சொந்த ஊருக்குப் போவது என்றாலே, நமக்கு ஆனந்தமாக இருக்கும். இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் நாடு கடந்து சென்ற குடும்பத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறார், சாரதாதேவி.

''பர்மாவில் வாழ்ந்தபடி புதுக்கோட்டை மீது காதலைப் படர விட்டிருந்தவள் நான். பர்மாவில், 'நீ யார்’ என எவர் கேட்டாலும், 'நான் புதுக்கோட்டைக்காரி... தொண்டைமானின் தோள்கள் களமாடிய மண்ணின் மகத்துவக்காரி...’ என்பேன். அந்த அளவுக்குப் புதுக்கோட்டை மீது எனக்கு அளவிட முடியாத அன்பு!'' - கண்கள் சிலிர்க்கப் பேசுகிறார் சாரதா தேவி.

சாப்ட்வேர் இன்ஜினீயரான சாரதாதேவி, ''ராணுவக் கண்காணிப்புகள் அதிகம் உள்ள பர்மாவில் பிற நாட்டு விஷயங்களைப் பற்றிப் பேசுவதோ ஆதங்கப்படுவதோ பிரச்னைக்குரியது. ஆனாலும், அதற்கெல்லாம் பயப்படாமல் ஈழத்துப் போர்க் காட்சிகளையும், மக்களின் துயரங்களையும் குறுந்தகடாக்கி பர்மாவில் உள்ள தமிழ் மக்களிடம் கொண்டுபோய்க் கொடுத்தேன். என் தாய் மண்ணில் கால் வைக்காமல் இருக்க முடியாது என்ற அளவுக்கு என் நெஞ்சில் ஆதங்கம் தோன்றவே, அம்மாவிடம் அடம் பிடித்து அழுதேன். 'போய் வாடி புதுக்கோட்டைக்கு. முடிந்தால், நமது அப்பன்கள் வாழ்ந்த பூமியின் மண்ணை அள்ளி வா’ எனச் சொல்லி அனுப்பினார்.

ஈழத்தில் தமிழர்களின் உயிரை அழிக்கிறார்கள். பர்மாவில் தமிழர்களின் உணர்வை அழிக்கிறார்கள். 'நான் தமிழன்’ என அடையாளப்படுத்திக் கொள்ளும் தைரியமும், இன உணர்வும் அங்கே எவரிடமும் இல்லை. தமிழன் என்றாலே அவமானம் என்கிற எண்ணம்தான் அங்கே நிலவுகிறது. பர்மியக் குடும்பங்களில் தமிழர்களை 'கலா’ என்றுதான் சொல்வார்கள். கலா என்றால் கறுத்தவன், கெட்டவன் என்று பொருள். சிறுகுழந்தைகள் அழுதால், 'கலாகிட்ட பிடிச்சுக் கொடுத்திடுவேன்’ என்பார்கள். இந்த சங்கடத்தால், பர்மாவில் உள்ள தமிழ்க் குடும்பத்தினர்கூட தமிழில் பேசிக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொள்ள விரும்பிய நான், அதற்கான புத்தகங்களைக்கூட வாங்க முடியாமல் திண்டாடினேன்.

இத்தனைக்கும் பர்மாவில் 20 லட்சத் துக்கும் அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். மருத்துவம், பொறியியல் படிப்பை முடிக்கும் தமிழ் இளைஞர்கள் குடியுரிமைக்காக பர்மா பெண்களை மணந்து கொள்கிறார்கள். பர்மியக் குடும் பங்களில் சம்பந்தம் வைத்துக்கொள்வதைப் பெருமையாக நினைக்கிறார்கள். பல்லாண்டு காலம் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்ததால், வெளி உலக நடப்புகளும், தமிழர் இனப் பெருமைகளும் எங்கள் மக்களுக்குப் புரியாமல் போய்விட்டன. இலங்கையில் போர் நடந்த காலத்தில் ஈழம் தொடர்பான நிகழ்வுகளைப் பார்த்துத் துடித்த நேரத்தில்தான், 'என் மண் தமிழ்நாடு!’ என்ற உணர்வு பீறிட்டு எழுந்தது.

சீமான் பேச்சுகள் அடங்கிய பல குறுந்தகடுகளை நிறையக் கேட்டு இருக்கிறேன். தமிழகம் வந்ததும் முதல் ஆளாக அவரை சந்தித்தேன். தமிழர்கள் பர்மியர்களை திருமணம் முடித்து இனத்தைச் சிதைக்கும் கலப்பினங்கள் பர்மாவில் நிறைய நடப் பது குறித்து அவரிடம் ஆதங்கமாகச் சொன்னேன்.

'இன்னமும் இனம் சார்ந்த போராட்டங்களை இளைய தலைமுறை கையில் எடுக்கவில்லை. இளைய தலை முறையின் ஒருமித்த கைகோப்பால் நிச்சயம் தமிழ்த் தலைமுறை செழிக்கும் காலம் உருவாகும்!’ என நம்பிக்கையோடு சொன்னார். புதுக்கோட்டை மண்ணில் கால்வைத்தபோது என் கால்கள் சிலிர்த்துப்போயின. என் தாயைத் தொடர்புகொண்டு, 'அம்மா, நம்ம மண்ணில் இருக்கேன்!’ என ஆர்வத்தோடு சொன்னேன். பல நாட்கள் தேடி அலைந்ததில் நான்கு தலை முறைகள் தாண்டிவிட்ட என் உறவுகளைக் கண்டுபிடிப்பது சிரமம் என்பது புரிந்து விட்டது. ஆனாலும், எனக்கு அதனால் எவ்விதக் கவலையும் இல்லை. இங்கே இருக்கும் எல்லோருமே என் உறவுக்காரர்கள்தானே...'' - சிலிர்ப்பும்

சிரிப்புமாகக் கேட்கிறார் சாரதாதேவி.