனைக் கற்றுக்கொண்டேன். நான் வசிக்க வீடு தேவை. அதற்காகக் கட்டடக் கலை, தச்சு வேலை எல்லாம் கற்றுக்கொண்டேன். என் தேடல்தான் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறது” என்றவரிடம், ``உங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் வாழ்ந்த சூழலும் அவ்வாறானது. ஆனால், நீங்கள் இந்தச் சமூகத்தின் விதிவிலக்கு. எல்லோரும் பள்ளிக்கே செல்லாமல் கற்றுக்கொள்வது சாத்தியமா?’’ என்று அடுத்த கேள்வியை முன் வைத்தோம்.

“ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். `கல்வி முறையே வேண்டாம்’ என்று நாங்கள் சொல்லவில்லை. `இந்தக் கல்வி முறைதான் வேண்டாம்’ என்கிறோம். இது நீதியைப் போதிக்காத கல்விமுறை. இலக்கு என்று ஒன்றை முன்வைத்து, அதை அடைபவர்களையே வெற்றியாளர்கள் என்கிறார்கள். அது எப்படிச் சரியாகும். தனிமனித உணர்வுகளை இந்தக் கல்வி முறை என்றாவது மதித்திருக்கிறதா? உயிரைக் கொல்வது மட்டும் கொலை இல்லை. உணர்வுகளைக் கொல்வதும் கொலைதானே. இந்தக் கல்வி முறை அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறது. நாங்கள் அதைத்தான் எதிர்க்கிறோம். சரி, தத்துவமான காரணங்களை விடுங்கள். இந்தக் கல்வி முறையில் படித்தவர்கள்தானே பச்சிளம் குழந்தைகளைக்கூட வன்புணர்வு செய்கிறார்கள். இந்தக் கல்வி முறையில் படித்தவர்கள்தானே பொருளாதார மந்தநிலையின்போது தற்கொலை செய்துகொள்கிறார்கள். பிறகு எப்படி இந்தக் கல்வி முறை ஆகச் சிறந்தது என்று சொல்ல முடியும்?

இந்தக் கல்வி முறையில் படிக்கும் குழந்தைகளுக்கு, தென்அமெரிக்க அமேசான் காடுகள் குறித்துத் தெரியும்; நைல் நதி குறித்து நான்கு பக்கங்களுக்கு எழுதுவார்கள். ஆனால், நம் உள்ளூர்ப் பிரச்னை, பழங்குடிகளின் சிக்கல், மேற்குத்தொடர்ச்சி மலையில் அருகிவரும் தாவர வகைகள் குறித்து நிச்சயம் எதுவும் தெரியாது. மேற்கத்திய முறையை அப்படியே உள்வாங்கிக்கொண்டு கக்குவது எப்படிச் சரியாக இருக்கும்? அது நம் பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வைத் தரும்? அதனால்தான் இந்தக் கல்வி முறையை மாற்றவேண்டும் என்கிறோம்.

என் மகன் பார்த்தாவும், மகள் ஹெரின்யாவும் எந்தப் பள்ளிக்கும் செல்லவில்லை. அவர்களுக்கு இந்தக் காட்டில் இருக்கும் மூலிகை வகைகள் தெரியும். தண்ணீரை எப்படிச் சிக்கனமாகக் கையாள்வது என்று தெரியும். இதுவெல்லாம்தானே மிக முக்கியமானவை. நாங்கள் மாற்றுக் கல்வியைப் பற்றிப் பேசினால், ‘சமூகம் மாற வேண்டும். அப்போதுதான் கல்வியில் மாற்றம் கொண்டுவர முடியும்’ என்கிறார்கள். நாங்கள், `கல்வி முறையில் மாற்றம் கொண்டு வராமல், சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முடியாது’ என்கிறோம்.”

சாரங் கலாசார பரிமாற்ற மையம்!

மாற்று முறையிலான கல்விமுறை குறித்து உரையாட, அதை வளர்த்தெடுக்க ‘சாரங் கலாசாரப் பரிமாற்ற மையம்’ எனும் பயிற்சி மையத்தை நடத்திவருகிறார் கெளதம். பாலக்காடு மாவட்டத்தில் அகலி என்னும் சிறுநகரத்தின் அருகே இருக்கிறது இந்த மையம். பெற்றோர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாற்றத்தை விரும்புபவர்களுக்கு அங்கு தொடர் பயிற்சி அளித்து வருகிறார்.

“இது பயிற்சி மையம் என்பதைவிட, உரையாடலுக்கான மையம் என்பதுதான் சரியாக இருக்கும். ஆம், இங்கு எல்லோரும் கற்றுக்கொண்டுதானே இருக்கிறோம்? குறிப்பாக, மாணவர்களுடன் உரையாடுவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அவர்கள் பல நல்ல யோசனைகளை முன்வைக்கிறார்கள்.

பல மூளைகள் இணைந்து இந்தக் கல்வி முறையைச் சிதைத்திருக்கிறது. அதில் மாற்றத்தைக் கொண்டுவருவது என்பது தொடர் ஓட்டம். அதில் நம்பிக்கையுடன் நாங்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம். நிச்சயம் மாற்றம் வரும்” என்கிறார் நம்பிக்கையோடு!