இந்தியாவின் முன்னணி போட்டோகிராஃபர் டி.ஆர்.நாராயணஸ்வாமி... உலக அழகிகள் ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி முதல் பாக்ஸர் முகமது அலி, கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ், பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சலீம் மாலிக் வரை இவரது கேமரா `க்ளிக்’கிய பிரபலங்கள் ஏராளம். ஸ்டில்லைஃப், போர்ட்ரெய்ட், அட்வர்டைசிங், ஃபேஷன்... எனச் சகல துறைகளிலும் கலந்துகட்டிக் கலக்கும் நாராயணஸ்வாமிக்கு முக்கிய அடையாளம், ஃபுட் போட்டோகிராஃபி. சென்னை, மயிலாப்பூரை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு ஈசிஆரில் பிரமாண்டமான ஸ்டுடியோ உண்டு. ஆனாலும், மனிதர் வருடத்தின் பாதி நாட்கள் பயணித்துக்கொண்டே இருக்கிறார். குறிப்பாக, வளைகுடா நாடுகளின் பிரதான உணவகங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்களின் `ஃபேமிலி போட்டோகிராஃபர்’ நாராயணஸ்வாமிதான்.

“நான் ஆட்டோமொபைல் இன்ஜினீயர். ஆனா, போட்டோகிராஃபி என்னை எங்கேயோ இழுத்துக்கிட்டுப் போயிடுச்சு. படிப்பு முடிஞ்சதும், பஹ்ரைன் போய் ஒரு நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டே ஹாபியா போட்டோ எடுத்துக்கிட்டிருந்தேன். `ஏய்... கலக்குறேடா’னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சிறகு பூட்டிவிட்டாங்க. பஹ்ரைன் அரசோட, ஹிஸ்டாரிக்கல் ஆர்க்கலாஜிக்கல் சொசைட்டி நடத்தின போட்டோகிராஃபி காம்பெட்டிஷனுக்கு, விளையாட்டா ஒரு போட்டோவை அனுப்பிவெச்சேன். எதிர்பாராத வகையில முதல் பரிசு கிடைச்சுச்சு. அதோட எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு கேமராதான் வாழ்க்கைனு களத்துல இறங்கிட்டேன்...’’ என்று சிரிக்கிற நாராயணஸ்வாமி ஃபுட் போட்டோகிராஃபி பற்றி ருசிக்க ருசிக்கப் பேசுகிறார்.

“மற்ற போட்டோகிராஃபி மாதிரி ஃபுட் போட்டோகிராஃபி பண்ண முடியாது. நிறைய அடிப்படை வேலைகள் இருக்கும். காய்கறி வாங்குறதுல இருந்து போட்டோகிராஃபர்தான் செய்யணும். அப்போதான் நினைச்ச மாதிரி படத்தைக் கொண்டுவர முடியும். சமையல் தெரியணும். சமோசா பத்தி படம் எடுக்கப்போறோம்னா, சமோசா பத்தின முழுத் தகவல்களையும் தெரிஞ்சுக்கணும். எப்படிச் செய்யணும், என்னென்ன வெரைட்டீஸ் இருக்கு... எல்லாம் தெரிஞ்சாதான், பார்த்தவுடனே சாப்பிடுற மாதிரி படம் எடுக்க முடியும். காய்கறிகளை கட் பண்ணத் தெரியணும்; ஃபுட் கார்விங் தெரியணும்.

ஃபுட் போட்டோகிராஃபியில வெஜ், நான்-வெஜ், ஹாட், கோல்ட்-னு நிறைய வெரைட்டீஸ் இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் தனித் தனி ஸ்பெஷலிஸ்ட் போட்டோகிராஃபர்ஸ் இருப்பாங்க. எதுவா இருந்தாலும், தயார் செஞ்ச 5 நிமிஷத்துக்குள்ள எடுத்தாத்தான் நல்லா இருக்கும். மாடலிங் போட்டோ ஷூட்டுக்கு எவ்வளவு கவனம் எடுப்போமோ, அந்த அளவுக்கு ஃபுட் போட்டோகிராஃபிக்கும் எடுக்கணும். அலங்காரம் ரொம்ப முக்கியம். லைட்டிங், கலர் ரெண்டும் சமமா பொருந்தணும். போட்டோவைப் பார்த்தவுடனே இது இந்த மாதிரியான சுவைகொண்ட உணவுனு உணர வைக்கணும். ஒரே நேரத்துல கண்ணையும் கருத்தையும் கவரணும்.

ஃபுட் போட்டோகிராஃபிக்கு உள்ள ஒரு அடிப்படை இலக்கணம், இருக்கிறதை இருக்கிற மாதிரி காண்பிக்கக் கூடாதுங்கிறதுதான். மிகைப்படுத்தணும்; பார்த்தவுடனே நாக்குல நீர் சுரக்கணும்.

ஃபுட் போட்டோகிராஃபிக்கு கேமரா மட்டும் போதாது. மைக்ரோவேவ் அவன், கடாய், ஃபிரை பேன், ஃபிரிட்ஜ்னு குக்கிங் ஐட்டங்களும் வேணும். சமையல்காரரைப் பக்கத்துல வெச்சுக்குவோம். ஆனா, குக்கிங் வேலையை நாங்கதான் செய்வோம். சில உணவுகளை அரை வேக்காட்டுல எடுத்தா பளிச்னு இருக்கும். சில பொருட்களை முறுகலா எடுக்கணும். எந்த உணவை, எவ்வளவு டெம்பரேச்சர்ல வேகவச்சு எடுக்கணும்னும் போட்டோகிராஃபர் தெரிஞ்சு வெச்சிருக்கணும்.

முதல்ல டெஸ்ட் ஷூட் பண்ணுவோம். ஒரு பீட்சா படம் எடுக்கணும்னா, குறைஞ்சது 50 பீட்சாவாவது செய்யவேண்டியிருக்கும். பத்து தடவை ஷூட் பண்ணினா, பதினோறாவது தடவை பெஸ்ட் ஷூட் அமையும். வாஸ்து சாஸ்திரம் மாதிரி, எதுக்குப் பக்கத்துல எதை வைக்கணும்னு பெரிய கணக்கே இருக்கு. `டேபிள் மேனர்ஸ், ஸ்பூன் மேனர்ஸ்’னு நிறைய விஷயங்கள் இருக்கு பாஸ்’’ என்கிறார் நாராயணஸ்வாமி.

ஃபுட் போட்டோகிராஃபிக்கு என்றே ஃபுட் ஸ்டைலிஸ்ட், ஃபுட் டிசைனர்ஸ் இருக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதற்கென்றே படிப்புகளும் உள்ளன. இந்தியாவில் சிலர் மட்டுமே இருக்கிறார்கள். ஓர் உணவுப் பொருளை ஸ்டைலிஷாக எப்படி வைக்க வேண்டும், எப்படி அலங்கரிக்க வேண்டும் என்பதை இவர்களே தீர்மானிப்பார்கள். இவர்கள் கால்ஷீட் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. வளைகுடா நாடுகளில் ஃபுட் போட்டோகிராஃபிக்கு என்று ஸ்பெஷல் ஸ்டூடியோக்கள்கூட வந்து விட்டதாம்.

“போட்டோகிராஃபியில சுமார் 65 துறைகள் இருக்கு. ஆனா, இளம் தலைமுறை போட்டோகிராஃபர்கள் `வெட்டிங் போட்டோகிராஃபி’யைத் தாண்டி வெளியிலயே வர மறுக்கிறாங்க. உலகத்திலேயே பெரிய இண்டஸ்ட்ரினா அது ஃபுட் இண்டஸ்ட்ரிதான். ஃபுட் போட்டோகிராஃபிக்கான தேவை பெருகிக்கிட்டே இருக்கு. ஆனா, தமிழ்நாட்டுல நாலைஞ்சு போட்டோகிராஃபர்ஸ்தான் இந்தத் துறையில இருக்கோம். மூச்சுவிட நேரமில்லாத அளவுக்கு வேலைகள் இருக்கு. நிறையப் பேரு வாங்கப்பா... நிறைய க்ரியேட்டிவிட்டி, நிறைய கனவுகளோட வாங்க... இங்கே நிறைய பணம் கொட்டிக்கிடக்கு...’’ என்று அழைக்கிறார் நாராயணஸ்வாமி.