பிரீமியம் ஸ்டோரி

மோனலிசாவின் மர்மப் புன்னகை!

லக மகா மென்மையான புன்னகை அரசி மோனலிஸா ஓவியத்தை வரைந்தவர் லியானர்டோ டாவின்ஸி. அதற்காக, அவரை ரொம்ப மென்மையானவர் என்று நினைத்துவிட வேண்டாம். யுத்த காலத்தில் பீரங்கிக்குள் விஷக் கிருமிகளை திரட்டிவைத்து குண்டுபோல் எதிரி நாட்டில் பீரங்கி மூலம் எறியும் யுத்த கால போர் முறையை அவர்தான் கண்டுபிடித்தார். அதுவரை, இறந்த பிராணிகளின் அழுகிய உடலை எதிரி நாட்டு எல்லை வரை சுமந்துசென்று, பலசாலிகளைக் கொண்டு உள்ளே வீசி எறிந்துகொண்டிருந்தனர். அழுகிய பிராணிகளில் இருந்து உற்பத்தியாகும் நோய் கிருமிகள் தாக்கி எதிரி அழியவேண்டும் என்பது திட்டம். குறுக்கு வழியாக, கிருமிகளை மட்டும் பாட்டிலில் அடைத்து பீரங்கிக் குண்டுபோல் எறிவதைக் கண்டுபிடித்தார் டாவின்ஸி. ஒருவேளை, மோனலிஸாவின் மர்மப் புன்னகைக்கு இது காரணமாக இருக்குமோ?!

 ‘பிட்’ஸா!

இதுவல்லவோ தானம்!

கொடுப்பது எதையும் சட்டென்று கொடுத்துவிட வேண்டும்.

இடது கையில் தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் வைத்துக்கொண்டு சிறிது சிறிதாக வலது கையில் ஊற்றி, கொடை வள்ளல் கர்ணன் எண்ணெய் தேய்த்துக் குளித்துக்கொண்டிருந்தபோது, தர்மம் கேட்டு ஒருவர் வந்தார். கர்ணன் இடது கையில் இருந்த தங்கக் கிண்ணத்தை எண்ணெயுடன் அப்படியே அதே கணம் அவருக்குத் தந்தான்.

அருகில் இருந்த அமைச்சர், 'பிரபு! இடது கையால் தானம் கொடுத்தது சரியல்ல. மரியாதை குறைவாயிற்றே!’ என்றார்.

கர்ணன் சொன்னான்... 'நீர் அமைச்சராக இருந்தும் மனித மனத்தின் இயல்பை அறியாதவராக இருக்கிறீரே! இடது கையில் இருந்து வலது கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் மாறிவிடக் கூடியதாயிற்றே மனித மனம்! அதுதான், அப்படியே கொடுத்துவிட்டேன்!''

ஒரு யோசனை!

திரும்பத் திரும்ப எவ்வளவு காலத்துக்குத்தான் உண்ணாவிரதம், மௌன விரதம் அனுஷ்டிப்பது?

காலத்துக்கேற்ப விரதங்களை மாற்றிக்கொண்டால் என்ன?

சினிமா போகாத விரதம், டி.வி. பார்க்காத விரதம், கச்சேரி போகாத விரதம், ஓட்டலுக்குப் போகாத விரதம், காபி குடிக்காத விரதம், காரில் ஏறாத விரதம், புகைப் பிடிக்காத விரதம்... இந்த மாதிரி விரதங்களை அனுசரிக்கலாமே?!

ராங்கல்ல... ரைட்டு!

ராங் நம்பர்களிடமும் ராங்கா பேசாதீங்க!

யாருமே உங்களைக் கூப்பிடாத நாளில் நீங்களும் உங்கள் டெலிபோனும் உயிருடன் உள்ளீர்கள் என்பதை அதுதானே சொல்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு