பிரீமியம் ஸ்டோரி

தீபாவளி என்றால் 'தீபங்களின் வரிசை’ என்பது அர்த்தம். இப்பொழுது மூன்று நாள் ஈசுவர சந்நிதானத்தில் தீப வரிசைகளை வைக்கவேண்டும். கார்த்திகையில்தான் நாம் தீபங்களை வைக்கிறோம். தீபாவளியில் வைப்பதில்லை. வட தேசங்களில் தீபாவளியில் தீபம் வைக்கிறார்கள்.

அருள்வாக்கு

இந்தத் தீபாவளி எதற்காக ஏற்பட்டது? ஏன் நாம் இதைக் கொண்டாட வேண்டும்?

ஸ்ரீகிருஷ்ண பகவான் நரகாசுரனை வதம் செய்தார். கடைசி காலத்தில் ஸ்ரீகிருஷ்ணரால் கொல்லப்பட்டமையால் அவனுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. ''நான் இருந்த காலத்தில் லோகத்துக்கு எவ்வளவோ கஷ்டங்களை உண்டாக்கினேன். நீங்கள் என்னை சம்ஹாரம் செய்த இந்தத் தினமானது லோகத்துக்கு க்ஷேமத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் தினமாக இருக்கும்படி அநுக்கிரஹம் செய்ய வேண்டும். இருட்டு இருக்கக்கூடாது. எங்கும் வெளிச்சமாக, பிரகாசமாக இருக்க வேண்டும்'' என்று பிரார்த்தித்துக் கொண்டான். அவனுடைய பிரார்த்தனையினால் இந்தத் தீபாவளியானது ஒரு புண்ணிய காலமாக ஏற்பட்டது.

இந்தத் தீபாவளிக்கு நரக சதுர்த்தசி என்று பெயர். இதற்கு முதல் நாள் மஹாபலி தீபம். மறுநாள் குபேர பூஜை. நாம் தீபாவளியை மாத்திரம் கொண்டாடுகிறோம். வட தேசத்தில் இந்த மூன்று நாளையும் கொண்டாடுகிறார்கள்.

- மகா பெரியவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு