பிரீமியம் ஸ்டோரி

வியக் கண்காட்சியில் ஓவியங்களைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். ஓவியங்களை ஃபிரேம் போட்டு சுவர்களில் மாட்டியிருப்பார்கள். இயற்கைக் காட்சிகள், கோயில் கோபுரங்கள் என அவை நம் கண்களுக்கு விருந்தளிக்கும். நவீன ஓவியக் கண்காட்சியாக இருந்தால், அதைப் புரிந்து ரசிக்க வேண்டியிருக்கும்.

படமா..? நிஜமா..?
படமா..? நிஜமா..?

ஆனால், தென் கொரியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்களோ வேறு ரகம்! ஆம். இந்த 'ட்ரிக் ஆர்ட் மியூஸிய’த்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள் எல்லாமே தனியே இல்லாமல், பார்வையாளரையும் ஓவியத்தின் ஒரு பகுதியாக நிற்க வைத்தது போன்று பார்ப்பவரை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. இந்த ஓவியங்கள் அனைத்துமே ஃபிரேமை விட்டு வெளியே வந்து, பார்வையாளரையும் தன்னுள் ஐக்கியமாக்கிக்கொள்வதுதான் இவற்றின் சிறப்பு! உண்மையிலேயே இவையெல்லாம் ஓவியங்களா அல்லது பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்த பொம்மைகளா எனப் பார்வையாளர்கள் இந்த 3டி ஓவியங்களைத் தடவித் தடவிப் பார்த்து வியந்துபோகிறார்கள்.

இவை ஓவியங்கள்தான். பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் ஒருவகையான கண்கட்டு வித்தையை இந்த ஓவியங்கள் நிகழ்த்துகின்றன. இந்தத் தந்திர ஓவியங்களை வரைந்தவர்கள் கொரிய ஓவியர்கள். பாதி ஓவியம், பாதி பொம்மை என அவர்களது கற்பனைத் திறமையைக் கண்டு 'ஆஹா... ஓஹோ...’ என்று பாராட்டுவதோடு நின்றுவிடாமல், பார்வையாளர்களும் அந்த ஓவியங்களுடன் நின்று போஸ் கொடுத்து, தங்கள் கேமராக்களில் பதிவு செய்துகொள்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு