Published:Updated:

இந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்!
இந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்!

விளையாட்டு கட்டுரை - படங்கள் சு.குமரேசன்

பிரீமியம் ஸ்டோரி

'என்னுடைய மிகவும் கனத்த விடைபெறுதல்களில் இதுவும் ஒன்று!’ - இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து ஓய்வுபெற்ற நேரத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேரி கிரிஸ்டன் சொன்னது இது.

இந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்!

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா வெல்ல, டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம் வரக் காரணமாக இருந்தவர் கேரி கிரிஸ்டன். 2008 முதல் 2011 வரை அவர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த நேரத்தில், இந்திய அணி பல்வேறு வெற்றிகளைப் பெற்றது. அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியதும், இந்திய அணிக்கு மீண்டும் சோதனைக் காலம் தொடங்கிவிட்டது.

இந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்!

2008-ம் ஆண்டு, இந்திய அணியின் கோச்சாக கேரி கிரிஸ்டன் அறிவிக்கப்பட்டபோது, பலரும் புருவத்தை உயர்த்தினர். 'இதுவரை எந்த நிலையிலும், எந்த உள்ளூர்- சர்வதேச அணிக்கும் பயிற்சியாளராக இல்லாத ஒருவரை, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் என்ற காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி நியமித்தனர்? அனுபவம் இல்லாத ஒருவரை, அதுவும் வெளிநாட்டைச் சேர்ந்தவரை எப்படி நியமித்தனர்?’ என்று ஆச்சர்யப்பட்டனர்.

தன்னுடைய பயிற்சியாளர் பொறுப்பை, 2008-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி ஏற்றார் கேரி கிரிஸ்டன். அந்த நேரத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்தச் சுற்றுப்பயணத்தின் நடுவில்தான் அவர் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து அவருடைய சொந்த நாட்டை எதிர்த்து மார்ச்- ஏப்ரல் 2008-ல் இந்திய அணி விளையாடியது. அதில்தான் முழு அளவில் பயிற்சியாளர் அவதாரம் எடுத்தார் கிரிஸ்டன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இந்திய அணி 1-க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்!

அனைவரின் கருத்தையும் தவிடுபொடியாக்கி, இந்திய அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச்சென்றார் கேரி கிரிஸ்டன். தன்னுடைய பேட்டிங், தனிநபர் மேலாண்மை, திறமையான பயிற்சி, வீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டுதல் ஆகியவற்றின் மூலம் இந்திய வீரர்களைக் கவர்ந்தார். மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர் உள்பட கிரிஸ்டனைப் புகழாதவர்களே இல்லை. தன்னுடைய கடும் உழைப்பின் மூலம் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல உதவியாக இருந்தார் கிறிஸ்டன்.

இந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்!
இந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்!

இந்த நிலையில், அவருக்கான ஒப்பந்தக் காலம் முடிவுக்கு வந்தது. வெற்றிகரமான கோச் என்பதால் கிரிஸ்டனே மேலும் தொடருவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட விரும்புவதால், தன்னை மீண்டும் கோச் ஆக தொடரும்படி நிர்பந்திக்க வேண்டாம் எனக் கிரிஸ்டன் கேட்டுக்கொண்டார். 'மூன்று ஆண்டுகள் என் குடும்பத்தைப் பிரிந்திருந்தது கஷ்டமாக இருந்தது. என்னுடைய இரண்டு மகன்களுக்கும் இது இளம் வயது. இந்த நேரத்தில் நான் அவர்களுடன் இருப்பதுதான், அவர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்’ என்று கூறி விடைபெற்றார். தென்னாப்பிரிக்கா சென்றதும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கோச்சாகப் பொறுப்பேற்று, அங்கும் அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறார்.

கிரிஸ்டன் வெளியேறிய பிறகு, இந்திய அணியில் மீண்டும் தடுமாற்றம். மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட், ஒன் டே மற்றும் 20-20 போட்டிகளைக் கஷ்டப்பட்டுப் போராடி வென்றது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில் சொதப்பியது. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையுடனான ஒரு நாள் போட்டியை இந்தியா வென்றுள்ளது.

கிரிஸ்டனே... மீண்டும் வா!

இந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்!

*1993 டிசம்பர் மாதம், மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் கிரிஸ்டன் அறிமுகமானார். அவர் மொத்தம் 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 2004 மார்ச் மாதம், வெலிங்டனில் நியூஸிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியே கிரிஸ்டனின் கடைசி டெஸ்ட் போட்டியாகும்.

*1993 டிசம்பர் 14-ம் தேதி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியே கிரிஸ்டனின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தொடக்கம். இதுவரை 185 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். 2003 மார்ச் 3-ம் தேதி, டர்பனில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியே இவரின் கடைசி ஒருநாள் போட்டியாகும்.

*ஓப்பனிங் இறங்கி நெடு நேரம் அவுட் ஆகாமல் சோதிப்பார். அதிரடியாக ஆட மாட்டார். ஆனால், ரன்ரேட் உயர்ந்துகொண்டே செல்லும். பவுண்டரிகள் அடிப்பதைவிட ஓடி ஓடியே அதிக ரன்கள் சேர்த்துவிடுவார். ஆனால், விளையாடும்போது இவர் முகம் எப்போதும் கடுகடுவென இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு