Published:Updated:

அதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்!
அதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்!

சுற்றுலாடாக்டர் ராஜி ராவ்

பிரீமியம் ஸ்டோரி
அதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்!

வெளிநாட்டுச் சுற்றுலா என்றால், நம்மவர்களுக்கு ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து என்றுதான் ஞாபகத்துக்கு வரும். தென் கிழக்கு ஆசியாவிலேயே 'லாவோஸ்’ என்றொரு அழகிய தேசம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்!

அதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்!

லாவோஸ், இந்தோ சீனாவில் உள்ளது. வடக்கே சீனா, மேற்கில் தாய்லாந்து, தெற்கில் கம்போடியா, கிழக்கே வியாட்நாம் சூழ அமைந்துள்ள நாடு. இது ஒரு சிறிய கம்யூனிஸ்ட் தேசம். இதன் தலைநகரம்

அதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்!

'வியன்ஷைன்’. உள்ளே செல்வதற்கான விசாவை வியன்ஷைன் விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம். 70 சதவிகிதம் மலை சூழ்ந்துள்ள, காடுகள் நிறைந்த நாடு. இங்கு ஓடும் மெக்காங் நதியின் ஒரு பக்கம் தாய்லாந்தும் மறு பக்கம் லாவோஸும் உள்ளது. மெக்காங் நதி கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் மூன்றிலும் ஓடுகிறது. இதை மா கங்கா என்று அழைக்கிறார்கள். லாவோஸ் மக்கள் சீனாவில் இருந்து மெக்காங் நதிக்கரையில் உள்ள சம்பாசாக் மாவட்டத்தில் குடியேறியுள்ளனர்.  

வியன்ஷைன் கிராமம் 2,000 வருடங்களுக்கு முன் தோன்றியது. குட்டி குட்டித் தீவுகள் இந்த மெக்காங் நதியில் உள்ளன. இங்கு சீனா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் மக்கள் எல்லோரும் வாழ்கிறார்கள். இங்குள்ள புத்த கோயில்களை வாட் என்று அழைக்கிறார்கள். புத்த மதம் பரவியிருந்தபோதிலும் மற்ற மதங்களை மதிக்கும் குணம் இங்குள்ள மக்களுக்கு உண்டு. சில இடங்களில் இந்துக் கடவுள்கள்கூட காணப்படுகின்றன. பரவலாக லாவோ பாஷை பேசப்படுகிறது.

அதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்!

13-வது நூற்றாண்டில், அரச குலத்தில் பிறந்த சாவோ பா நிகும் என்பவன் 33 பற்களுடன் பிறந்ததால், அவனை அதிர்ஷ்டமில்லாதவன் என்று சொல்லி, மெக்காங் நதியில் எறிந்துவிட்டார்கள். அவன் பிழைத்து, கம்போடியாவில் வளர்ந்து அங்கோர்வாட்டில் பிறந்த நாக கன்னியை மணந்து, படை திரட்டி வந்து, லாவோஸ் நாட்டை ஜெயித்து அரசன் ஆகி 1372 வரை லாவோஸை ஆண்டுவந்தார். இன்றும் அவர் சிலையை வியன்ஷைனில் காணலாம்.

லாவோஸ் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு மலைப்பகுதிகள் அதிகமாக உள்ளதாலும், மெக்காங் நதியினாலும் லாவோஸ் நாடு பார்க்க வெகு அழகானதாகவும் இயற்கை வளம் நிறைந்ததாகவும் உள்ளது. இந்தியர் பலர் 50, 60 வருடங்களுக்கு முன்பே இங்கு வந்து வியாபாரம் செய்துவருகிறார்கள். தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் பலர் ஆபரணக் கடைகள், துணிக் கடைகள், ஹோட்டல்கள் என நடத்திவருகிறார்கள்.

அதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்!

இங்கு பணத்தை கிப் (ரிவீஜீ) என்கிறார்கள். 8000 கிப், ஒரு டாலர். காரில் நாங்கள் சுற்றிப் பார்க்கச் சென்றபோது, மெக்காங் நதியை ஒரு பக்கமும் மறுபக்கத்தில் தாய்லாந்து எல்லையையும் பார்த்தோம்

அதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்!

.

ஃசிங் கௌவான் புத்தர் பூங்கா: முதலில் நாங்கள் மெக்காங் நதியின் கரையில் ஃசிங் கௌவான் புத்தர் பூங்காவுக்குச் சென்றோம். இந்தப் பூங்காவில் விதவிதமான புத்தர் சிலைகளை ஒரே இடத்தில் வைத்துள்ளார்கள். நுழைவாயிலுள் ஒரு பெரிய கோள வடிவில் ஒரு தூண் உள்ளது. இதன் உச்சியில் மரக்கிளை போன்ற வடிவமுள்ள ஒரு வளைவை பார்க்கிறோம். அடிப் பாகம் நரகத்தையும், நடுப்பாகம் பூமியையும், உச்சி சொர்க்கத்தையும் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

அதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்!

வாயிலில் இந்துக் கடவுளான சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் சிலைகள் உள்ளன. தவிர, பூங்காவில் விஷ்ணு, லக்ஷ்மி, கிருஷ்ணன், பிரம்மா, சரஸ்வதி, இந்திரன் எனப் பலவித இந்துக் கடவுளின் சிலைகளும் உள்ளன. படுத்திருக்கும் புத்தர் பெரியதாக உள்ளது.  

பதுக்ஸே ஆர்ச்: இது லாவோஸின் வெற்றியின் சின்னமாகக் கட்டப்பட்ட ஆர்ச். இந்தப் பூங்காவில் அமைந்துள்ள பதுக்ஸே கட்டடம், நமது 'கேட் வே ஆஃப் இந்தியா’ மாதிரி உள்ளது. பலவிதமான நீர் ஊற்றுகள் உள்ளன. இதன்மேல் ஏறிப் பார்த்தால், வியான்ஷைன் நகரம் முழுவதும் பார்க்கலாம். இங்கே மாலை வேளையில் லாவோஸின் பாரம்பரிய பாட்டும் நடனமும் நடக்கும். வெளிநாட்டு மக்கள் பலர் இங்கு வந்து உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பார்கள்.

தாகோன் ப்ரிட்ஜ்: இங்குள்ள நாம் நுகும் ஏரியில் படகுப் போட்டி நடக்கிறது. தென் கிழக்கு ஆசிய நாடுகள் எல்லாவற்றிலும் நம் கேரளாவைப் போன்று படகுப் போட்டிகள் நடைபெறுகின்றன. நவம்பர் மாதத்தில் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து நாடுகளில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

அதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்!

இது 16-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட வாட் ஓங்தூ என்ற புத்த கோயில், ஏழு தலை உள்ள டிராகன், வியன்ஷைனை விரோதிகளிடம் இருந்து காப்பாற்றியதன் நினைவாகக் கட்டப்பட்ட கறுப்பு ஸ்தூபா,  பூமியின் அடியில் உள்ள தண்ணீரில் இருந்து உப்பு தயாரிக்கும் உப்பு கிராமம், பேன் கேம் மிருகக் காட்சி சாலை ஆகியவை காண வேண்டிய முக்கிய இடங்கள்.

வியன்ஷைன் நகரம் அதனுடைய கலாசாரத்துக்கும் கலைத் திறனுக்கும் புகழ்வாய்ந்தது. பாரம்பரிய உடை மற்றும் பழக்க வழக்கங்களை இன்றும் இங்கே கடைப்பிடிக்கிறார்கள். மற்ற தென்கிழக்கு ஆசிய தேசங்களைப்போல் லாவோஸிலும் எல்லா வீட்டு வாசல்களிலும் ஒரு சிறு கோயில் போன்ற மாட அமைப்பு காணப்படுகிறது. அங்கு பித்ருக்களின் ஆவிகளுக்கு தினம் பூஜை செய்து, ஆகாரமும் நீரும் வைக்கப்படுகிறது.

அதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்!

வியன்ஷைன் நகரத்தில் சுமார் 150 இந்திய குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கே இந்தியத் தூதரகமும் உள்ளது. நம் இந்தியக் கடைகளில் மளிகைச் சாமான்கள் கிடைப்பதால், இந்தியர்களுக்கு உணவுப் பிரச்னை கிடையாது. அமைதியான, இயற்கை அழகு நிரம்பிய தேசம் என்பதால், எல்லோரும் ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டு வரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு