Published:Updated:

``எங்க கல்யாணத்துல டான்ஸ் ஆடின குழந்தைங்களெல்லாம்...!'' மனதை உருக்கும் ஒரு கல்யாணக்கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``எங்க கல்யாணத்துல டான்ஸ் ஆடின குழந்தைங்களெல்லாம்...!'' மனதை உருக்கும் ஒரு கல்யாணக்கதை
``எங்க கல்யாணத்துல டான்ஸ் ஆடின குழந்தைங்களெல்லாம்...!'' மனதை உருக்கும் ஒரு கல்யாணக்கதை

``எங்க கல்யாணத்துல டான்ஸ் ஆடின குழந்தைங்களெல்லாம்...!'' மனதை உருக்கும் ஒரு கல்யாணக்கதை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அப்பாக்களின் சேமிப்பைக் கரைப்பது; அம்மாக்களின் நகைகள் பெண்ணுக்காக உருமாறுவது, குடியிருக்கும் வீட்டை விற்பது என்று நம் சமுதாயத்தில், கல்யாணங்களின் இன்னொரு பக்கம் அத்தனை இனிப்பாக இருப்பதில்லை. ஆனால், சென்னையைச் சேர்ந்த பாரத் விஜய் ரமேஷ் - தீபிகா குமாரசாமியின் கல்யாணம்பற்றிக் கேள்விப்பட்டதும், மனது 'அட... அட...!' எனப் பெரிதாக ஆச்சர்யப்பட, உடனே மணமக்களின் முகநூலில் இருந்து தொலைபேசி எண்ணை எடுத்து, வாட்ஸ்அப் காலில் தொடர்புகொண்டோம். எடுத்தது புது மாப்பிள்ளை பாரத். காதல் மனைவியுடன் சுவிட்சர்லாந்தில் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருந்தவர், குரலில் வெட்கம் இழையோட நம்மிடம் பேச ஆரம்பித்தார். 

பாரத் பேசுவதற்கு முன்னால், மற்றவர்கள் ஆச்சர்யப்படுகிற அளவுக்கு, அவர் கல்யாணத்தில் செய்த மூன்று நல்ல விஷயங்களைப் பற்றி சொல்லி விடுகிறேன்.  முதல் விஷயம், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்பு உணர்வு வீடியோ ஒன்றைத் திருமணத்தின்போது ஒளிபரப்பியது, இரண்டாவது விஷயம், திருமணத்துக்கு வந்திருந்தவர்களை என்டர்டெயின் செய்ய ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட 47 குழந்தைகள் நடனம் ஆடியது, மூன்றாவது விஷயம், உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான ஸ்டால். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாதவர்கள்கூட இதைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கிற காரணங்கள் என்ன? இதை பாரத் பெற்றோரும், மனைவி தீபிகாவும் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்? இதோ அவரே சொல்கிறார். 

``நான் இன்ஜினீயரிங் முடித்த யுஎக்ஸ் டிசைனர். கடந்த 6 வருடங்களா குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் வாலண்டியராக செயல்பட்டு வர்றேன். முதல்ல ஆரணி, திருவண்ணாமலையில் இருக்கிற கவர்ன்மெண்ட் ஸ்கூல் பிள்ளைங்களுக்கு சமூகத்தின் மீதான விழிப்பு உணர்வை ஏற்படுத்த கேம்ப் போட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம், வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிற குழந்தைகள்ல சிலருக்கும், அப்பாவை இழந்த குழந்தைகள்ல சிலருக்கும் ஸ்கூல் ஃபீஸ் கட்ட ஆரம்பிச்சேன். இதுக்கு அடுத்தகட்டமாத்தான், குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பத்தி சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன்'' என்றவர், அந்தச் சமயத்தில்தான் சந்தித்த சில சங்கடங்களையும் சொல்கிறார். 

`` மிஸ்பிஹேவ் பண்றவங்ககிட்ட குழந்தைகள் எப்படி எச்சரிக்கையா இருக்கணும்னு முதல்ல என் சொந்தக்காரப்  பசங்ககிட்ட இருந்துதான் ஆரம்பிச்சேன். ஆனா, நான் இப்படி சொல்லித் தர்றப்போ என் ரிலேட்டிவ்ஸே, 'இதெல்லாம் வேண்டாமே' அப்படின்னுதான் தடுத்தாங்க. ஆனா, நான் விடலை. இதுக்கப்புறம், சில ஸ்கூல்களுக்குப் போய் பெற்றோர் மற்றும் டீச்சர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு பற்றி சொல்லித் தர ஆரம்பிச்சேன். கூடவே, ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் குழந்தைகளுக்கு உதவிப் பண்ண ஆரம்பிச்சேன். ரெண்டு ஹெச்.ஐ.வி. குழந்தைகளைத் தத்து எடுத்து அவங்களோட மருத்துவச் செலவு, படிப்புச் செலவு ரெண்டையும் நானே பார்த்துக்கிறேன்'' என்கிற பாரத் குரலில் ஒரு தகப்பனுக்கே உரியக் கனிவு ஒலிக்கிறது. (திருமணத்தில் நடனம் ஆடிய  47 குழந்தைகளில் பாரத் தத்து எடுத்தக் குழந்தைகளும் அடக்கம்!)

இந்த நேரத்தில்தான் பாரத்துக்கு வீட்டில் பெண் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி அமைந்தவர்தான் தீபிகா. 

``எனக்கு தீபிகாவைப் பார்த்தவுடனே எங்கேயோ பார்த்த ஃபீலிங் மனசுக்குள்ள வந்துச்சு. உடனே அவங்களோட ஃபேஸ்புக் பக்கத்துக்குப் போய் பார்த்தேன். பயங்கரமான, ஆனா சந்தோஷமான ஷாக் எனக்கு. யெஸ், நான் எந்த அமைப்பில் வாலண்டியரோ அதே அமைப்புல அவங்க சனிக்கிழமை வேலைபார்க்கிறாங்க. நான் ஞாயிற்றுக்கிழமை வேலைபார்க்கிறேன். அப்புறம் என்ன, பெரியவங்க பார்த்து வைச்ச கல்யாணம் காதல் கல்யாணமாகிடுச்சு'' என்கிறார் சிரிப்புப் பொங்க. 

கல்யாணத்தின்போது நீங்கள் செய்த புரட்சிகளுக்கு, வீட்டாரின் ரியாக்‌ஷன் எப்படி இருந்தது என்றோம்.

``முதல்ல என் அம்மா அப்பாகிட்ட பேசினேன். எங்கப்பா உடனே சரின்னு சொல்லிட்டாரு. அப்புறம் தீபிகாவோட பேரண்ட்ஸ்கிட்ட பேசினேன். அவங்களும் ஓகே சொன்னாங்க. தீபிகாவை கேக்கவே வேண்டாம். நான் பாதி சொல்லிக்கிட்டு இருக்கும்போதே 'யெஸ், வில் டு இட்' அப்படின்னுட்டாங்க'' என்கிற பாரத், `நான் தனியாப் போய் குழந்தைகள் பாதுகாப்புப் பத்தியும், உடல் உறுப்பு தானம்பத்தியும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தறதைவிட, என் கல்யாண மேடையில் சொன்னா எல்லோரும் அதுக்குக் காது கொடுப்பாங்கன்னு நினைச்சேன்'' என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு