வேங்கடகிருஷ்ணனாக குடும்பத்துடன் இறைவன் அருளும் திருத்தலம். திருமுகத்தில் போரினால் ஏற்பட்ட அம்புகளின் தழும்புகளுடன் திகழும் உற்சவர் ஸ்ரீபார்த்தசாரதி. திருமங்கை மன்னன் மற்றும் பேயாழ்வார் பாடிய புண்ணிய திருத்தலம்... ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீவரதர், ஸ்ரீராமன், ஸ்ரீரங்கநாதர் ஆகியோர் ஒருசேர அருளும் திருவிடம்... என்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த சிறப்புகளுக் கெல்லாம் சிறப்பு சேர்க்கிறது, சித்திரையில் சிறுவர்கள் நிகழ்த்தும் வைபவம்.

சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும் 10 நாட்களும் வீதியுலா காண்பார் பார்த்தசாரதி. அவரை தரிசிக்க வீதியில் கூடும் அன்பர்கள், பெருமாளின் வாகனம் கடந்து சென்ற பிறகும் ஆவலுடன் காத்திருப்பார்கள்... ஏன் தெரியுமா? சற்று இடைவெளி விட்டு... பெருமாள் எந்த வாகனத்தில், எந்த அலங்காரத்தில் அன்று எழுந்தருள்கிறாரோ, அதே போன்ற அமைப்பிலான ஒரு சிறிய வாகனத்தில், அதே அலங்காரத் திருக்கோலத்துடன், சிறுவர்கள் புடைசூழ 'சின்னப் பெருமாள்’ பின் தொடர்ந்து வருவார். இவருக்கு அலங்காரம் செய்வது முதல் வீதியுலா அழைத்து வருவது வரை எல்லாவற்றையுமே செய்பவர்கள் சிறு வர்கள்தான்.

யானை வாகனம் (பெரிய பெருமாள்)

யானை வாகனம் (சின்ன பெருமாள்)

ஸ்ரீபார்த்தசாரதி யானை வாகனத்தில் வருகிறார் என்றால், சின்னப் பெருமாளும் யானை வாகனத்திலேயே எழுந்தருள்வார். கோயில் பட்டர் ஒருவர் வெள்ளை அங்கி அணிந்தபடி ஸ்ரீபார்த்தசாரதியின் பின்புறம் வெண்சாமரம் வீசியபடி வர, சின்னப் பெருமாளின் பின்புறமும் சிறுவன் ஒருவன் வெள்ளை அங்கி அணிந்து வெண்சாமரம் வீசி வருவான்! பெரிய பெருமாள் வீதியு லாவின்போது பக்தர்களுக்குத் தரப்படும் சடாரி, கற்பூர ஆரத்தி, புஷ்பம், தீர்த்தம் ஆகிய அனைத்தும், சின்னப் பெருமாள் வீதி புறப்பாடு வரும்போதும் பக்தர்கள் கேட்பதற்கு இணங்கச் சிறுவர்களாலும் வழங்கப்படுகிறது! வீதி புறப்பாட்டின்போது எப்படி பெரிய பெருமாளை தொட்டு வணங்கக்கூடாதோ... அதே போல், சின்னப் பெருமாளையும் யாரும் தொட்டு வணங்க அனுமதி கிடையாது. குழந்தைகளின் ஒரு விளையாட்டு வைபவமாக அல்லாமல், பெருமாளுக்கு ஆத்மார்த்தமாக தாங்கள் நிகழ்த்தும் உற்சவமாகவே சிறுவர்கள் இதைக் கருதுவதால், ஆச்சார அனுஷ்டானங்களையும் பெரிய பெருமாளுக்குச் செய்வதுபோல் அப் படியே கடைப்பிடிக்கிறார்கள்.

''பார்த்தசாரதியின் மீதான பக்தியால் முன்பு விளையாட்டாக ஆரம்பித்தது, இப்போது பெரும் வைபவமாக வளர்ந்துள்ளது!''- என தனது மலரும் நினைவுகளை பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார் குளக்கரை வாசு.

''சின்ன வயசுல கும்பகோணத்தில் இருந்தோம். அங்கே உற்சவம் ரொம்பவும் அமர்க்களமா நடக்கும். ஆடி அசைஞ்சு பெருமாள் வீதியுலா வருவதைப் பார்க்கும்போது, நாமும் இந்த மாதிரி வைபவம் நடத்தணும்னு ரொம்ப ஆசையா இருக்கும். நாங்கள் சென்னைக்கு வந்த பிறகு, 1962-ல் அதற்கான வாய்ப்பை பார்த்தசாரதி பெருமாள் எனக்கு அருளினார்.

நாங்க சின்னப்பசங்களா ஐந்து ஆறு பேர் ஒண்ணு சேர்ந்து, பெரியவங்ககிட்ட போய் எங்க விருப்பத்தைச் சொன்னோம். அவங்க உதவியோட சின்னதா ஒரு பெருமாள் பொம்மை செஞ்சு வீதி புறப்பாடு செய்தோம். நல்ல வரவேற்பு. எல்லோரும் பாராட்டினாங்க. அது, தலைமுறைகளைக் கடந்து இன்று வரைக்கும் தொடருது'' என்கிறார் குளக்கரை வாசு.

இந்த உற்சவத்துக்கான செலவுகளுக்கு, சிறுவர்கள் பிரம்மோற்சவத்தின் போது உண்டியல் வைத்து வசூலிக்கிறார்கள். ஸ்ரீபார்த்தசாரதிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல இந்த சின்னப் பெருமாள். அவரைப் போன்றே முகத்தில் வடுக்களுடன் இரு புறமும் தேவியர்புடைசூழக் காட்சி அளிக்கிறார். இவரது விக்கிரகம், வஜ்ரம் மற்றும் ரசாயனக் கலவைகளால் ஆனது. கை, பாதம் மற்றும் திருமுகம் ஆகியவை செம்பினால் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது.

உற்சவம் முடிந்தபிறகு சின்னப் பெருமாளுக்கு குளக்கரை வாசுவின் வீட்டிலேயே தினமும் பூஜை, புனஸ்காரங்கள் நடக்கின்றன.

இந்த உபசாரங்களும் கோயிலில் நிகழும் நியதியை அடியொற்றியே நடைபெறுகிறது. அபிஷேகம் மட்டும் கிடையாது. பக்தி செய்வதில் வயது பேதம் கிடையாது என்பதை நிரூபித்து வருகிறார்கள், இந்த பக்த வாண்டுகள்.