Published:Updated:

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு!

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு!
பிரீமியம் ஸ்டோரி
சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு!

சந்திப்பு: எஸ்.சந்திரமௌலி

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு!

சந்திப்பு: எஸ்.சந்திரமௌலி

Published:Updated:
சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு!
பிரீமியம் ஸ்டோரி
சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு!

ராமச்சந்திர குஹா - முன்னணி எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர், பொருளாதார மேதை, பல்கலைக்கழகப் பேராசிரியர், கிரிக்கெட் ஆய்வாளர் என்று சொல்லிக்கொண்டே போகுமளவு பன்முகத் திறமையாளர். இந்திய வரலாற்று ஆராய்ச்சிக்கு நிதி உதவி செய்யும், 'நியூ இந்தியா ஃபவுண்டேஷன்’ அறக் கட்டளையின் தலைவர். மத்திய அரசினால் பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். அவர் எழுதிய, 'இந்தியா - காந்திஜிக்குப் பிறகு’, 'நவீன இந்தியாவின் சிற்பிகள்’ இரண்டும் மிகப் பிரபலம். அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நம் முதல் கேள்வி - 

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு!

வரலாற்று ஆராய்ச்சியாளர் ராமச்சந்திர குஹா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காந்திஜி படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்-தான் காரணம் என குற்றம் சாட்டப்படுவதை ஆர்.எஸ்.எஸ்-ஸும், பி.ஜே.பி-யும் வன்மையாக மறுக்கின்றன. இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர் என்ற முறையில் இந்த சர்ச்சை குறித்து உங்களது கருத்து என்ன..?

மகாத்மா காந்தி படுகொலை என்பது, கோட்சே என்ற ஒரு தனி நபரது செயல். சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் வலதுசாரி, ஹிந்து அமைப்புகளின் வளர்ச்சி நிகழ்ந்தது. பிரிவினையின்போது நிகழ்ந்த மதக்கலவரம் போன்ற சமூகக் காரணங்கள் அவரை அந்தக் காரியத்தை செய்யத் தூண்டின என்றாலும் கூட, அது ஒரு தனி நபர் செய்த குற்றமாகவே பார்க்கப்பட்டு, கோட்சேவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எனவே, மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைக் குற்றம் சொல்ல முடியாது.

இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிடுமாறு காந்திஜி கூறினார். ஒரு வேளை அப்படி காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட்டிருந்தால்... இந்திய அரசியலில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்?

'அன்று அப்படி நடந்திருந்தால்...’ என்ற உத்தேச அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளிப்பது சரியில்லை. சுதந்திர இந்தியாவில், பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு, பல்வேறு ராஜதானிகளை இந்திய அரசின் கீழ் கொண்டு வருவது, அன்னிய நாட்டு உறவுக் கொள்கை, தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம் என பல முக்கியமான பணிகளைச் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் காங்கிரஸ் கட்சி கலைக் கப்பட்டிருந்தால், இந்திய அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் உருவாகி இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு!

சஞ்சய் காந்தி - இந்திரா காந்தி

இன்று மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல், மத்தியில் எந்த தேசியக் கட்சியும் ஆட்சி செய்யமுடியாது என்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?

இந்திய மக்களிடம் ஏகோபித்த ஆதரவு பெற்றிருந்த காங்கிரஸ் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்திதான் மாநிலக் கட்சிகள் தோன்றவும், வளரவும் வழி வகுத்தது. இன்று மாநிலக் கட்சிகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டன. அடுத்த சில ஆண்டுகளில், மத்தியில் கூட்டணி ஆட்சி மட்டுமே சாத்தியம்!

இந்திய வரலாற்றைப் பதிவு செய்த ஆராய்ச்சியாளர் என்ற முறையில் இந்திரா காந்தி காலத்து நெருக்கடி நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் என்ற நோக்கத்தில் இந்திரா காந்தி எடுத்த தவறான முடிவு அது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த உடனே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு ஒருவரை பிரதமர் ஆக்கிவிட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருக்கலாம். பயம், பதற்றத்தின் தாக்கத்தில் அப்படி தவறாக முடிவு எடுத்து விட்டார்.

இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?

நேருவைத்தான் குறிப்பிடுவேன். அது கூட 1947 முதல் 1958 வரைதான். அவரது கடைசி நாலைந்து வருட ஆட்சி விமர்சனத்துக்கு உரியது. சீனப் பிரச்னையை அவர் சரியாகக் கையா ளவில்லை. கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசை டிஸ்மிஸ் செய்தது மாதிரியான சில தவறுகளைச் செய்தார். குறுகிய காலமே பதவியில் இருந்தாலும், லால் பகதூர் சாஸ்திரி சிறப்பாகச் செயல்பட்டார். இன்னும் நாலைந்து ஆண்டுகள் அவர் உயிரோடு இருந்தி ருந்தால், ஒரு மாறுபட்ட இந்தியாவைப் பார்த் திருக்கலாம்.

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு!

மன்மோகன் சிங்கை பலவீனமான ஒரு பிரதமர் என பி.ஜே.பி. விமர்சிப்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

மன்மோகன் சிங் அடிப்படையில் ஒரு பொருளாதார வல்லுனர். அவருக்கு அரசியல் அடித்தளம் கிடையாது. அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குப் போனதில்லை. அவர் வழி - ராஜ்யசபா வழி. அவர் பிரதமர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தாலும், சோனியா காந்தியின் தலையீடு இல்லாமல், அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. மன்மோகன் சிங் நல்லவர், நேர்மையானவர். ஆனால், சிறந்த அரசியல் தலைவராக இருக்க முடியவில்லை.

இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளது. இன்னொரு பக்கம் விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கிறது. ஏன் இந்த முரண்பாடு?

இன்னமும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. பொருளாதார வளர்ச்சி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக இல்லை. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒருசேர முன்னேறும்படி திட்டங்கள் வகுக்கப்படவில்லை. நாட்டின் வட கிழக்குப் பகுதிகளும், ஆதி வாசிகள் வாழும் பகுதிகளும் பின்தங்கியுள்ளன. இந்த சமுதாய இடைவெளியை அகற் றினால்தான் இப்படிப்பட்ட முரண்பாடுகள் தீரும்.

நேரு குடும்பத்தை விட்டால் தலைமைக்கு யாரும் தகுதி இல்லையா?

சாஸ்திரி ஐந்து ஆண்டுகள் பிரதமராக இருந்திருந்தால், அடுத்து இந்திராகாந்தி பிரதமராகி இருக்கமாட்டார். இந்திரா காந்தி பிரதமராகவில்லை என்றால், ராஜீவ் காந்தி பிரதமராகி இருக்க மாட்டார். அப்போது சோனியா காந்தி, ராகுல் இருவரும் அரசியலுக்கு வந்திருக்கவே மாட்டார்கள். இவை எல்லாம் எதிர்பாராத விபத்துகள்... விபத்தின் தொடர்ச்சிகள். தலைமை, ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி இருப்பது எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் நல்லதில்லை.

இது காங்கிரஸுக்கும், தி.மு.க-வுக்கும் மட்டுமில்லை... சிவசேனா, சமாஜ்வாடி கட்சி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், அகாலிதளம் என அனைவருக்கும் பொருந்தும். அதற்காக அரசியல் தலைவர்களின் குடும்பத்தினர் அரசியலுக்கே வரக் கூடாது என்று சொல்லவில்லை. அவர்களுக்கு, நேரடியாக தலைவருக்கு அடுத்த இடத்தைக் கொடுத்து வாரிசு அரசியல் நடத்தக் கூடாது என்று சொல்கிறேன். முதல் முறையாக தேர்தலில் ஜெயித்து, லோக்சபாவுக்குப் போகும் அழகிரிக்கு எதற்கு மந்திரி பதவி? தி.மு.க-வில் தகுதியான வேறு எம்.பி-க்களே இல்லையா என்ன?

ராகுல் காந்தி எப்போது பிரதமர் ஆவார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

நான் ஜோசியம் சொல்ல முடியாது. ஆனால், இன்னும் கொஞ்ச காலம் வரை அவர் கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டு, பிரதமர் பதவியை ஏற்றுக் கொள் ளாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என நினைக்கிறேன். அவர் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை.

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு!

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு என்று எதைச் சொல்வீர்கள்?

மிகப் பெரும் தவறு, சஞ்சய் காந்தியை தடாலடியாக இந்திரா காந்தி அரசியலுக்கு கொண்டு வந்து, குடும்ப அரசியலை ஆரம்பித்து வைத்ததுதான். அதை இன்று வரை பல கட்சிகளும் கடைப்பிடிக்கின்றன.

ஓர் இந்தியன் என்ற முறையில் நீங்கள் மிகவும் பெருமைப்படும் விஷயங்கள் எவை?

பெருமைக்குரிய முதலாவது விஷயம் மொழி களாலும், மதங்களாலும் பிரிந்து இருந்தாலும், இந்தியா தொடர்ந்து ஒரே நாடாக இருப்பது! இரண்டாவது பெருமை, இங்கே இன்னமும் தேர்தல் மூலமாக ஜனநாயகம் நிலைத்து இருப்பது. மூன்றாவதாக சகல விதமான உரிமைகளையும் மக்களுக்கு வழங்கி இருக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம்.

இந்திய அரசியல் தலைவர்களிலேயே மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசியல் தலைவர் இன்று யார் என நினைக்கிறீர்கள்?

நிதிஷ்குமார். அவர் ஓட்டுவங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டவராக விளங்குகிறார். ஏழை மக்களது முன்னேற்றத்தில் கவனம் செலுத் துகிறார். இதை எல்லாம் அவர் ஏழ்மை, மோசமான நிர்வாகம், சாதி அரசியல், மதப் பிரச்னை, கல்வி அறிவு இல்லாமை என பலதரப்பட்ட பிரச்னைகள் கொண்ட பீகார் மாநிலத்தில் செய்து வருகிறார் என்பதுதான் பெரிய விஷயம். அவர் காட்டும் பாதையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism