Published:Updated:

குள்ளர் குகைகள்!

குள்ளர் குகைகள்!
பிரீமியம் ஸ்டோரி
குள்ளர் குகைகள்!

பழைமை: கே.ராஜாதிருவேங்கடம், கோ.செந்தில்குமார் படங்கள்: பா.கந்தகுமார்

குள்ளர் குகைகள்!

பழைமை: கே.ராஜாதிருவேங்கடம், கோ.செந்தில்குமார் படங்கள்: பா.கந்தகுமார்

Published:Updated:
குள்ளர் குகைகள்!
பிரீமியம் ஸ்டோரி
குள்ளர் குகைகள்!

செல்வத்தைப் பெருக்கக் கூடிய ஓர் அடி உயரம் கொண்ட குள்ள மனிதர்கள் கொல்லிமலைக் காடுகளில் இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு பரபரப்பு கிளம்பியது. 

'குள்ள மனுசனை வாங்கிட்டு வந்து வீட்டில் வளர்த்தால் பணம் குவியும்’ என்று கொல்லிமலை மந்திரவாதிகள் சிலர் கிளப்பிவிட... கேட்கவா வேண்டும்? தமிழகத்தின் பல திசைகளில் இருந்தும் குள்ள மனிதனைத் தேடி கொல்லிமலைக்குப் படையெடுத்து காடு, மலைகளில் அலைந்தனர்.

இன்னும் சில மந்திரவாதிகளோ, 'குள்ள மனுசனைப் பிடிச்சித் தர்றோம்’ என்று சொல்லி ஏமாற்றி பணம் பறித்தனர். பணம் கொடுத்தவர்கள் ஒரு பக்கம் ஏமாந்து நிற்க... காடு, மலைகளில் சுற்றியவர்களும், குள்ள மனுஷனைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி வந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குள்ளர் குகைகள்!

இந்தப் பரபரப்புக்கு பிறகு, இப்போது திருவண் ணாமலை மாவட்டத்தில் குள்ளர்கள் வாழ்ந்த குகை இருப்பதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். போளூரில் இருந்து, ஜவ்வாது மலை என்று அழைக் கப்படும் ஜம்னாமரத்தூர் மலையில் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. அமிர்திக் காடுகளைக் கடந்து செல்லும் வழியில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது வாழ்தொம்பை கிராமம். அங்கு இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான பாதையில் நடந்தால், மலைக்கொள்ளை என்ற கிராமம் வருகிறது. இங்குதான் குள்ளர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் குகைகள் இருக்கின்றன. வாலிப்பாறை என்ற கிராமத்திலும் ஏராளமான குகைகள் காணப்படுகின்றன.

குள்ளர் குகைகள்!

குள்ளர்களின் குகைகளைப்பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களோ, ''இந்தக் குகைகள் எல்லாம் நான்கு அடி உயரம் கொண்டதாகவே இருக்கின்றன. கற்காலத்தில் வாழ்ந்த குள்ள மனிதர்கள் தங்களது

குள்ளர் குகைகள்!

உயரத்துக்கு ஏற்ப இந்தக் குகைகளை வடிவமைத்து இருக்கிறார்கள். பாறைகளை உடைத்தோ, குடைந்தோ இப்படி அமைக்கப்படவில்லை. மலையில் இருக்கும் கற்களை அழகாக அடுக்கி, குகைபோன்ற அமைப்பில் வீடுகளை உருவாக்கி இருக்கிறார்கள். மூன்று பக்கமும் ஒரே மாதிரியான பாறைகளை நிறுத்தி, அதற்கு மேல் பகுதியில் ஒரு தட்டையான கல்லைவைத்து கூரை அமைத்து இருக்கிறார்கள். நுழைவாயில் பகுதிக்கு அலிபாபா குகைபோல ஒரு கல் வைத்திருக்கிறார்கள். தேவைப்படும்போது குகையைத் திறந்துகொள்ளவோ, மூடிக்கொள்ளவோ முடியும். இயற்கை சீற்றத்தில் இருந்து இருப்பிடத்தைக் காத்துக்கொள்ள சின்ன கற்களை குவித்து வைத்திருக்கிறார்கள். தவிர, சிறு பாறாங்கற்களால் சுமார் நான்கு அடி உயரத்துக்கு காம்பவுண்ட் அமைத்து இருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. அதைவிட ஆச்சர்யம்... குள்ள மனிதர்கள், பெரிய பாறைகளை எப்படித் தூக்கி வந்து குகையைக் கட்டினார்கள் என்பதுதான்!

திருவண்ணாமலை மாவட்டம், தொண் டைமானூரிலும், சேலம் மாவட்டம் ஏற்காடு மலைத் தொடர்களிலும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக் காடுகளிலும் இதுபோன்ற குகைகள் காணப் படுகின்றன. இயல்பான உயரம் கொண்ட மனிதன் நிச்சயம் இந்தக் குகைக்குள் வசிக்க வாய்ப்பே இல்லை. மனிதர்களைத் தவிர, இப்படி ஒரு குகையை வடிவமைக்க நிச்சயம் எந்த விலங்குகளாலும் முடியாது. அதை வைத்துபார்க்கும்போது சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிகளில் குள்ள மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடிகிறது'' என்று சொல்கிறார்கள்.

சென்னை பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையின் உதவி பேராசிரியர் பாரி முரு கனிடம் பேசினோம். ''நீங்க சொல்ற குகை போன்ற அமைப்புடைய இடங்களை நானும் பார்த்திருக்கேன். எங்களோட ஆராய்ச்சியின் படி மனிதர்கள் இறந்த பிறகு அவர்களை எரிப் பதற்காக அவற்றை உருவாக்கி இருக்கிறார்கள். எரித்த பிறகு அவர்கள் பயன்படுத்திய பொருட்களை அந்த குகைக்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இதனால் அந்த குகைக்குள் குள்ளர்கள் வாழ்ந்ததாக சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட் டத்தில் இது போல நிறைய இடங்களில் இருக்கிறது'' என்று வேறு கோணத்தில் சொல்கிறார்.

எப்படி இருந்தாலும் இந்தக் குகைகள்பற்றிய பெருமைகள் தெரியாததாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் இவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இவற்றின் பெருமை அறிந்து பாதுகாக்கவும், ஆராய்ச்சி செய்ய வும் முன்வந்தால், அரிய பொக்கிஷமே அரசுக்குக் கிடைக்கலாம்.

குள்ளர் குகைகள்!

கின்னஸ் குள்ளர்கள்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பிராந்திய நகரான சித்தாங்கனில் வசிக்கும் ஜான்ரே என்ற 18 வயது இளைஞரின் உயரம் 59.93 செ.மீ.தான்! உலகிலேயே குள்ளமான மனிதர் என கின்னஸ் ரெக்கார்டில் ஜான்ரேதான் இடம் பிடித்து இருக்கிறார். ஜான்ரேவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். சார்தான் வீட்டுக்கு மூத்தப் பிள்ளை!

ஹெடிஸ்கொக்காமென் என்பவர்தான் உலகின் மிகக் குள்ளமான பெண். துருக்கி நாட்டில் கதிரிலி நகரத்தைச் சேர்ந்த அம்மணிக்கு 21 வயது. உயரம் என்னவோ இரண்டு அடிதான். ''ஆரம்பத்தில் குள்ளமா இருக்கேன்னு என்னை எல்லோரும் அவமானப்படுத்தினாங்க. இன்னிக்கு அதுவே எனக்கு அங்கீகாரமாக மாறிடுச்சு. எனக்கு என்று இனி யாரும் பிறக்கப் போவது இல்லை. கண்டிப்பா எங்காவது ஒரு மூலையில என் ராஜகுமாரன் பிறந்திருப்பான். என்னைத் தேடி வருவான்'' என்று காதலாகி கசிந்து உருகுகிறார் ஹெடிஸ்கொக்காமென்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism