Published:Updated:

நேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்!

நேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்!
பிரீமியம் ஸ்டோரி
நேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்!

கலை: ரேவதி, படங்கள் /பொன்.காசிராஜன்

நேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்!

கலை: ரேவதி, படங்கள் /பொன்.காசிராஜன்

Published:Updated:
நேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்!
பிரீமியம் ஸ்டோரி
நேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்!

குழந்தைகளின் ரசனை வித்தியாசமானது... புதுமையானது. அவர்களைப் புரிந்து கொள்ள முடிந்த காரணத்தால்தான் இத்தனை வருடங்களாக இந்த காஸ்ட்யூம் சென்டரை நடத்த முடிகிறது...'' சிரிக்கிறார் ரபீந்திரகுமார். ''மாறுவேடப் போட்டிக்காக அவர்கள் முயல் குட்டி, கரடி, மான், மயில் என்று உடைகள் கேட்பார்கள். 'மானுக்கு கொம்பு பெரிசா வேணும்... பச்சை நிறத்தில் முயல் டிரெஸ் இருக்கா?’ என்பது போன்று நாம் எதிர்பார்க்காத கேள்விகளை எல்லாம் வீசுவார்கள். குழந்தைகளது திருப்திக்கு உடைகளைத் தயார் செய்து கொடுத்ததும், அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம்தான் எங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரம்!'' என்கிறார். 

சென்னை கோடம்பாக்கம் லிபர்டி பாலத்துக்குக் கீழே இருக்கும் இவரது, 'கே.நாதமுனி அண்ட் சன்ஸ் நிறுவனம்’ நிறுவனத்தில் கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் என்று எந்த விசேஷ நாட்கள் வந்தாலும், முந்தைய தினங்களில் திருவிழா கூட்டம்தான்.

ஒரு நூற்றாண்டைக் கடந்து நிற்கும் இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் கே.நாதமுனி. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தொடங்கி எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் படங்களுக்கு எல்லாம் காஸ்ட்யூம் சப்ளை செய்தவர். அவரின் பேரன்தான் ரபீந்திரகுமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்!

''1910-ம் ஆண்டு சௌகார்பேட்டை, ஒத்தவாடை தியேட்டருக்குப் பக்கத்தில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார், எங்கள் தாத்தா நாதமுனி. இப்போதும் அந்த நிறுவனம் இருக்கிறது, அதை என் அண்ணன் உதயகுமார் கவனிக்கிறார். 2002-ம் ஆண்டு லிபர்டி பாலத்துக்குக் கீழே இந்த 'காஸ்ட்யூம் சென்டர்’ நான் தொடங்கினேன். எங்கள் தாத்தா தைத்துக் கொடுத்த உடைகள்தான் அந்தக் காலத்தில் தெருக்கூத்து, நாடகங்கள், சினிமாக்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. கலைவாணர், தங்கவேலு, எம்.ஆர்.ராதா போன்ற பிரபலமான நடிகர்களுக்கு காஸ்ட்யூமராக இருந்து, நிறைய உடைகள் தைத்துக் கொடுத்து இருக்கிறார்.

நடனக் குழுக்கள் அணிவதற்கு ஒரே மாதிரியான ஆடைகள் கிடைப்பதற்கு அரிதாக இருக்கவே, முழுக்க முழுக்க அதில் கவனம் செலுத்தினார் தாத்தா. ராஜா, ராணி உடைகள், வாள், கேடயம், நகைகள் என்று சினிமாவுக்குத் தேவையான அத்தனையும் தயாரித்துத் தருவார். 'எது ஒண்ணும் இல்லைங்கிற பேச்சுக்கே, நாதமுனிகிட்ட இடமில்லை’னு சொல்ற அளவுக்குப் பேர் சம்பாதிச்சவர். சில நடிகர், நடிகைகளைக் கண்களால் பார்த்தே, சரியான அளவில் உடைகள் தைத்துத் தருவார். அதனால் சினிமா உலகில் நல்ல பெயர் கிடைத்தது.

நேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்!

வடிவேல்

அவர் காலத்துக்குப் பின் என் அப்பா சிட்டிபாபு எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு மர சாமான்கள், சுவர் அலங்காரங்கள் போன்ற செட்டிங்க்ஸ் அமைப்புகளில் இறங்கினார். இதுக்காக பர்மா, சிலோன் என்று பறந்துகொண்டே இருந்தார். அப்பா காலத்துப் பொருட்களை சமீபகாலம் வரை பொக்கிஷமாக வைத்து இருந்தோம். ஆனால், தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை...'' என்று மலரும் நினைவுகளில் மூழ்கும் ரபீந்திரகுமார்,

''மூன்று வயசு மழலைகளில் இருந்து முதியவர்கள் வரைக்கும் அனைத்து விதமான விழாக்களுக்கும் தேவையான உடைகள் வைத்து இருக்கிறோம். பாரதியார், சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், நேரு போன்ற தலைவர்களோட உடைகளுக்கான மெட்டீரியல்கூட, அவர்கள் பயன்படுத்திய துணி போன்றே இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவுமே மெனக்கெடுகிறோம்.

நேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்!

ரபீந்திரகுமார்

நேதாஜி, ஜான்சி ராணி, பாரதியார் போன்றவர்களின் உடைகளுக்கு இப்போது ரொம்பவும் டிமாண்ட் உண்டு. அதேபோன்று, கிறிஸ்துமஸ் தாத்தா, கிருஷ்ணர், ராதா, லட்சுமி, சரஸ்வதி போன்ற வேடங்களுக்கான உடைகள் எப்போதுமே தேவைப்படும். நிறையப் பேர் கடைசி நேரத்தில் வந்து நிப்பாங்க... அவங்களுக்குத் தேவையானதை செய்துதருவது கடினம். கொஞ்சம் முன்கூட்டியே வந்தால், என்ன தேவை என்றாலும் கண்டிப்பாக நிறைவேற்றிக் கொடுக்க முடியும்!

நேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்!

ஒரு காஸ்ட்யூம் டிஸைனரா என்னை மிகவும் கவர்ந்தது, வடிவேலு நடித்த, '23-ம் புலிகேசி’ படம்தான். அந்த மீசை, தலைப்பாகை, உடை எல்லாமே வடிவேலுக்கு ரொம்பவும் ஃபர்பெக்டா அமைந்தது...'' என்று அவர் சொல்லி முடிக்கும்போதே... ''எங்க ஸ்கூல் விழாவுக்கு இந்தக் குழந்தைகளுக்கு நரிக் குறவர் - குறத்தி டான்ஸ்க்காக டிரெஸ் வேணும்'' என்றபடியே ஒரு டீச்சர் வர, அவர் கையைப் பிடித்தபடி ரோஜாப் பூக்களாக மழலைப் பட்டாளம் உள்ளே நுழைந்தது! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism