பிரீமியம் ஸ்டோரி
அதிசயத் தோட்டம்!

துபாய் என்றதுமே உயரமான கட்டடம் பூர்ஜ் துபாய், உயரமான ஹோட்டல்  பூர்ஜ்ஆல்அரப், செயற்கையாக உருவாக்கப்பட்ட பாம் ஜுவேரா தீவுகள்... என ஆச்சர்யமான விஷயங்கள்தான் நம் நினைவுக்கு வரும். இந்தப் பட்டியலில் இனி மிராக்கிள் கார்டனையும் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். பாலைவனப் பிரதேசத்தில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்த்ததும், 'இது என்ன மாயாஜாலம்’ என்று ஆச்சர்யத்தில் மூழ்கிப் போகிறோம். உலகின் மிகப் பெரிய தோட்டமும் இந்த 'மிராக்கிள் கார்டன்’தானாம்.  

அதிசயத் தோட்டம்!

7 லட்சம் சதுர அடியில் அமைந்திருக்கும் இந்த பிரமாண்டத் தோட்டத்தில் 4 கோடியே 50 லட்சம் வரையிலான விதவிதமான மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இங்கு செடிகளை இதயம், நட்சத்திரம், இக்ளு வீடு, பிரமிடுகள் எனப் பல வடிவங்களில் அழகழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். இதன் இன்னொரு சிறப்பு, உலகிலேயே மலர்களைக்கொண்ட மிக நீளமான சுவர் இங்கே அமைக்கப்பட்டு, அது கின்னஸ் சாதனையிலும் பதிவாகியுள்ளது.

அதிசயத் தோட்டம்!

வறண்டு கிடக்கும் பாலைவனத்தில் வானவில்லே வந்து இறங்கியிருப்பதுபோல் காட்சியளிக்கும் இந்த மிராக்கிள் கார்டனை அமைத்தவர்களைக் கண்டிப்பாகப் பாராட்டத்தான் வேண்டும். இப்போது துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பிரமாண்ட அற்புதத் தோட்டத்துக்கும் தவறாமல் வருகை புரிந்து அசந்துதான் போகிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு